25.6.16

பழநிஅப்பனும் நானும்!

பழநிஅப்பனும் நானும்!

முருக பக்தி !!

கந்தா போற்றி!
கடம்பா போற்றி!
கதிர்வேலா போற்றி!

பழநிஅப்பன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .

கஷ்டங்கள் வரட்டும் !

பழநிஅப்பன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .

பிரச்சனைகள் படுத்தட்டும் !

பழநிஅப்பன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .

வியாதிகள் நோகடிக்கட்டும் !

பழநிஅப்பன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .

துன்பங்கள் விளையாடட்டும் !

பழநிஅப்பன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .

எது எப்படி வேண்டுமானாலும்
நடக்கட்டும் . . .

பழநிஅப்பன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .

நான் பழநிஅப்பனிடம் பணம்
கேட்கமாட்டேன் . . .

நான் பழநிஅப்பனிடம் நிம்மதி
கேட்கமாட்டேன் . . .

நான் பழநிஅப்பனிடம் தைரியம்
கேட்கமாட்டேன் . . .

நான் பழநிஅப்பனிடம் ஆனந்தம்
கேட்கமாட்டேன் . . .

நான் பழநிஅப்பனிடம் ஆரோக்கியம்
கேட்கமாட்டேன் . . .

நான் பழநிஅப்பனிடம் வெற்றியைக்
கேட்கமாட்டேன் . . .

நான் பழநிஅப்பனிடம் ராஜபதவி
கேட்கமாட்டேன் . . .

நான் பழநிஅப்பனிடம் உலகில் பெருமை
கேட்கமாட்டேன் . . .

நான் பழநிஅப்பனிடம் சொத்து
கேட்கமாட்டேன் . . .

நான் பழநிஅப்பனிடம் மோட்சம்
கேட்கமாட்டேன் . . .

நான் பழநிஅப்பனிடம் ஒன்றுமே
கேட்கமாட்டேன் . . .

எனக்கு பழநிஅப்பனிடமிருந்து
ஒன்றுமே வேண்டாம் . . .

பழநிஅப்பன் என்னோடு இருக்கிறான்
என்பதே எனக்குப் போதும் . . .

பழநிஅப்பன் என்னை விட்டு நீங்கவே
மாட்டான் என்பதே எனக்குப் போதும் . . .

பழநிஅப்பன் என் மீது அளவு கடந்த
அன்பை வைத்திருக்கிறான் என்பதே
எனக்குப் போதும் . . .

என் பக்திக்கு எனக்கு ஒன்றுமே
பழநிஅப்பனிடமிருந்து வேண்டாம் . . .

எனக்குப் பக்தியே போதும் . . .
முருக பக்தியே போதும் . . .

எல்லாப் பிறவியிலும் இது போதும் . . .

இதைத் தவிர எதுவும் சுகமில்லை . . .

இதை விட்டு எதைக் கேட்டு என்ன சுகம் ???

அதனால் எனக்கு முருக பக்தியே பக்தி போதும் . . .

அப்பா போற்றி - பழநி
அப்பா போற்றி!
ஆண்டவா போற்றி - பழநி
ஆண்டவா போற்றி!

அன்புடன்
வாத்தியார்
*****************************
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26 comments:

  1. Migha azhagaana, urukkamaana varligal...siram thaazhthi vanangugiren! rs prasad

    ReplyDelete
  2. Ayyavukku APPAN MURUGAN kudave irukkattum AVAN kural ungalidamirunthu engalukku ketkattum.ellam PALANI APPAN seyal.kittuswamy

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,உண்மைதான் ஐயா.அவனை சரணாகதி அடைந்துவிட்டால்,அவன் பார்த்துக் கொள்வான் நமக்கு எது கொடுக்கவேண்டுமென்று.நன்றி.

    ReplyDelete
  4. பழனியப்பா சரணம்! சரணம் !சரணம்!

    ReplyDelete
  5. ஆசிரிர் ஐயா வணக்கம்.

    "நாடிய பொருள் கைகூடும்
    ஞானமும் புகழும் உண்டாகும்"
    - கம்பன்.

