Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: காணாமல் போனவர்!
சிலர் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பிப் போய்விடுவார்கள். எங்கே போனார்? எந்த ஊருக்குப் போனார்? எங்கே தங்குவார்? அன்றாடம் செலவிற்கு என்ன செய்வார்? என்று பலவிதமான குழப்பங்களில் ஆழ்ந்து வீட்டில் உள்ளவர்கள் நொந்து போய் விடுவார்கள்.
பள்ளியில் படிக்கின்ற பையன் என்றால், 4 நாட்கள் எங்காவது சுற்றிவிட்டு வந்துவிடுவான் என்று சற்று நம்பிக்கை கொள்ளலாம். ஆனால் 45 நிரம்பிய மனிதர் காணாமல் போனால் என்ன ஆகும்? அதுவும் கோபத்துடன் கிளம்பிப் போனவர் என்றால் என்ன செய்வது? நாளாக நாளாக, அவர் திரும்பி வருவாரா என்பதை விட தற்சமயம் உயிருடன் இருக்கிறாரா? அல்லது எங்காவது சென்று தற்கொலை செய்து கொண்டு விட்டாரா என்று கூட சிந்திக்கத் தோன்றும்.
மனைவியுடன் சண்டை போட்டுவிட்டுக் கிளம்பிப் போனவர், மூன்று மாதங்களாகியும் திரும்பவில்லை. அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை! மனைவி, மக்கள், உடன் பிறப்புக்கள், அவருடைய பெற்றோர்கள் என்று அனைவரும் கலங்கிப்போய் இருந்தார்கள்
அவர் திரும்பி வருவாரா அல்லது மாட்டாரா? ஜாதகம் என்ன சொல்கிறது?
அதை இன்று அல்சுவோம்!
---------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:
மீன லக்கின ஜாதகர். ஆயில்ய நட்சத்திரக்காரர்.
அவர் காணாமல் போனது சந்திர மகா திசை, சனி புத்தியில்
ஏழாம் வீட்டில் டெண்ட் அடித்துக் குடியிருக்கும் சனி, அவருக்குத் திருமண வாழ்க்கையில், மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கொடுக்கவில்லை. அத்துடன் ஏழாம் வீடும், அங்கேயிருக்கும் சனியும் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றன! முன்பக்கம் செவ்வாய். பின்பக்கம் கேது! அவர்களால் தான், அதாவது அந்த இரண்டு தீயவர்களின் நெருக்கடியால்தான், அவருக்கு நாளுக்கு நாள் திருமண வாழ்க்கையில் வெடிக்கும் அளவிற்கு மோசமான அழுத்தம் ஏற்பட்டது.
தாங்க முடியாமல், மனிதர் வீட்டை விட்டு ஜூட் விட்டு விட்டார்.
சரி நடந்துவிட்டது. ஆசாமியும் ஓடிப்போய் விட்டார்.
சரி ஆசாமி திரும்பி வருவாரா? வீட்டில் உள்ளவர்களுக்கு ஆறுதலைத் தருவாரா? ஜாதகத்தில் அதற்கென்று ஏதாவது சலுமை உள்ளதா?
உள்ளது!
லக்கினத்தில் வலுவாக உள்ள குரு பகவான், தன்னுடைய நேர் பார்வையால், ஏழாம் வீட்டைப் பார்ப்பதால், ஜாதகரைத் திரும்பி வர வைத்தார். சனி புத்தி முடிந்தவுடன் அவர் திரும்பி வந்தார். அதற்குள் பத்து மாதம் சென்று விட்டது. பத்து மாதம் தாங்கள் பரிதவித்ததை எல்லாம் மறந்து விட்டு, வந்தவரை வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் கட்டி அணைத்தார்கள்.
எல்லாம் குரு பகவானின் கைங்கர்யம்!
குரு பகவானின் முக்கியத்தை உணர்த்துவதற்காகவே இந்தப் பாடம்!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Excellent Sir. Thank you.
ReplyDeleteThanks sir. We hav already analysed this Horoscope if I am correctly remember.
