19.10.16

இரண்டு இதிகாசங்களுக்கும் என்ன வித்தியாசம்?


இரண்டு இதிகாசங்களுக்கும் என்ன வித்தியாசம்?

மண்ணால்
போரெனில்
பாரதம் ....
பெண்ணால்
போரெனில்
ராமாயணம் ....

சகுனி
குழப்பினால்
பாரதம்....
கூனி
குழப்பினால்
ராமாயணம் ....

பெண்
ஐந்தை
மணந்தால்
பாரதம் ...
பத்தை
மறுத்தால்
ராமாயணம் ....

அனுமன்
கொடிதனில்
பறந்தால்
பாரதம் ...
கடல்தாண்டி
பறந்தால்
ராமாயணம் ....

இறை
இப்புவி
இறங்கி ...
சாரதியானால்
பாரதம் ...
சத்திரியனானால்
ராமாயணம் ....

மேய்த்தது
கோ எனில்
பாரதம்...
மேன்மை
கோ எனில்
ராமாயணம் ...

பகடையால்
பகையெனில்
பாரதம்....
பாவையால்
பகையெனில்
ராமாயணம் ........

பிறன்மனை
அவமதித்தால்
பாரதம்...
பிறன்மனை
அபகரித்தால்
ராமாயணம் ....

அவதாரம்
புனிதனாய்
வலம்வந்தால்
பாரதம் ....
மனிதனாய்
வலம்வந்தால்
ராமாயணம் ...

இறை
கீதை
தந்தால்
பாரதம் ...
சீதை
பெற்றால்
ராமாயணம்....

கர்ணன்
வில்
தாங்கினால்
பாரதம்....
துயில்
தங்கினால்
ராமாயணம்....

கதை
நாயகியைத்
தொட்டு
சேலை
இழுத்தால்
பாரதம்...
தொடாது
சோலையில்
வைத்தால்
ராமாயணம் .....

ஐவருக்கு
ஒருத்தியெனில்
பாரதம் ....
ஒருவருக்கு
ஒருத்தியெனில்
ராமாயணம் ....

மறைந்திருந்து
அம்பெய்ய
கற்றால்
பாரதம் ...
அம்பெய்து
கொன்றால்
ராமாயணம்...

வில்லால்
அடித்து
வீரனுக்கு
விவாகமெனில்
பாரதம் ...
வில்லை
ஒடித்து
வீரனுக்கு
விவாகமெனில்
ராமாயணம் ....

கற்பு
நெறிக்காக
பெண்
கண்ணை
கட்டினால்
பாரதம்...
கனல்
இறங்கினால்
ராமாயணம்....

கதையில்
குருடன்
கோ எனில்
பாரதம்....
கதையை
எழுதியது
திருடன்
கோல் எனில்
ராமாயணம் ...

அரக்கினால்
மதில் ஆனதால்
அரண்மனை
எரிந்தால்
பாரதம் ....
அரக்கியின்
மதி கோணலால்
அரண்மனை
எரிந்தால்
ராமாயணம் ....

அரங்கனின்
செய்கையால்
அபலைக்கு
அபயமெனில்
பாரதம் ....
குரங்கனின்
செய்தியால்
அபலைக்கு
அபயம் எனின்
ராமாயணம்....

மண்ணின்
மயக்கத்தினால்
பிளவெனில்
பாரதம் ...
மானின்
மயக்கத்தினால்
பிரிவெனில்
ராமாயணம் ....

உறவுக்குள்
சண்டையெனின்
பாரதம்...
உறவுக்காக
சண்டையெனின்
ராமாயணம் ....

ரசித்தது
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. வணக்கம் ஐயா,கம்பேரிசன் அருமை.சில இடங்கள் புரியவில்லை.குறிப்பாக
    "கர்ணன்
    வில்
    தாங்கினால்
    பாரதம்....
    துயில்
    தங்கினால்
    ராமாயணம்"
    "கதையில்
    குருடன்
    கோ எனில்
    பாரதம்....
    கதையை
    எழுதியது
    திருடன்
    கோல் எனில்
    ராமாயணம்".நன்றி.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. Respected Sir,

    Happy morning... Nice one...

