28.7.16

சினிமா: எதற்காகக் கொஞ்சிப் பேசிட வேண்டாம்?


சினிமா: எதற்காகக் கொஞ்சிப் பேசிட வேண்டாம்?

எதற்காகக் கொஞ்சிப் பேசிட வேண்டாம் - என்கிறார் நாயகன்? நாயகியின் கண்ணே பேசுகையில் வாய்ச் சொற்கள் எதற்கு? நியாயம்தானே!!!

உங்களுக்காக என் மனம் கவர்ந்த புதுப்படப் பாடல் ஒன்றின் காணொளி ஒன்றை இன்று பதிவிட்டிருக்கிறேன். பார்த்து ரசியுங்கள்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------
படத்தின் பெயர்: சேதுபதி
படம் வெளியான தேதி 19-2-2016

பாடலைப் பாடியவர்கள்: கே.எஸ்.சித்ரா, ஸ்ரீராம் பார்த்தசாரதி
நடிப்பு: விஜய் சேதுபதி, ரெம்யா நம்பீசன்
இசை: நிவாஸ் கே.பிரசன்னா
பாடலாக்கம்: கவிஞரின் பெயர் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
----------------------------------
பாடலின் வரிகள்:

கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடி

நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடி
அடி தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடி
தூரமே தூரமாய் போகும் நேரம்

கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடா

நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடா
அட தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம்

ஆசை வலையிடுதா
நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா
தனிமை உனை சுடுதா
நினைவில் அனல் தருதா

தலையணைப் பூக்களிலெல்லாம்
கூந்தல் மணம் வருதா
குறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியே
குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே
வேறு என்ன வேணும்

மேகல் மழை வேணும்
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்….
கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடா

நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடி
அடி தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம்

கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடா…
------------------------------------
Video Clipping of the Song:
Our sincere thanks to the person who uploaded this song in the net!!!



வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
===============================================

12 comments:

  1. குருவே வந்தனம்!
    மிக நனறாக இருந்தது.
    வரதராஜன்

    ReplyDelete
  2. அன்பு குருவே!,

    நானும் இந்த படம் பார்த்தேன். படம் நன்றாக‌ இருந்தது, ஆனால் இந்த பாடலை சரியாக கேட்கவில்லை. நாங்கள் வெளிநாட்டில் பெரும்பாலும் இனையதளம் மூலமாக‌ தான் படம் பார்ப்போம். பாடல் இடையே தான், இடைவேலை எடுப்போம், இந்த பாடலில் இவ்வளவு அழகான வரிகள் இருப்பதை உங்கள் பதிவு மூலம் தெரிந்துக்கொண்டென். பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  3. அன்புடையீர், இந்த பாடலை எழுதியவர்: நா முத்துக்குமார்

    அன்புடன்,
    சரவணபாபு ஸ்ரீனிவாசன்

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,படத்தில் பார்த்ததைவிட உங்கள் பதிவில் பார்க்கும் போது பாடல் படு சூப்பர்.நன்றி.

    ReplyDelete
  5. எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது...
    பகிர்வுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  6. ///////Blogger வரதராஜன் said...
    குருவே வந்தனம்!
    மிக நன்றாக இருந்தது.
    வரதராஜன்////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  7. ////Blogger kmr.krishnan said...
    Thank you, Sir/////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. /////Blogger Selvam R said...
    அன்பு குருவே!,
    நானும் இந்த படம் பார்த்தேன். படம் நன்றாக‌ இருந்தது, ஆனால் இந்த பாடலை சரியாக கேட்கவில்லை. நாங்கள் வெளிநாட்டில் பெரும்பாலும் இனையதளம் மூலமாக‌ தான் படம் பார்ப்போம். பாடல் இடையே தான், இடைவேளை எடுப்போம், இந்த பாடலில் இவ்வளவு அழகான வரிகள் இருப்பதை உங்கள் பதிவு மூலம் தெரிந்துக்கொண்டென். பதிவுக்கு நன்றி!/////

    தெரிந்து கொண்டவரை சரிதான். நன்றி செல்வம்!

    ReplyDelete
  9. /////Blogger வாசகன் said...
    அன்புடையீர், இந்த பாடலை எழுதியவர்: நா முத்துக்குமார்
    அன்புடன்,
    சரவணபாபு ஸ்ரீனிவாசன்/////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,படத்தில் பார்த்ததைவிட உங்கள் பதிவில் பார்க்கும் போது பாடல் படு சூப்பர்.நன்றி.//////

    உங்களின் பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஆனந்தன்!

    ReplyDelete
  11. ////Blogger பரிவை சே.குமார் said...
    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது...
    பகிர்வுக்கு நன்றி ஐயா.../////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி குமார்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com