17.1.17

தர்மதேவதை உலகைவிட்டு ஏன் போனாள்?

தர்மதேவதை உலகைவிட்டு ஏன் போனாள்?

🌷மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருக்கிறார். கர்ணனும் வஞ்சனையால் கொல்லப்படுகிறான். குந்திதேவி கர்ணனை மகனே என்றழைத்து துக்கம் அனுஷ்டிக்கிறாள். கர்ணனுடைய மனைவியும் அவன் உடல்மேல் விழுந்து கதறுகிறாள். இவர்களோடு இன்னொரு பெண்மணியும் கர்ணனுக்காக அழுதாள். அதைக் கண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனைப் பார்த்து, ""இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்?'' என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர், ""இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே இருக்கப் போவதில்லை.

தர்மம் செய்வதற்கென்றே பிறந்தவன் கர்ணன். அவனே போய்விட்ட பிறகு பூமியில் எனக்கென்ன வேலை என்று உலகை விட்டுப்போகிறாள் அவள்'' என்றார்.தர்மபுத்திரரைப்பயம் சூழ்ந்து கொண்டது.

🌷காரணம்- பாண்டவர்களுடைய பேரனான ஜெனமேஜெயன் ஆளும்போது இந்த நாட்டில் தர்மம் இருக்காதாஎன்கிற பயம்தான் அது. ""தர்மம் மீண்டும் செழிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?'' என்று பரந்தாமனை தர்மர் கேட்க, பரந்தாமனோ ""அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கேள்; அவர் சொல்வார்'' என்றார்.

பீஷ்மரும் தர்மதேவதை உலகை விட்டுச் சென்றதால் ஏற்படப் போகும் அவலங்களைச் சொல்கிறார்:""இனி உலகம் செழிப்புற்று விளங்காது. தேசங் கள் ஒவ்வொன்றும் அநியாயமாகச் சண்டையிட்டு அழியும். அரசர்கள் நீதிமான்களாக இருக்க மாட்டார்கள். அவர்களிடம் பணிபுரியும் அமைச்சர்கள் முதல் பணியாட்கள் வரை ஊழல் செய்து, மக்களை வாட்டி தவறான வழியில் தனம் சேர்ப்பார்கள். அரசனிடம் நல்ல வற்றிற்கு நீதி கிடைக்காது. குருமார்கள் தங்கள் சீடர்களுக்கு ஒழுங்காகப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள்; சீடர் களும் ஒழுங்காகப் படிக்க மாட்டார்கள். படித்தவன் சூதும் வாதும் செய்வான். மழை பொழியாது; நிலங்கள் விளைச்சலைக் கொடுக்காது; பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும். கணவன்மார்கள் தங்கள் மனைவியைச் சரிவர காப்பாற்ற மாட்டார்கள்; மனைவிமார்களும் பதிவிரதையாக இருக்க மாட்டார்கள். அவர்களின் குழந்தைகள் தவறான வழியில் நடக்கும்...

🌷''இப்படி பீஷ்மர் சொல்லச் சொல்ல பாண்டவர்கள் பயந்தார்கள். இதிலிருந்து தங்கள் சந்ததியினர் தப்பிப்பது எப்படி என்று கேட்டார் கள். ""அதை ஸ்ரீ கிருஷ்ணனே சொல்லுவார்'' என்று பீஷ்மர் கை காட்ட, கிருஷ்ணனோ, ""நீங்கள் பிதாமகர். நான் சொல்லுவதைவிட உங்கள் நாவிலிருந்தே நல்ல வார்த்தைகள் புறப்படட்டும்'' என்று சொன்னார்.

அப்போது புறப்பட்டவைதான் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமம். அதாவது, எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை ஆயிரம் பெயர் சொல்லி அர்ச்சித்து அவன் மனம் குளிர வேண்டினால் தர்மம் மீண்டும் தழைக்கும் என்பதுதான் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமை.பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டா என்று நாம் வியப்படையலாம்.

