24.10.16

Humour: நகைச்சுவை! வாங்க, சிரித்து விட்டுப் போங்க!


Humour: நகைச்சுவை! வாங்க, சிரித்து விட்டுப் போங்க!

சிரிக்க மட்டுமே! வேறு விவகாரம் வேண்டாம்!
----------------------------------------------------------
1
மனைவி: உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொன்னாங்க ... எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சி தெரியுமா?..!
கணவன்: அதெல்லாம் சும்மாடி ... நம்பாத...
மனைவி: ஏன் ... ஏன் அப்படி சொல்றீங்க?
"கணவன்: என்னை மாதிரி மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னா ... அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற மாப்ள பாக்குறாரு...
________________________
2
டாக்டர்: முன் பல் ரெண்டும் எப்படி விழுந்துச்சு...?              
நோயாளி: சொல்ல மாட்டேன் டாக்டர்.                              
டாக்டர்: ஏன் ?                                          
நோயாளி: நடந்ததை வெளில சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு என் மனைவி சொல்லி இருக்கா டாக்டர்.
_____________________________
3
மனைவி: எந்தக் காரணமும் இல்லாமல் குடிக்கமாட்டேனு சொன்னீங்களே இப்போ எதுக்கு குடிச்சீங்க?          
கணவன்: அது ஒண்ணுமில்லைடி... தீபாவளி ராக்கெட் வைக்க பையன் பாட்டில் வேணும்னு கேட்டான் அதான்...  
____________________________
4
மனைவி: ''ஏங்க, நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு செவப்பா ஒரு பொண்ணு போனாளே... அவளுக்கு என்ன வயசு இருக்கும்?''
கணவன்: ''கரெக்டா இருபத்தஞ்சு வயசு இருக்கும்!''
மனைவி: ''அந்தா நமக்கு எதிர்ல டி-ஷர்ட், ஷாட்ஸோட ஒரு பொண்ணு வருதே, அதுக்கு..?''
கணவன்: ''மிஞ்சிப் போனா பதினேழு வயசைத் தாண்டாது. ஆமா, எதுக்கு அவங்க வயசை எல்லாம் என்கிட்ட கேக்குற?
மனைவி: இல்ல 'பார்வை சரியில்ல, கண்ணாடி போடணும்'னீங்களே..! ஆனா, இந்த மாதிரி யாராவது போகும்போது பேந்தப் பேந்த பாக்குறீங்களே... இதுமட்டும் தெளிவா தெரியுதான்னு செக் பண்ணத்தான்.
__________________________
5
கணவன்: (போன் ரிஸீவரை பொத்தியபடி) ''அடியே, அம்மா பாத்ரூமில வழுக்கி விழுந்துட்டாங்களாம்...''
மனைவி: ''வயசான காலத்துல ஓய்ஞ்சு ஒரு இடத்துல உட்கார மாட்டாங்களே, அவங்களுக்கு இது வேண்டியதுதான்!''
கணவன்: ''விழுந்தது எங்கம்மா இல்லடி, உங்கம்மா!''
மனைவி: ''ஐயோ... அவங்க ஓடியாடுறது மேலே எந்த கொள்ளிக் கண்ணுபட்டுச்சோ... பார்த்துகிட்டு நிக்கறீங்களே... போனைக் குடுங்க!''
________________________________
6
வாணி: என்னடி உன் செல்போனில் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேய் காலிங்ன்னு வந்துச்சு?
ராணி: அது என் மாமியார்டி.
வாணி: இப்ப என்ன பிசாசு காலிங்னு வருது?
ராணி: அது என் நாத்தனார்டி
வாணி: ஆமா, இது என்ன நாய் குரைக்கும் ரிங்டோன்?      
ராணி: என் கணவருக்கு அந்த ரிங்டோன் தான் வச்சிருக்கேன்
____________________________
7
போனில்...
''நாங்க உஙக மனைவியை கடத்தி வைச்சுருக்கோம்..ஐந்து லட்சரூபாய் கொடுத்தா விட்டுடறோம்...''
''ஐந்து என்ன பத்துலட்ச ரூபாயே தரேன்..ஆனா திருப்பி மட்டும் அனுப்பிடாதீங்க..'
____________________________
8
குரு: என்னங்க, உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக்கிட்டே இருக்குது?
கிரி:என் பொண்டாட்டி, என் மேல ஏதாவது பாத்திரத்தை தூக்கி வீசுவா, என் மேல பட்டா அவ சிரிப்பா... படாட்டா நான் சிரிப்பேன்.ஒரே தமாசு தான் போங்க.
(இதைப் படித்தவுடன் ஏனோ, மதுரைத் தமிழன் தான் ஞாபகத்துக்கு  வந்தார்)
சார் நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....
கல்யாணத்துக்கு முன்னாடியா  பின்னாடியா.....
கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்.....
கல்யாணத்துக்கு முன்னாடி முருகர்தான் ரொம்பப் பிடிக்கும் .....
அப்போ பின்னாடி.....
அட, அதை ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை.....!!?!!?!!?