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. பயனில்லாத காவியம் என
    படித்தவர் உலகம் சொல்லும்.. கேட்டால்

    தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்
    இறுதியில் தர்மம் வெல்லும் என்பார்...

    மூன்று மணி நேர திரைப்படத்தில் படம்
    முடியும் போது கதாநாயகன் ஜெயிப்பது போல

    சில மணி நேர வெற்றிக்காக
    பல ஆண்டுகள் போராட்டம்...

    எடுத்து சொன்னால் விதண்டாவாதம் என்பார்கள்..
    கொடுத்து சென்றால் எதிலும் ஒட்டாதவர் என்பார்கள்..

    சொல்வது கருத்து என்பதை விடுத்து இப்படி
    சொன்னால் இது இல்லை ஆன்மிகம் என்பார்கள்..

    குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
    குருட்டு உலகமடா - இது
    கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
    திருட்டு உலகமடா!

    தம்பி...
    தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
    திருந்த மருந்து சொல்லடா!

    இருக்கும் அறிவை மடமை மூடிய
    இருட்டு உலகமடா - வாழ்வில் எந்த
    நேரமும் சண்டை ஓயாத
    முரட்டு உலகமடா!

    ReplyDelete
  4. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,கம்பேரிசன் அருமை.சில இடங்கள் புரியவில்லை.குறிப்பாக
    "கர்ணன்
    வில்
    தாங்கினால்
    பாரதம்....
    துயில்
    தங்கினால்
    ராமாயணம்"
    "கதையில்
    குருடன்
    கோ எனில்
    பாரதம்....
    கதையை
    எழுதியது
    திருடன்
    கோல் எனில்
    ராமாயணம்".நன்றி.//////

    துவக்கத்தில் வால்மீகி ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் திருடனாக இருந்தவர். பின், திருந்தி ராமாயணத்தை எழுதினார் என்பார்கள். திருடன் கோல் என்பதற்கு அதுதான் பொருள். மற்றொன்றுக்கு பொருள் இல்லை. எழுத்துப் பிழையால் தவறான பொருளோடு இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. எனக்கு அஞ்சலில் வந்தது. அறியத் தந்துள்ளேன். அவ்வளவுதான் ஆதித்தன்!

    ReplyDelete
    Replies
    1. Karnan vil thangi porittayhum,
      Kumba karnan thuil kondathu kurithum silagikkappattulathu

      Delete
  5. ////Blogger kmr.krishnan said...
    good Sir.///////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice one...
    Thanks & Regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  7. //////Blogger வேப்பிலை said...
    பயனில்லாத காவியம் என
    படித்தவர் உலகம் சொல்லும்.. கேட்டால்
    தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்
    இறுதியில் தர்மம் வெல்லும் என்பார்...
    மூன்று மணி நேர திரைப்படத்தில் படம்
    முடியும் போது கதாநாயகன் ஜெயிப்பது போல
    சில மணி நேர வெற்றிக்காக
    பல ஆண்டுகள் போராட்டம்...
    எடுத்து சொன்னால் விதண்டாவாதம் என்பார்கள்..
    கொடுத்து சென்றால் எதிலும் ஒட்டாதவர் என்பார்கள்..
    சொல்வது கருத்து என்பதை விடுத்து இப்படி
    சொன்னால் இது இல்லை ஆன்மிகம் என்பார்கள்..

    குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
    குருட்டு உலகமடா - இது
    கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
    திருட்டு உலகமடா!
    தம்பி...
    தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
    திருந்த மருந்து சொல்லடா!
    இருக்கும் அறிவை மடமை மூடிய
    இருட்டு உலகமடா - வாழ்வில் எந்த
    நேரமும் சண்டை ஓயாத
    முரட்டு உலகமடா!////////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  8. Excellent lines... Great works! Thanks for sharing!

    ReplyDelete
  9. "கர்ணன்
    வில்
    தாங்கினால்
    பாரதம்....
    துயில்
    தங்கினால்
    ராமாயணம்"
    "கதையில்
    குருடன்
    கோ எனில்
    பாரதம்....
    கதையை
    எழுதியது
    திருடன்
    கோல் எனில்
    ராமாயணம்".

    KO means King - here it represents Thirudharashtiran.

    Karnan - vil
    Kumbakarnan - thuyil
    Now you can understand.

    Raj

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com