8.12.16

குட்டிக்கதை: மகிழ்ச்சியும் மன அமைதியும் ஒரு சேர எப்போது கிடைக்கும்?


குட்டிக்கதை: மகிழ்ச்சியும் மன அமைதியும் ஒரு சேர எப்போது கிடைக்கும்?

ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர்.

செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தார். *செல்வம்* இல்லாவிட்டாலும் *சந்தோசமும் மன அமைதியுடனும்* இருந்தார்.

செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து *”அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?”* என்றார்.

*விஷ்ணுவும்* அதற்குச் சம்மதித்துவிட்டு *நாரதரை* பூலோகத்துக்கு அனுப்பினார்.

போகும்போது நாரதரைப் பார்த்து, *“நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்"* என்று செல்வந்தரரிடம்
சொல்லுங்கள்.

அவர் *‘தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’* என்று கேட்பார்.

அதற்கு நீங்கள் *‘நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’* என்று பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

*”அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்”* என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.

நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், *“நீங்கள் யார்?”* என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார். அதற்கு அந்தச் செல்வந்தர் *“தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?”* என்று கேட்க, நாரதரும், *நாராயணன், ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார்.* அதற்கு அந்த செல்வந்தர் *“அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?”* என்று கேட்டார்.

நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார். அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, *“இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?”* என்று பதில் சொன்னார்.

அவர்கள் இருவரும் சொன்ன பதிலை *நாராயணனிடம்* வந்து சொன்னார்

கடவுள் பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை. இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று
பற்றுவதே *”உண்மையான பக்தி”* இப்பொழுது தெரிகிறதா? *ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார் நாராயணன்.*

காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக்கொள்கிறதோ, நதியானது மகா சமுத்திரத்தில் கலந்து விடுகிறதோ… அது போல், கடவுளுடன் நமது மனமும் கலந்துவிட வேண்டும். நமக்கு அனுக்கிரஹம் செய்கிற, பரமாத்வினிடத்தில், தன்னை அறியாமல் போய் நிற்க வேண்டும். *அதற்கு காரணமே இருக்கக் கூடாது.* காரணம் என்று வந்தால் அது *வியாபாராமாகிவிடும்.*

*இறைவனிடம் எதைக்கேட்டாலும் அது வியாபாரம் தான்!*

ஏதோ ஒன்றுக் கொன்று கொடுப்பது போல, செல்வத்தைக் கொடு, பக்தி செய்கிறேன், என்று *இறைவனிடம் பரிமாறிக் கொள்வதனால் வியாபாரமாகி விடும்.*

அப்படியில்லாமல் எதையுமே நினைக்காது, பெருமாளிடத்தில் போய் சேருவதையே நினைத்து தன்னை அறியாமல் ஓடுகிற சித்த விருத்தி
இருக்கிறதே, அதற்கு தான் *பக்தி* என்று பெயர். 🙏
====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17 comments:

  1. Respected sir,

    Good morning sir. Good story to tell the truth of no business transaction with God. Only thinking the Almighty, NO DEAL with Him. God Knows to whom to give what, when and how. Good story to all.

    with kind regards,

    Visvanathan N

    ReplyDelete
  2. அய்யா, காலை வணக்கம். நெத்தியடியான விளக்கம்.
    குட்டிக்கதையில் அடக்கம். கண்ணில் நீர் பெருக்கம்.
    நன்றிகள் பல உமக்கும்.

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Nice post...

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. ஏற்கனவே படித்த கதைதான். ஆனால் தங்களின் எழுத்து நடையில் அக்கதையின் பொருள் இன்னும் தெளிவாக துலங்குகிறது. நன்றி அய்யா.

    பாபு, கோவை

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,ஊசிக்காதளவு கதை என்றாலும்,உலகளவு கருத்து.பரிகாரம் என்பதும் நிபந்தனையுடன் கூடிய வேண்டுதல்தானே.விலக்கலாமோ?நன்றி.

    ReplyDelete
  6. வணக்கம் குருவே!
    மகிழ்ச்சி எனும் மனநிலைக்கு மனிதன் எப்போதுமே அலைகிறான்.அது கிடைக்க பக்தி ஒரு சாதனம்.அந்த பக்தி எப்படிப்பட்டதாக இருந்தால் மனம் உன்னத நிலையை அடைந்து மனவமைதி பெரும் என்பதைப் குட்டிக்கதை மூலம் உணர்த்திய பாங்கு பலே, வாத்தியாரையா!
    நல்ல கதை மற்றும் கருத்துள்ள வரிகள்!

    ReplyDelete
  7. ஆஹா அன்பின் ஐயா,

    தங்கள் எல்லாப் பதிவுகளும் போல் இக்கதையும்
    அருமை ஐயா உள்ளம் உருகியது.

    உருக்கியதற்கு உளமார்ந்த நன்றிகள் கோடி ஐயா.

    அன்புடன்
    விக்னசாயி.

    ReplyDelete
  8. ////Blogger kmr.krishnan said...
    Fine moral Sir./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. ////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Good morning sir. Good story to tell the truth of no business transaction with God. Only thinking the Almighty, NO DEAL with Him. God Knows to whom to give what, when and how. Good story to all.
    with kind regards,
    Visvanathan N//////

    உண்மைதான். உங்களின் புரிதலுக்கு நன்றி விஸ்வநாதன்!

    ReplyDelete
  10. /////Blogger venkatesh r said...
    அய்யா, காலை வணக்கம். நெத்தியடியான விளக்கம்.
    குட்டிக்கதையில் அடக்கம். கண்ணில் நீர் பெருக்கம்.
    நன்றிகள் பல உமக்கும்./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice post...
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  12. ////Blogger நிழற்குடை said...
    ஏற்கனவே படித்த கதைதான். ஆனால் தங்களின் எழுத்து நடையில் அக்கதையின் பொருள் இன்னும் தெளிவாக துலங்குகிறது. நன்றி அய்யா.
    பாபு, கோவை////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,ஊசிக்காதளவு கதை என்றாலும்,உலகளவு கருத்து.பரிகாரம் என்பதும் நிபந்தனையுடன் கூடிய வேண்டுதல்தானே.விலக்கலாமோ?நன்றி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  14. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    மகிழ்ச்சி எனும் மனநிலைக்கு மனிதன் எப்போதுமே அலைகிறான்.அது கிடைக்க பக்தி ஒரு சாதனம்.அந்த பக்தி எப்படிப்பட்டதாக இருந்தால் மனம் உன்னத நிலையை அடைந்து மனவமைதி பெரும் என்பதைப் குட்டிக்கதை மூலம் உணர்த்திய பாங்கு பலே, வாத்தியாரையா!
    நல்ல கதை மற்றும் கருத்துள்ள வரிகள்!/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  15. ///Blogger Vicknaa Sai said...
    ஆஹா அன்பின் ஐயா,
    தங்கள் எல்லாப் பதிவுகளும் போல் இக்கதையும்
    அருமை ஐயா உள்ளம் உருகியது.
    உருக்கியதற்கு உளமார்ந்த நன்றிகள் கோடி ஐயா.
    அன்புடன்
    விக்னசாயி.//////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி விக்னசாயி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com