8.9.17

Astrology: ஜோதிடம்: அமலா யோகம்!

Astrology: ஜோதிடம்: அமலா யோகம்!

யோகங்களைப் பற்றிய பாடம்!

கோவையில் இருந்து சென்னைக்குப் பயணிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கோவையிலிருந்து சேலம் வரை ஒரு பேருந்திலும், பிறகு சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சிவரை ஒரு பேருந்திலும், பிறகு கள்ளக்குறிச்சியிலிருந்து விழுப்புரம்வரை ஒரு பேருந்திலும், பிறகு விழுப்புரத்திலிருந்து செங்கல்பட்டுவரை ஒரு பேருந்திலும், அதற்குப்பிறகு அங்கேயிருந்து சென்னைவரை வேறு ஒரு பேருந்திலும் பயணித்தால் பயணம் எப்படியிருக்கும்? அலுத்துவிடாதா?

முறையான பயணம் எப்படி இருக்க வேண்டும்? ஒரு நவீன குளிரூட்டப்பெற்ற வோல்வோ பேருந்தில், இரவு ஒன்பது மணிக்குக் கோவையில் ஏறி, காலை 6 மணிக்குச் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் சென்று இறங்கினால் பயணம் சுகமாக இருக்கும்.

அதைப்போல ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் உள்ள யோகங்களைவிட, சுருக்கமாக ஒரு வரியில் உள்ள யோகங்கள், ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

இன்று, உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதற்காக ஒரு வரி விளக்கத்துடன் உள்ள யோகம் ஒன்றைக் கொடுத்துள்ளேன்.

அந்த யோகம் இருப்பவர்களுக்கு, இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும்
---------------------------------------------------------------------
யோகத்தின் பெயர்: அமலா யோகம். அமலா எனும் வடமொழிச்சொல்லிற்கு சுத்தமானது (pure) என்று பொருள்.

யோகத்தின் அமைப்பு: லக்கினத்திலிருந்து பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருக்க வேண்டும். சந்திரராசிக்குப் பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருந்தாலும் இந்த யோகம் உண்டு

பலன்: ஜாதகனின் வாழ்க்கை வளமாக இருக்கும். ஜாதகன் பெயர், புகழுடன் இருப்பான். நிறைய பொருள் ஈட்டுவான். நல்ல ஆண் வாரிசுகளை உடையவனாக இருப்பான்.

அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

34 comments:

  1. Good morning sir very useful sir vazhga valamudan sir

    ReplyDelete
  2. Good morning sir,
    Friday Morning nice to know about good yogam lesson. I think I have this yogam sir. I have only sandhiran in 10th house, but for rishaba lagnam sandhiran is not a beneficial planet. Once again thank you sir for sharing the information.

    ReplyDelete
  3. Vanakkam iyya,

    Nalla yogam.

    Enaku Intha yogam ullathu.. Makara lagnam 10il Chandran (pournami Chandran - Guru Vin natchathiram).

    Nanmai nadakum endra nambikai ullathu..

    Nandri,
    Bala

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா
    அந்த சுப கிரகம் வக்ரமாகவோ, அஸ்தமாகவோ, தீய கிரகங்களின் பார்வை அல்லது கூட்டுடன் இருந்தாலும் அல்லது வக்ரமாக இருந்து தீய கிரகத்தின் பார்வை பெற்றோ இருந்தாலும் இந்த யோகம் வேலை செய்யுமா?
    நன்றி ஐயா

    ReplyDelete
  5. Good sir one sentence yoham. Thank you sir

    ReplyDelete
  6. மிக்க நன்றி ஐயா. தங்களின் அடுத்த புத்தகம் எப்போது வெளியிடுகிறீர்கள் ?😇
    ந.இராஜூ

    ReplyDelete
  7. துலா லக்னத்திற்கு பத்தில் சுக்ரன் செவ்வாய் உள்ளது...
    இது அமலா யோகமா ஐயா

    ReplyDelete
  8. I have Venus 10th from Moon.
    But Moon and Venus are in Parivartana.

