13.4.17

கரிநாள் என்பது என்ன?

கரிநாள் என்பது என்ன?

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே.

அதாவது, அன்றைய தேதியில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக
அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும்.
நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை.

இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை (Constant ). தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு
வைத்திருக்கிறார்கள். உதாரணமாக  தை மாதம் 1, 2, 3 ஆகிய நாட்கள் கரிநாட்கள். மாறாக, இது ‘அஷ்டமி, நவமி’ போன்றோ அல்லது ‘பரணி,
கிருத்திகை’ போன்றோ திதிகள் அல்லது  நட்சத்திரங்களின்
அடிப்படையில் அமைந்தது அல்ல.

சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் பொழுது, நமது உடலில்
உள்ள அனைத்து சுரப்பிகளும், ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல்
போன்ற வாய்ப்புகள்  அதிகம் உண்டாகும். இது போன்ற காரணங்களால் கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்திருக்கிறார்கள்.

இது வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்களேயன்றி ஜோதிட  ரீதியாக கடைபிடித்து வரும்
விஷயம்  அல்ல.

ஒவ்வொரு தமிழ் வருடமும் கரிநாட்களின் விவரம் : 
சித்திரை-6, 15,
வைகாசி- 7, 16, 17,
ஆனி- 1, 6,
ஆடி-2, 10, 20,
ஆவணி-2, 9, 28,
புரட்டாசி- 16, 29,
ஐப்பசி-6, 20,
கார்த்திகை-1, 10, 17,
மார்கழி-6, 9, 11,
தை-1, 2, 3, 11, 17,
மாசி-15, 16, 17,
பங்குனி-6, 15, 19.

கரிநாட்களில் சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.

அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21 comments:

  1. வணக்கம் ஐயா,கரிநாளுக்கு விஞ்ஞான பூர்வமான விளக்கம் அருமை.நன்றி.

    ReplyDelete
  2. It's a new information sir.... Usually in daily calendars I have read the word Kainaal but I don't know it's meaning... Here afterwards I won't start or do any good things on kaarinaaal... Useful post sir... Thanks

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Knowing things but unknown fact.

    Thanks for sharing...

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி ஐயா..

    தாங்கள் ஏற்கனவே தவிர்க்க வேண்டிய சில நட்சத்திரங்கள் கொடுத்துள்ளீர்கள்.
    இதே போன்று அமிர்த,சித்த,மரண யோகம் உள்ளன.நல்ல நாள் பார்க்கையில் யோகமும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமா? தவிர்க்க வேண்டிய யோகம் எது ஐயா?

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்

    கரி நாட்களை அறிவியல் பூர்வமாக தெரிந்துகொண்டேன் ஐயா
    நன்றி

    கண்ணன்

    ReplyDelete
  6. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Very useful information sir/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  7. Blogger adithan said...
    வணக்கம் ஐயா,கரிநாளுக்கு விஞ்ஞான பூர்வமான விளக்கம் அருமை.நன்றி.

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!

    ReplyDelete
  8. ////Blogger smruthi sarathi said...
    It's a new information sir.... Usually in daily calendars I have read the word Kainaal but I don't know it's meaning... Here afterwards I won't start or do any good things on kaarinaaal... Useful post sir... Thanks////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete
  9. ///Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Knowing things but unknown fact.
    Thanks for sharing...
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!

    ReplyDelete
  10. /////Blogger Sakthi Balan said...
    தகவலுக்கு நன்றி ஐயா..
    தாங்கள் ஏற்கனவே தவிர்க்க வேண்டிய சில நட்சத்திரங்கள் கொடுத்துள்ளீர்கள்.
    இதே போன்று அமிர்த,சித்த,மரண யோகம் உள்ளன.நல்ல நாள் பார்க்கையில் யோகமும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமா? தவிர்க்க வேண்டிய யோகம் எது ஐயா?////

    தவிர்க்க வேண்டிய யோகம் மரண யோகம்!!!

    ReplyDelete
  11. ////Blogger kmr.krishnan said...
    Very useful.//////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  12. ////Blogger Kannan L R said...
    ஐயா வணக்கம்
    கரி நாட்களை அறிவியல் பூர்வமாக தெரிந்துகொண்டேன் ஐயா
    நன்றி
    கண்ணன்/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  13. ////Blogger KJ said...
    Thanks sir. Useful Info../////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  14. ////Blogger C Jeevanantham said...
    Thanks for your great information/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  15. கரிநாள் அன்று நிலம் வாங்குவதற்காக பேசலாமா?

    ReplyDelete
  16. /////Blogger Pa. Anbumani said...
    கரிநாள் அன்று நிலம் வாங்குவதற்காக பேசலாமா?////

    """கரிநாட்களில் சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது."""" என்று எழுதியிருக்கிறேனே - அதைப் படித்த பிறகும் இந்தக் கேள்வியைக் கேட்டால் என்ன சொல்வது?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com