30.12.16

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம். நல்ல மனைவிக்கான அமைப்பு!



Astrology: ஜோதிடம்: அலசல் பாடம். நல்ல மனைவிக்கான அமைப்பு!

தலைப்பு: நல்ல மனைவி!!

எல்லா மனிதர்களுக்குமே, அதாவது இளைஞர்களுக்குமே, திருமணத்திற்குப் பெண் தேடும் சமயத்தில், ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருக்கும். அழகான பெண்ணாக இருக்க வேண்டும். படித்த பெண்ணாக இருக்க வேண்டும். குணமுள்ள, அனைவரையும் அனுசரித்துப்போகும் குணமுள்ள பெண்ணாக இருக்க வேண்டும். மொத்தத்தில் நல்ல பெண்ணாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். சிலர் கூடுதலாக அவள் செல்வந்தர் வீட்டுப் பெண்ணாக இருந்தால் பரவாயில்லை என்றும் எதிர்பார்ப்பர்கள்.

பெண்களுக்கும், அதாவது இளம் பெண்களுக்கும் அது போன்ற எதிர்பார்ப்புக்கள் இருக்கும். கூடுதலாக அவன் திறமைசாலியாகவும், கை நிறையச் சம்பாதிப்பவனாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

அப்படி எல்லாம், அதாவது எதிர்பார்ப்புக்கள் எல்லாம் இருக்கக்கூடிய பெண்ணோ அல்லது பையனோ சுலபத்தில் கிடைத்துவிடுமா என்ன?

எல்லாம் வாங்கி வந்த வரத்தின்படிதான் அமையும். அதாவது ஜாதகத்தில் உள்ள அமைப்பின்படிதான் அமையும்.

ஜாதகத்தில் குறை இருந்தால் சிலர் பயந்துவிடுவார்கள். பயப்படாமல் முழுமையாக ஜாதகத்தை அலச வேண்டும்.

களத்திரகாரகன் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருந்தால் சிக்கல் என்று சிலர் நினைப்பார்கள். அதாவது சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு இரண்டு புறமும் உள்ள வீடுகளிலும் தீய கிரகங்கள் இருந்தால் அது பாபகர்த்தாரி யோகக் கணக்கில் வரும். அப்படி அமைந்திருந்தாலும் சேர்க்கை மற்றும் பார்வையால் அத்தீமை விலகிவிடும் வாய்ப்பு உண்டு. ஆகவே ஜாதகத்தை சுத்தமாக அலச வேண்டும்

ஒரு உதாரண ஜாதகத்தைவைத்து அதை இன்று அலசுவோம்
-------------------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:


தனுசு லக்கினம். பூச நட்சத்திரம்.
லக்கினாதிபதி குரு லக்கினத்தில் உள்ளார்
ஏழாம் வீட்டுக்காரரான புதன் லக்கினத்திற்கு எட்டில் உள்ளார். இருந்தாலும் அரச கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரனுடன் கூட்டாக உள்ளார். சூரியன் இந்த ஜாதகத்திற்குப் பாக்கியநாதன் ஆவார் (9th lord)
களத்திரகாரகன் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளார். முன் வீட்டில் சனி. அடுத்த வீட்டில் கேது.

என்ன ஆயிற்று?

பயப்படும்படியாக ஒன்றும் நடக்கவில்லை.

முதல் நிலை சுபக்கிரகமான குரு பகவான். லக்கினத்தில் அமர்ந்து தனது நேரடிப் பார்வையால், களத்திரஸ்தானத்தைப் பார்ப்பதுடன், களத்திரகாரனுக்கும் கை கொடுத்து தோஷங்களை நீக்கினார். குரு பார்க்க கோடி தோஷம் நீங்கும் என்பார்கள். அவ்வாறு இந்த ஜாதகனுக்கும் தோஷங்கள் நீங்கி நல்ல மனைவி அமைந்தாள்! அதுதான் இந்த ஜாதகத்தின் மேன்மை

ஜாதகங்களை அலசும்போது, குருவின் பார்வையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21 comments:

  1. நல்ல அலசல் பாடம் வாத்தியார் அவர்களே!!!