    ReplyDelete
  9. வணக்கம்.உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.அருமையாக உள்ளது.

    ReplyDelete
  10. ஆஹா அருமை.
    நல்ல பயனுள்ள தகவல்

    ReplyDelete
  11. பத்தில் ஒரு பாவியாவது இரூக்கணும் என்பது பற்றி?

    ReplyDelete

  12. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful sir vazhga valamudan sir/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  13. /////Blogger gokila srinivasan said...
    Good morning sir,
    Friday Morning nice to know about good yogam lesson. I think I have this yogam sir. I have only sandhiran in 10th house, but for rishaba lagnam sandhiran is not a beneficial planet. Once again thank you sir for sharing the information./////

    அதனால் என்ன? சந்திரன் சுபக்கிரகம் அல்லவா? நன்றி!

    ReplyDelete
  14. ////Blogger bala said...
    Vanakkam iyya,
    Nalla yogam.
    Enaku Intha yogam ullathu.. Makara lagnam 10il Chandran (pournami Chandran - Guru Vin natchathiram).
    Nanmai nadakum endra nambikai ullathu..
    Nandri,
    Bala//////

    உங்களின் நம்பிக்கை வாழ்க! நன்றி!!!!

    ReplyDelete
  15. ///Blogger VM. Soosai Antony said...
    வணக்கம் ஐயா
    அந்த சுப கிரகம் வக்ரமாகவோ, அஸ்தமாகவோ, தீய கிரகங்களின் பார்வை அல்லது கூட்டுடன் இருந்தாலும் அல்லது வக்ரமாக இருந்து தீய கிரகத்தின் பார்வை பெற்றோ இருந்தாலும் இந்த யோகம் வேலை செய்யுமா?
    நன்றி ஐயா////

    செய்யாது!!!!

    ReplyDelete
  16. ////Blogger kittuswamy palaniappan said...
    Good sir one sentence yoham. Thank you sir/////

    நல்லது. நன்றி கிட்டுசாமி பழனியப்பன்!!!!

    ReplyDelete
  17. /////Blogger Nallaswamy Raju said...
    மிக்க நன்றி ஐயா. தங்களின் அடுத்த புத்தகம் எப்போது வெளியிடுகிறீர்கள் ?😇
    ந.இராஜூ/////

    எனது உடல் நிலை காரணமாக தொகுப்பில் தொய்வு விழுந்துவிட்டது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் 2 புத்தகங்களை வெளிக் கொண்டுவர முயன்று வருகிறேன். பொறுத்திருங்கள். உங்களின் ஆர்வத்திற்கு நன்றி!!!!

    ReplyDelete

  18. ////Blogger Klrprakash1982@gmail said...
    துலா லக்னத்திற்கு பத்தில் சுக்ரன் செவ்வாய் உள்ளது...
    இது அமலா யோகமா ஐயா//////

    இல்லை.

    ReplyDelete
  19. ///Blogger selvaspk said...
    I have Venus 10th from Moon.
    But Moon and Venus are in Parivartana.////

    நல்லது. நடக்கும். நன்றி செல்வா!!!!

    ReplyDelete
  20. ////Blogger Mrs.Kalavathi Muruganantham said...
    வணக்கம்.உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.அருமையாக உள்ளது./////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!!!

    ReplyDelete

  21. ////Blogger Kesavaraj & Kalaivani said...
    ஆஹா அருமை.
    நல்ல பயனுள்ள தகவல்////

    நல்லது. நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  22. ///Blogger kmr.krishnan said...
    பத்தில் ஒரு பாவியாவது இரூக்கணும் என்பது பற்றி?/////

    10ம் வீட்டில் பாவி இருந்தால் எதற்குக் கவலை? 10ம் அதிபதி மற்றும் கர்மகாரகனின் நிலை நன்றாக இருந்தால் பிரச்சினைகள் வராது. வந்தாலும் ஜாதகன் சமாளித்துவிடுவான். நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  23. Sir, Gud Morning.. Krishnan Sir is asking abt One malefic Planet should be in Tenth house rule. Means if it is not there, then only v need to worry. Its getting Contrast with today Yogam Lesson. I am also having Same doubt. Hope u got what i am saying. Thanks Sir.

