17.6.16

மதமாற்றங்கள் எப்படி நடக்கின்றன?


மதமாற்றங்கள் எப்படி நடக்கின்றன?

ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு நரிக்கூட்டம் வாழ்ந்து வந்தது.

அதில் ஒரு நரி ஒரு நாள் காட்டை ஒட்டி இருந்த திராட்சை தோட்டத்திற்குள் புகுந்து திராட்சை பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

அப்பொழுது அங்கு வந்த தோட்டக்காரன் நரியைப் பிடித்து அதன் வாலை வெட்டி விட்டான்.

வாலில்லாமல் நரிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. "அடடா இனிமே நம்மை நம்ம கூட்டத்தில் சேர்க்க மாட்டாங்களே. என்ன செய்யலாம்.....???" என்று யோசித்து கொண்ருக்கும் போது எதிரில் அதோட கூட்டத்தை சேர்ந்த நரி ஒன்று வந்தது.

அது வால் இல்லாத நரியைப் பார்த்ததும் அடக்க முடியாம விழுந்து விழுந்து சிரித்தது.

என்னடா இது அசிங்கமா போச்சேன்னு யோசித்த முதல் நரிக்கு ஒரு யோசனை வந்தது.

உடனே பதிலுக்கு அதுவும் விழுந்து புரண்டு சிரித்தது.

உடனே இரண்டாவது நரி "ஏன்டா நீ என்ன லூசா" என்று கேட்டது.

உடனே இது "அடேய் முட்டாப்பயலே என் வாலை வெட்டினவுடனே கடவுள் எனக்கு தரிசனம் தந்தாரு. ஆனா அது தெரியாம நீ என்னை கிண்டல் பண்ற" என்று சொல்லியது.

இரண்டாவது நரி "அது எப்படின்னு?" என்று கேட்க, வால் அறுபட்டிருந்த நரி, "உன் வாலையும் வெட்டினா கடவுள் தெரிவார்” என்றது.

”ஆனால் நீயா வெட்டக்கூடாது. அதோ அந்த திராட்சை தோட்டத்தில போய் திராட்சையை சாப்பிட்டின்னா அந்த தோட்டக்காரன் பிடிச்சி
உன் வாலை வெட்டி விடுவான். அப்ப உன் முன்னாடி கடவுள் தோன்றுவார்" என்று கூறியது.

உடனே இரண்டாவது நரி அதே மாதிரி செய்யப் போய் தோட்டக்காரன் வாலை வெட்டி விட்டுவிட்டான்.

ஆனால் கடவுள் வரவில்லை. ஏமாந்த நரி கடும் கோபத்துடன் முதல் நரியோடு சண்டை போட்டது.

ஆனால் முதல் நரி அமைதியாக "இங்க பாரு இப்ப உனக்கும் வால் இல்லை. எனக்கும் வால் இல்லை. இரண்டு பேரையும் கூட்டத்துல சேர்க்க மாட்டாங்க. அதனால நம்மாள முடிஞ்ச அளவுக்கு வால் இல்லாத நரிக்கூட்டத்தை உருவாக்குவோம்" என்று சொன்னது.

இப்படித்தான் மதவாதிகள் பிறர் வழிபடுவதை சாத்தான் என்றும், தாங்கள் கும்பிடுவதுதான் கடவுள் என்றும் சொல்லி மதம் மாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

நம்பிப் போன மக்களும் திரும்பி வந்தால் அவமானப்பட்டு விடுவோம் என்று அவங்களால் முடிந்த அளவிற்குக் கூட்டத்தைச் சேர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

அந்த வேலைதான்  பல நாடுகளில், பல ஊர்களில் வெகு விமரிசையாக நடந்தேறிக் கொண்டு இருக்கிறது ஆன்மீக மார்க்கதில்.......!!!

