30.6.16

கலியுகத்தைப் பற்றி என்ன சொன்னார் கண்ணபரமாத்மா?

கலியுகத்தைப் பற்றி என்ன சொன்னார் கண்ணபரமாத்மா?

*"கலியுகம் எப்படி இருக்கும்...?"*

பகவான் கிருஷ்ணரிடம் பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் மேற்கண்ட கேள்வியை கேட்டனர்...

அதற்கு மாதவன், "சொல்வதென்ன? எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன்..." என்று கூறி...நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தி அவற்றை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார்.

கோவிந்தனின் ஆணைப்படி நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.

முதலில் பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியை கண்டான்... அங்கு ஐந்து கிணறுகள் இருநதன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள்.சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவை மிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணறு மட்டும் நீர் வற்றி இருந்தது...

இதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

அர்ஜூனன், அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான குரலைக் கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பிப் பார்த்தான் அர்ஜூனன், அங்கு ஒரு கோரமான காட்சியை கண்டான்...அந்தக் குயில் ஒரு வெண்முயலை கொத்தித் தின்று கொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்துக் கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதே என்று எண்ணியபடி, குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.

சகாதேவன், கிருஷ்ணரின் அம்பை எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சி கண்டான்...

பசு ஒன்று அழகிய கன்றுகுட்டியை ஈன்றெடுத்து, அதனைத் தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய்ப் பசு நாவால் வருடுவதை நிறுத்தவில்லை. சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அதனால் அந்தக் கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது.'தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும்?' என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

அடுத்ததாக நகுலன், கண்ணனின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதைக் கண்டு எடுத்துக் கொண்டு திரும்பினான்.

அப்போது...மலை மேலிருந்து பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது. வழியில் இருந்த அனைத்து மரங்களையும் தடைகளையும் இடித்துத் தள்ளி, வேகமாக உருண்டு வந்தது. அவ்வாறு வேகமாக வந்த அந்த பாறை, ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது.

ஆச்சர்யத்தோடு அதைக் கண்ட நகுலன் தெளிவு பெற பகவானை நோக்கி புறப்பட்டான்.

இவ்வாறு பாண்டவர்கள் நால்வரும் கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர்.

அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும், மனதில் உள்ள குழப்பத்தையும் ஞானக்கடலான கிருஷ்ணரிடம் கூறி, அதற்கான விளக்கத்தை கேட்டனர்.

கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்...

"பீமா...! கலியுகத்தில் செல்வந்தர்களும், ஏழைகளும் அருகருகே தான் வாழ்வார்கள்... ஆனால், செல்வந்தர்கள் மிகவும் செழிப்பாக இருந்தாலும்,  தம்மிடம் உள்ளதில் ஒரு சிறு பகுதியைக் கூட ஏழைகளுக்குக் கொடுத்து உதவ மாட்டார்கள்... ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்குநாள் செல்வந்தர்களாகவே ஆக, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழ்மையில் வாடி வருந்துவார்கள்...நிரம்பி வழியும் நான்கு  கிணறுகளுக்கு நடுவில் உள்ள வற்றிய கிணற்றை போல்..." என்றார்.

பின்னர் அர்ஜூனனிடம் திரும்பி, கிருஷ்ணர், "அர்ஜூனா! கலியுகத்தில் போலி ஆசிரியர்கள், மத குருக்கள்,  போன்றவர்கள் இனிமையாகப் பேசும் இயல்பும், அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள்...இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கயவர்களாகவே இருப்பார்கள்...
இனிய குரலில் பாடிக்கொண்டே, முயலை கொத்தித் தின்ற குயிலைப்போல...!" என்றார்.

தொடர்ந்து சகாதேவனிடம் கிருஷ்ணர், "சகாதேவா! கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீதுள்ள கண்மூடித்தனமான பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாக இருப்பார்கள்...
இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை கூட மறந்து விடுவார்கள்... இதையடுத்து, பிள்ளைகளும் வருங்காலத்தில் தீய வினைகளால் துன்பத்தை அனுபவிப்பார்கள்.இவ்வாறு, பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவார்கள்...
கன்று குட்டியை நாவால் நக்கியே காயப்படுத்திய பசுவைப் போல்..."

