8.11.16

உங்களுக்கு எப்போது வயதாகும்?


உங்களுக்கு எப்போது வயதாகும்?

1
விசேஷங்களில்
அழகான இளம்
பெண்களைக் கண்டால்
அடடா அவசரப்பட்டுட்டோமே
என்று நினைப்பது போய்…
சித்தி பையன் சிவாவுக்கு
இந்தப் பெண்ணைக் கேட்கலாமே
எனத் தோன்றுகிறதா.??
2        
சண்டை போட்ட
உறவினர்களின் மேல்
காழ்ப்பணர்ச்சி விகிதம்
கரைய ஆரமபித்திருக்கிறதா???
3
உறவுகளில் சம வயதினர்
அமெரிக்காவில் செட்டில் ஆனால்
பொறாமைப்படுவது நின்று
நம்ம பையனுக்கு பின்னாடி பிரச்சினையில்லை…
REFER பண்ண ஆளிருக்கு
என மனது சாந்தப்படுகிறதா. ??
4            
மனைவியை_
கவனிக்க_ _தவறிவிட்டதாக_
உள் மனது ஒப்பாரி இடுகிறதா??_
5
திரைப்படங்களின்
முதல் நாள் முதல் காட்சி
பார்க்கும் எண்ணம் போய்விட்டதா??
6
வெள்ளை முடி கவலை
அப்பிக் கொள்ள
ஆரம்பித்துவிட்டதா???
7
மியூசிக் சேனல் பார்ப்பது
குறைந்து
செய்தி சேனல் பார்ப்பது
அதிகரித்திருக்கிறதா??
8
ஞாயிற்றுக்கிழமை
யார் வற்புறுத்தலும் இன்றி
காலையில் WALKING
போகிறீர்களா??
9
இன்னிக்கு அமாவாசை,
ஏகாதசி,
சஷ்டி என்று
ஏதேனும் இருக்கிறதா என்று
மனசு பார்க்க வைக்கிறதா?
10
பாலிஸி DUE DATE
பார்க்க
ஆரம்பித்து விட்டீர்களா??
11          
ஒரு மருந்துக் கடைக்காரர்,
ஒரு சிறு உணவக முதலாளியின்
நட்பு
நிச்சயம் ஏற்பட்டிருக்கிறதா??
12
கவலையை மறக்க
காமெடி சானல் பார்ப்பது
சிறந்த சாய்ஸ்
எனத்தோன்றுகிறதா??
13            
வண்ணத்திரை, சினிக்கூத்து
வாங்கிய கடைகளில்
சக்தி விகடனும்,
நாணயம் விகடனும்
வாங்க வைக்கிறதா??
14
பல் விளக்க,
சேவிங் செய்ய,
குளிக்க
வழக்கத்தை விட
அதிக நேரம் ஆகிறதா?
15
பிள்ளைகளின் ஆசை,
சோம்பல் மீதான கோபம்
வடிந்து
`இப்பொழுது அனுபவிக்காவிட்டால்
எப்பொழுது,
போய்விட்டுப் போகிறார்கள்
என்ற எண்ணம் வருகிறதா??
16      
அலுவலகத்தில் சனி,ஞாயிறு அன்று
நண்பர்கள் ஏதாவது அவுட்டிங்
பிளான் செய்தால்
தகுந்த காரணமின்றி
ஜகா வாங்க வைக்கிறதா??
17
சாலை கடக்க பயப்படத் தொடங்கி
PEAK HOURS அவாய்ட் பண்ணினால் என்ன
என்று மனைவியிடம்
தர்க்கம் பண்ண தொடங்கி விட்டீர்களா??
18
பேருந்து வழக்கமாக வரும் நேரத்திற்கு
ஒரு நிமிடம் தாமதமாய் போய் ஓடிச்சென்று ஏறுவது நின்று,
ஐந்து நிமிடம் முன்னரே
பஸ் ஸ்டாண்டில் காக்க முடிகிறதா??
19
என்னால் எல்லாம் முடியும்,
யார் தயவும் தேவையில்லை
என்ற எண்ணம் போய்„
உலக மக்கள் அனைவரின்
கூட்டு உழைப்பால் தான்
நமக்கு இந்த வாழ்க்கை
சாத்தியமாயிற்று என்ற எண்ணம் வருகிறதா??
20
அப்ப நீங்க
*"UNCLE"*
ஆகிவிட்டீர்கள்!!!!
அதற்கான அறிகுறிகள்தான் இவைகள்!
உங்கள் மொழியில் சொன்னால்
உங்களுக்கு வயதாகி விட்டது,
மனம் பக்குபவம் பெற்று விட்டது என்று அர்த்தம்!

