13.6.16

என்னைக் கவர்ந்த வாசகங்கள்!

என்னைக் கவர்ந்த வாசகங்கள்!!!

*பேசி தீருங்கள்.
         பேசியே வளர்க்காதீர்கள்.

*உரியவர்களிடம்  சொல்லுங்கள்.
     ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

*நடப்பதைப் பாருங்கள்.
     நடந்ததைக்  கிளறாதீர்கள்.

*உறுதி காட்டுங்கள்.
  பிடிவாதம்  காட்டாதீர்கள்.

*விவரங்கள் சொல்லுங்கள்.
     வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.

*தீர்வை விரும்புங்கள்.
      தர்க்கம் விரும்பாதீர்கள்.

*விவாதம்  செய்யுங்கள்.
     விவகாரம் செய்யாதீர்கள்.

*விளக்கம் பெறுங்கள்.
      விரோதம் பெறாதீர்கள்.

*பரிசீலனை செய்யுங்கள்.
     பணிந்து போகாதீர்கள்.

*சங்கடமாய் இருந்தாலும்
     சத்தியமே பேசுங்கள்.

*செல்வாக்கு இருந்தாலும்
    சரியானதைச் செய்யுங்கள்.

*எதிர் தரப்பும் பேசட்டும்.
  என்னவென்று கேளுங்கள்.
  எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.

*நேரம் வீணாகாமல்
    விரைவாக முடியுங்கள்.

*தானாய்த்தான் முடியுமென்றால்,
     வேறு வேலை பாருங்கள்.

*யாரோடும் பகையில்லை என்பது போல் வாழுங்கள்....

மின்னஞ்சலில் வந்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9 comments:

  1. குருவே வந்தனம்!
    அருமையிலும் அருமை!முதல் எட்டும் சுட்டி! மற்றவை சுருக்!
    "யாரோடும் பகையில்லை என்பது போல் வாழுங்கள்"... மிக அருமை!

    ReplyDelete
  2. ///Blogger Nagendra Bharathi said...
    அருமை////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  3. /////Blogger வரதராஜன் said...
    குருவே வந்தனம்!
    அருமையிலும் அருமை!முதல் எட்டும் சுட்டி! மற்றவை சுருக்!
    "யாரோடும் பகையில்லை என்பது போல் வாழுங்கள்"... மிக அருமை!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா, அனைத்து வாசகங்களுமே சிறப்பானவைதான்.கடைபிடித்தால் வாழ்க்கையில் பெரும்பாலான பரச்சினைகள் தீர்ந்துவிடும்.நன்றி.

    ReplyDelete
  5. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா, அனைத்து வாசகங்களுமே சிறப்பானவைதான்.கடைபிடித்தால் வாழ்க்கையில் பெரும்பாலான பரச்சினைகள் தீர்ந்துவிடும்.நன்றி./////

    நல்லது. நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  6. ////Blogger ambharish said...
    அருமையான பதிவு சார் /////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. All the sentances are good,nice and true.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com