20.9.17

Cinema: கோட்டையில்லை, கொடியுமில்லை, அப்பவும் அவர் ராஜா!!!


Cinema: 
கோட்டையில்லை, கொடியுமில்லை, அப்பவும் அவர் ராஜா!!!

*கண்ணன் ஒரு கைக் குழந்தை*.., அப்படியே இதயத்தை கரைத்த பாடல்.

1976 இல் இளையராஜா அன்னக்கிளி படத்திற்கு இசை அமைத்த கையோடு சூட்டோடு சூடாக வெளிவந்த படங்களில் பத்ரகாளியும் ஒன்று ... இந்த பாடலை

ஒவ்வொருமுறை கேட்கும்போதும் நெஞ்சம் எதனாலோ நெகிழ்ந்துவிடுகிறது , தாய் பாடாத ஒரு தாலாட்டு , ஒரு தாலாட்டை காதல் பாடலாக இசை அமைத்த ராஜா....

முதன் முதலாக ஜேசுதாஸ் இளையராஜாவுக்கு பாடிய பாடலிது .. பி . சுசீலாவிற்கு ராஜாவிடம் இருந்து கிடைத்த இரண்டாவது பாடல். இந்த பாடலில் ஜேசுதாசும்

சுசீலாவும் கண்ணன் எனும் கைக்குழந்தையை மாறி மாறி தாலாட்டி சீராட்டி, கொஞ்சி குலவி அஹா என்ன ஒரு அற்புதமான பாடல். இந்த பாடலை கேட்டு கேட்டு

ரசித்தாலே போதும், அவ்வளவு வித்தியாசமான இசை

இப்பாடலுக்கு இழைந்து இழைந்து வரும் பேஸ் கிடாரை வாசித்தவர் கீ போர்டு புகழ் "விஜி மேனுவல்".  முதல் சரணத்தில் வீணையை கொஞ்சிக்கொண்டு ஓடும் அந்த

குழலை வாசித்தவர் ராதாகிருஷ்ணன். பேஸ் கிடாரையும், வீணையையும் தொட்டு தொட்டு விளையாடும் அந்த தபேலாவை வாசிப்பது கண்ணையா. எழுதியது வாலி .,.

ஆகமொத்தம் இளையராஜா, ஜேசுதாஸ், சுசீலா, வாலி , விஜி மேனுவல், கண்ணையா, ராதா கிருஷ்ணன், வீணை காயத்ரி  என்று அத்தனை சாதனையாளர்களையும்

கொண்டு வந்து ஒரு புள்ளியில் சேர்த்த பாடல் இது .

சரணத்தில் முதல் வரியை ,
*உன் மடியில்* *நானுறங்க கண்ணிரெண்டும் தான் மயங்க*
*என்ன தவம்* *செய்தேனோ என்னவென்று சொல்வேனோ*

ஒரு மெட்டில் பாடி ஜேசுதாஸ் முடித்தவுடன்,
அதே வரியை  மீண்டும் வேறு மெட்டில்

*உன் மடியில் நானுறங்ககண்ணிரெண்டும் தான் மயங்க*
*என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ*
சுசீலா பிரித்து பிரித்து பாடியாகவேண்டும்.இரண்டுமே வேறு வேறு திசையில் இருப்பது போல இருக்கும் , ஆனால் இரண்டு மெட்டையுமே ஒரே தபேலாவின் சீரான

வாத்தியகட்டிலும், பாடகர்களின் திறமையான தேர்விலும், அவர்களை பாடவைத்ததில் ராஜாவின் சாதனை.

கவிஞர் வாலி வரிகளை பாருங்களேன் .. என்ன ஒரு கவிநடை *ஏழ் பிறப்பும்* *இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா வாழ்விருக்கும் நாள் வரைக்கும்

தஞ்சமுந்தன் நெஞ்சமம்மா*

எந்த ஒரு மொழியிலும் இல்லாத தனி சிறப்பு நம் தமிழ் பாடலில்களுக்கு உண்டு, வார்தைகளால் விவரிக்க முடியாத அற்புதமான பாடல், கேட்கும்போது  நினைவுகள்

நாற்பது ஆண்டுகள் பின்னோக்கி சிறக்கிட்டு செல்கின்றது.