    "வேண்டத்தக்கது  அறிவோய் நீ
    வேண்டிய யாவும் தருவோய் நீ"
    - மாணிக்க வாசகர்.

    "கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
    கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா"
    - கண்ணதாசன்

    "இறைவனிடம் கையேந்துங்கள் -அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை
    பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்-அவன்
    பொக்கிஷத்தை மூடுவதில்லை"
    - நாகூர் அனிபா.

    " கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும் என்றார்...இயேசு
    தேடுங்கள் கிடைக்கும் என்றார்"

    ஆசிரியர் ஐயா, இவையெல்லாம் எங்களைப்போன்ற சாமானியர்களுக்காகச் சொன்னது.

    உங்களைப்போன்ற. நல்ல உள்ளங்களுக்கு, பிறர்க்கு உதுவும்  ஞானவான்களுக்கு,
    தன் அறிவாற்றலை எல்லோரும் அறியும் வண்ணம் எளிய தமிழில்வடித்துத்தந்து. சேவை செய்த வள்ளல்களுக்கு

    "அவன்"

    நாடாமல், வேண்டாமல், கேட்க்காமல், ஏந்தாமல், தட்டாமல், தேடாமல் அருள் பாலிப்பான்.  காட்சி தருவான்.

    உள்ளும் புறமும்
    உம்மோடு முருகனிருக்க
    எள்ளும் கவலை ஏதுக்கையா
    துள்ளும் மயிலேறி
    தூயகை வேலோடு
    வள்ளிமணாளன்
    வருவான் இதுசமயம்.

    வாழ்க நீ எம்மான்.
    முருகு முன் நிற்க.

    அன்பன்,
    ந.மோகனசுந்தரம், திருநெல்வேலி.

    ReplyDelete
  6. வணக்கம் குருவே!
    மனம் நிறைய பழனி ஆண்டவன் நினைவில் இருக்கு வைத்தீர்கள்,ஐயா!
    அரஹரோஹரா!

    ReplyDelete
  7. சரணம் சரணம் சரவண பவ ஓம்
    சரணம் சரணம் ஷண்முகா சரணம்

    ReplyDelete
  8. வணக்கம் சார். உங்கள் உடல் நலம் என்று சிறப்பாக இருந்து எழுத்து பணி சிறக்க அப்பன் முருகன் என்றும் அருள் புரிவான்.சேலம் ஆண்டாள் ராஜசேகரன்

    ReplyDelete
  9. உங்கள் பதிவுகளை Star 2015ல் காண ஆவ லுடன் காத்திருக்கிறோம், கேலக்ஸியில் இட்ட பதிவுகளை மேல்நிலை பாடங்களை இதில் ஏற்றுங்கள் ஐயா. தாங்கள் உடல் நலம் பெற்று இதில் பதிவிடும் வரை,, அந்த வகுப்பில் கலந்து கொள்ள முடியாது போனவர்களுக்கு பழைய பாடங்களை படிக்க வாய்ப்பளியுங்கள் ஐயா, நன்றி .சேலம் ஆண்டாள்

    ReplyDelete
  10. வாத்தியார் ஐயாவின் இந்த அருமையான பதிவுக்கு நன்றி கூறும் வகையிலும், அவருடைய அன்பு சீடர்களுக்கு என் அன்பை தெரிவிக்கும் விதத்திலும் ஒரு சின்ன கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

    எல்லாம் விதியின்படியே நடந்தாலும், ஆணவம் முற்றிலும் அழிந்து, நெக்குருகி எம்பெருமான் முருகனை வேண்டி தொழுதால் வினை நீங்கும் - "அவன் கால் பட்டு அழிந்தது என் தலை மேல் அயன் (பிரமன்) கை எழுத்தே!" என்பது அருணகிரியார் வாக்கு.அவருடைய முதல் பாடலான "முத்தைத் தரு" ஒரு மிக சிறந்த காப்பு பாடலாகும். அனுகிரக மூர்த்தியான முருகப்பெருமானை இப்பாடலில் அருணகிரியார் சம்ஹார மூர்த்தியாகவே இறுதி வரிகளில் பாடி, ரட்சித்து அருள வேண்டுகிறார். இந்த ஒரு பாடலில் மட்டும் கந்தபெருமானும், அஷ்டபைரவரும் போற்றப்படுவது மிகச் சிறப்பு. இதை பக்தியுடன் ஓதி வந்தால் பகைவர் தொல்லை நீங்கும் என்பது பலரின் அனுபவம்.

