20.9.16

Health Tips: சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?


Health Tips: சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?

*சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்*...

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...

இரண்டு சக்கர  வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில்,

சோபாக்களில்,  கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

*இப்படிக்  காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல
உடல் உபாதைகள் உருவாகிறது*...

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து  அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...

*நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு  அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு
வாய்ப்பு உள்ளது*.

*நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்*.

*மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது  ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது*.

எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால்
போட்டு அமர்ந்திருந்தால்  அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை
மடக்கி அமர்ந்துதான்  சாப்பிட வேண்டும்.

ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு
ஜீரணம்  நன்றாக நடைபெறுகிறது.

சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல்  காலுக்கே அதிகமாக செல்கிறது.

இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்  யுரோப்பியன் கழிவறையில்  அமரும் பொழுது குடலுக்கு அதிக

அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்,

அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட  யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைப்  புரிந்து கொள்ளுங்கள். *உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து  வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்*.

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்...

எனவே யுரோப்பியன்  வகை கழிவறைகளை தவிருங்கள்...

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...

சாப்பிடும் பொழுது தரையில்  ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால்
சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...

சில வீடுகளில் அதற்கு  வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...

*சாப்பிடும் முறை*...!

1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...

2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக  மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...

3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...

4. சாப்பிடும் பொழுது  இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...

5. அவசர  அவசரமாக சாப்பிட வேண்டாம்...

6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...

7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட  வேண்டாம்...

8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...

9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...

10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு  சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...

12. சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7 to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள் இரவு - 7 to 9 மணிக்குள்

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...

14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...

*அமருங்கள் சம்மணமிட்டு*...*சாப்பிடுங்கள் முறையாக*...*வாழுங்கள் ஆரோக்கியமாக*!.
=======================================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. நான் சம்மணம் போட்டு தான் இதை படித்தேன்..

    அது சரி..
    ஏன் இப்போ சோதிட பதிவுகள்..அலசல்கள்
    வருவதில்லை...

    முடிந்த போது மொத்தமாக பதிவு செயது
    தேதிவாரியா அப்லோட் செய்யலாம் தானே...

    ReplyDelete
  2. அருமையான தகல்வல்கள் அய்யா,
    நாம் சாப்பிடும் உணவு சிறு குடலில் இருந்து பெருங்குடலுக்கு செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம் இரண்டு மணி நேரம், சாப்பிட்ட உடன் தூங்க சென்றால் சிறு குடலில் இருக்கும் உணவினால் வயிற்று எரிச்சல், அல்சர், ஜீரண கோளாறுகளினால் அவதிப்பட நேரிடும்.

    கால்களை தொங்கவிடுவதினால் , நீங்கள் கூறியதுபோல அதிக ரத்தம் கால்களுக்கு பாயும் , அதனால் நமது இதயமானது நாளடைவில் வலுவிழந்துவிடும், ஆதலால் நாற்காலியில் உட்காரும்பொழுது பாத ரெஸ்ட் (FOOT REST) எனப்படும் பலகை போன்ற அமைப்பின் மீது கால்களை வைத்து (முக்கியமாக அலுவலகத்தில்) பணியாற்றுவது நன்மை தரும்.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,மிகவும் பயனுள்ள குறிப்புகள்.நன்றி.

    ReplyDelete
  4. Dear Sir,

    How can i join in your class room as student.
    List the title of your books and how can i get. it.

    Rgs,
    Ram

    ReplyDelete
  5. /////Blogger kmr.krishnan said...
    Thank you, Sir.Very useful./////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. /////Blogger வேப்பிலை said...
    நான் சம்மணம் போட்டு தான் இதை படித்தேன்..
    அது சரி..
    ஏன் இப்போ சோதிட பதிவுகள்..அலசல்கள்
    வருவதில்லை...
    முடிந்த போது மொத்தமாக பதிவு செயது
    தேதிவாரியா அப்லோட் செய்யலாம் தானே.../////

    நல்ல யோசனை. செய்கிறேன்! நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete

  7. //////Blogger Sivakumar Selvaraj said...
    அருமையான தகல்வல்கள் அய்யா,
    நாம் சாப்பிடும் உணவு சிறு குடலில் இருந்து பெருங்குடலுக்கு செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம் இரண்டு மணி நேரம், சாப்பிட்ட உடன் தூங்க சென்றால் சிறு குடலில் இருக்கும் உணவினால் வயிற்று எரிச்சல், அல்சர், ஜீரண கோளாறுகளினால் அவதிப்பட நேரிடும்.
    கால்களை தொங்கவிடுவதினால் , நீங்கள் கூறியதுபோல அதிக ரத்தம் கால்களுக்கு பாயும் , அதனால் நமது இதயமானது நாளடைவில் வலுவிழந்துவிடும், ஆதலால் நாற்காலியில் உட்காரும்பொழுது பாத ரெஸ்ட் (FOOT REST) எனப்படும் பலகை போன்ற அமைப்பின் மீது கால்களை வைத்து (முக்கியமாக அலுவலகத்தில்) பணியாற்றுவது நன்மை தரும்./////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ////Blogger PRAKASH M said...
    Arumaiyana Pathivu/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  9. ////Blogger classroom2012 said...
    Sir , very useful Thank you////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  10. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,மிகவும் பயனுள்ள குறிப்புகள்.நன்றி.////

    நல்லது. நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  11. /////Blogger Ram Prakash said...
    Dear Sir,
    How can i join in your class room as student.
    List the title of your books and how can i get. it.
    Rgs,
    Ram ///////

    இது திறந்த வெளி இணைய வகுப்பு. யார் வேண்டுமென்றாலும் சேர்ந்து படிக்கலாம். விதிமுறைகள் கிடையாது. புத்தகங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com