**************************************
9
சத்தியவான் சாவித்திரி ..... தன் கணவனை..... எமதர்ம ராஜாவிடமிருந்து தன் தந்திர வரங்களால் கடுமையாகப் போராடி மீட்டாள்.....
கதையின் கருத்து :--
பகவானே!  ஒரு புருஷன... பொண்டாட்டிகிட்ட இருந்து .....எமதர்மனால கூட காப்பாத்த முடியாது.....!!!
**************************************
10
மனைவி :--  ஏங்க உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு என் புத்தியை செருப்பால அடிக்கணும்.....
கணவன் :--  செருப்பு இந்தா இருக்கு.....  புத்திக்கு எங்கே போவ!!??

**************************************
11
கணவன் :--  "என்ன. சமைச்சிருக்கே ...? சாணி வரட்டி மாதிரி இருக்கு... நல்லாவேயில்லை"......
மனைவி :--  "கடவுளே! ..... இவரு இன்னும் என்னவெல்லாம் சாப்பிட்டுப் பார்த்திருக்காரோ..... தெரியலையே...ஏ...ஏ... ஏ....." .

**************************************
12
மனைவி என்பவள் திருக்குறள் போன்றவள்.....
அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா  எவ்வளவு அதிகாரங்கள்.....
*************
இந்தப் 12ல் எது மிகவும் நன்றாக உள்ளது சாமிகளா?

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20 comments:

  1. ஐயா வணக்கம்
    நகைச்சுவை 2,7 எனக்கு பிடித்தது ஐயா

    கண்ணன்

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    நகைச்சுவை 1 மற்றும் 2 தான் டாப்,
    வாத்தியாரையா!

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,ஒன்று முதல் பன்னிரண்டுவரை அனைத்துமே மிகவும் ரசிக்கும்படி இருந்தன.நன்றி.

    ReplyDelete
  4. Respected Sir,

    Happy morning... All is well especially No.2

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  5. Good Morning sir,

    2,8,11 are Superb.. I laughed...lol

    Thanks
    Sathishkumar GS

    ReplyDelete
  6. அனைத்தும் அருமை ஐயா. நன்றி.

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா எனக்கு எல்லா நகை சுவையும் நன்றாக உள்ளது நன்றி

    ReplyDelete
  8. 5 & 8th are good. Laughed welll...But, Sir, practically it is not truth

    ReplyDelete
  9. //////Blogger Kannan L R said...
    ஐயா வணக்கம்
    நகைச்சுவை 2,7 எனக்கு பிடித்தது ஐயா
    கண்ணன்////

    நல்லது. உங்கள் தெரிவிற்கும் அதைத் தெரியப்படுத்தியதற்கும் நன்றி கண்ணன்!!!

    ReplyDelete
  10. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    நகைச்சுவை 1 மற்றும் 2 தான் டாப்,
    வாத்தியாரையா!//////

    நல்லது. உங்கள் தெரிவிற்கும் அதைத் தெரியப்படுத்தியதற்கும் நன்றி வரதராஜன்!!!

    ReplyDelete
  11. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,ஒன்று முதல் பன்னிரண்டுவரை அனைத்துமே மிகவும் ரசிக்கும்படி இருந்தன.நன்றி./////

    நல்லது. உங்கள் தெரிவிற்கும் அதைத் தெரியப்படுத்தியதற்கும் நன்றி ஆதித்தன்!!!

    ReplyDelete
  12. ////Blogger KARTHIKEYAN V K said...
    1&12 are the best/////

    நல்லது. உங்கள் தெரிவிற்கும் அதைத் தெரியப்படுத்தியதற்கும் நன்றி கார்த்திகேயன்!!!

    ReplyDelete
  13. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... All is well especially No.2
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. உங்கள் தெரிவிற்கும் அதைத் தெரியப்படுத்தியதற்கும் நன்றி அவனாசி ரவி!!!

    ReplyDelete
  14. /////Blogger KJ said...
    Good Morning sir,
    2,8,11 are Superb.. I laughed...lol
    Thanks
    Sathishkumar GS/////

    நல்லது. உங்கள் தெரிவிற்கும் அதைத் தெரியப்படுத்தியதற்கும் நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  15. /////Blogger mohan said...
    அனைத்தும் அருமை ஐயா. நன்றி./////

    நல்லது. உங்கள் தெரிவிற்கும் அதைத் தெரியப்படுத்தியதற்கும் நன்றி மோகன்!!!

    ReplyDelete
  16. /////Blogger moorthy krishnan said...
    வணக்கம் ஐயா எனக்கு எல்லா நகை சுவையும் நன்றாக உள்ளது நன்றி/////

    நல்லது. உங்கள் தெரிவிற்கும் அதைத் தெரியப்படுத்தியதற்கும் நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  17. /////Blogger GAYATHRI said...
    5 & 8th are good. Laughed welll...But, Sir, practically it is not truth/////

    உங்களின் கருத்தைச் சொன்ன மேன்மைக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  18. /////Blogger kmr.krishnan said...
    all nice//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com