6.7.16

கவியரசரின் அசாத்தியத் திறமை!


கவியரசரின் அசாத்தியத் திறமை!

"மருத மலை மாமணியே" என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும், கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.

அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.

இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.

அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல். ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன்"....

குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்ற வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்துவிட்டாராம்..

கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று "பனியது மழையது நதியது கடலது சகலமும் உனதொரு கருணையில் எழுவது" என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலினை நான் சிறிது நேரம் கீழே வைத்து ",ஐயா ,என்னை விட்டுறுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார் குன்னக்குடி வைத்தியநாதன்!
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

  1. பிதாமகர் பிறவி கவிஞர்.

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்
    மருதமலை மாமணியே' பாடல். மெட்டுக்கு பாட்டு நன்றாக புரிந்தது ஐயா.
    கண்ணன்

    ReplyDelete
  3. Good after noon sir.intha padalin back ground story super

    ReplyDelete
  4. அன்பு ஆசிரியரே!,

    இந்த பாடலை நான் பல முறை கேட்டுயுள்ளேன். ஆனால் இதன்பின் உள்ள சங்கதி தெரியாது. கவியரசருக்கு கடவுளின் அருள்.. குறிப்பாக சரஸ்வதி! தேவியின் அருள் இருந்திருக்கிறது. மகாகவி பாரதியாருக்கு பராசக்தி! அருள் கிடைத்தது போல்..
    இதனை எங்களுக்கு பகிர்ந்ததிற்கு நன்றி!
    பன்னீர்செல்வம்

    ReplyDelete
  5. குருவே வணக்கம்!
    மிகவும் ஆச்சரியமான விஷயம் செல்லப்போட்டி என்பது தான்!தாங்களே கவியரசரின் பல்வேறு பாடல்கள்களையும்,அவரது திறமைக்கு எடுத்துக் காட்டான சிறப்புச் செய்திகளையும் அவ்வப்போது பதிவு செய்துள்ளீர்கள்!ஆயினும்,இன்றைய பதிவு கவியரசரின் மேன்மையை மேலும் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது!

    ReplyDelete
  6. பீஷ்மரை பீஷ்மரால் மட்டுமே தோற்கடிக்க முடியும். நம்மவர் பீஷ்மர் ஆயிற்றே.

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா,இருவருமே அவரவர் துறையில் வித்தகர்தாம்.இருந்தாலும்,சபாஷ்! சரியான போட்டி.நன்றி.

    ReplyDelete
  8. /////Blogger SELVARAJ said...
    பிதாமகர் பிறவி கவிஞர்./////

    உண்மைதான். நன்றி செல்வராஜ்!

    ReplyDelete
  9. /////Blogger SELVARAJ said...
    பிதாமகர் பிறவி கவிஞர்./////

    உண்மைதான். நன்றி செல்வராஜ்!

    ReplyDelete
  10. /////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    மருதமலை மாமணியே' பாடல். மெட்டுக்கு பாட்டு நன்றாக புரிந்தது ஐயா.
    கண்ணன்////

    நல்லது. உங்களுக்குப் புரிந்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்.நன்றி!

    ReplyDelete
  11. ////Blogger Subathra Suba said...
    Good after noon sir.intha padalin back ground story super////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  12. /////Blogger Selvam R said...
    அன்பு ஆசிரியரே!,
    இந்த பாடலை நான் பல முறை கேட்டுயுள்ளேன். ஆனால் இதன்பின் உள்ள சங்கதி தெரியாது. கவியரசருக்கு கடவுளின் அருள்.. குறிப்பாக சரஸ்வதி! தேவியின் அருள் இருந்திருக்கிறது. மகாகவி பாரதியாருக்கு பராசக்தி! அருள் கிடைத்தது போல்..
    இதனை எங்களுக்கு பகிர்ந்ததிற்கு நன்றி!
    பன்னீர்செல்வம்/////

    உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பன்னீர்செல்வம்!

    ReplyDelete
  13. /////Blogger SELVARAJ said...
    பீஷ்மரை பீஷ்மரால் மட்டுமே தோற்கடிக்க முடியும். நம்மவர் பீஷ்மர் ஆயிற்றே./////

    உண்மைதான். நன்றி செல்வராஜ்!

    ReplyDelete
  14. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,இருவருமே அவரவர் துறையில் வித்தகர்தாம்.இருந்தாலும்,சபாஷ்! சரியான போட்டி.நன்றி./////

    இருவருமே அவரவர் துறையில் மேன்மையானவர்கள்தான். நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  15. ////Wednesday, July 06, 2016 4:00:00 PM Delete
    Blogger வரதராஜன் said...
    குருவே வணக்கம்!
    மிகவும் ஆச்சரியமான விஷயம் செல்லப்போட்டி என்பது தான்!தாங்களே கவியரசரின் பல்வேறு பாடல்கள்களையும்,அவரது திறமைக்கு எடுத்துக் காட்டான சிறப்புச் செய்திகளையும் அவ்வப்போது பதிவு செய்துள்ளீர்கள்!ஆயினும்,இன்றைய பதிவு கவியரசரின் மேன்மையை மேலும் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com