    அன்புள்ள மாணவன்,
    பா. லெக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  2. நல்ல அலசல்.நன்றி ஐயா!

    எனது ஜாதகத்திலும் சுக்கிரன் நீசமாகி கேதுவுடன் கூட்டணி போட்டு சனி சூரியனாலும் சூழப்பட்டுள்ளார்.குரு நீசம். ஆனால் நீச குரு நீச சுக்கிரனைப் பார்த்து விடுகிறர்ர். நீசனை நீசன் பார்த்தால் பார்க்கப்பட்டவர் வலுவாவார் என்று சொல்கிறார்கள். அதன் படி சுக்கிரன் வலுப்பெறுகிறார்.மேலும் நவாம்சத்தில் சுக்கிரன் உச்சம் அடைந்ததாலும் வலுப்பெறுகிறார்.குரு நீசம் ஆனாலும் வர்கோத்தமம் ஆகிறார். அதனாலும் சிறிது வலுப்பெறுகிறார். கடக லக்கினம் கடக ராசி பூசம் தான்.குருவின் பார்வை ராசி லக்கினத்திற்கு. எனவே திருமணம் 26 நடக்கும் போது நடந்து, நல்ல படியாகவே வாழ்ந்து முடித்துவிட்டேன்.

    7க்குடைய சனீஸ்வரன் 2ல் அமர்ந்ததால் மனைவியும் வேலை பார்த்து குடும்பச் செலவுகளை ஏற்றார்கள்.இரண்டில் சனீஸ்வரன் என்பதால் என் வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பல விதமான கெட்ட பெயருக்கும் ஆளானானேன்.குடும்பத்தில் பலவித சிரமங்கள் ஏற்பட்டாலும் குருவின் பார்வையால் அனைத்தையும் சமாளிக்கும் "ஸ்டேன்டிங் பவர்' கிடைத்தது.குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கு என் ஜாதகமும் நல்ல உதாரணம்தான். மிக்க நன்றி ஐயா!








    ReplyDelete
  3. ஐயா அருமையான பதிவு.
    மிதுன கன்யா லக்னங்களுக்கு குரு பாதாகாதிபதி ஆயிற்றே..முதல் சார்ட்டில் உச்சம் பெற்றால் களத்திரம் பாதிக்காதா..கன்னிக்கு உச்சம் பெற்று 7ஐப் பார்ப்பது பாதிப்பு தானே ஐயா?

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா
    நன்றி
    மூர்த்தி

    ReplyDelete
  5. குரு பார்க்க கோடி நன்மை. இந்த ஜாதகத்தில் லக்கினாதிபதி குரு தன்னுடைய சொந்த இடத்தில் இருந்து பார்க்கிறார். அது மிகவும் சிறப்பு .

    நன்றி ஐயா.

    ReplyDelete
  6. வணக்கம் குருவே!
    குரு என்பவர் ஒரு வழிகாட்டி!மாதா பிதா குரு தெய்வம் அல்லவா! குருவுக்கு சக்தி அதிகம் போலும்!மனிதப் பிறவிக்கே குருவின் பார்வை கிடைத்தால் அமோகமாக முன்னேறலாம்
    என்பது விதி!
    ஜாதக குருவும் அதே வேலையை பிசகாமல் செய்து நல்ல மனைவியைத் தருகிறார். பிறகென்ன வாழ்க்கையில் முன்னேற்றம் தானே!
    வாத்தியாரின் ஒவ்வொறு அலசல் ஜாதகமும் அனேக விஷயங்கள் செரிந்தது! தங்களின் மகத்தான சேவையால் நாங்கள் நன்றாக செதுக்கப்படுகிறோம் என்பது என்னவோ
    உறுதியான உண்மை!
    வணக்கம் குருநாதர்!

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா,பாபகர்த்தாரி யோகம் இருந்தாலும் பயமில்லை."யாமிருக்க பயமேன்" என்ற குருபகவானின் பார்வையும்,அதற்க்கு குருவின் விளக்கமும் அருமை.நன்றி.