    இது போலவே மூவர் தேவாரமும் வினை தீர்க்கும் மருந்தாய் அமைகின்றது.
    இதோ அந்த பதிகங்கள் பற்றிய விவரம்:

    கூற்றாயினவாறு விலக்ககலீர் (அப்பர் ஸ்வாமிகள்-வயிறு சம்மந்த நோய்கள் நீங்கும்)
    மந்திரமாவது நீறு (திருஞானசம்பந்தர் - இதை பக்தியுடன் ஓதி திருநீறு அணிய காய்ச்சல் ஜுரம் நீங்கும்)
    செய்யனே திரு ஆலவாய் மேவிய அய்யனே (திருஞானசம்பந்தர் - இதை பக்தியுடன் ஓதி வர பகைவர் தொல்லை நீங்கும்)
    இடரினும் தளரினும் (திருஞானசம்பந்தர் - இதை பக்தியுடன் ஓதி வர பண வரவு இறையருளால் அமையப்பெறும்)
    வாசி தீரவே (திருஞானசம்பந்தர் - இதை பக்தியுடன் ஓதி வர செய்தொழிலில் லாபம் இறையருளால் பெருகும்; வழக்கு-கோர்ட் விவகாரங்களிலிருந்து விடுபட இறைவன் துணை புரிவார்)
    வேயுறு தோளிபங்கன் ( திருஞானசம்பந்தர் - இதை பக்தியுடன் ஓதி வர கிரகங்கள் தரும் தீய பலன்களிலிருந்து விடுதலை பெறலாம்)
    பொன்செய்த மேனியினீர் (சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் - இதை பக்தியுடன் ஓதி வர இழந்த செல்வம்/பொருள் மீண்டும் இறையருளால் கிடைக்கும்)

    இந்த பதிகங்கள் உட்கருத்து, எந்த சூழ்நிலையில் இவை பாடப்பட்டன என்று அறிந்து (சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து என்பது மாணிக்கவாசகர் வாக்கு அல்லவா?) மனமுருகி பாராயணம் செய்தல் மிக நலம்.

    அவன் அருளாலே அவன் தாள் பணித்து எல்லோரும் சுகித்து இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

    அன்புடன்,
    அடியேன்
    பிரசாத்

    ReplyDelete
  11. எனக்கு வாத்தியார் அவர்களின் பாடங்களிலேயே மிகவும் பிடித்த பாடம் அவர் கடல் அளவு விவரங்கள் எல்லாம் கொடுத்து விட்டு கடைசியில் "இறைவன் விளையாட்டை பார்த்தீர்களா? (உதாரணம் பரல்கள் - 337 தான் மொத்தம் - எல்லாருக்கும் இதுதான் - இறைவன் மிக சரியாகதான் எல்லோருக்கும் பங்கீடு செய்து இருக்கிறான்) அவன் வல்லமை முன்பு நம் அற்ப அறிவு, ஆற்றல், சக்தி, வாழ்வெல்லாம் எம் மாத்திரம்? இறை வழிபாடே பரிகாரம் " (உதாரணம் - ராகு -கேது பெயர்ச்சி பற்றிய வாத்தியார் அவர்களின் பதிவு) என்றெல்லாம் கூறி மீண்டும் மீண்டும் நம்மை இறைவனிடமே இந்த ஜோதிட கலை மூலம் இழுத்து செல்வார்... கலைகளும், கல்வியும் இறைவனை அடையும் அற்புத வழிகள். கலாப்யாம் என்றே சிவானந்தலஹரி தொடங்குகிறது...வள்ளுவரும் 2-ஆவது குறளிலேயே ஓங்கி சொல்லுவார் : " கற்றதனால் ஆய பயன் என் கொல் - வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்? " என்று.

