2.6.16

மரணம் எப்போது நிகழுமோ அப்போது நிகழ்ந்தே தீரும்.

மரணம் எப்போது நிகழுமோ அப்போது நிகழ்ந்தே தீரும். 

ஒருநாள் எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார்; ஆஹா,இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான்,(கருடபகவான் என்பது பகவான் விஷ்ணுவை சுமந்து செல்லும் கழுகு. இது கழுத்தில், வெள்ளை நிறமும், உடலில் ப்ரவுன் நிறத்திலும் இருக்கும்)  உடனடியாக அந்தக்குருவியை தூக்கிக் கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தது.அந்த பொந்தில் வசித்து வந்த ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த குருவியை விழுங்கிவிட்டது; குருவியை காப்பாற்ற நினைத்து அந்த குருவிக்கே எமனாகி விட்டோமே என்று கருடபகவான் குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதர்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது.

அப்போது எமதர்மரான கருடபகவானை கூர்ந்து கவனித்தார்.அதற்கு கருடபகவான், “நான் பகவான் விஷ்ணுவை முதுகில் சுமந்து செல்வதால் என்னை உம்மால் ஒன்றும் செய்ய முடியாது” என்று கோபத்தில் கத்தியது.

இதைக் கேட்ட எமதர்மராஜன் கருடபகவானிடம், “நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்; நான் அந்தக் குருவியை உற்று நோக்கக் காரணம், அந்த குருவி சில நொடிகளில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வசிக்கும் ஒரு பாம்பின் வாயால் இறக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது; அது எப்படி நிகழப் போகிறது? என்பதை யோசித்துக் கொண்டு இருந்தேன்;”

மரணம் எப்போது நிகழுமோ அப்போது நிகழ்ந்தே தீரும்.

அதனால் வாழ்வில் நடக்கப் போவதை குறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், செய்வதை திறம்பட  சிறப்பாய் செய்வோம்.

படித்ததில் பிடித்தது. மின்னஞ்சலில் வந்தது!

அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

  1. உண்மைதான் ஐயா!

    பல சமயங்களில் சண்டையை விலக்கச்சென்றவர் அடிபட்டு இறக்க நேர்ந்து விடுகிறது.மரணம் என்பதும், ஜனனம் என்பதும் நம் கையில் இல்லை.

    அநாயாச மரணம் கிடைக்கக் கொடுத்து வைக்க வேண்டும்.பட்டுக்கிடக்காமல் போக வேண்டும்.

    இந்தப்பேச்சு இளைஞர்களுக்கு பிடிக்காது. அவ்ரகளுக்கு ஏற்றபடி அனுஷ்கா கனுஷ்கா என்று ஒரு பதிவைப் போடுங்கள்.

    ReplyDelete
  2. Good morning sir.very very nice example story

    ReplyDelete
  3. விதி வலியது அய்யா.
    அன்புடன்
    அரசு

    ReplyDelete
  4. அருமையான கதை, நான் எப்போதும் மரணத்தை பற்றி தான் சிந்தித்து கொண்டுருப்பேன். அது எப்போது வரும் என்று!!

    ReplyDelete
  5. அன்பு அசிரியரே!,
    நல்ல கருத்து.
    "அதனால் வாழ்வில் நடக்கப் போவதை குறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், செய்வதை திறம்பட சிறப்பாய் செய்வோம்." ‍ சரியான‌ வார்த்தை. ஆனால் நடைமுறையில் கடைபிடுக்க தான் சிரமம். இறைவனை நினைத்து, விரும்பியது நடக்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்கையை நகர்த்துகிறேன்!.
    பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  6. குருவே வணக்கம்!
    "எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப்
    படுவதற்கு ஒன்றும் இல்லை" என்று தானே தாங்களும் தங்கள் profileல் எழுதியுள்ளீர்கள். இறைவன் விதித்து
    உள்ளதை யாரால் மாற்றமுடியும்?தாங்கள் பகிர்ந்துள்ள கதை அதை அப்படியே சித்தரிக்கிறது! ஆனால், கதையில் எமதர்மராஜனும் சிந்திக்கிறார் என்றால் அவரையும் மீறிய சக்தியால் அல்லவா, விதி தீர்மானிக்கப்படுகிறது!
    என்னே, இறைவன் திருவுளம்!!