ReplyDeleteNice explanation sir , can we say marriage life became worse and sad because of Raghu in 12 th house . Also Sukran in papkatri yoga .
ReplyDeleteவணக்கம் குருவே!
ReplyDeleteஜாதகத்தில் 7ம் வீட்டின் விசேஷ அமைப்பில் சனியும் அதிலும் அவர்
பாபகர்த்தாரி(தீய)யோகத்தில் சிக்கியும்
கொண்டால் ஜாதகன் நிலை எனீனவாகும் என்பது தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதுடன்
குரு பகவானின் பார்வைக்கு
எவ்வளவு மகத்துவம் உண்டு என்பதும்
புரிந்தது ஐயா.
இதற்கு முந்தைய அலசலிலும் குருவின்
சிறப்பு தெளிவாக்கப்பட்டிருந்தது.
அருமை ஐயா
ReplyDeleteகுரு தன்னுடைய சொந்த இடத்தில் இருந்து வலுவாக பார்த்ததால் நல்லதாகி விட்டது.
வணக்கம் ஐயா,அலசல் பாடம் அருமை.நன்றி.
ReplyDelete
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
I will publish this in Healthcare Feb 2016
ReplyDelete////Blogger kmr.krishnan said...
ReplyDeleteExcellent Sir. Thank you.////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!
////Blogger KJ said...
ReplyDeleteThanks sir. We hav already analysed this Horoscope if I am correctly remember.////
ஆமாம். ஸ்பெஷல் கிளாசில் முன்பு பதிவிட்டது நிறைய புதியவர்கள் வந்துள்ளதால், அவர்கள் அறிந்து கொள்ளட்டும் என்று இங்கே பதிவிட்டுள்ளேன்,
////Blogger jaichandhran kapali said...
ReplyDeleteNice explanation sir , can we say marriage life became worse and sad because of Raghu in 12 th house . Also Sukran in papkatri yoga /////
ஆமாம். அதுவும் ஒரு காரணம்!!.
///Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
ஜாதகத்தில் 7ம் வீட்டின் விசேஷ அமைப்பில் சனியும் அதிலும் அவர்
பாபகர்த்தாரி(தீய)யோகத்தில் சிக்கியும்
கொண்டால் ஜாதகன் நிலை எனீனவாகும் என்பது தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதுடன்
குரு பகவானின் பார்வைக்கு
எவ்வளவு மகத்துவம் உண்டு என்பதும்
புரிந்தது ஐயா.
இதற்கு முந்தைய அலசலிலும் குருவின்
சிறப்பு தெளிவாக்கப்பட்டிருந்தது./////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!
////Blogger C Jeevanantham said...
ReplyDeleteஅருமை ஐயா
குரு தன்னுடைய சொந்த இடத்தில் இருந்து வலுவாக பார்த்ததால் நல்லதாகி விட்டது./////
கரெக்ட்! புரிந்துணர்விற்கு நன்றி ஜீவானந்தம்!
////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,அலசல் பாடம் அருமை.நன்றி.///
நல்லது. நன்றி ஆதித்தன்!
////Blogger பரிவை சே.குமார் said...
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.////
உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி.!!!!
///Blogger Healthcare Raja Nellai said...
ReplyDeleteI will publish this in Healthcare Feb 2016////
நோ ப்ராபளம். தாராளமாக வெளியிடுங்கள்!
நல்ல அலசல்..காணும் பொங்கல் வாழ்த்துகள் ஐயா..ஒரு சந்தேகம்..குருவும் சனியும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதால் குரு தன்னுடைய பார்வையின் வலிமையை சனிக்கு கொடுத்துவிட்டு சனியின் 7ஆம் பார்வையால் தன் வலிமையை இழக்க மாட்டாரா?குரு வலிமை பெறும் மீன குரு-கன்னி சனி,தனுசு குரு-மிதுன சனி.கடக குரு-மகர சனி என இதில் சனிக்கும் நல்ல வீடுகள்..இதில் குருவின் சுப பார்வை வென்று விடுமா?
ReplyDelete