    இந்த திருமுருகன் பதிவை படித்தவுடன் என் சிற்றறிவுற்க்கு தோன்றியது இதுதான். வாத்தியார் அவர்களுக்கு திருமுருகனிடம் உள்ள இந்த (எதையும் எதிர் பார்க்காத) உத்தம பக்திதான் அவருடைய எல்லை இல்லாத ஞானத்திற்கும், இனிக்கும் தமிழுக்கும், தனக்கு தெரிந்ததை எல்லோருக்கும் பகிர்ந்து கொள்ளும் மிக உயர்த்த பண்பிற்கும் காரணம்.ஓம் சரவணபவா !

    ReplyDelete
  12. //////Blogger R S Prasad said...
    Migha azhagaana, urukkamaana varligal...siram thaazhthi vanangugiren! rs prasad/////

    நானும் வருகிறேன். சிரம் தாழ்த்தி வணங்க வேண்டியது தண்டாயுதபாணியை!

    ReplyDelete
  13. /////Blogger kittuswamy palaniappan said...
    Ayyavukku APPAN MURUGAN kudave irukkattum AVAN kural ungalidamirunthu engalukku ketkattum.ellam PALANI APPAN seyal.kittuswamy/////

    என்னை எழுத வைப்பது அவன்தான்! நன்றி கிட்டுசாமி!

    ReplyDelete
  14. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,உண்மைதான் ஐயா.அவனை சரணாகதி அடைந்துவிட்டால்,அவன் பார்த்துக் கொள்வான் நமக்கு எது கொடுக்கவேண்டுமென்று.நன்றி./////

    நல்லது. நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  15. ////Blogger kmr.krishnan said...
    பழனியப்பா சரணம்! சரணம் !சரணம்!/////

    உங்களுடைய சரணங்களுக்கு பலன் உண்டு! நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  16. ////Blogger mohan said...
    ஆசிரியர் ஐயா வணக்கம்.
    "நாடிய பொருள் கைகூடும்
    ஞானமும் புகழும் உண்டாகும்"
    - கம்பன்.
    "வேண்டத்தக்கது அறிவோய் நீ
    வேண்டிய யாவும் தருவோய் நீ"
    - மாணிக்க வாசகர்.
    "கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
    கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா"
    - கண்ணதாசன்
    "இறைவனிடம் கையேந்துங்கள் -அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை
    பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்-அவன்
    பொக்கிஷத்தை மூடுவதில்லை"
    - நாகூர் அனிபா.
    " கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும் என்றார்...இயேசு
    தேடுங்கள் கிடைக்கும் என்றார்"
    ஆசிரியர் ஐயா, இவையெல்லாம் எங்களைப்போன்ற சாமானியர்களுக்காகச் சொன்னது.
    உங்களைப்போன்ற. நல்ல உள்ளங்களுக்கு, பிறர்க்கு உதுவும் ஞானவான்களுக்கு,
    தன் அறிவாற்றலை எல்லோரும் அறியும் வண்ணம் எளிய தமிழில்வடித்துத்தந்து. சேவை செய்த வள்ளல்களுக்கு
    "அவன்"
    நாடாமல், வேண்டாமல், கேட்க்காமல், ஏந்தாமல், தட்டாமல், தேடாமல் அருள் பாலிப்பான். காட்சி தருவான்.
    உள்ளும் புறமும்
    உம்மோடு முருகனிருக்க
    எள்ளும் கவலை ஏதுக்கையா
    துள்ளும் மயிலேறி
    தூயகை வேலோடு
    வள்ளிமணாளன்
    வருவான் இதுசமயம்.
    வாழ்க நீ எம்மான்.
    முருகு முன் நிற்க.
    அன்பன்,
    ந.மோகனசுந்தரம், திருநெல்வேலி./////

    உங்களுடைய மேலான அன்பிற்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி மோகனசுந்தரம்!

    ReplyDelete
  17. ////Blogger வேப்பிலை said...
    முருகா...
    முருகா.../////

    உருவாய் அருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே!

