1.3.17

நீயும் உன் வாழ்க்கையும்!!!!


நீயும் உன் வாழ்க்கையும்!!!!

உன் வாழ்க்கையை நீ வாழ்!!!

எறும்பு- பட்டாம்பூச்சியின்  வாழ்க்கையை வாழ ஆசைப்படவில்லை.

நாய் - சிங்கத்தைப் பார்த்து ஒரு நாளும் துளி கூட பொறாமைப் படவில்லை.

யானை - ஆகாயத்தில் பறக்கும் கிளியைக் கண்டு ஏக்கப் பெருமூச்சு விடவில்லை.

காகம் - குயிலின் இசையைக் கேட்டு தானும் அது போல் பாட ஏங்கவில்லை.

அதனதன் வாழ்க்கையை அதது வாழ்கின்றது!!!

 நீ மட்டும் ஏன் பொறாமைப் படுகிறாய்.....???

 நீ ஏன் அடுத்தவரைப் பார்க்கிறாய்.....???

 நீ மட்டும் ஏன் புலம்புகிறாய்......???

 நீ ஏன் வருந்துகிறாய்......???

 நீ ஏன் ஏக்கப்பெருமூச்சு விடுகின்றாய்.......???

 உன் வாழ்க்கை விசேஷமானது......!!!

நீ அடுத்தவருடைய தூக்கத்தை தூங்க முடியாது.....!!!

நீ அடுத்தவருடைய பசிக்கு சாப்பிட முடியாது......!!!

நீ அடுத்தவருடைய வாழ்க்கையை வாழ முடியாது....!!!

ஆகாயம் போல் பூமி இல்லை.....!!!

பூமி போல் காற்று இல்லை .....!!!

காற்று போல் தீ இல்லை...!!!

தீயைப் போல் தண்ணீர் இல்லை.......!!!

ஆலமரம் போல் பப்பாளி மரம் இல்லை.....!!!

பல்லி போல் புலி இல்லை......!!!

தங்கம் போல் தகரம் இல்லை......!!!

பலாப் பழம் போல் வாழைப் பழம் இல்லை......!!!

கத்தரிக்காய் போல் வெண்டைக்காய் இல்லை......!!!

துணி போல் கருங்கல் இல்லை.....!!!

சிற்பம் போல் சாதாரண கருங்கல் இல்லை.....!!!

நாற்காலி போல் கட்டில் இல்லை.....!!!

ஒரு மரத்தின் பழங்களிலேயே  ஒன்று போல் மற்றொன்று இல்லை.....!!!

ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளிலேயே  ஒருவர் போல் மற்றொருவர் இல்லை......!!!

ஆண் உடல் போல் பெண்ணுடல் இல்லை.....!!!

நேற்று போல் இன்று இல்லை.....!!!

இன்று போல் நாளை இல்லை......!!!

போன நிமிடம் போல் இந்த நிமிடம் இல்லை.....!!!

இந்த நிமிடம் போல் அடுத்த நிமிடம் இல்லை.....!!!

ஒன்றுபோல் மற்றொன்று இல்லை.......!!!

இத்தனை ஏன் ....!!!

உன் தலைவலி போல் பல்வலி  இல்லை......!!!

உன்னுடைய கண் போல் காது இல்லை.....!!!

இனியாவது சரியாக சிந்தனை செய்.....!!!

அதனால் நீ தனி தான்.....!!!

உன் கைரேகை தனி தான்......!!!

உன் பசி தனி தான்......!!!

உன் தேவை தனி தான்.....!!!

உன் பலம் தனி தான்.....!!!

உன் பலவீனம் தனி தான்......!!!

உன் பிரச்சனை தனி தான்......!!!

உனக்குரிய தீர்வும் தனி தான்.....!!!

உன் சிந்தனை தனி தான்.....!!!

உன் மனது தனி தான்.....!!!

உன் எதிர்பார்ப்பு தனி தான்......!!!

உன் அனுபவம் தனி தான்.....!!!

உன் பயம் தனி தான்.....!!!

உன் நம்பிக்கை தனி தான்.....!!!

உன் தூக்கம் தனி தான்......!!!

உன் மூச்சுக்காற்று தனி தான்......!!!

உன் ப்ராரப்தம் தனி தான்.....!!!

உன் வலி தனி தான்.....!!!

உன் தேடல் தனி தான்.....!!!

உன் கேள்வி தனி தான்.....!!!

உன் பதில் தனி தான்.....!!!

உன் வாழ்க்கைப் பாடம் தனி தான்......!!!

உன் வாழ்க்கை தனி தான்......!!!👌👇👌

உன் வாழ்க்கை அதிசயமானது தான்......!!!

உன் வாழ்க்கை ஆச்சரியமானது தான்......!!!

உன் வாழ்க்கை அபூர்வமானது தான்......!!!

உன் வாழ்க்கை அர்த்தமுள்ளது தான்.....!!!

உன் வாழ்க்கை உத்தமமானது தான்.....!!!👌👍👌

அதனால்.....

