8.8.16

எப்படித் தேர்வு செய்தார் கர்மவீரர் காமராஜர்?


எப்படித் தேர்வு செய்தார் கர்மவீரர் காமராஜர்?

கர்மவீரர் காமராஜர் முதல்வராய் இருந்த போது, மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்ர்க்கை ஒதுக்கீட்டில், முதலமைச்சருக்கென 10 இடங்கள் Quota ஒதுக்கியிருந்தார்களாம். அதற்கென விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டனவாம். அந்த விண்ணப்பங்களிருந்து யாரை வேண்டுமானாலும் 10 பேரை முதல்வர் தேர்ந்தெடுக்கலாம். காமராஜரின் உதவியாளருக்கு ஒரு எண்ணம் தோன்றியதாம். ஊரெல்லாம் இவரைப் பெரிய மனம்   கொண்டவர் என்று சொல்கிறார்களே, இவர் எந்த அடிப்படையில் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறார் என்று பார்ப்போம். தன் ஜாதி அடிப்படையிலா, தன் ஊர்க்காரர்களுக்கு கொடுப்பாரா, நண்பர்களின் பிள்ளைகளுக்கு கொடுப்பாரா அல்லது கட்சிக்காரர்களுக்கு கொடுப்பாரா? என்று பார்க்கலாம். அப்போது இவர் சுயரூபம் தெரிந்து விடும் என்று எண்ணினாராம்.

காமராஜர் முன்பு விண்ணப்பங்களை எடுத்து சென்று கொடுத்தாராம். சில நிமிடங்களில் அவற்றை பரிசீலித்த காமராஜர், கடகடவென பத்து விண்ணப்பங்களை எடுத்து கொடுத்து விட்டு சென்று விட்டாராம். அவற்றைப் பார்த்த உதவியாளருக்கோ மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அவர் எண்ணிய ஒரு அடிப்படையில் கூட அவர் தேர்ந்தெடுத்த விண்ணப்பங்கள் இல்லை. நேராக காமராஜரிடமே சென்று, நீங்கள் தேர்ந்தெடுத்த மாணவர்கள், உங்கள் ஜாதி, ஊர், நண்பர்கள் அல்லது கட்சிக்காரர்கள் என்று எந்த அடிப்படையிலும் வரவில்லையே, பிறகு எந்த அடிப்படையில் இவர்களை தேர்வு செய்தீர்கள்? என்று கேட்டாராம்.

சிரித்துக் கொண்டே கல்வி வள்ளல், கர்மவீரர் காமராஜர் சொன்னாராம், நீங்கள் கொடுத்த விண்ணப்பங்களையெல்லாம் வாங்கிப் பார்த்தேன், அவற்றில் பெற்றோர் கையொப்பம் என்ற இடத்தில் யார் விண்ணப்பங்களில் எல்லாம் கைய்யெழுத்துக்கு பதில் கைநாட்டு [கை ரேகை] இருந்ததோ, அவற்றைத் தான் நான் தேர்வு செய்தேன். எந்த குடும்பத்திலெல்லாம் கல்லாமை என்னும் இருள் இருக்கிறதோ, அவர்கள் வீட்டுக்குத் தான் நாம் முதலில் விளக்கேற்ற வேண்டும் என்று கூறினாராம். இப்படிப்பட்ட தலைவர்களும் நம் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்துள்ளனர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
----------------------------------------------------------------------
2
மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை.
👉 நேரம்
👉 இறப்பு
👉 வாடிக்கையளர்கள்
மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்.
👉 நகை
👉 பணம்
👉 சொத்து
மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.
👉 புத்தி
👉 கல்வி
👉 நற்பண்புகள்
👑4. மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்.
👉 உண்மை
👉 கடமை
👉 இறப்பு
👑5. மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை.
👉 வில்லிலிருந்து அம்பு
👉 வாயிலிருந்து சொல்
👉 உடலிலிருந்து உயிர்
👑6. மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.
👉 தாய்
👉 தந்தை
👉 இளமை
👑7. இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு.
👉 தாய்
👉 தந்தை
👉 குரு
👑நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் :
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு
👑வழிகாட்டும் ஏழு விஷயங்கள் :
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
👑நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள் :
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்
👑கவனிக்க ஏழு விஷயங்கள் :
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை
---------------------------------------------------------------
3
சிறந்தவனாக இரு, சிறந்ததை வைத்திரு, சிறந்ததை செய்.
2.   ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவு கொள்ளாது.
3.   போகும்போதே என்னை ரசித்து கொண்டே போ, திரும்பி வரமாட்டேன் உனக்காக. இப்படிக்கு - வாழ்க்கை.
உன் மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம். அது தெளிவாக இருக்கும் வரையில் நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை
===================================================================
படித்ததில் பிடித்தது.உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்

அன்புடன்,
வாத்தியார்
===================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3 comments:

  1. அன்புடையீர்,
    அருமையான பகிர்வு. காமராஜரைப் பற்றி படிக்கும் போதெல்லாம், இப்படியும் ஒரு அரசியல் தலைவர் நம் நாட்டில் இருந்திருக்கிறார் என நினைக்கும் போதே வியப்பாக இருக்கிறது. சுயநலமில்லாது வாழ்க்கையை மற்றவர்களுக்காக அர்ப்பணித்து, மற்றவர்களின் துயரைப் போக்குவதற்காகவே வாழ்ந்த தலைவர்களில் ஒருவர் காமராஜர்.

    அன்புடன்,
    சரவணபாபு ஸ்ரீனிவாசன்

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    கர்மவீரர் வாழ்ந்து காட்டிய கண்ணிய மரபுக்கு மற்றுமோர் உதாரணத்தைத் தநதுள்ளீர்,ஐயா!அவர் ஓர் அவதார மஹான்!
    மற்ற பதிவுகளும் நனறாக உள்ளன!

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,காமராசர் பற்றிய பதிவு மிகவும் அருமை.என்ன ஒரு தொலைநோக்கு!.பதிவு 2,3ல் உள்ள சிந்தனைகள் வாழ்வின் எதார்த்தத்தையும்,அதை உணர்ந்தால் வரும் ஞானத்தையும் போதிக்கின்றன.நன்றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com