படித்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்

அன்புடன்,
வாத்தியார்
---------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

  1. வணக்கம் குருவே!
    நிதர்சனமான உண்மை!வாலறுந்த நரிக்கு எப்படி குறுக்கு வழியில் தன்னையும் காத்து, தன்னுடன் ஒரு கூட்டத்தையும் சேர்க்க நினைத்ததோ, அதுபோலத் தான் சமூக விரோதிகளும் வளர்கிறார்கள்!அவர்களால் பொதுவாழ்வில் நேர்மையான வாழ்க்கை
    யை ஏற்க இயலாது என்று தெரிந்தபின் எப்படியேனும் வாழ்வோம் எனத் தீர்மானித்து, இவர்கள் "தாதா" க்களாகி, தங்களுடன் ஒரு உதவாக்கரை கும்பலையும் சேர்க்கிறார்கள்!மதமாற்றம்,குழந்தை கடத்தல்,பெண்களைக் கடத்துதல் போன்ற சகல தீய வழிகளும் இத்தீயவர்களால் தானே நடக்கிறது?!

    ReplyDelete
  2. இந்து கோயில்களில் இருந்து மொகளாயன், ஆங்கிலேயன், போர்ச்சுகிசிய்சன், பாரசீகன், ஆரியன்,.... என திருடியவர்கள் பட்டியல் இருக்க, செருப்பு திருடு போனதால் மதம் மாறினானாம். செருப்பு திருடியவன் யாராக இருக்கும் என்பதை உங்கள் வியூகத்திற்கு விட்டுவிடுகின்றேன்.

    ReplyDelete
  3. கல்லூரிப் படிப்புக்காக கிறிஸ்துவர்களாக மாற்றப்பட்ட/மதம் மாறிய பிராமணர்கள் உண்டு. இன்றும் கூட திருச்சியில் கிறிஸ்துவ பிராமணர் தெரு உள்ளதாம்.

    அரபு நாடுகளுக்குச் செல்ல முஸ்லிம்களாக மாறிய இந்துக்கள் உண்டு.பலதார மணம் புரிந்து கொண்டு இந்துச் சட்டத்தில் இருந்து தப்பிக்க முஸ்லிமாக மாறியவர் உண்டு.

    எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்துபவன் இந்து மட்டுமே.ஏனைய மதங்களில் இருந்து மதம் மாறுவது தற்கொலைக்கு ஒப்பாகும்.

    ReplyDelete
  4. உண்மைதான் . அதுமட்டுமில்லாமல் தூய்மையையும்
    ஒழுக்க நெறிகளையும் கடைப்பிடிக்க சொன்ன சாஸ்திரங்களை, என்னவோ மனிதர்களுக்கு ஒவ்வாத
    செயல்களை சொன்னது போல் பரப்புகிறார்கள்.

    ReplyDelete
  5. அன்பு வாத்தியாரே!,

    நல்ல பொருத்தமான‌ உதாரண கதை. எடுத்துக்காட்டு உவமையணி போல் இருந்தது ஐயா. இந்த மாறி நல்ல கதை சொல்லி பாடம் நடத்தும் உங்களைப் போல நல்ல தமிழ் ஆசிரியர் எனக்கு சிறு வயசில் இல்லை என்ற ஏக்கத்தை உருவாக்குகிறீர்..! உங்கள் பணிக்கு நமசிவாய அருள் புரியட்டும். நன்றி எங்கள் இனையதள‌ தமிழ் ஐயா..! (சுப்பையா வீரப்பன் அவர்களே!)

    பன்னீர்செல்வம்.இரா

    ReplyDelete
  6. Very nice & great story! sir. Even god came to here telling this one also how much people will accept this.