இன்றிலிருந்து......

இப்பொழுதிலிருந்து.....

உன் வாழ்க்கையை மட்டும் நீ வாழ்ந்து பார்......!!!

வாழ்வின் ரசனை தெரியும்.......!!!

வாழ்வின் அர்த்தமும் புரியும்........!!!

இனியும் உன் வாழ்க்கையைக் கேவலப் படுத்தாதே......!!!

உன் வாழ்க்கையை அசிங்கப் படுத்தாதே.....!!!

உன் வாழ்க்கையை உதாசீனப் படுத்தாதே.....!!!

உன் வாழ்க்கையை வெறுக்காதே.......!!!

வாழ்க வளமுடன்
----------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார் 🙏🏼
==========================================👏👏👍👌👌
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

  1. அருமை ஐயா

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Nice one.

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,நல்ல கருத்துகள்.இதற்க்கு எதிர்மறையாக வைக்கும் வாதம் முன்னேற வேண்டும் என்றால் முயற்சிக்கத்தான் வேண்டும்.பறவைபோல் பறக்க நினைத்ததால்தான் வானூர்தி வந்தது. மற்றும் தேவையே கண்டுபிடிப்பின் காரணம் என்றெல்லாம் சொல்லுகிறார்கள்.எது சரி என்று அறிய இந்த பிறவி போதுமா என தோன்றுகிறது.நன்றி.

    ReplyDelete
  4. ////Blogger selva ganapathy said...
    அருமை ஐயா/////

    நல்லது. நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  5. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice one.
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!

    ReplyDelete
  6. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,நல்ல கருத்துகள்.இதற்கு எதிர்மறையாக வைக்கும் வாதம் முன்னேற வேண்டும் என்றால் முயற்சிக்கத்தான் வேண்டும்.பறவைபோல் பறக்க நினைத்ததால்தான் வானூர்தி வந்தது. மற்றும் தேவையே கண்டுபிடிப்பின் காரணம் என்றெல்லாம் சொல்லுகிறார்கள்.எது சரி என்று அறிய இந்த பிறவி போதுமா என தோன்றுகிறது.நன்றி./////

    உண்மைதான். இருக்கும்வரை கிடைப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வோம்!!! நன்றி!

    ReplyDelete
  7. ஆசானே வணக்கம்.

    08 02 2015 அன்று திருமணம் என்ற பெயரியில் தோஷ கழிப்பு நடந்தது.

    திருமண தோஷம் அதான் ஐயா தார தோஷம் நடந்தது. ஒன்பது கிரகம்களின் சூட்ஷனுமதின் விளையாட்டு.

    சிறப்பு விருந்தினராக தங்களுடைய பெயரை அழைப்பிதழில் போடயும் அனுமதி கேட்டு இருந்தேன் அன்று. ஆனால் பாருங்கள் எல்லா வற்றையும் உணர்ந்த தாங்கள் வர மறுத்து விடடீர்கள் .

    தாங்கள் வராமல் போனது சரியாக நன்றாக அமைந்து விட்ட்து ஆசானே .


    நானும் தங்களை அழைத்து இருந்தேன் மேலும்! தங்களுடைய பெயரை கல்யாண பத்திரிகையில் போட்டுக்கொள்ளவும் தாங்கள் தான் முன்னின்று கல்யாணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று .

    ஆனால் கல்யாணல் மிகவும் சிறப்பாக என்னுடைய தகுதிக்கு மீறிய செலவில் மிகவும் சிறப்பாக நடந்து ஏரியாது .


    ஆனால் நான் கேட்டு கொண்டேன் தாங்கள் கல்யாணத்துக்கு வர ஆனால் சம்மதிக்க வில்லை தாங்கள் காரணம் அன்று புரிய வில்லை ஆனால் இப்பம் தான் புரிகின்றது தங்களின் மனதில் இருந்த சூட்சுமத்தை அர்த்தம்



    ஷாந்தி முகூர்த்தம் தொடங்கும் முன்னர் முதல் வரை தான் மகிழ்ச்சி . சாந்தி முகத்திற்கு குறித்த நேரத்திற்கு பின்னர் முதல் இது வரை கன்னி கழியாத பையன் . இல்ல! இல்லவே இல்ல! இது வரை அனைத்து தகுதிகளும் இருந்தும் கன்னி கழியாத பையன்.

    எந்த விதமான கெடட பழக்கமும் இல்ல!
    முது நிலை கல்வி,
    கை நிறைய சம்பளம்,
    என இருந்தவனுக்கு

    நேற்று தான்!

    சுமார்

    " ஒரு வருடத்திற்கு மேல்:

    நடந்து வந்த விவாகரத்து அளவிற்கும்

    நீதி மன்றத்தில்,

    நீதிமன்ற தாளில்

    " கையெழுத்து இட்டு உள்ளேன் ஐயா"!

    இட்டு உள்ளேன் .