    ReplyDelete
  24. வணக்கம் சார்

    கன்னி லக்கினம் பத்தாம் வீட்டில் மிதுனத்தில் எந்த கிரகமும் இல்லை,அதன் அதிபன் புதன் மீனத்தில்..குரு தனுசுவில்..இது யோகமா.நன்றி..

    ReplyDelete
  25. /////Blogger KJ said...
    Sir, Gud Morning.. Krishnan Sir is asking abt One malefic Planet should be in Tenth house rule. Means if it is not there, then only v need to worry. Its getting Contrast with today Yogam Lesson. I am also having Same doubt. Hope u got what i am saying. Thanks Sir./////

    எத்ற்காக ஒரு பாவியாவது அங்கே இருக்க வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன்!!!! நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. Sir, 10am veedu enbathu Karma sthanam. Karma vinai theerpatharke naam piravi eduthullom. Karma vinai theernthu vittal Saniswaran Boarding pass koduthu viduvar. Athargave 10il oru Paavi vendum athavathu, Dheergamana Ayuluku. Avar nama Karma kurayamal paarthu kolvar. Athargave Pathil oru Paavi vendum endru Rishigal eluthi vaithu sendrullanar.. En arivuku yettuyathu. Thavarenum mannikavum.

      Delete
  26. //////Blogger Santhanam Raman said...
    வணக்கம் சார்
    கன்னி லக்கினம் பத்தாம் வீட்டில் மிதுனத்தில் எந்த கிரகமும் இல்லை,அதன் அதிபன் புதன் மீனத்தில்..குரு தனுசுவில்..இது யோகமா.நன்றி../////

    10ம் அதிபதி தன் வீட்டிற்கு கேந்திரத்தில் இருப்பதாலும், அந்த வீட்டை 7ம் பார்வையாக பார்ப்பதும் நன்மையானதுதான். ஆனால் இந்த யோகம் ஏற்படாது!!! நன்றி!!!

    ReplyDelete
  27. /////Blogger meiarasan arasan said...
    Super////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  28. வணக்கம் ஐயா விருச்சிக லக்னம் 10-ல் குரு உடன் மாந்தி யோகம் வேலை செய்யுமா பலன் உண்டா ஐயா?

    ReplyDelete
  29. துலா லக்னத்திற்கு 10 இல் சந்திரன். But 4 இல் செவ்வாய் உச்சம்.

    ReplyDelete
  30. ////Blogger KJ said...
    Sir, 10am veedu enbathu Karma sthanam. Karma vinai theerpatharke naam piravi eduthullom. Karma vinai theernthu vittal Saniswaran Boarding pass koduthu viduvar. Athargave 10il oru Paavi vendum athavathu, Dheergamana Ayuluku. Avar nama Karma kurayamal paarthu kolvar. Athargave Pathil oru Paavi vendum endru Rishigal eluthi vaithu sendrullanar.. En arivuku yettuyathu. Thavarenum mannikavum./////

    உங்களின் மேலான தகவலுக்கு நன்றி!!!!

    ReplyDelete

  31. /////Blogger karthi keyan said...
    வணக்கம் ஐயா விருச்சிக லக்னம் 10-ல் குரு உடன் மாந்தி யோகம் வேலை செய்யுமா பலன் உண்டா ஐயா?////

    குரு வேலை செய்யும். ஆனால் உடன் மாந்தியும் இருப்பதால் பலன்கள் குறைந்துவிடும்!!!!

    ReplyDelete
  32. Blogger Stylish Thamizhan said...
    துலா லக்னத்திற்கு 10 இல் சந்திரன். But 4 இல் செவ்வாய் உச்சம்.///////

    சசி மங்கள யோகமும் இருக்கிறது. நல்லதுதான்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com