இசை மழையில் இதமான ராகம்-இதோ உங்களுக்காக!

பாடல்:கண்ணன் ஒரு
திரைப்படம்:பத்ரகாளி
இசை:- இளையராஜா;  இயற்றியவர்: வாலி; பாடியவர்:ஜேசுதாஸ், சுசிலா
~~~~~~~~~~~~~~~
பாடல் வரிகள்:
கண்ணன் ஒரு கை குழந்தை 
கண்கள் சொல்லும் பூங்கவிதை 
கன்னம் சிந்தும் தேனமுதை 
கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நானெடுத்து 
பாடுகின்றேன் பாடுகின்றேன்
ஆராரோ மைவிழியே தாலேலோ 
மாதவனே தாலேலோ 
(கண்ணன் ஒரு கை குழந்தை) 

உன் மடியில் நானுறங்க கண்ணிரெண்டும் தான் மயங்க 
என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ 

உன் மடியில் நானுறங்க
கண்ணிரெண்டும் தான் மயங்க 
என்ன தவம் செய்தேனோ 
என்னவென்று சொல்வேனோ 

ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா 
வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சமுந்தன் நெஞ்சமம்மா 
(கண்ணன் ஒரு கை குழந்தை )

கண்கள் சொல்லும் பூங்கவிதை 
கன்னம் சிந்தும் தேனமுதை 
கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நானெடுத்து 
பாடுகின்றேன் பாடுகின்றேன் ஆராரோ மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ  

அன்னமிடும் கைகளிலே ஆடி வரும் பிள்ளையிது
உன் அருகில் நானிருந்தால் ஆனந்தத்தின் எல்லையது 
காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா 

கேட்கும் வரம் கிடைக்கும் வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா 

மஞ்சள் கொண்டு நீராடி மைகுழலில் பூச்சூடி 
வஞ்சிமகள் வரும்போது ஆசை வரும் ஒரு கோடி 

மஞ்சள் கொண்டு நீராடி 
மைகுழலில் பூச்சூடி 
வஞ்சிமகள் வரும்போது 
ஆசை வரும் ஒரு கோடி 
கட்டழகன் கண்களுக்கு மை எடுத்து எழுதட்டுமா
கண்கள் பட கூடுமென்று பொட்டு ஒன்று வைக்கட்டுமா 
(கண்ணன் ஒரு கை குழந்தை) 

ஆராரியோ ஆராரியோ ஆராரியோ ஆராரியோ ஆராரிரோ..
*==================================================


படித்தேன் பகிர்ந்தேன்!!!!
இரசனையுடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. Good morning sir wonderful song,nice to hear the great qualities of Vaali sir, Illayaraja sir,Jesudas sir and Susila mam, thanks sir

    ReplyDelete
  2. Good morning sir,
    Nice song. Thank you sir.

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Very nice...

    Have a good day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. ஏழரை சனி அஷ்டம சனி கண்டக சனி போன்றவைக்கு பரிகாரம் இதைப்போன்ற இசையை கேட்பதுதானே.இசையின் வடிவில் இறைவனை காணபது பரிகாரம்தானே!என்ன ஒரு இசை°°°

    ReplyDelete
  5. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir wonderful song,nice to hear the great qualities of Vaali sir, Illayaraja sir,Jesudas sir and Susila mam, thanks sir////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  6. ////Blogger gokila srinivasan said...
    Good morning sir,
    Nice song. Thank you sir.////

    நல்லது. நன்றி சகோதரி!!!!!

    ReplyDelete
