22.12.16

தமிழர்களின் அரிய கண்டுபிடிப்பு!


தமிழர்களின் அரிய கண்டுபிடிப்பு!

‘இட்லி’ என்ற உணவின் வயது 700 ஆண்டுகள்.  ஆம்...  இட்லி தென்னிந்தியாவில் காலை உணவின் ராஜாவாக 700 ஆண்டுகளாய்  இருந்து வருகிறது. அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதா என அனைத்து மருத்துவர்களும் பரிந்துரைக்கும் உணவாகவும் இட்லி இருக்கிறது.

ஒரு வயது குழந்தை முதல் 100 வயது முதியவர் வரை, அனைவரும் சாப்பிடக்கூடிய உணவாகவும் இருக்கிறது. இட்லியில் அப்படி என்னதான் இருக்கிறது என கேட்டபோது, ‘ஏராளம்... ஏராளம்...’ என்கிறார் உணவியல் நிபுணர் ராதிகா.

* பொதுவாக ஒருவருடைய  உயரம் மற்றும் எடையைப் பொறுத்துதான்  உணவையும், அதன் அளவையும் தீர்மானிக்க முடியும். அந்த அடிப்படையில் எல்லாருக்குமான  உணவாக இட்லி இருக்கிறது. அதுபோல இட்லி எல்லா காலத்திலும் சாப்பிடக்கூடிய உணவாகவும். இந்தியாவின் தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ற உணவாகவும் இருக்கிறது.

* ஒரு இட்லியில் 60 முதல் 70 கிலோ கலோரிகள் வரை அடங்கி இருக்கிறது. 2 கிராம் புரதம், 8 கிராம் கார்போ ஹைட்ரேட், 2 கிராம் நார்ச்சத்து ஒரு மில்லி கிராம் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ ஆகியவை உள்ளது.

* தினமும் 4 இட்லிகள் எடுத்துக்கொண்டால் 300 முதல் 350 கலோரி கள் உடலுக்கு கிடைக்கும். இட்லியோடு சட்னி சாம்பார் சேரும்போது எல்லா ஊட்டச்சத்தும் சரிவிகிதத்தில் கிடைக்கும்.

* இட்லி நம் உடலில் ரத்தத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருகிறது, தசைகளுக்கு பலம் அளிக்கிறது. மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பையும் அளிக்கிறது. உடலில் எந்த பாதிப்பும் இல்லாமல் செரிக்கக்கூடிய உணவாகவும் பயண நேரங்களில் உண்பதற்கு ஏற்ற உணவாகவும் இருக்கிறது.

* இட்லியோடு சாம்பார் சட்னி மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது. மீன் குழம்பு, மட்டன் குழம்பு, கார குழம்பு என்று எடுத்துக்கொள்வது தவறு. மேலும், இட்லியோடு வடை, போண்டா எடுத்துக்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

* வாயுக்கோளாறு உள்ளவர்கள் தினமும் இட்லி சாப்பிடுவது நல்லது. வயிற்று புண்கள் ஆறுவதோடு செரிமான உறுப்புகள் சீராக இயங்கவும் இட்லி உதவுகிறது.

* இட்லி இரண்டு மணி நேரத்துக்குள் செரிக்க கூடிய உணவாகும். குழந்தைகளுக்கு தினமும் இட்லி ஊட்டுவது நல்லது. அவர்கள் விரும்பும் வகையில் ரவை, ராகி, வெஜிடபிள், கேரட் துருவல், பீட்ரூட் துருவல் போன்றவை கலந்து குழந்தைகள் விரும்பும் வண்ணம் இட்லியைக் கொடுக்கலாம்.

* இட்லியை காலைப் பொழுதில் எடுத்துக்கொள்வது சிறந்தது. புரதச்சத்து ஒவ்வாமை உள்ளவர்கள் இட்லியில் அரிசிக்கு பதிலாக ஜவ்வரிசி சேர்த்துக் கொள்ளலாம்.

* நீரிழிவு, சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் இட்லியை குறைவாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், மருத்துவர் ஆலோசனைப்படி உட்கொள்வதும் சிறந்தது.

* இட்லி நீராவியில் வேக வைக்கும் உணவு என்பதால் கொழுப்புச்சத்து அதிகம் இல்லாத உணவாக இருக்கிறது.

* இட்லி மாவை 12 மணிநேரம் ஊற வைப்பதால் இயற்கையாகவே கூடுதலான உயிர்சத்துக்கள் உருவாகின்றன.

* இட்லி மாவு 12 மணி நேரம் புளித்த பிறகு பயன்படுத்த வேண்டும். அதிகம் புளிக்கும்படியும் பயன்படுத்தக்கூடாது.

* இட்லியை வீட்டில் தயார்செய்து சாப்பிடுவதே சிறந்தது. இட்லி மென்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஓட்டல்களில் பேக்கிங் சோடா பயன்படுத்துகிறார்கள் அது இட்லியின் பயனைக் கெடுப்பதோடு உடலுக்கும் நோய்களைத் தருகிறது. இட்லி மென்மையாக இருக்க பேக்கிங் சோடாவுக்குப் பதிலாக நார்சத்து நிறைந்த வெந்தயம் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கும் நல்லது.