    ஆசானே ! என்னுடைய ஜாதகத்தினை முன்னரே கணித்த தாங்கள் "நடக்க இருக்க கொடுமையை "

    எப்படி தடுக்க என்று ஆரம்பித்தினனில் ஒதிங்கிக்கொண்டீர்களோ என்னனோ ஆசானே !அந்த காசி விஸ்வ நாதருக்கும். ஸ்ரீ பாபநாசருக்கும் தான் தெரியும் உண்மை.

    பழைய பூட்டுவின் சாவி கிடைத்து விட்ட்து . மிக்க மகிழ்ச்சி .

    நன்றி ஆசானே .

    --

    ReplyDelete
  8. வணக்கம் குருவே!
    இருப்பதைக் கொண்டு சிறப்புடன்
    வாழ்க!
    அனைத்துமே அற்புதம்!

    ReplyDelete
  9. வணக்கம் ஐயா,
    நான் தனிதான்.
    நன்றி ஐயா

    ReplyDelete
  10. //////Blogger kannan Seetha Raman said...
    ஆசானே வணக்கம்.
    08 02 2015 அன்று திருமணம் என்ற பெயரியில் தோஷ கழிப்பு நடந்தது.
    திருமண தோஷம் அதான் ஐயா தார தோஷம் நடந்தது. ஒன்பது கிரகம்களின் சூட்ஷனுமதின் விளையாட்டு.
    சிறப்பு விருந்தினராக தங்களுடைய பெயரை அழைப்பிதழில் போடயும் அனுமதி கேட்டு இருந்தேன் அன்று. ஆனால் பாருங்கள் எல்லா வற்றையும் உணர்ந்த தாங்கள் வர மறுத்து விடடீர்கள் .
    தாங்கள் வராமல் போனது சரியாக நன்றாக அமைந்து விட்ட்து ஆசானே .
    நானும் தங்களை அழைத்து இருந்தேன் மேலும்! தங்களுடைய பெயரை கல்யாண பத்திரிகையில் போட்டுக்கொள்ளவும் தாங்கள் தான் முன்னின்று கல்யாணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று .
    ஆனால் கல்யாணல் மிகவும் சிறப்பாக என்னுடைய தகுதிக்கு மீறிய செலவில் மிகவும் சிறப்பாக நடந்தது .
    ஆனால் நான் கேட்டு கொண்டேன் தாங்கள் கல்யாணத்துக்கு வர ஆனால் சம்மதிக்க வில்லை தாங்கள் காரணம் அன்று புரிய வில்லை ஆனால் இப்பம் தான் புரிகின்றது தங்களின் மனதில் இருந்த சூட்சுமத்தை அர்த்தம்
    ஷாந்தி முகூர்த்தம் தொடங்கும் முன்னர் முதல் வரை தான் மகிழ்ச்சி . சாந்தி முகத்திற்கு குறித்த நேரத்திற்கு பின்னர் முதல் இது வரை கன்னி கழியாத பையன் . இல்ல! இல்லவே இல்ல! இது வரை அனைத்து தகுதிகளும் இருந்தும் கன்னி கழியாத பையன்.
    எந்த விதமான கெடட பழக்கமும் இல்ல!
    முது நிலை கல்வி,
    கை நிறைய சம்பளம்,
    என இருந்தவனுக்கு
    நேற்று தான்!
    சுமார்
    " ஒரு வருடத்திற்கு மேல்:
    நடந்து வந்த விவாகரத்து அளவிற்கும்
    நீதி மன்றத்தில்,
    நீதிமன்ற தாளில்
    " கையெழுத்து இட்டு உள்ளேன் ஐயா"!
    இட்டு உள்ளேன் .
    ஆசானே ! என்னுடைய ஜாதகத்தினை முன்னரே கணித்த தாங்கள் "நடக்க இருக்க கொடுமையை "
    எப்படி தடுக்க என்று ஆரம்பித்தினனில் ஒதிங்கிக்கொண்டீர்களோ என்னனோ ஆசானே !அந்த காசி விஸ்வ நாதருக்கும். ஸ்ரீ பாபநாசருக்கும் தான் தெரியும் உண்மை.
    பழைய பூட்டுவின் சாவி கிடைத்து விட்ட்து . மிக்க மகிழ்ச்சி .
    நன்றி ஆசானே .//////

    அன்பரே! அன்று நான் வராததற்கு என்னுடைய உடல்நிலையே காரணம். வேறு ஒன்றுமில்லை. உங்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் மலரவும் அது தொடரவும் பழநி அப்பனைப் பிரார்த்திக்கின்றேன்!!!!

    ReplyDelete
  11. /////Blogger shankar said...
    super sir very very useful mgs for this time//////

    நல்லது. நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  12. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    இருப்பதைக் கொண்டு சிறப்புடன்
    வாழ்க!
    அனைத்துமே அற்புதம்!////

    உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  13. ///////Blogger kmr.krishnan said...
    Thank you Sir.///////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  14. ////Blogger VM. Soosai Antony said...
    வணக்கம் ஐயா,
    நான் தனிதான்.
    நன்றி ஐயா////

    உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com