    ReplyDelete
  18. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    மனம் நிறைய பழனி ஆண்டவன் நினைவில் இருக்க வைத்தீர்கள்,ஐயா!
    அரஹரோஹரா!////

    நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  19. ///Blogger Chandrasekaran Suryanarayana said...
    சரணம் சரணம் சரவண பவ ஓம்
    சரணம் சரணம் ஷண்முகா சரணம் /////

    ஆமாம், நமக்கு சண்முகனே துணை! அவன் தாள் பணிவோம்! நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. ////Blogger Unknown said...
    வணக்கம் சார். உங்கள் உடல் நலம் என்று சிறப்பாக இருந்து எழுத்து பணி சிறக்க அப்பன் முருகன் என்றும் அருள் புரிவான்.சேலம் ஆண்டாள் ராஜசேகரன்////

    உங்களின் மேலான அன்பிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  21. ////Blogger Unknown said...
    உங்கள் பதிவுகளை Star 2015ல் காண ஆவலுடன் காத்திருக்கிறோம், கேலக்ஸியில் இட்ட பதிவுகளை மேல்நிலை பாடங்களை இதில் ஏற்றுங்கள் ஐயா. தாங்கள் உடல் நலம் பெற்று இதில் பதிவிடும் வரை,, அந்த வகுப்பில் கலந்து கொள்ள முடியாது போனவர்களுக்கு பழைய பாடங்களை படிக்க வாய்ப்பளியுங்கள் ஐயா, நன்றி .சேலம் ஆண்டாள்/////

    அது புத்தக வடிவில் வர இருக்கிறது. ஆகவே பொறுத்திருங்கள் சகோதரி!

    ReplyDelete
  22. //////Blogger R S Prasad said...
    வாத்தியார் ஐயாவின் இந்த அருமையான பதிவுக்கு நன்றி கூறும் வகையிலும், அவருடைய அன்பு சீடர்களுக்கு என் அன்பை தெரிவிக்கும் விதத்திலும் ஒரு சின்ன கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
    எல்லாம் விதியின்படியே நடந்தாலும், ஆணவம் முற்றிலும் அழிந்து, நெக்குருகி எம்பெருமான் முருகனை வேண்டி தொழுதால் வினை நீங்கும் - "அவன் கால் பட்டு அழிந்தது என் தலை மேல் அயன் (பிரமன்) கை எழுத்தே!" என்பது அருணகிரியார் வாக்கு.அவருடைய முதல் பாடலான "முத்தைத் தரு" ஒரு மிக சிறந்த காப்பு பாடலாகும். அனுகிரக மூர்த்தியான முருகப்பெருமானை இப்பாடலில் அருணகிரியார் சம்ஹார மூர்த்தியாகவே இறுதி வரிகளில் பாடி, ரட்சித்து அருள வேண்டுகிறார். இந்த ஒரு பாடலில் மட்டும் கந்தபெருமானும், அஷ்டபைரவரும் போற்றப்படுவது மிகச் சிறப்பு. இதை பக்தியுடன் ஓதி வந்தால் பகைவர் தொல்லை நீங்கும் என்பது பலரின் அனுபவம்.
    இது போலவே மூவர் தேவாரமும் வினை தீர்க்கும் மருந்தாய் அமைகின்றது.
    இதோ அந்த பதிகங்கள் பற்றிய விவரம்:
    கூற்றாயினவாறு விலக்ககலீர் (அப்பர் ஸ்வாமிகள்-வயிறு சம்மந்த நோய்கள் நீங்கும்)
    மந்திரமாவது நீறு (திருஞானசம்பந்தர் - இதை பக்தியுடன் ஓதி திருநீறு அணிய காய்ச்சல் ஜுரம் நீங்கும்)
    செய்யனே திரு ஆலவாய் மேவிய அய்யனே (திருஞானசம்பந்தர் - இதை பக்தியுடன் ஓதி வர பகைவர் தொல்லை நீங்கும்)
    இடரினும் தளரினும் (திருஞானசம்பந்தர் - இதை பக்தியுடன் ஓதி வர பண வரவு இறையருளால் அமையப்பெறும்)
    வாசி தீரவே (திருஞானசம்பந்தர் - இதை பக்தியுடன் ஓதி வர செய்தொழிலில் லாபம் இறையருளால் பெருகும்; வழக்கு-கோர்ட் விவகாரங்களிலிருந்து விடுபட இறைவன் துணை புரிவார்)
    வேயுறு தோளிபங்கன் ( திருஞானசம்பந்தர் - இதை பக்தியுடன் ஓதி வர கிரகங்கள் தரும் தீய பலன்களிலிருந்து விடுதலை பெறலாம்)
    பொன்செய்த மேனியினீர் (சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் - இதை பக்தியுடன் ஓதி வர இழந்த செல்வம்/பொருள் மீண்டும் இறையருளால் கிடைக்கும்)
    இந்த பதிகங்கள் உட்கருத்து, எந்த சூழ்நிலையில் இவை பாடப்பட்டன என்று அறிந்து (சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து என்பது மாணிக்கவாசகர் வாக்கு அல்லவா?) மனமுருகி பாராயணம் செய்தல் மிக நலம்.
    அவன் அருளாலே அவன் தாள் பணித்து எல்லோரும் சுகித்து இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
    அன்புடன்,
    அடியேன்
    பிரசாத்//////

