பிரச்சினைகளை சாவால்களாக மாற்றுங்கள்! வெற்றி காணலாம்!
“எனக்கு ஒரு பிரச்சினை..”என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்...பிரச்சினை என்று சொன்னாலே கவலையும் , பயமும் கட்டாயம் வரும்....
"எனக்கு ஒரு சவால் “என்று சொல்லிப் பாருங்கள் ...தைரியமும் ,தன்னம்பிக்கையும் தானாகவே வரும்..”
ஆம்..நிஜம்தானே..!
“காவல்காரன்” என்று ஒரு படம்.. எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட பின் எம்.ஜி.ஆர்.நடித்த படம்.... ஷூட்டிங் ஆரம்பமானது..
வசனம் பேசி நடித்தபோது , எம்.ஜி.ஆரின் குரலில் குறை தெரிந்தது..முன்னர் பேசியது போல் தெளிவாகப் பேச முடியவில்லை..
“பொருத்தமான குரல் உடையவர்களைக் கொண்டு டப்பிங் கொடுத்து இந்தப் பிரச்சினையை சரி செய்து விடலாம் ” என்று சிலர் யோசனை சொல்லியிருக்கிறார்கள்...
ஆனால், எம்.ஜி.ஆர். இதை ஏற்க மறுத்து விட்டாராம்... “இது பிரச்சினை இல்லை..எனக்கு ஏற்பட்டிருக்கும் சவால்...
நானே என் சொந்தக் குரலில் பேசுகிறேன். மக்கள் ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து நடிக்கிறேன். ஒருவேளை என் குரலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் , சினிமாவில் நடிப்பதையே விட்டு விடுகிறேன்” என்று சவால் விட்டுக் கூறி , அதன்படியே, எம்.ஜி.ஆர். சொந்தக் குரலில் பேசினார்...
பலத்த எதிர்பார்ப்போடு வந்தான் காவல்காரன்...
படத்தின் சில இடங்களில் எம்.ஜி.ஆரின் குரல் தெளிவாக இல்லாவிட்டாலும், ரசிகர்கள் அதைப் பெரிய பிரச்சினை ஆக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்..!.
“காவல்காரன்” ...சூப்பர்ஹிட்..!!.
"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்"
ஆம்...பிரச்சினைகள் என்று நினைப்பவர்கள் ,பின்தங்கி விடுகிறார்கள்...!!!
சவால்களை சந்திப்பவர்களே சரித்திரம் தன்னிலே நிற்கின்றார்கள் ...!!!
சந்திக்கத் தயாராவோம்..சவால்களை!
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Yes Sir. Ready to face challenges. Thank you,Sir.
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteHappy morning... Nice motivating post.
Have a great day.
Thanks & Regards,
Ravi-avn
ReplyDeleteவணக்கம் ஐயா,தன்னம்பிக்கையும்,தைரியத்தையும் கொடுக்கும் ஒரு டானிக் பதிவு.நன்றி.
தன்னம்பிக்கையூட்டும் பதிவு.
ReplyDeleteபுகழ் பெற்ற இந்திய விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸின் ஆரம்ப கால வாழ்க்கையில் ஒரு பிரச்சனைத் தோன்றுகிறது. அவர் அதை எவ்வாறு சமாளித்தார் என்பதைப் பாருங்கள். ஜகதீஷ் சந்திரபோஸ் 1884 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்து இந்தியா திரும்ப முடிவு செய்திருந்த நேரம் அது. இங்கிலாந்து தபால் துறை அதிகாரியான பாஸட் என்பவர் ஜகதீஷின் அறிவியல் அறிவினை நன்கு அறிந்தவர். இதனால் பாஸட் இந்தியாவில் இருந்த லார்டு ரிப்பன் பிரபுவிற்கு வங்க மாநிலக் கல்வி இலாகாவில் ஜகதீஷிற்கு ஒரு பணியை பெற சிபாரிசு செய்யுமாறு ஒரு கடிதம் கொடுத்தார். இந்தியா திரும்பிய ஜகதீஷ் சந்திர போஸ் லார்டு ரிப்பன் பிரபுவைச் சந்தித்தார். ரிப்பன் பிரபு வங்க மாநிலக் கல்வித்துறைத் தலைவருக்கு ஜகதீஷ் சந்திரபோஸைப் பற்றி சிபாரிசு செய்து அவரிடம் அனுப்பினார். ஜகதீஷ் சந்திபோஸிற்கு கல்கத்தா பிரசிடென்சி கல்லுôரியில் இயற்பியல் பேராசிரியர் பணி அளிக்கப்பட்டது.
அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு முழு ஊதியமும் அதே பணியைச் செய்யும் இந்தியருக்கு குறைவான ஊதியமும் என இரண்டு விதமான ஊதியம் அளிக்கப்பட்டு வந்தது. ஆங்கிலேயருக்கு இணையான திறமையினைப் பெற்றிருந்தும் இந்தியர் என்ற காரணத்தினால் ஜகதீஷ் சந்திபோஸிற்கு குறைவான ஊதியமே தரப்பட்டது. ஜகதீஷ் சந்திரபோஸ் இதை ஒரு பெரிய சவாலாக கருதி எதிர்க்க முடிவு செய்தார்.
தனக்கு ஆங்கிலேயர்களுக்கு இணையான ஊதியம் தரப்படும் வரை ஊதியமே பெறாமல் சிறப்பாக கல்விப்பணி ஆற்றுவது என்று தீர்மானித்தார். இதன்படி தொடர்ந்து முன்று ஆண்டுகள் ஜகதீஷ் சந்திபோஸ் ஊதியம் பெற்றுக்கொள்ளாமல் மிகச் சிறப்பான முறையில் கல்விப்பணி ஆற்றினார்.
ஜகதீஷ் ஊதியம் பெற்றுக் கொள்ளா விட்டாலும் மாணவர்களுக்கு மிகச்சிறப்பாக கல்வி போதிப்பதை நிர்வாகம் கவனித்து அறிந்தது. ஒரு கட்டத்தில் ஜகதீஷ்ற்கு ஆங்கிலேய பேராசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதியத்தை அளிக்கக் கல்லுôரி நிர்வாகம் முன்வந்தது. மேலும் அவருடைய பணியை நிரந்தரமாக்கவும் முடிவு செய்து முன்று ஆண்டுகளுக்கான முழு சம்பள நிலுவைத் தொகையினையும் கொடுத்து கௌரவித்தது. ஒரு பிரச்சனையை சவாலாக அணுகினால் வெற்றி நிச்சயம் என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது.
படித்தில் பிடித்தது.நன்றி.
வணக்கம் குருவே!
ReplyDeleteஇன்றைய தங்கள் பதிவு மிக அழகாக வருங்காலத்தில் எதிர்கொள்ளும் எந்தவிதப் பிரச்னைகளையும் சவால்களாக எடுத்துக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற மன உறுதியைத் தந்துள்ளது! எடுத்துக்காட்டாக எம்.ஜி.ஆர் அவர்களது வாழ்வின் நிகழ்வு, மற்றும் அவரது மனஉறுதி பற்றிய செய்தி
நம்மை நெகிழச் செய்கிறது!
நன்றி,வாத்தியாரையா!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteYes Sir. Ready to face challenges. Thank you,Sir./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Nice motivating post.
Have a great day.
Thanks & Regards,
Ravi-avn//////
நல்லது. நன்றி அவனாசி ரவி!
////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,தன்னம்பிக்கையும்,தைரியத்தையும் கொடுக்கும் ஒரு டானிக் பதிவு.நன்றி./////
நான் பதிவில் எழுதும் நோக்கமும் அதுதான். படிப்பவர்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் வரவேண்டும். நன்றி ஆதித்தன்.
////Blogger venkatesh r said...
ReplyDeleteதன்னம்பிக்கையூட்டும் பதிவு.
புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸின் ஆரம்ப கால வாழ்க்கையில் ஒரு பிரச்சனைத் தோன்றுகிறது. அவர் அதை எவ்வாறு சமாளித்தார் என்பதைப் பாருங்கள். ஜகதீஷ் சந்திரபோஸ் 1884 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்து இந்தியா திரும்ப முடிவு செய்திருந்த நேரம் அது. இங்கிலாந்து தபால் துறை அதிகாரியான பாஸட் என்பவர் ஜகதீஷின் அறிவியல் அறிவினை நன்கு அறிந்தவர். இதனால் பாஸட் இந்தியாவில் இருந்த லார்டு ரிப்பன் பிரபுவிற்கு வங்க மாநிலக் கல்வி இலாகாவில் ஜகதீஷிற்கு ஒரு பணியை பெற சிபாரிசு செய்யுமாறு ஒரு கடிதம் கொடுத்தார். இந்தியா திரும்பிய ஜகதீஷ் சந்திர போஸ் லார்டு ரிப்பன் பிரபுவைச் சந்தித்தார். ரிப்பன் பிரபு வங்க மாநிலக் கல்வித்துறைத் தலைவருக்கு ஜகதீஷ் சந்திரபோஸைப் பற்றி சிபாரிசு செய்து அவரிடம் அனுப்பினார். ஜகதீஷ் சந்திபோஸிற்கு கல்கத்தா பிரசிடென்சி கல்லுôரியில் இயற்பியல் பேராசிரியர் பணி அளிக்கப்பட்டது.
அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு முழு ஊதியமும் அதே பணியைச் செய்யும் இந்தியருக்கு குறைவான ஊதியமும் என இரண்டு விதமான ஊதியம் அளிக்கப்பட்டு வந்தது. ஆங்கிலேயருக்கு இணையான திறமையினைப் பெற்றிருந்தும் இந்தியர் என்ற காரணத்தினால் ஜகதீஷ் சந்திபோஸிற்கு குறைவான ஊதியமே தரப்பட்டது. ஜகதீஷ் சந்திரபோஸ் இதை ஒரு பெரிய சவாலாக கருதி எதிர்க்க முடிவு செய்தார்.
தனக்கு ஆங்கிலேயர்களுக்கு இணையான ஊதியம் தரப்படும் வரை ஊதியமே பெறாமல் சிறப்பாக கல்விப்பணி ஆற்றுவது என்று தீர்மானித்தார். இதன்படி தொடர்ந்து முன்று ஆண்டுகள் ஜகதீஷ் சந்திபோஸ் ஊதியம் பெற்றுக்கொள்ளாமல் மிகச் சிறப்பான முறையில் கல்விப்பணி ஆற்றினார்.
ஜகதீஷ் ஊதியம் பெற்றுக் கொள்ளா விட்டாலும் மாணவர்களுக்கு மிகச்சிறப்பாக கல்வி போதிப்பதை நிர்வாகம் கவனித்து அறிந்தது. ஒரு கட்டத்தில் ஜகதீஷ்ற்கு ஆங்கிலேய பேராசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதியத்தை அளிக்கக் கல்லுôரி நிர்வாகம் முன்வந்தது. மேலும் அவருடைய பணியை நிரந்தரமாக்கவும் முடிவு செய்து முன்று ஆண்டுகளுக்கான முழு சம்பள நிலுவைத் தொகையினையும் கொடுத்து கௌரவித்தது. ஒரு பிரச்சனையை சவாலாக அணுகினால் வெற்றி நிச்சயம் என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது.
படித்தில் பிடித்தது.நன்றி.////
உண்மைதான். உங்களுடைய கருத்திற்கும் மேலதிகத் தகவலுக்கும் நன்றி நண்பரே!
/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
இன்றைய தங்கள் பதிவு மிக அழகாக வருங்காலத்தில் எதிர்கொள்ளும் எந்தவிதப் பிரச்னைகளையும் சவால்களாக எடுத்துக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற மன உறுதியைத் தந்துள்ளது! எடுத்துக்காட்டாக எம்.ஜி.ஆர் அவர்களது வாழ்வின் நிகழ்வு, மற்றும் அவரது மனஉறுதி பற்றிய செய்தி
நம்மை நெகிழச் செய்கிறது!
நன்றி,வாத்தியாரையா!//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!
அருமையான பதிவு...நன்றி
ReplyDelete