24.7.16

Quiz: புதிர் எண்.112 புதிருக்கான பதில்


Quiz: புதிர் எண்.112 புதிருக்கான பதில்

வெள்ளிக்கிழமை (22-7-2016) புதிருக்கான பதில்:

ஜாதகிக்குத் திருமணம் ஆனது. ஆன மறுவருடமே விவாகரத்தும் ஆனது. மீண்டும் நான்காண்டுகளில் மறுமணமும் சிறப்பாக அமைந்தது. இதுதான் சரியான விடை
---------------------------------------------------------------------------------
ஜாதகி சிம்ம லக்கினக்காரர்.
லக்கினத்தில் யோககாரகன் செவ்வாய் நல்ல நிலைமையில் அமர்ந்துள்ளார்.
திருவோண நட்சத்திரம். சந்திரன், குரு பகவானின் நேரடிப் பார்வையில் உள்ளார்
பாக்கிய ஸ்தானத்தில் (9ல்) ராகு
7ம் அதிபதி சனீஷ்வரன் செவ்வாயின் பார்வையுடன் 7ல்
----------------------------------------
ஜாதகிக்கு அவளுடைய 28வது வயதில் திருமணமானது. ராகு திசையில் புத்தி நாதன் செவ்வாய் திருமணத்தை முடித்து வைத்தார். அதே ராகு திசை முடியும் போது ராகு, திருமண வாழ்க்கையை கவிழ்த்து விட்டுப் போய் விட்டார்.

7ம் அதிபதி சனீஷ்வரன் 7ல் இருப்பதாலும், செவ்வாயின் பார்வை சனி மேல் விழுவதாலும், சந்திரனில் இருந்து 4ல் ராகு இருப்பதாலும், சந்திரனுக்கு எட்டில் செவ்வாய் இருப்பதாலும், முதல் திருமணம் நிலைக்கவில்லை.

ஏழாம் அதிபதி சனீஷ்வரன் குரு பகவான் வீட்டில் இருப்பதாலும், அவரை உச்சமான குரு வலிமையாகப் பார்ப்பதாலும்,  ஜாதகிக்கு மீண்டும் திருமணம் ஆனது. கோச்சார குருபகவான் அதை நடத்தி வைத்தார்

குரு கெட்டிருந்தாலும் முடிந்தவரை நன்மைகளைச் செய்யக்கூடியவர். களத்திரகாரகன் சுக்கிரன் மேல் குருவின் 5ம் பார்வை விழுவதைப் பாருங்கள். இருவரும் சேர்ந்து குரு மகாதிசை சுக்கிர புத்தியில் ஜாதகிக்கு மறுபடியும் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

விளக்கம் போதுமா?
--------------------------------
போட்டியில் ஒன்பது பேர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள்.
ஒருவர் மட்டும் மிகச்சரியான விடையை எழுதியுள்ளார். அந்த அன்பர் பெயர் திருவாளர்.எம்.ஸ்ரீஇனிவாச ராஜூலு! அவருக்கு எனது மனம் உவந்த பராட்டுக்கள்: அவருடைய விளக்கத்தைக் கீழே கொடுத்துள்ளேன்:

1
******////////Blogger Srinivasa Rajulu.M said...
அம்மணி 1966-நவம்பர் 18 நள்ளிரவில் (பிறந்த ஊரைப் பொறுத்து, அது 19-ஆம் தேதி ஆகவும் இருக்கலாம்) திருவோண தினத்தில் பிறந்தவர்.
பத்து வயதில் வந்த ராஹு தசை நல்ல தசை. சுமார் 23 வயதில் சுக்கிர புத்தியில் காதல் திருமணம் (லக்னாதிபனுடன் சேர்ந்த களத்திர காரகனைப் பார்க்கும் செவ்வாயினால்). குரு பார்வையும் திருமணத்திற்கு உதவியது.
ஆனால் ஏழில் நிற்கும் வக்கிர சனியும், அவரைப் பார்க்கும் செவ்வாயும் திருமண வாழ்வை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். இன்னொரு காரணம் மாங்கல்ய ஸ்தானாதிபதி பன்னிரண்டில் - உச்சமானாலும் - மறைந்துவிட்டது என்பதால்.
ஏழாம் இடத்தில் இருக்கும் சனியை, இயற்கையில் பாவியான செவ்வாய் பார்ப்பதால் மறுமணத்திற்கு இடமுண்டு. லக்ன மாந்தியாலும், லக்னத்தில் அமர்ந்த செவ்வாயாலும் கோபமும் பிடிவாதமும் மிகுந்திருக்கும் - அது அவ்வப்போது திருமண வாழ்வில் பிரச்சினைகள் கொடுக்கும்.
குடும்ப ஸ்தானாதிபதி மூன்றில் மறைவு. சுக ஸ்தானத்தில் சனியின் பார்வை - இவையெல்லாம் அமைதியான வாழ்விற்கு அனுகூலமாக இல்லை.//////
Friday, July 22, 2016 10:51:00 AM //////

,அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. ஏழாம் அதிபதி ஏழில் அல்லவா உள்ளது ஐயா

    ReplyDelete
  2. Sir, small correction. Seventh house owner in his own house. Not Guru house.

    ReplyDelete
  3. வணக்கம் குருவே?
    புதிர் போட்டி விடை பார்த்தேன்.அபாரம்!

    ReplyDelete
  4. /////Blogger parameshwaran said...
    ஏழாம் அதிபதி ஏழில் அல்லவா உள்ளது ஐயா////

    ஆமாம். கவனப் பிழை. பதிவில் திருத்தி விட்டேன். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி!

    ReplyDelete
  5. //////Blogger KJ said...
    Sir, small correction. Seventh house owner in his own house. Not Guru house./////

    ஆமாம். கவனப் பிழை. பதிவில் திருத்தி விட்டேன். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி!

    ReplyDelete
  6. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே?
    புதிர் போட்டி விடை பார்த்தேன்.அபாரம்!////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  7. திருமணம் நடந்ததையும், காதல் திருமணம் என்பதையும் கூறியுள்ளேன். இரணடாம் திருமணம் பற்றிக் கூறவில்லை என்பது உண்மைதான்.

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா,புதிர் விடையில் மூன்றாம் பத்தியில்,மறுமணத்திற்கான விளக்கத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டுமா ஐயா.நன்றி.

    ReplyDelete
  9. /////Blogger kmr.krishnan said...
    திருமணம் நடந்ததையும், காதல் திருமணம் என்பதையும் கூறியுள்ளேன். இரணடாம் திருமணம் பற்றிக் கூறவில்லை என்பது உண்மைதான்.//////

    விடையைப் புரிந்துகொண்டு பின்னூட்ட்டம் இட்ட மேன்மைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,புதிர் விடையில் மூன்றாம் பத்தியில்,மறுமணத்திற்கான விளக்கத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டுமா ஐயா.நன்றி.//////

    மாற்றிக் கொள்ள வேண்டாம். எழுதியுள்ளபடியே வாசியுங்கள் அன்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com