அடுத்ததாக, நகுலனை பார்த்த கிருஷ்ணர், "நகுலா...! கலியுகத்தில் மக்கள் சான்றோர்களின் நற்சொற்களைப் கேளாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும், நற்குணத்தினின்றும், நன்னெறிகளிலிருந்தும் நீங்குவார்கள்...யார் நன்மைகளை எடுத்துக் கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்...எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள்...இத்தகையவர்களை இறைவனால் மட்டுமே தடுத்து நிறுத்தி, நிதானப்படுத்தி நன்னெறியுடன் செயல்படுத்த முடியும்...மரங்களாலே தடுத்து நிறுத்த முடியாத பெரிய பாறையை...தடுத்து நிறுத்திய சிறு செடியைப் போல...!" என்று கூறி முடித்தார் பகவான் கிருஷ்ணர்...🙏🏻

ஆகவே, கலியுகத்தில் கவனமுடன் நம் வாழ்வைக் கழித்திடுவோம்...

நன்னெறியில் வாழ்ந்து... பாவங்களிலிருந்து நம்மை காத்திடுவோம்...

அன்பே சிவம்...அதை அடைவதே நமது தவம்...
இதை உணர்ந்தால் தானே நமது வாழ்க்கை சுபம்...🙏🏻

ஆகவே, உண்மையை நாம்  உணர்வோம்...

நன்மையை உலகிற்கு சொல்வோம்...

நாம் அனைவரும் நலமுடன் வாழ்வோம்!!!!
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26 comments:

  1. நல்ல கருத்து நடைமுறை பயில.

    ReplyDelete
  2. அருமை. நன்றி ஐயா.

    ReplyDelete
  3. அருமையான பதிவு வாத்தியார் அவர்களே!!!

    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  4. Respected Sir,

    Happy morning... Wonderful article.

    Thanks for sharing.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  5. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    கலியுகத்தைப் பற்றி பகவான் கிருஷ்ணன் விவரித்தது நடை முறையில் வந்துள்ளதே!!
    கவியரசும் சொன்னதுதானே “அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி, அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி,... பொன்னான உலகென்று பெயௌமிட்டான்....”
    2) இன்றைய கோடீசுவரர்கள் போலி சாமியார்கள் “ ......ஆனந்தா சாமிகள்தானே!!”
    3) பிள்ளைகளை கவனிக்க பெற்றோர்களுக்கு நேரம் ஏது குருசாமி?, “ காசேதான் கடவுளடா - இது கடவுளுக்கும் தெரியுமடா”
    4) கலியுகத்தில் இன்றைக்கு தினம் ஒரு கொலை (குறைந்த பட்சம்) நடப்பில் உள்ளதே?
    பரந்தாமனே இனி சான்றோனாக வந்தால் தவிர வேறு எதுவும் சாத்தியமில்லை குருவே!!!
    ஆனால் ஒரு நல்ல கருத்தை மக்களுக்கு அறியத் தந்தமைக்கு தலை வணங்குகின்றோம்!!!!
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  6. கலியுகம் பற்றி நம்ம கோரக்க சித்தர் சொல்வதையும் கேளுங்கள்!

    யோகி பரமானந்த! கலியின் தோற்றம்
    உண்மை நிற சாதிமத பேதம் மெத்த
    பாகிதமாய் பிரபலங்கள் பெண்பால் விருத்திப் பாருலகில் ஆண்மக்கள் குறைவுண்டாகும்
    மோகித்தே முன்பின்னும் முறைமை கெட்ட மூதரிய தாயினையே சேய்தான் சேர்ந்து போகிதமாய் மதனையது பயில்வார் பங்கில் பூவலகிற் கலியுனுட பான்மை கேளே — கோரக்கர்

    இன்னும் பல கருத்துக்களை சொல்லியிருக்கிறார்.

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா,இன்றைய அனைத்து நிகழ்வுகளும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது போலவே நடக்கின்றன.இறைவன்தான் நல்லோரை காக்க வேண்டும்.நன்றி.

    ReplyDelete
  8. வணக்கம் குருவே!
    கண் முன்னே தவறு நடந்தாலும் தட்டிக் கேட்கக்கூடாது/முடியாது என்பது போன்ற பலவற்றைக் காண்கின்றோமே? கலியுகக் காட்சி!

    ReplyDelete
  9. அன்பின் குருவே ஐயா...

