27.6.17

நீங்களும் உங்கள் தொப்புளும்!!!


நீங்களும் உங்கள் தொப்புளும்!!!

Health Tips

தொப்புள் என்பது உடலின் அடிவயிற்றில் காணப்படும் ஒரு வடு ஆகும். குழந்தை பிறந்தவுடன் தொப்புட்கொடி நீக்கப்படும்.அப்போது உருவாகும் வடுவே தொப்புள் ஆகும்.

தூயதமிழில் கொப்பூழ் என்பதே சரியான உச்சரிப்பு.இது பேச்சு வழக்கில் தொப்புள் அல்லது தொப்புள்குழி என்று குறிப்பிடப்படுகிறது. உந்தி,நாபி[4] என்றும் தொப்புள் குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் நாவெல் (navel) அல்லது பெல்லி பட்டன் (belly button) என்று குறிப்பிடப்படுகிறது.மருத்துவ முறையில் தொப்புள் உம்பிளிகிஸ் (umbilicus) என்று குறிப்பிடப்படுகிறது.அணைத்து பாலூட்டி விலங்குகளுக்கும் தொப்புள் இருந்தாலும் அது தெளிவாக காணப்படுவது மனிதர்களில் மட்டுமே.[8]

*தொப்புளில் எண்ணை போடுங்கள்*

நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு.
ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

அறிவியல் படி,
கரு வளரும் பொழுது முதலில் தொப்புள்  பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.

நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள்  3 மணி நேரம் சூடாக இருக்கும்.
காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள்  அமைக்கப்பட்டுள்ளது.

நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா?  நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

*கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*முழங்கால் வலி*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?*

நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால்  இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக  செலுத்தி அவற்றை திறக்கும் .

ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. பல நரம்பு மையங்களில் மணிப்பூரகம் எனும் நெருப்பு மையம் பற்றிய நல்ல பதிவு.

    ReplyDelete
  2. Good morning sir, useful information sir, usually on every Saturday I took gingely oil bath at that time i keep some drops of oil on navel part sir,nw i understood what's the reason behind this sir. Thanks sir vazhga valamudan

    ReplyDelete
  3. நல்ல பதிப்புக்கு நன்றி

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,அருமையான மற்றும் ஆரோக்கியத்திற்கான பதிவு.சிறு வயது நினைவுகள் கண்முன்னே.வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது தொப்புள்,காது,மூக்கு எண்ணெய் வைத்து குளித்த காலம் ஒன்று.தலையில் வைத்த எண்ணெய் கண்ணிற்கும் ஓடி,கண் எரிய குளித்த நாட்கள் அது.தற்போது மருத்துவர்கள் எண்ணெய் குளியல் வேண்டாம் என்கிறார்கள்.ஆனால் பிணிகள் குறைந்தபாடில்லை.நன்றி.

    ReplyDelete
  5. கவர்ச்சி பொருளாய் மாறிப்போன அவலம்

    ReplyDelete
  6. மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  7. ////Blogger SELVARAJ said...
    பல நரம்பு மையங்களில் மணிப்பூரகம் எனும் நெருப்பு மையம் பற்றிய நல்ல பதிவு.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி செல்வராஜ்!!!!

    ReplyDelete
  8. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir, useful information sir, usually on every Saturday I took gingely oil bath at that time i keep some drops of oil on navel part sir,nw i understood what's the reason behind this sir. Thanks sir vazhga valamudan/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  9. ////Blogger selvaspk said...
    நல்ல பதிப்புக்கு நன்றி////

    நல்லது. நன்றி செல்வா!!!!

    ReplyDelete
  10. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அருமையான மற்றும் ஆரோக்கியத்திற்கான பதிவு.சிறு வயது நினைவுகள் கண்முன்னே.வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது தொப்புள்,காது,மூக்கு எண்ணெய் வைத்து குளித்த காலம் ஒன்று.தலையில் வைத்த எண்ணெய் கண்ணிற்கும் ஓடி,கண் எரிய குளித்த நாட்கள் அது.தற்போது மருத்துவர்கள் எண்ணெய் குளியல் வேண்டாம் என்கிறார்கள்.ஆனால் பிணிகள் குறைந்தபாடில்லை.நன்றி.////

    வைத்தியருக்கு கொடுப்பதை வாணிகருக்கு கொடு என்று அந்தக் காலத்தில் பெரியவர்கள் வற்புறுத்தி பிள்ளைகளுக்கு எண்ணெய் குளியல் செய்து வைத்தார்கள். இப்போது நிலைமை மாறி விட்டது. பல நோய்களுக்குக் காரணம் எண்ணெய்க் குளியல் இன்மைதான். அதை உணர்ந்தால் நல்லது, நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  11. //Blogger ராஜி said...
    கவர்ச்சி பொருளாய் மாறிப்போன அவலம்////

    உண்மைதான். அறியாமைதான் அதற்குக் காரணம் சகோதரி!!!!

    ReplyDelete
  12. ////Blogger KRIZ said...
    மிக்க நன்றி சார்./////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  13. /////Blogger GANAMURUGU said...
    Useful Information. Thank you./////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com