    ReplyDelete
  8. அருமையான பாடம். மிக்க நன்றி.
    பகை வீட்டில் அல்லது நீச வீட்டில் குரு அமர்ந்தால் அவருடைய பார்வையால் எந்த பலனும் கிடைக்காது என்று தாங்கள் கூறியதாக ஞாபகம். உண்மையா.

    ReplyDelete
  9. தலைப்பு நல்ல மனைவி. உள்ளே பாபகர்த்தாரி யோகம் பற்றி.???

    ReplyDelete
  10. sir
    ராசிக்கு எழிலும் லக்கினத்திற்கு இரண்டிலும் ராகு அமர்ந்துள்ளார். இவருக்கு ராகு திசை அனேகமாக இனிமேல் தான் வரும் என்று நினைக்கிறன். இவருக்கு ராகு தன் திசையில் எப்படிப்பட்ட பலன் அளிப்பார்?

    thanks.

    ReplyDelete
  11. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    நல்ல அலசல் பாடம் வாத்தியார் அவர்களே!!!
    அன்புள்ள மாணவன்,
    பா. லெக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி./////

    நல்லது. நன்றி தூத்துக்குடிக்காரரே!

    ReplyDelete
  12. /////Blogger kmr.krishnan said...
    நல்ல அலசல்.நன்றி ஐயா!
    எனது ஜாதகத்திலும் சுக்கிரன் நீசமாகி கேதுவுடன் கூட்டணி போட்டு சனி சூரியனாலும் சூழப்பட்டுள்ளார்.குரு நீசம். ஆனால் நீச குரு நீச சுக்கிரனைப் பார்த்து விடுகிறர்ர். நீசனை நீசன் பார்த்தால் பார்க்கப்பட்டவர் வலுவாவார் என்று சொல்கிறார்கள். அதன் படி சுக்கிரன் வலுப்பெறுகிறார்.மேலும் நவாம்சத்தில் சுக்கிரன் உச்சம் அடைந்ததாலும் வலுப்பெறுகிறார்.குரு நீசம் ஆனாலும் வர்கோத்தமம் ஆகிறார். அதனாலும் சிறிது வலுப்பெறுகிறார். கடக லக்கினம் கடக ராசி பூசம் தான்.குருவின் பார்வை ராசி லக்கினத்திற்கு. எனவே திருமணம் 26 நடக்கும் போது நடந்து, நல்ல படியாகவே வாழ்ந்து முடித்துவிட்டேன்.
    7க்குடைய சனீஸ்வரன் 2ல் அமர்ந்ததால் மனைவியும் வேலை பார்த்து குடும்பச் செலவுகளை ஏற்றார்கள்.இரண்டில் சனீஸ்வரன் என்பதால் என் வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பல விதமான கெட்ட பெயருக்கும் ஆளானானேன்.குடும்பத்தில் பலவித சிரமங்கள் ஏற்பட்டாலும் குருவின் பார்வையால் அனைத்தையும் சமாளிக்கும் "ஸ்டேன்டிங் பவர்' கிடைத்தது.குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கு என் ஜாதகமும் நல்ல உதாரணம்தான். மிக்க நன்றி ஐயா!///////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு மிக்க நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  13. /////Blogger Jaya Prakash said...
    ஐயா அருமையான பதிவு.
    மிதுன கன்யா லக்னங்களுக்கு குரு பாதாகாதிபதி ஆயிற்றே..முதல் சார்ட்டில் உச்சம் பெற்றால் களத்திரம் பாதிக்காதா..கன்னிக்கு உச்சம் பெற்று 7ஐப் பார்ப்பது பாதிப்பு தானே ஐயா?//////

    என்ன சுவாமி குழப்பம்? கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்தில் குரு எங்கே இருக்கிறார்? என்ன நிலைமையில் இருக்கிறார் என்பதை மீண்டும் பாருங்கள்!

    ReplyDelete
  14. /////Blogger moorthy krishnan said...
    வணக்கம் ஐயா
    நன்றி
    மூர்த்தி//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Blogger C Jeevanantham said...
    குரு பார்க்க கோடி நன்மை. இந்த ஜாதகத்தில் லக்கினாதிபதி குரு தன்னுடைய சொந்த இடத்தில் இருந்து பார்க்கிறார். அது மிகவும் சிறப்பு .
    நன்றி ஐயா./////

    உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஜீவானந்தம்!