    ReplyDelete
  7. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    நிதர்சனமான உண்மை!வாலறுந்த நரிக்கு எப்படி குறுக்கு வழியில் தன்னையும் காத்து, தன்னுடன் ஒரு கூட்டத்தையும் சேர்க்க நினைத்ததோ, அதுபோலத் தான் சமூக விரோதிகளும் வளர்கிறார்கள்!அவர்களால் பொதுவாழ்வில் நேர்மையான வாழ்க்கையை ஏற்க இயலாது என்று தெரிந்தபின் எப்படியேனும் வாழ்வோம் எனத் தீர்மானித்து, இவர்கள் "தாதா" க்களாகி, தங்களுடன் ஒரு உதவாக்கரை கும்பலையும் சேர்க்கிறார்கள்!மதமாற்றம்,குழந்தை கடத்தல்,பெண்களைக் கடத்துதல் போன்ற சகல தீய வழிகளும் இத்தீயவர்களால் தானே நடக்கிறது?!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  8. ////Blogger SELVARAJ said...
    இந்து கோயில்களில் இருந்து மொகளாயன், ஆங்கிலேயன், போர்ச்சுகிசிய்சன், பாரசீகன், ஆரியன்,.... என திருடியவர்கள் பட்டியல் இருக்க, செருப்பு திருடு போனதால் மதம் மாறினானாம். செருப்பு திருடியவன் யாராக இருக்கும் என்பதை உங்கள் வியூகத்திற்கு விட்டுவிடுகின்றேன்./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி செல்வராஜ்!

    ReplyDelete
  9. ////Blogger kmr.krishnan said...
    கல்லூரிப் படிப்புக்காக கிறிஸ்துவர்களாக மாற்றப்பட்ட/மதம் மாறிய பிராமணர்கள் உண்டு. இன்றும் கூட திருச்சியில் கிறிஸ்துவ பிராமணர் தெரு உள்ளதாம்.
    அரபு நாடுகளுக்குச் செல்ல முஸ்லிம்களாக மாறிய இந்துக்கள் உண்டு.பலதார மணம் புரிந்து கொண்டு இந்துச் சட்டத்தில் இருந்து தப்பிக்க முஸ்லிமாக மாறியவர் உண்டு.
    எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்துபவன் இந்து மட்டுமே.ஏனைய மதங்களில் இருந்து மதம் மாறுவது தற்கொலைக்கு ஒப்பாகும்./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. /////Blogger GAYATHRI said...
    absolutely right, Sir./////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  11. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா./////

    வணக்கம் ஆதித்தன்!

    ReplyDelete
  12. /////Blogger ambharish gopalan said...
    உண்மைதான் . அதுமட்டுமில்லாமல் தூய்மையையும்
    ஒழுக்க நெறிகளையும் கடைப்பிடிக்க சொன்ன சாஸ்திரங்களை, என்னவோ மனிதர்களுக்கு ஒவ்வாத
    செயல்களை சொன்னது போல் பரப்புகிறார்கள்.//////

    உண்மைதான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. /////Blogger Selvam R said...
    அன்பு வாத்தியாரே!,
    நல்ல பொருத்தமான‌ உதாரண கதை. எடுத்துக்காட்டு உவமையணி போல் இருந்தது ஐயா. இந்த மாறி நல்ல கதை சொல்லி பாடம் நடத்தும் உங்களைப் போல நல்ல தமிழ் ஆசிரியர் எனக்கு சிறு வயசில் இல்லை என்ற ஏக்கத்தை உருவாக்குகிறீர்..! உங்கள் பணிக்கு நமசிவாய அருள் புரியட்டும். நன்றி எங்கள் இனையதள‌ தமிழ் ஐயா..! (சுப்பையா வீரப்பன் அவர்களே!)
    பன்னீர்செல்வம்.இரா//////

    நல்லது. உங்களின் பின்னூட்டட்திற்கு நன்றி பன்னீர்செல்வம்!

    ReplyDelete
  14. //////Blogger C.P. Venkat said...
    Very nice & great story! sir. Even god came to here telling this one also how much people will accept this./////

    உண்மைதான். நன்றி வெங்கட்!

    ReplyDelete
  15. அகங்காரம் அழித்தலே ஆன்மீகம். நல்ல கதைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  16. /////Blogger kmr.krishnan said...
    அகங்காரம் அழித்தலே ஆன்மீகம். நல்ல கதைக்கு நன்றி ஐயா////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com