10.2.17

திருமணத் தடையா? இதைப் படியுங்கள்!


திருமணத் தடையா? இதைப் படியுங்கள்!

திருமண தடை உள்ள ஆண்களுக்கு:

பல இடங்களில் பெண்ணைக் கேட்டு இளைஞர்களின் திருமண வாய்ப்புகள் தள்ளிப் போகின்றதா ?? வழிபாடு செய்ய இருக்கிறது ஒரு திருத்தலம்!

ஒரு ஊரில் இருந்த குடியானவருக்கு மூன்று மகள்கள்!

அவரின் சகோதரியும், சகோதரியின் கணவரும் இறந்த காரணத்தால், அவர்களின் மகனை தன்னோடு வைத்து கொண்டு தன்னிடம் இருந்த
விவசாய பூமியில் பாடுபட்டார்!

அந்த இளைஞர், அதாங்க அவரின் அக்கா மகனுக்கு இந்தக் குடியானவர் எந்தவொரு கூலியும் கொடுப்பது இல்லை!!!!

மாப்பிள்ளை, உனக்கென்று மூன்று முறைப்பெண்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருத்தியை உனக்கு கட்டி வைக்கிறேன்” என்று உறுதி மொழி கொடுத்து வேலை வாங்கினார்.

அந்த இளைஞனும் கடுமையாகப் பாடுபட்டார்.

முதல் பெண்ணை வெளியூரில் இருந்த பெரிய பணக்கார வீட்டிற்கு
திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டார்.

இளைஞனும்  தன் மாமாவிடம், ”என்ன மாமா எனக்கு ஒருத்தியை கட்டி கொடுப்பதாக சொன்னீர்கள்" என்று கேட்க அந்த குடியாவனும்,
"இல்லை மாப்பிள்ளை இன்னமும் ரெண்டு பெண்கள் இருக்கிறார்கள் இல்லையா? அவர்களில் ஒருத்தி உனக்குத்தான்”"என்று சொல்லிட்டார்

சரி,  மாமாவே சொல்லிட்டாரே என்று அந்த இளைஞனும் பொறுத்து கொண்டார்

அப்புறம் அடுத்ததாக இருந்த இரண்டாவது பெண்ணை வேறு ஒரு நல்ல வசதியான இடத்தில் பேசி முடித்து விட்டார்!

கூலியும் கொடுக்காமல் இருந்ததால், குடியாவரும் நல்ல வசதியுள்ளவராக ஆகிட்டார்.

முறைப் பையனும், “இந்தப் பெண்னையாவது கட்டி வைப்பீங்கன்னு பார்த்தேனே மாமா” என்றார்!

குடியாவரும், “என்ன மாப்பிள்ளை இன்னொருத்தி இருக்காள் அவளை உனக்கு கட்டி வைக்கிறேன்” என்றார்!

அந்த இளைஞனும், “அதுக்கு என்ன சாட்சி?  முன்னையே இரண்டு முறை ஏமாற்றி விட்டீர்களே?” என்று கேட்டார்.

அந்த விவசாய பூமிக்கு பக்கமாக மலைப்பாங்கான ஏரியாவில் ...அந்த சமயத்தில் *ஒரு கரடி* அந்த பக்கமாகப் போய் கொண்டு இருந்தது.
இந்த குடியாவரும் அந்த முறைப் பையனிடம், “அதோ அந்தக் கரடி சாட்சியாக சொல்கிறேன், மாப்பிள்ளை, கடைசிப் பெண்ணை உனக்கே கட்டி வைக்கிறேன்” என்று சொல்லி அப்போதைக்குக்கு மேட்டரைத் தள்ளிப் போட்டார்.

ஆனால் சொன்னபடி நடக்காமல் மூன்றாவது பெண்ணையும் வேறு இடத்திற்கு சம்பந்தம் பேசி விட்டார்.

கூலி வாங்காமல் உழைத்து கொடுத்த இளைஞர் மன்னனிடம் சென்று முறையிட்டார்!

சபைக்கு அழைக்கப்பட்டார் குடியாவர்.

மன்னர் விசாரிக்க, “தான் தன் பெண்ணை கட்டி கொடுப்பதாக சொல்லவில்லை” என்று குற்றத்தை மறுத்தார்

"அவன் என் அக்கா மகன். அவனுக்கு உழைத்த கூலி என்னிடம் உள்ளது. அவனுக்குத் திருமணம் அமையும்போது கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்று சொன்னதோடு நிறுத்திக் கொண்டார்!

இளைஞனோ எனக்கு பெண்ணைத்தான் கட்டி வைக்கவேண்டும். கூலி வேண்டாம் என்று மறுத்தார்.

அப்போது அந்த குடியாவரும் ”நான் பெண்ணைக் கட்டிக் கொடுக்கிறேன் என்று சொன்னதிற்கு யார் சாட்சி?” என்று கொக்கி போட்டார்.