    ReplyDelete
  16. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    குரு என்பவர் ஒரு வழிகாட்டி!மாதா பிதா குரு தெய்வம் அல்லவா! குருவுக்கு சக்தி அதிகம் போலும்!மனிதப் பிறவிக்கே குருவின் பார்வை கிடைத்தால் அமோகமாக முன்னேறலாம் என்பது விதி!
    ஜாதக குருவும் அதே வேலையை பிசகாமல் செய்து நல்ல மனைவியைத் தருகிறார். பிறகென்ன வாழ்க்கையில் முன்னேற்றம் தானே!
    வாத்தியாரின் ஒவ்வொறு அலசல் ஜாதகமும் அனேக விஷயங்கள் செரிந்தது! தங்களின் மகத்தான சேவையால் நாங்கள் நன்றாக செதுக்கப்படுகிறோம் என்பது என்னவோ
    உறுதியான உண்மை!
    வணக்கம் குருநாதர்!//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  17. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,பாபகர்த்தாரி யோகம் இருந்தாலும் பயமில்லை."யாமிருக்க பயமேன்" என்ற குருபகவானின் பார்வையும்,அதற்கு குருவின் விளக்கமும் அருமை.நன்றி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  18. //////Blogger Chandrasekaran Suryanarayana said...
    அருமையான பாடம். மிக்க நன்றி.
    பகை வீட்டில் அல்லது நீச வீட்டில் குரு அமர்ந்தால் அவருடைய பார்வையால் எந்த பலனும் கிடைக்காது என்று தாங்கள் கூறியதாக ஞாபகம். உண்மையா. /////

    குரு முதல்நிலை சுபக்கிரகம். என்ன நிலையில் இருந்தாலும் அவர் சற்று நன்மை செய்யக்கூடியவர்தான். கெட்டாலும் மேன் மக்கள் மே மக்களே! சங்கு சுட்டாலும் வெண்மை தரும்! என்ற முது மொழி அதைத்தான் கூறுகிறது!

    ReplyDelete
  19. /////Blogger Night_Birds said...
    தலைப்பு நல்ல மனைவி. உள்ளே பாபகர்த்தாரி யோகம் பற்றி.???///////

    பாபகர்த்தாரி யோகத்தால் 7ம் வீடு சிக்கலில் இருந்தாலும், குரு பகவானின் பார்வையால் நல்ல மனைவி கிடைத்தாள் என்று எழுதியிருக்கிறேனே! இரண்டையும் பாருங்கள் நண்பரே!
    முதல் நிலை சுபக்கிரகமான குரு பகவான். லக்கினத்தில் அமர்ந்து தனது நேரடிப் பார்வையால், களத்திரஸ்தானத்தைப் பார்ப்பதுடன், களத்திரகாரனுக்கும் கை கொடுத்து தோஷங்களை நீக்கினார். குரு பார்க்க கோடி தோஷம் நீங்கும் என்பார்கள். அவ்வாறு இந்த ஜாதகனுக்கும் தோஷங்கள் நீங்கி நல்ல மனைவி அமைந்தாள்! அதுதான் இந்த ஜாதகத்தின் மேன்மை என்று எழுதியுள்ளேனே!

    ReplyDelete
  20. /////OpenID guest2015 said...
    sir
    ராசிக்கு எழிலும் லக்கினத்திற்கு இரண்டிலும் ராகு அமர்ந்துள்ளார். இவருக்கு ராகு திசை அனேகமாக இனிமேல் தான் வரும் என்று நினைக்கிறன். இவருக்கு ராகு தன் திசையில் எப்படிப்பட்ட பலன் அளிப்பார்?
    thanks./////

    லக்கினத்திற்கு இரண்டில் உள்ளது தசா புத்திக் கணக்கில் வரும்.
    ராசியைப் பார்த்தீர்கள் என்றால் அது கோள்சாரக் கணக்கில்தான் வரும்!

    ReplyDelete
  21. sir

    i didnt get the answer yet..kindly post whether 2nd house rahu is beneficial or not..

    thanks

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com