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா,"மரணம் எப்போது நிகழுமோ அப்போது நிகழ்ந்தே தீரும்.

    அதனால் வாழ்வில் நடக்கப் போவதை குறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், செய்வதை திறம்பட சிறப்பாய் செய்வோம்".அதனால்தான் எட்டாம் பாவம் பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கவில்லையோ?.நன்றி.

    ReplyDelete
  8. அன்பு அசிரியர் அவர்களே,
    நான் ஜோதிடம் அறிந்த பிறகு எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்,
    நவக்கிரகங்களின் கதிர்வீச்சு, பூமியில் மட்டுமல்ல பிரபஞ்சத்தில் ஏற்படும் அனைத்து வினை மற்றும் விளைவுகளுக்கு காரணமாகிறது.
    ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நவக்கிரகங்களின் கதிர்வீச்சு, அக்கதிர்வீச்சு படும் இடங்களில் அதன் சக்திக்கு ஏற்ப வினை மற்றும் விளைவுகளை உருவாக்குகிறது.
    நவக்கிரகங்களின் இயக்கம் ஒரு குறிப்பிட்ட தாளகதியில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு அதன்படி நடைபெற்றுவருகிறது. எனவே மனிதனுக்கு நடைபெறுவது அனைத்துமே நவக்கிரகங்களின் தாளகதி இயக்கதின் விளைவுகள்தான்.
    நவக்கிரகங்களின் தாளகதி (விதி) நிர்ணயித்தவர் கடவுள் என்கிறோம். இதற்கான ஆதாரத்தை கடவுளின் அனுமதியில் (பாக்கியம் இருந்தால்) அவரவரே அறியவேண்டும். இதை அனைவரும் பார்க்கும் அல்லது அறியும் வகையில் பொருள்காட்சியாக நடத்த முடியாது.
    கடவுள் நிர்ணயித்த நவக்கிரகங்களின் தாளகதியை (விதியை) மாற்றவே முடியாது. அதனால் விதி வலியது என்கிறோம்.
    நமக்கு ஏதும் நடக்கவில்லை. நவக்கிரகங்களின் தாளகதியின்படி நாம் செயல்பட வைக்கப்படுகிறோம். நாம் வெறும் பொம்மை. நமது சிந்தனை கூட கடவுள் நிர்ணயித்த நவக்கிரகங்களின் தாளகதிதான்.
    சரியா அய்யா??
    SANTHANAM SALEM

    ReplyDelete
  9. ////Blogger kmr.krishnan said...
    உண்மைதான் ஐயா!
    பல சமயங்களில் சண்டையை விலக்கச்சென்றவர் அடிபட்டு இறக்க நேர்ந்து விடுகிறது.மரணம் என்பதும், ஜனனம் என்பதும் நம் கையில் இல்லை.
    அநாயாச மரணம் கிடைக்கக் கொடுத்து வைக்க வேண்டும்.பட்டுக்கிடக்காமல் போக வேண்டும்.
    இந்தப்பேச்சு இளைஞர்களுக்கு பிடிக்காது. அவரவர்களுக்கு ஏற்றபடி அனுஷ்கா கனுஷ்கா என்று ஒரு பதிவைப் போடுங்கள்./////

    ஆஹா... இளசுகளைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  10. ////Blogger Subathra Suba said...
    Good morning sir.very very nice example story////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  11. /////Blogger ARASU said...
    விதி வலியது அய்யா.
    அன்புடன்
    அரசு//////

    ஆமாம். விதி வலியது. வள்ளுவரும் அதைத்தான் வலியுறுத்திச் செல்லியிருக்கிறார்:

    “ஊழிற் பெருவலி யாவுள மற்றோன்று
    சூழினும் தான் முன்னுறும் - குறள் 380

    ReplyDelete
  12. ////Blogger C.Senthil said...
    அருமையான கதை, நான் எப்போதும் மரணத்தை பற்றி தான் சிந்தித்து கொண்டுருப்பேன். அது எப்போது வரும் என்று!!/////

    இனிமேல் அச்சிந்தனையை விடுங்கள். அது வரும்போது வரட்டும்

    ReplyDelete
  13. /////Blogger Selvam R said...
    அன்பு அசிரியரே!,
    நல்ல கருத்து.
    "அதனால் வாழ்வில் நடக்கப் போவதை குறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், செய்வதை திறம்பட சிறப்பாய் செய்வோம்." ‍ சரியான‌ வார்த்தை. ஆனால் நடைமுறையில் கடைபிடுக்க தான் சிரமம். இறைவனை நினைத்து, விரும்பியது நடக்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்கையை நகர்த்துகிறேன்!.
    பதிவுக்கு நன்றி!//////

    ஆமாம் வாழ்க்கையில் நம்பிக்கைகள்தான் முக்கியம்! நன்றி!

