8.8.17

கால் வலியைப் போக்க என்ன செய்யலாம்?


கால் வலியைப் போக்க என்ன செய்யலாம்?

வைரம் #பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று #போகர் கூறினார்.

உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு!

#முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்......

கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்...
.
எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லித்தளை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம்  அதையே இங்கு செய்தோம் ......

பிரண்டையில் உள்ள மிகையான #சுண்ணாம்பு சத்து(#கால்சியம்) தான்  எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது  குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன் ......

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு  முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்......

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல்(அ)உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.....

நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....

இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ....

படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

  1. Good morning sir, very useful information sir thanks for your valuable post sir, vazhga valamudan sir

    ReplyDelete
  2. Good morning Sir, useful information. Thank you.

    ReplyDelete
  3. Respected Sir,


    Happy morning... Superb article...

    Inportant information.... Thanks for sharing...

    Have a holy day.

    With regards,
    Ravi

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,
    அருமையான உபயோகம் உள்ள தகவல்.
    நன்றி

    ReplyDelete
  5. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir, very useful information sir thanks for your valuable post sir, vazhga valamudan sir////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  6. /////Blogger KJ said...
    Good morning Sir, useful information. Thank you./////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  7. /////Blogger kmr.krishnan said...
    Very interesting information./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  8. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Superb article...
    Inportant information.... Thanks for sharing...
    Have a holy day.
    With regards,
    Ravi/////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!!!!!

    ReplyDelete
  9. ////Blogger VM. Soosai Antony said...
    வணக்கம் ஐயா,
    அருமையான உபயோகம் உள்ள தகவல்.
    நன்றி/////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா,பிரண்டை புரிகிறது.பிரண்டை உப்பு!தெரியவில்லை.நன்றி.

    ReplyDelete
  11. பிரண்டை துவையல் அடிக்கடி செய்து சாப்பிடுவதுண்டு

    ReplyDelete
  12. உடம்பை வளர்த்தேன்
    உயிர் வளர்த்தேனே...
    நல்ல பயனுள்ள கட்டுரை

    ReplyDelete
  13. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,பிரண்டை புரிகிறது.பிரண்டை உப்பு!தெரியவில்லை.நன்றி./////

    பிரண்டையை உலர்த்தி எடுத்து சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டி 1/2 நாள் தெளிய வைக்க வேண்டும். தெளிந்த நீரை ஒரு பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 - 10 நாட்கள் வெய்யிலில் காய வைக்க வேண்டும். நீர் முழுவதும் சுண்டி உலர்ந்தபின் சேர்ந்திருக்கும் _ அதாவ்து பாத்திரத்தின் அடியில் படிந்திருக்கும் உப்புதான் பிரண்டை உப்பு எனப்படும். விளக்கம் போதுமா நண்பரே???

    ReplyDelete
  14. ////Blogger ராஜி said...
    பிரண்டை துவையல் அடிக்கடி செய்து சாப்பிடுவதுண்டு////

    உங்கள் அனுபவப் பகிர்விர்க்கு நன்றி சகோதரி!!!

    ReplyDelete
  15. ////Blogger Kesavaraj & Kalaivani said...
    உடம்பை வளர்த்தேன்
    உயிர் வளர்த்தேனே...
    நல்ல பயனுள்ள கட்டுரை/////

    நல்லது. நன்றி நண்பர்களே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com