அன்புடன்
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

  1. Respected Sir,

    Happy morning. Quite natural.

    Have a pleasant day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. ////வெள்ளை முடி கவலை
    அப்பிக் கொள்ள
    ஆரம்பித்துவிட்டதா??////

    மோடி யாட்டம்
    தாடி வைக்க விரும்பி

    கருப்பு முடிக்கு
    வெள்ளை டை அடித்தேன்..

    அது வெள்ளையாகவில்லை
    அப்படியானால் மீண்டும்

    கருப்பைக்கட்டும் என
    வெள்ளை டை போக

    கருப்பு டை அடித்தேன்.. இப்போ
    வெள்ளையாகவும் இல்லை..

    கருப்பாகவும் இல்லை..
    கவனிச்சு பாருங்க...

    எனக்கு வயசாகிவிட்டதா?
    என்னிடம் என்ன மாற்றம் தெரிகிறது?

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,சூப்பர்ப்.உடல் ஒத்துழைக்காவிடினும்,வயதானதை மனம் ஒத்துக் கொள்ளாது.வெள்ளெழுத்து வந்தபோது கண்ணாடியை மறைத்து,மறைத்து போட்டதும்,சில நேரங்களில் போடாமல் அவதிப்பட்டதும் நினைவுக்கு வந்தது. நன்றி.

    ReplyDelete
  4. /////Blogger kmr.krishnan said...
    very very nice.////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  5. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning. Quite natural.
    Have a pleasant day.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  6. ////Blogger வேப்பிலை said...
    ////வெள்ளை முடி கவலை
    அப்பிக் கொள்ள
    ஆரம்பித்துவிட்டதா??////
    மோடி யாட்டம்
    தாடி வைக்க விரும்பி
    கருப்பு முடிக்கு
    வெள்ளை டை அடித்தேன்..
    அது வெள்ளையாகவில்லை
    அப்படியானால் மீண்டும்
    கருப்பைக்கட்டும் என
    வெள்ளை டை போக
    கருப்பு டை அடித்தேன்.. இப்போ
    வெள்ளையாகவும் இல்லை..
    கருப்பாகவும் இல்லை..
    கவனிச்சு பாருங்க...
    எனக்கு வயசாகிவிட்டதா?
    என்னிடம் என்ன மாற்றம் தெரிகிறது?/////

    உங்களுடைய புகைப்படம் எதுவும் என்னிடம் இல்லை
    மாற்றத்தை எப்படிச் சொல்வது வேப்பிலையாரே ?

    ReplyDelete
  7. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,சூப்பர்ப்.உடல் ஒத்துழைக்காவிடினும்,வயதானதை மனம் ஒத்துக் கொள்ளாது.வெள்ளெழுத்து வந்தபோது கண்ணாடியை மறைத்து,மறைத்து போட்டதும்,சில நேரங்களில் போடாமல் அவதிப்பட்டதும் நினைவுக்கு வந்தது. நன்றி.////

    உடலுக்குத்தான் வயது. மனதிற்கு வயது இல்லை நண்பரே!

    ReplyDelete
  8. Excellent Sir Super

    Thinking few sentences make us realise how powerful and truth some statements mentioned in the list.

    Thanks and Regards
    Kannan Vairavan

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com