  7. ///Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Very nice...
    Have a good day.
    Thanks & Regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!!!

    ReplyDelete
  8. ////Blogger மு.மோகன் said...
    ஏழரை சனி அஷ்டம சனி கண்டக சனி போன்றவைக்கு பரிகாரம் இதைப்போன்ற இசையை கேட்பதுதானே.இசையின் வடிவில் இறைவனை காணபது பரிகாரம்தானே!என்ன ஒரு இசை°°°////

    அடடா, உங்களின் பரிந்துரைக்கு நன்றி மோகன்!!!!

    ReplyDelete
  9. அற்புதமான பாடல் பல இளையராஜா பாடல்கள் போல. ஆனால் அதை படமாக்கிய விதம்தான் திருஷ்டி பொட்டு, பல இளையராஜா பாடல்கள் போல. இந்த பாடலில் சிவகுமாரை கைக்குழந்தை கண்ணனாக நாயகி நினைத்து தொட்டிலில் வைத்து தாலாட்டுவது போல் எல்லாம் படமாக்கியிருப்பார்கள். அந்த கொடுமையை பார்த்தால், இந்த அற்புதமான பாடலை கேட்கும் சுகம் குறைந்து விடும், அல்லது மொத்தமாக மங்கி விடும். அதனால் பாடலை கேட்பதோடு சரி.

    அழகான இந்த பாடலை சிறப்பாக விவரித்ததற்கு வாத்தியாருக்கு நன்றி. ஆனால் காணொளிக்கு நன்றி தெரிவிக்க முடியவில்லை:‍)

    ReplyDelete
  10. ஐயா.. Viji connect என்பவரால் Facebook-ல் 2014ல் எழுதப்பட்டது இது. அதைச் சுருக்கமாக மதியின் பாடல் வரிகள் என்ற பதிவர் போட்டிருந்தார். நீங்கள் அதை சொந்தப் படைப்பு போல வெளியிட்டு உள்ளீர்கள். நன்றி சொல்லாமல், அடுத்தவர் பதிவை நீங்களே எழுதியது போலப் பதிவு செய்வது சரியா..?

    ReplyDelete
  11. ////Blogger thozhar pandian said...
    அற்புதமான பாடல் பல இளையராஜா பாடல்கள் போல. ஆனால் அதை படமாக்கிய விதம்தான் திருஷ்டி பொட்டு, பல இளையராஜா பாடல்கள் போல. இந்த பாடலில் சிவகுமாரை கைக்குழந்தை கண்ணனாக நாயகி நினைத்து தொட்டிலில் வைத்து தாலாட்டுவது போல் எல்லாம் படமாக்கியிருப்பார்கள். அந்த கொடுமையை பார்த்தால், இந்த அற்புதமான பாடலை கேட்கும் சுகம் குறைந்து விடும், அல்லது மொத்தமாக மங்கி விடும். அதனால் பாடலை கேட்பதோடு சரி.
    அழகான இந்த பாடலை சிறப்பாக விவரித்ததற்கு வாத்தியாருக்கு நன்றி. ஆனால் காணொளிக்கு நன்றி தெரிவிக்க முடியவில்லை:‍)////

    It is only a forwarded message. எனது சொந்த ஆக்கம் அல்ல. படித்தேன். பிடித்திருந்தது. உங்களுடன் பகிர்ந்துள்ளேன், நன்றி தோழரே!!

    ReplyDelete

  12. /////Blogger கருத்து கந்தசாமி said...
    ஐயா.. Viji connect என்பவரால் Facebook-ல் 2014ல் எழுதப்பட்டது இது. அதைச் சுருக்கமாக மதியின் பாடல் வரிகள் என்ற பதிவர் போட்டிருந்தார். நீங்கள் அதை சொந்தப் படைப்பு போல வெளியிட்டு உள்ளீர்கள். நன்றி சொல்லாமல், அடுத்தவர் பதிவை நீங்களே எழுதியது போலப் பதிவு செய்வது சரியா..?/////

    தவறுதான் கந்தசாமி அவர்களே! உடல்நிலை காரணமாக முன்பு போல் நிறைய எழுதுவதில்லை. நான் படிப்பதில் சுவாரசியமாக உள்ளவற்றை இங்கே பதிவிடுவேன். ஆனால் படித்தேன் பகிர்ந்தேன் என்றி கீழே குறிப்பிட்டு விடுவேன் ஆனால் இதில் குறிப்பிட விடுபட்டுவிட்டது. இப்போது சேர்த்துவிட்டேன். இப்போது குறிப்பிட்டுள்ளேன். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com