🌷சாதாரண மனிதனாகிய நமக்கே பாலசுப்பிரமணியன் என்று பெயர் வைத்தால், பாலா, பாலு,சுப்பிரமணி, சுப்பி, மணி, மணியன் என்று பல பெயர்களால்அழைக்கும்போது, பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் இருக்காதா என்ன? இந்த ஆயிரம் பெயர் களைச் சொல்லி, பகவானை வேண்டினால் கொஞ்சமாவது தர்மம் பிழைக்கும் என்பது பீஷ்மர் வாக்கு.

🌷உடனே பார்வதிதேவிக்குச் சந்தேகம் வந்து விட்டது. அவள் சர்வேஸ்வரனான தன் கணவனைப் பார்த்து, ""சுவாமி, இது எப்படி சாத்தியமாகும்? ஆயிரம் நாமங்கள் சொல்லி அதனால் தர்மம் தழைக்கும் என்றால், அந்த நாமங்களை பண்டி தர்களால் சொல்ல முடியலாம்; படித்தவர்களால் சொல்ல முடியலாம். ஆனால் படிக்காத ஒருவன் தர்மம் தழைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா?'' என்று கேட்டாள்.ஈஸ்வரன் புன்னகைத்தார்.""தேவி... நீ சொல்வது சரிதான். ஏதுமறியாத ஒருவன் ஆயிரம் பெயர் சொல்லி திருமாலை வேண்டுவது நடக்காத காரியம்தான். ஆனால் அதற்கும் ஓர் வழி உண்டு.

🌷"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமேஸஹஸ்த்ர நாம தந்துல்யம் ராம நாம வரானனே'-இப்படி மூன்று முறை சொன்னால் போதும். சஹஸ்ர நாமம் சொன்ன பலனை அடையலாம்'' என்று பார்வதிதேவியின்சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் ஈஸ்வரன்.சரி;
இப்படிச் சொல்வதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்? என்று கேட்கலாம். மரா... மரா... மரா... என்று சொல்லியே ராமநாமத்தை உச்சரித்த வேடனும் திருடனுமாக இருந்தவனே வால்மீகி மகரிஷியாக உயரவில்லையா? அது தான் ஸ்ரீராம நாம மகிமை.

 மேலும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும், அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும்சொல்லலாம். முழு மனதோடு பகவானைச் சரணாகதி அடைந்தால்பலன்களை அவன் தருவான். பேய், பிசாசுகள் அண்டாது. வியாதிகள் அணுகாது. வைத்தியர்கள் கைவிட்ட தீராத நோயும் தீரும். சுகப்பிரசவம் சரியாக நேரும். நோயாளிகளின் காதருகே அவர்கள் மனம் கேட்கும்படியாக சஹஸ்ர நாமப் பாராயணம் செய்வது மிக மிக உத்தமம். மேலும் தர்மங்களும் தழைக்கும்.

🌷ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீதேசிகன், ஸ்ரீமத்வாச்சாரியார், ஸ்ரீராகவேந்திரசுவாமிகள் போன்ற மகான்கள் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு மிக அருமையான பாஷ்யங் கள் (பதவுரை- பொழிப்புரை) எழுதியிருக்கிறார் கள். இதிலிருந்தே இதனுடைய பெருமையை அறியலாம். சமஸ்கிருத மொழியைச் சரியாக உச்சரித்துச் சொல்ல வேண்டும்.இல்லையேல் பாரத ரத்தினமாய் விளங்கிய எம்.எஸ். சுப்பு லட்சுமி அவர்கள் இசைத்த ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாம ஒலிநாடாவையோ குறுந்தகட்டையோ தினமும் காலையில் நமது வீடுகளில் ஒலிக்கச் செய்வதன் மூலம் நாம் சகல சௌபாக்கியங்களுடன் வாழலாம். பலருடைய வாழ்விலும் இப்படிக் கேட்டு நன்மைகள் விளைந்திருக்கின்றன.

🌷"பரித்ராணாய ஸாதுநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் !!தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே !!🌷

அனைவரும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம்செய்து விஷ்ணுவின் அருளை பெறுவோமாக .

படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. very good அருமையான பதிவு ஐயா!

