Astrology: தெட்சிணாமூர்த்தி என்பவர் யார்?
தெட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. இருவரும் ஒருவரல்ல.
ஆனால் நிறைய பேர் தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவர்தான் என்று நினைத்துக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள்.
உண்மையில் தெட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
அது தொடர்பான விவரங்கள் வருமாறு:- தெட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம், குரு பகவான் என்பவர் கிரக வடிவம்.
இவர் சிவன், அவர் பிரகஸ்பதி. தெட்சிணாமூர்த்தி என்பவர் முதலாளி, குரு-அதிகாரி.
தெட்சிணாமூர்த்தி சிவகுரு,தெற்கு நோக்கியும் குரு தேவகுரு வடக்கு நோக்கியும் உள்ளனர்
தெட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர்.
குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர்.
தெட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர், குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர்.
சிவன் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர்,
குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர்.
இத்தனை தத்துவ வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர் இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல...
தெட்சிணாமூர்த்தியை தெட்சிணாமூர்த்தியாக (சிவகுருவாக) வழிபடுங்கள்.
சில ஆலயங்களில் தெட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள்.
அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள். குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தெட்சிணா மூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். கடலை சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தெட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.
குருப்பெயர்ச்சியன்று தெட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், சாந்தி பரிகாரங்களை செய்கிறார்கள்.
இவையெல்லாம் தவறு என்று ஆன்மீக பெரியவர்கள் சொல்கிறார்கள். என்றாலும் தெட்சிணாமூர்த்தியும் குருவும் ஒன்றே என்று பலரும் வாதிடுகிறார்கள்.
குருபகவான் என்பவர் தேவகுரு மட்டும்தானாம். ஆனால் தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம். அதனால் குருவுக்குச் செய்வதை இவருக்குச் செய்வதில் தவறில்லை என்று வாதிடுகிறார்கள். சிலர் குருவுக்கு அதிதேவதை தெட்சிணாமூர்த்தி என்று சொல்கிறார்கள்.
அதுவும் தவறு.
குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதையோ பிரம்மதேவன். இதற்கான ஆதாரங்கள் பல தொன்னூல்களில் உள்ளன.
எனவே தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒன்றே என நம்மை நாமே குழப்பிக் கொள்ளக்கூடாது.
------------------------------------
மேலதிகத் தகவலுக்கு: https://en.wikipedia.org/wiki/Dakshinamurthy
படித்தேன். பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Good morning sir very useful devotional information thanks sir vazhga valamudan
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteHappy morning... Nice explanation...
Thanks for giving such a holy explanation...
With kind regards,
Ravi-avn
அறியாத விவரம்.
ReplyDeleteஅறிந்து கொண்டேன் ஐயா...
Good morning sir,
ReplyDeleteVery useful information, I have this doubt for more days, now cleared, thank you sir.
மிக்க நன்றி சார். நேற்று மாலை கூட தட்சிணாமூர்த்தி-குரு பற்றி இதே கேள்வியை ஒரு பெரியவரிடம் கேட்டிருந்தேன். ஏனெனில் இங்கு திருவள்ளீஸ்வரர் கோவில்-பாடியில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் உடை,சுண்டல் வைத்து படைக்கிறார்கள்.
ReplyDeleteபுரிய வைத்தமைக்கு நன்றி சார்.
குரு வாழ்க! குருவே துணை!!
ReplyDeleteThank you sir for your valuable information.
ReplyDeleteவணக்கம் குருவே!
ReplyDeleteஅருமையான பதிவு!
எல்லோராலும் எளிதாகப் புரிந்து கொள்ளத்தக்க மற்றும் அறிய வேண்டிய தகவல்கள்!
நன்றி வாத்தியாரையா!
ஐயா வணக்கம்
ReplyDeleteஇத்தனை காலமும் குரு தான் தட்சிணாமூர்த்தி என நினைத்து வழிபாடு செய்து வந்தேன்.
தற்போது புரிந்தது.
நன்றி
கண்ணன்
அப்படியானால் நாம் வியாழன் அன்று யாருக்கு தீபம் ஏற்ற வேண்டும்?
ReplyDeleteபுரிதலில்லா வழிபாடு
ReplyDeleteDear Sir
ReplyDeleteAll the doubts have been cleared like sun melting the snow.
Thank you very much
Rajam Anand
////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir very useful devotional information thanks sir vazhga valamudan//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!
Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Nice explanation...
Thanks for giving such a holy explanation...
With kind regards,
Ravi-avn
/////
நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!
Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Nice explanation...
Thanks for giving such a holy explanation...
With kind regards,
Ravi-avn
/////
நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!
////Blogger பரிவை சே.குமார் said...
ReplyDeleteஅறியாத விவரம்.
அறிந்து கொண்டேன் ஐயா...////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!
////Blogger gokila srinivasan said...
ReplyDeleteGood morning sir,
Very useful information, I have this doubt for more days, now cleared, thank you sir.////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!
/////Blogger KRIZ said...
ReplyDeleteமிக்க நன்றி சார். நேற்று மாலை கூட தட்சிணாமூர்த்தி-குரு பற்றி இதே கேள்வியை ஒரு பெரியவரிடம் கேட்டிருந்தேன். ஏனெனில் இங்கு திருவள்ளீஸ்வரர் கோவில்-பாடியில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் உடை,சுண்டல் வைத்து படைக்கிறார்கள்.
புரிய வைத்தமைக்கு நன்றி சார்./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!
///Blogger Kesavaraj & Kalaivani said...
ReplyDeleteகுரு வாழ்க! குருவே துணை!!/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!
/////Blogger Rajkumar Periyasamy said...
ReplyDeleteThank you sir for your valuable information./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!
///////////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
அருமையான பதிவு!
எல்லோராலும் எளிதாகப் புரிந்து கொள்ளத்தக்க மற்றும் அறிய வேண்டிய தகவல்கள்!
நன்றி வாத்தியாரையா!/////
நல்லது. நன்றி வரதராஜன்!!!!
/////Blogger Kannan L R said...
ReplyDeleteஐயா வணக்கம்
இத்தனை காலமும் குரு தான் தட்சிணாமூர்த்தி என நினைத்து வழிபாடு செய்து வந்தேன்.
தற்போது புரிந்தது.
நன்றி
கண்ணன்/////
நல்லது. உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி!!!
//////Blogger Sivakumar T R said...
ReplyDeleteஅப்படியானால் நாம் வியாழன் அன்று யாருக்கு தீபம் ஏற்ற வேண்டும்?/////
சிவனாருக்கு (சிவன் கோவிலில்) தீபம் ஏற்றுங்கள். வாழ்க்கை வளமாகும்!
மிகவும் நன்றி
Delete////Blogger ராஜி said...
ReplyDeleteபுரிதலில்லா வழிபாடு/////
நல்லது. நன்றி சகோதரி!!!!
////Blogger Rajam Anand said...
ReplyDeleteDear Sir
All the doubts have been cleared like sun melting the snow.
Thank you very much
Rajam Anand/////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!