மன்னரும், ”ஆமாம், சாட்சி இல்லாமல் வழக்கு தீர்வாகாது. உன் சாட்சிகள் இருந்தால் நாளைக்கு ஆஜர் செய் "என்று சொல்லிட்டார்

அந்த இளைஞர் ”மாமா சொன்னதிற்கு கரடிதான் சாட்சி மன்னா” என்று சொல்ல அரசவையில் ஏக சிரிப்பு

ஆனால் மறுநாள் அந்த அரசவையில் நேரடியாக கரடி சாட்சி சொல்ல வந்து நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்லி அந்த பையனும் மூன்றாவது முறை பெண்ணின் கழுத்தில் தாலி யைக் கட்டினார்.

கரடியாக அந்த மலையில் வாழ்ந்த திருமூலர்தான் அங்கே சாட்சி சொன்னது!!!!

அந்த திருமணம் நடந்த இடம்: சேலம், உத்தமசோழபுரம்!

அவ்வூரில் *கரபுரநாதர் சன்னதி* என்ற சித்தரின் சந்நதி உள்ளது.

திருமணம் கூடிவராமல் இருக்கும் வாலிபர்கள் அங்கே கோயிலின் உள்ளே இருக்கும் *கரடிசித்தரை'(திருமூலர்)* வழிபட்டு பின்னர் ஈஸ்வர தரிசனம் செய்யுங்கள். உங்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும்!

மேலதிகத் தகவலுக்கு இதையும் படியுங்கள்: http://karapuranathar.blogspot.in/2014/12/3000.html

படித்தேன், பகிர்ந்தேன்
பதிவிட்ட நண்பருக்கு நன்றி
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20 comments:

  1. Very interesting story. Thanks for sharing!!

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா
    நமது சேலம் கரபுரநாதர் கோயில். சிறப்புகளை தெரிய கொடுத்தமைக்கு நன்றி
    ஒவ்வொரு மூகூரத்ததிலும் நிறைய திருமணம் நடைபெருகிறது
    எனக்கு தெரிந்து நண்பர்கள் உறவினர்கள் கோயில் சென்று வணங்கி வந்தவுடன் விரைவில் திருமணம் நடைபெற்றுள்ளளது
    நன்றி
    மூர்த்தி

    ReplyDelete
  3. அருமையான தகவல் பதிவு வாத்தியார் அவர்களே!!!

    நன்றி...


    அன்புள்ள மாணவன்,
    பா. லெக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  4. எல்லாமே நம்பிக்கைதான் முயற்சி செய்கிறேன்...

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,மிக,மிக பயனுள்ள தகவல்.மிக்க நன்றி.

    ReplyDelete
  6. சத்தயமேவ் ஜெயதே.

    ReplyDelete
  7. வணக்கம் குருவே!
    நல்ல தகவல்! நாட்டில் எத்தனையோ
    பேர் திருமணத்திற்குக் காத்து நிற்கின்றனர்.தங்களின் பகிர்வை
    அவர்களுக்கு வழங்குகிறேன்.
    முகநூலிலும் வெளியிடுகிறேன்.
    நன்றி வாத்தியாரையா!

    ReplyDelete
  8. ////Blogger selvaspk said...
    Very interesting story. Thanks for sharing!!////

    நல்லது. நன்றி செல்வா!

    ReplyDelete
  9. //////Blogger moorthy krishnan said...
    வணக்கம் ஐயா
    நமது சேலம் கரபுரநாதர் கோயில். சிறப்புகளை தெரிய கொடுத்தமைக்கு நன்றி
    ஒவ்வொரு மூகூரத்ததிலும் நிறைய திருமணம் நடைபெருகிறது
    எனக்கு தெரிந்து நண்பர்கள் உறவினர்கள் கோயில் சென்று வணங்கி வந்தவுடன் விரைவில் திருமணம் நடைபெற்றுள்ளளது
    நன்றி
    மூர்த்தி/////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. ////Blogger kmr.krishnan said...
    Nice information/////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  11. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    அருமையான தகவல் பதிவு வாத்தியார் அவர்களே!!!
    நன்றி...
    அன்புள்ள மாணவன்,
    பா. லெக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி./////

    நல்லது. நன்றி லெக்‌ஷ்மி நாராயணன்!!!

    ReplyDelete
  12. /////Blogger R VIJAYAKUMAR GEDDY said...
    எல்லாமே நம்பிக்கைதான் முயற்சி செய்கிறேன்.../////

    நல்லது. முயற்சி செய்யுங்கள் விஜகுமார்!!!

    ReplyDelete
  13. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,மிக,மிக பயனுள்ள தகவல்.மிக்க நன்றி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  14. ////Blogger பரிவை சே.குமார் said...
    நல்ல பகிர்வு ஐயா.../////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. ////Blogger SELVARAJ said...
    சத்யமேவ் ஜெயதே.//////

    சத்தியமே வெல்லட்டும். நன்றி!

    ReplyDelete
  16. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    நல்ல தகவல்! நாட்டில் எத்தனையோ
    பேர் திருமணத்திற்குக் காத்து நிற்கின்றனர்.தங்களின் பகிர்வை
    அவர்களுக்கு வழங்குகிறேன்.
    முகநூலிலும் வெளியிடுகிறேன்.
    நன்றி வாத்தியாரையா!/////

    நல்லது. செய்யுங்கள். நன்றி!!!

    ReplyDelete
  17. ////Blogger Subathra Suba said...
    Super story iyya/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com