    இறைவனை வணங்குபவர்களை எந்தப் பிரச்சினையும் பாதிக்காது. இது என் அனுபவம்!. உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. /////Blogger R S Prasad said...
    எனக்கு வாத்தியார் அவர்களின் பாடங்களிலேயே மிகவும் பிடித்த பாடம் அவர் கடல் அளவு விவரங்கள் எல்லாம் கொடுத்து விட்டு கடைசியில் "இறைவன் விளையாட்டை பார்த்தீர்களா? (உதாரணம் பரல்கள் - 337 தான் மொத்தம் - எல்லாருக்கும் இதுதான் - இறைவன் மிக சரியாகதான் எல்லோருக்கும் பங்கீடு செய்து இருக்கிறான்) அவன் வல்லமை முன்பு நம் அற்ப அறிவு, ஆற்றல், சக்தி, வாழ்வெல்லாம் எம் மாத்திரம்? இறை வழிபாடே பரிகாரம் " (உதாரணம் - ராகு -கேது பெயர்ச்சி பற்றிய வாத்தியார் அவர்களின் பதிவு) என்றெல்லாம் கூறி மீண்டும் மீண்டும் நம்மை இறைவனிடமே இந்த ஜோதிட கலை மூலம் இழுத்து செல்வார்... கலைகளும், கல்வியும் இறைவனை அடையும் அற்புத வழிகள். கலாப்யாம் என்றே சிவானந்தலஹரி தொடங்குகிறது...வள்ளுவரும் 2-ஆவது குறளிலேயே ஓங்கி சொல்லுவார் : " கற்றதனால் ஆய பயன் என் கொல் - வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்? " என்று.
    இந்த திருமுருகன் பதிவை படித்தவுடன் என் சிற்றறிவுற்க்கு தோன்றியது இதுதான். வாத்தியார் அவர்களுக்கு திருமுருகனிடம் உள்ள இந்த (எதையும் எதிர் பார்க்காத) உத்தம பக்திதான் அவருடைய எல்லை இல்லாத ஞானத்திற்கும், இனிக்கும் தமிழுக்கும், தனக்கு தெரிந்ததை எல்லோருக்கும் பகிர்ந்து கொள்ளும் மிக உயர்த்த பண்பிற்கும் காரணம்.ஓம் சரவணபவா !/////

    ஆமாம்! அதுதான் உண்மை! நம் அனைவரையும் இறைவன் சமமாகத்தான் படைத்திருக்கிறான். அனைவருக்கும் 337 மதிப்பெண்கள்தான்
    இறைவன் வேண்டுதல் வேண்டாமை உடையவன் என்பதை வள்ளுவரும் சொல்லியிருக்கிறார்!

    ReplyDelete
  24. ////Blogger Subathra Suba said...
    Vanakkam sir////

    உங்களின் வணக்கத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com