* இட்லியில் நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்கள் நிறைந்திருப்பதால் 12 மணிநேரம் கெட்டுபோகாமல் இருக்கும். இட்லியை பிரிட்ஜில் வைக்க கூடிய அவசியமும் இருக்காது. மொத்தத்தில் உடல் ஆரோக்கியத்துக்கும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கும் அடித்தளமாக இட்லி இருக்கிறது.
-------------------------------------------
படித்தேன். பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. உயர்திரு ஐயா,

    காலை வணக்கம். அருமையான தகவல். அனைவரும் அறிந்த தகவல் என்றாலும், சில தகவல் புதிதாக இருக்கிறது. அதாவது இட்லியோடு வடை, போண்டா எடுத்து கொள்வது மற்றும் அசைவ உணவோடு சேர்ந்து சாப்பிடுவது தவிர்க்கலாம் என்ற தகவல் உபயோகமானது. நன்றி நன்றி.

    அன்புடன்,

    விசுவநாதன் N

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Thanks for sharing...

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. முன்பெல்லாம் இட்லி வாங்கனுன்னு
    முதல்ல தூக்கு சட்டி எடுத்துக் கிட்டு போகணும்

    அதன் பின் நாகரீக வளர்ச்சியில்
    அதை இலையில சுத்தி மஞ்சள் பையில் ..

    அடுத்த கட்ட வளர்ச்சியில்..
    அது பிளாஸ்டிக் தாளில் சுற்றி கேயரி பையில்

    இப்போ அதெல்லாம் இல்லை..
    இது வேற மாதிரி....

    நிறையா இருந்தா தான்
    நியாயமா இந்த இட்லி வாங்க முடியும்..

    அதை
    அப்படியே பட்டியல் இடறேன் சரியா பாருங்க

    1. ஒரு ஸ்மார்ட் போன் சார்ஜ் செய்தது
    2. 4ஜி டேட்டா பேக்
    3. ;நெட் பாங்கிங் வசதி
    4. OTP
    5. பணம் செலுத்த app
    6. அடிப்படை ஹிந்தி அல்லது ஆங்கில அறிவு
    7.app பயன்படுத்தும் அறிவு
    8. சர்வர் கனெக்ஷன்

    இத்தனையும் இருந்தும்
    இட்லி கிடைக்குமா தெரியாது....

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.

    ReplyDelete
  5. வணக்கம் குருவே!
    இட்லி பற்றிய பதிவு கன ஜோர்!அதிலும் அதன் கலோரி கணக்கு திக்குமுக்காடச் செய்கிறது.ஓ இனி தைரியமாக 4 இட்லி வரை சாப்பிடலாம்
    இட்லி வயது 700 ஆண்டுகள் என்பது அடுத்த அதிசயம்.
    மொத்தத்தில் இன்றைய தங்கள் இட்லி பற்றிய பதிவு மிக சுவாரஸ்யமானது.

    ReplyDelete
  6. /////Blogger Visvanathan N said...
    உயர்திரு ஐயா,
    காலை வணக்கம். அருமையான தகவல். அனைவரும் அறிந்த தகவல் என்றாலும், சில தகவல் புதிதாக இருக்கிறது. அதாவது இட்லியோடு வடை, போண்டா எடுத்து கொள்வது மற்றும் அசைவ உணவோடு சேர்ந்து சாப்பிடுவது தவிர்க்கலாம் என்ற தகவல் உபயோகமானது. நன்றி நன்றி.
    அன்புடன்,
    விசுவநாதன் N/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்!

    ReplyDelete
  7. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Thanks for sharing...
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  8. /////Blogger வேப்பிலை said...
    முன்பெல்லாம் இட்லி வாங்கனுன்னு
    முதல்ல தூக்கு சட்டி எடுத்துக் கிட்டு போகணும்
    அதன் பின் நாகரீக வளர்ச்சியில்
    அதை இலையில சுத்தி மஞ்சள் பையில் ..
    அடுத்த கட்ட வளர்ச்சியில்..
    அது பிளாஸ்டிக் தாளில் சுற்றி கேயரி பையில்
    இப்போ அதெல்லாம் இல்லை..
    இது வேற மாதிரி....
    நிறையா இருந்தா தான்
    நியாயமா இந்த இட்லி வாங்க முடியும்..
    அதை
    அப்படியே பட்டியல் இடறேன் சரியா பாருங்க
    1. ஒரு ஸ்மார்ட் போன் சார்ஜ் செய்தது
    2. 4ஜி டேட்டா பேக்
    3. ;நெட் பாங்கிங் வசதி
    4. OTP
    5. பணம் செலுத்த app
    6. அடிப்படை ஹிந்தி அல்லது ஆங்கில அறிவு
    7.app பயன்படுத்தும் அறிவு
    8. சர்வர் கனெக்ஷன்
    இத்தனையும் இருந்தும்
    இட்லி கிடைக்குமா தெரியாது..../////

    நீங்க சொன்னா சரிதான் வேப்பிலையாரே!

    ReplyDelete
  9. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.////

    நல்லது. நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  10. ////Blogger kmr.krishnan said...
    Thank you Sir.////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  11. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    இட்லி பற்றிய பதிவு கன ஜோர்!அதிலும் அதன் கலோரி கணக்கு திக்குமுக்காடச் செய்கிறது.ஓ இனி தைரியமாக 4 இட்லி வரை சாப்பிடலாம்
    இட்லி வயது 700 ஆண்டுகள் என்பது அடுத்த அதிசயம்.
    மொத்தத்தில் இன்றைய தங்கள் இட்லி பற்றிய பதிவு மிக சுவாரஸ்யமானது./////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!

    ReplyDelete
  12. குருவே

    சுவையான தகவலுக்கு நன்றி...அம்மா உணவகத்தின் வெற்றியே இட்லி தானே...

    நன்றியுடன்
    ஸ்ரீநிவாஸன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com