    அம்பாள் பார்வதி கேட்டது;

    'கேனோபாயேன லகுனா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்
    பட்யதே பண்டிதைர் நித்யம் ச்ரோதுமிச்சாம்யஹம் ப்ரபோ"

    "ப்ரபுவே!(பரம சிவன்) படித்த பண்டிதர்களும் பாமரர்களும் சுலபமாக விஷ்ணு சஹஸ்ர நாமத்தை நாள்தோறும் கூறிய பலனை அடையும் லகுவான(சுலபமான, எளிதான)உபாயத்தை‍=வழியினைக் கூற வேண்டும்"

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    எவ்வளவு மகத்துவம் மிகுந்த தகவல்!
    வகுப்பறையில் வாத்தியாரின் அநுபவமிக்க Moral Instruction கிடைத்துள்ளது! சஹஸ்ரநாமம் தின்
    பெருமை அதை தினம் பாராயணம் செய்வதால் ஏற்படும் நன்மை இவற்றுடன் தர்மதேவதை உலகை விட்டுப் போனால் ஏற்படும் கொடுமை
    என் அனைத்தையும் அள்ளித் தந்துள்ளார்!
    இன்றைய நாளில் நம் நாட்டில் தர்மதேவதை வாசம் செய்கிறாளா என்பது கேள்விக்குறியாகத் தெரிவதால்
    பீஷ்மப்பிதாமகர் தர்மரிடம் கூறியதுபோல் தினம் சஹஸ்ரநாமம்
    பாராயணம் செய்து தர்மதேவதையை
    நாட்டில் நிலை நிறுத்த முயற்சிப்போம்!

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning...Thanks for indicating the importance of Vishnu sahasra Nama and
    u explained with ancient story.

    Excellant sir.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமத்தின் அருமையும் பெருமையும் உணர்ந்தோம்.நன்றி.

    ReplyDelete
  5. /////Blogger kmr.krishnan said...
    very good அருமையான பதிவு ஐயா!
    அம்பாள் பார்வதி கேட்டது;
    'கேனோபாயேன லகுனா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்
    பட்யதே பண்டிதைர் நித்யம் ச்ரோதுமிச்சாம்யஹம் ப்ரபோ"
    "ப்ரபுவே!(பரம சிவன்) படித்த பண்டிதர்களும் பாமரர்களும் சுலபமாக விஷ்ணு சஹஸ்ர நாமத்தை நாள்தோறும் கூறிய பலனை அடையும் லகுவான(சுலபமான, எளிதான)உபாயத்தை‍=வழியினைக் கூற வேண்டும்"/////

    உங்களின் மேலதிகத் தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    எவ்வளவு மகத்துவம் மிகுந்த தகவல்!
    வகுப்பறையில் வாத்தியாரின் அநுபவமிக்க Moral Instruction கிடைத்துள்ளது! சஹஸ்ரநாமம் தின்
    பெருமை அதை தினம் பாராயணம் செய்வதால் ஏற்படும் நன்மை இவற்றுடன் தர்மதேவதை உலகை விட்டுப் போனால் ஏற்படும் கொடுமை
    என் அனைத்தையும் அள்ளித் தந்துள்ளார்!
    இன்றைய நாளில் நம் நாட்டில் தர்மதேவதை வாசம் செய்கிறாளா என்பது கேள்விக்குறியாகத் தெரிவதால்
    பீஷ்மப்பிதாமகர் தர்மரிடம் கூறியதுபோல் தினம் சஹஸ்ரநாமம்
    பாராயணம் செய்து தர்மதேவதையை
    நாட்டில் நிலை நிறுத்த முயற்சிப்போம்!/////

    நல்லது. அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  7. ///Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning...Thanks for indicating the importance of Vishnu sahasra Nama and
    u explained with ancient story.
    Excellant sir.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது.உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசிக்காரரே!!

    ReplyDelete
  8. ////Blogger Nagendra Bharathi said...
    அருமை////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமத்தின் அருமையும் பெருமையும் உணர்ந்தோம்.நன்றி.////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  10. அருமையானதொரு பயனுள்ள பகிர்வுக்குத் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  11. i humbly request you to post more authentic and inspiring details about the great VISHNU SAHASRANAMA.
    REGARDS
    R VASSUDEVAN

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com