    யாதார்த்த தெய்வீகப் பதிவு அருமை அருமை....
    கண்ணன் வாக்கு பொன்வாக்கு என்பதில் ஐயமில்லை,

    அன்புப்பகிர்வுக்கு நன்றி ஐயா,

    அன்புடன்
    விக்னசாயி.

    ReplyDelete
  10. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    நல்ல கருத்து நடைமுறை பயில.//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ////Blogger Srimalaiyappanb sriram said...
    நல்லது/////

    நன்றி!

    ReplyDelete
  12. ////Blogger Vasudevan Tirumurti said...
    நல்ல பாடம்!/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. ////Blogger mohan said...
    அருமை. நன்றி ஐயா.//////

    நல்லது. நன்றி மோகன்!

    ReplyDelete
  14. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    அருமையான பதிவு வாத்தியார் அவர்களே!!!
    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி./////

    நல்லது. நன்றி லக்‌ஷ்மிநாராயணன்!

    ReplyDelete
  15. ////ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Wonderful article.
    Thanks for sharing.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  16. ////Blogger S Balaji said...
    very fantastic lines/////

    நல்லது. நன்றி பாலாஜி!!

    ReplyDelete
  17. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    கலியுகத்தைப் பற்றி பகவான் கிருஷ்ணன் விவரித்தது நடை முறையில் வந்துள்ளதே!!
    கவியரசும் சொன்னதுதானே “அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி, அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி,... பொன்னான உலகென்று பெயௌமிட்டான்....”
    2) இன்றைய கோடீசுவரர்கள் போலி சாமியார்கள் “ ......ஆனந்தா சாமிகள்தானே!!”
    3) பிள்ளைகளை கவனிக்க பெற்றோர்களுக்கு நேரம் ஏது குருசாமி?, “ காசேதான் கடவுளடா - இது கடவுளுக்கும் தெரியுமடா”
    4) கலியுகத்தில் இன்றைக்கு தினம் ஒரு கொலை (குறைந்த பட்சம்) நடப்பில் உள்ளதே?
    பரந்தாமனே இனி சான்றோனாக வந்தால் தவிர வேறு எதுவும் சாத்தியமில்லை குருவே!!!
    ஆனால் ஒரு நல்ல கருத்தை மக்களுக்கு அறியத் தந்தமைக்கு தலை வணங்குகின்றோம்!!!!
    அன்புடன்,
    -பொன்னுசாமி./////

    நல்லது. நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  18. ////Blogger venkatesh r said...
    கலியுகம் பற்றி நம்ம கோரக்க சித்தர் சொல்வதையும் கேளுங்கள்!
    யோகி பரமானந்த! கலியின் தோற்றம்
    உண்மை நிற சாதிமத பேதம் மெத்த
    பாகிதமாய் பிரபலங்கள் பெண்பால் விருத்திப் பாருலகில் ஆண்மக்கள் குறைவுண்டாகும்
    மோகித்தே முன்பின்னும் முறைமை கெட்ட மூதரிய தாயினையே சேய்தான் சேர்ந்து போகிதமாய் மதனையது பயில்வார் பங்கில் பூவலகிற் கலியுனுட பான்மை கேளே — கோரக்கர்
    இன்னும் பல கருத்துக்களை சொல்லியிருக்கிறார்./////

    நல்லது. உங்களின் மேன்மையான தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,இன்றைய அனைத்து நிகழ்வுகளும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது போலவே நடக்கின்றன.இறைவன்தான் நல்லோரை காக்க வேண்டும்.நன்றி./////

    நம்பிக்கை வையுங்கள். உரிய சமயத்தில் அனைவரையும் காப்பாற்றுவார் அவர்!

    ReplyDelete
  20. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    கண் முன்னே தவறு நடந்தாலும் தட்டிக் கேட்கக்கூடாது/முடியாது என்பது போன்ற பலவற்றைக் காண்கின்றோமே? கலியுகக் காட்சி!/////

    உண்மைதான். நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  21. ////Blogger Vicknaa Sai said...
    அன்பின் குருவே ஐயா...
    யாதார்த்த தெய்வீகப் பதிவு அருமை அருமை....
    கண்ணன் வாக்கு பொன்வாக்கு என்பதில் ஐயமில்லை,
    அன்புப்பகிர்வுக்கு நன்றி ஐயா,
    அன்புடன்
    விக்னசாயி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com