    ReplyDelete
  14. /////Blogger வரதராஜன் said...
    குருவே வணக்கம்!
    "எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப்
    படுவதற்கு ஒன்றும் இல்லை" என்று தானே தாங்களும் தங்கள் profileல் எழுதியுள்ளீர்கள். இறைவன் விதித்து
    உள்ளதை யாரால் மாற்றமுடியும்?தாங்கள் பகிர்ந்துள்ள கதை அதை அப்படியே சித்தரிக்கிறது! ஆனால், கதையில் எமதர்மராஜனும் சிந்திக்கிறார் என்றால் அவரையும் மீறிய சக்தியால் அல்லவா, விதி தீர்மானிக்கப்படுகிறது!
    என்னே, இறைவன் திருவுளம்!!/////

    சரிதான் நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  15. ///////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,"மரணம் எப்போது நிகழுமோ அப்போது நிகழ்ந்தே தீரும்.
    அதனால் வாழ்வில் நடக்கப் போவதை குறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், செய்வதை திறம்பட சிறப்பாய் செய்வோம்".அதனால்தான் எட்டாம் பாவம் பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கவில்லையோ?.நன்றி./////

    எட்டாம் பாவம் பற்றி மொத்தம் 12 அத்தியாயங்கள் எழுதியுள்ளேன். அவைகள் எல்லாம் ஸ்பெஷல் வகுப்பில் வெளியாகின. இங்கே வெளியிட்டால் திருட்டுப் போகும் அபாயம். ஆகவே இங்கே பதிவிடவில்லை. எனது ஜோதிட நூலின் 2ம் தொகுப்பில் அவைகள் வெளியாகும். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  16. /////Blogger slmsanuma said...
    அன்பு அசிரியர் அவர்களே,
    நான் ஜோதிடம் அறிந்த பிறகு எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்,
    நவக்கிரகங்களின் கதிர்வீச்சு, பூமியில் மட்டுமல்ல பிரபஞ்சத்தில் ஏற்படும் அனைத்து வினை மற்றும் விளைவுகளுக்கு காரணமாகிறது.
    ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நவக்கிரகங்களின் கதிர்வீச்சு, அக்கதிர்வீச்சு படும் இடங்களில் அதன் சக்திக்கு ஏற்ப வினை மற்றும் விளைவுகளை உருவாக்குகிறது.
    நவக்கிரகங்களின் இயக்கம் ஒரு குறிப்பிட்ட தாளகதியில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு அதன்படி நடைபெற்றுவருகிறது. எனவே மனிதனுக்கு நடைபெறுவது அனைத்துமே நவக்கிரகங்களின் தாளகதி இயக்கதின் விளைவுகள்தான்.
    நவக்கிரகங்களின் தாளகதி (விதி) நிர்ணயித்தவர் கடவுள் என்கிறோம். இதற்கான ஆதாரத்தை கடவுளின் அனுமதியில் (பாக்கியம் இருந்தால்) அவரவரே அறியவேண்டும். இதை அனைவரும் பார்க்கும் அல்லது அறியும் வகையில் பொருள்காட்சியாக நடத்த முடியாது.
    கடவுள் நிர்ணயித்த நவக்கிரகங்களின் தாளகதியை (விதியை) மாற்றவே முடியாது. அதனால் விதி வலியது என்கிறோம்.
    நமக்கு ஏதும் நடக்கவில்லை. நவக்கிரகங்களின் தாளகதியின்படி நாம் செயல்பட வைக்கப்படுகிறோம். நாம் வெறும் பொம்மை. நமது சிந்தனை கூட கடவுள் நிர்ணயித்த நவக்கிரகங்களின் தாளகதிதான்.
    சரியா அய்யா??
    SANTHANAM SALEM///////

    சரிதான் நண்பரே!உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com