9.5.16

நகைச்சுவை: மாற்றங்கள் தவிர்க்க முடியாது!


நகைச்சுவை: மாற்றங்கள் தவிர்க்க முடியாது!

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்!

திருமணமான புதியதில் பெண்கள்...
========================================
1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

சிறிது ஆண்டுகள் கழித்து
=======================
1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில்
வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா??
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க.

பல ஆண்டுகள் கழித்து
=====================
1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.
4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க. புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்டபோது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.

எல்லா பெண்களும் இப்படியல்ல! சில பெண்கள் மட்டும்தான் இப்படி. ஆகவே யாரும் சண்டைக்கு வரவேண்டாம்!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

  1. கடைசியில் வாத்தியார் Great Escape ஆக ஒரு வரியை சேர்த்து விடுகிறார்.

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,ஆண்களும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம் ஆசிரியர்,

    இந்த சொல்லப் பட்ட உணர்வகள் அனைத்து நடைமுறையில் நடப்பவைத் தான். மிக சரி. பதிவிட்டவைக்கு நன்றி.! கணவன் பாடு ‍ அம்மாவுக்கும், மனைவிக்கு இடையே மாட்டிக் கொள்வதும்; அக்கா, தங்கை, மனைவிக்கிடையே மாட்டிக் கொள்வது. அது என் வாழ்க்கையில் நல்லா விளையாடுது. நான் சிம்ம லக்கிணம், என்னுடைய 7ம் வீட்டு சனி 12ம் இடத்தில். 2ம் இடத்து புதன் 3ம் வீட்டில் நீசம். 3ம் வீட்டின் சுக்கிரன் 2ம் வீட்டில் நீசம். விதிக்கப்பட்டட்து அவ்வள‌வு தான். ஆனால் உங்கள் தொகுப்பு நகைச்சுவையாக‌ இருந்தது.

    நன்றி,
    பன்னீர்செல்வம்

    ReplyDelete
  4. வணக்கம் குருவே!
    சூப்பர்!

    ReplyDelete
  5. புடவையையும் பெண்களையும் இணைத்து சொன்னது
    புதிர் அல்ல.. இந்த ஆண்டின் ஜோக்...

    பெண்கள் இப்போதெல்லாம் சேலை கட்டுவதில்லை..
    பெண்கள் பலருக்கு இப்போ வெட்க படவே தெரிவதில்லை..

    ரொம்ப வெட்கமா இருக்கு இன்பவர் நம்ம
    ரோமியோ தான்.. :)

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா,
    இன்றைய பதிவை படித்தபோது எனக்குள் சிரிப்பு தோன்றவில்லை. இதை நான் என் உறவினர்களிடத்தில் கண்டிருக்கிறேன். சில சமயங்களில் என் அம்மாவிடம் இருந்தேகூட. இதற்கு காரணமாக நான் கருதுவது, புரிதலே ஆகும். கணவரை உதாசினப்படுத்துவதல்ல பெண்களின் நோக்கம். அவர்கள் ஒன்றாக வாழ்ந்து நன்கு புரிந்து கொண்டுவிட்டார்கள்.

    ReplyDelete
  7. Nice Jokes!
    Howz ur Health ?
    When starts the analyze of Personal Charts?
    Health is First, Take Care!

    ReplyDelete
  8. ////Blogger SELVARAJ said...
    கடைசியில் வாத்தியார் Great Escape ஆக ஒரு வரியை சேர்த்து விடுகிறார்./////

    பெரும்பாலும் அத்தனை பேர்களும் அப்படி இருப்பதில்லை. அதற்காகத்தான் அந்த வரி!

    ReplyDelete
  9. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,ஆண்களும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.நன்றி//////.

    மாற்றங்கள் என்பது இரு பலருக்கும் உண்டு அல்லவா? ஆகவே நீங்கள் சொல்வது சரிதான்! நன்றி!

    ReplyDelete
  10. /////Blogger Selvam R said...
    வணக்கம் ஆசிரியர்,
    இந்த சொல்லப் பட்ட உணர்வகள் அனைத்து நடைமுறையில் நடப்பவைத் தான். மிக சரி. பதிவிட்டவைக்கு நன்றி.! கணவன் பாடு ‍ அம்மாவுக்கும், மனைவிக்கு இடையே மாட்டிக் கொள்வதும்; அக்கா, தங்கை, மனைவிக்கிடையே மாட்டிக் கொள்வது. அது என் வாழ்க்கையில் நல்லா விளையாடுது. நான் சிம்ம லக்கிணம், என்னுடைய 7ம் வீட்டு சனி 12ம் இடத்தில். 2ம் இடத்து புதன் 3ம் வீட்டில் நீசம். 3ம் வீட்டின் சுக்கிரன் 2ம் வீட்டில் நீசம். விதிக்கப்பட்டட்து அவ்வள‌வு தான். ஆனால் உங்கள் தொகுப்பு நகைச்சுவையாக‌ இருந்தது.
    நன்றி,
    பன்னீர்செல்வம்/////

    நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  11. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    சூப்பர்!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  12. /////Blogger வேப்பிலை said...
    புடவையையும் பெண்களையும் இணைத்து சொன்னது
    புதிர் அல்ல.. இந்த ஆண்டின் ஜோக்...
    பெண்கள் இப்போதெல்லாம் சேலை கட்டுவதில்லை..
    பெண்கள் பலருக்கு இப்போ வெட்க படவே தெரிவதில்லை..
    ரொம்ப வெட்கமா இருக்கு இன்பவர் நம்ம
    ரோமியோ தான்.. :)//////

    உண்மைதான். அத்துடன் பெண்களுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பதும் இப்போது இல்லை!

    ReplyDelete
  13. ///////Blogger selva kumar said...
    வணக்கம் ஐயா,
    இன்றைய பதிவை படித்தபோது எனக்குள் சிரிப்பு தோன்றவில்லை. இதை நான் என் உறவினர்களிடத்தில் கண்டிருக்கிறேன். சில சமயங்களில் என் அம்மாவிடம் இருந்தேகூட. இதற்கு காரணமாக நான் கருதுவது, புரிதலே ஆகும். கணவரை உதாசினப்படுத்துவதல்ல பெண்களின் நோக்கம். அவர்கள் ஒன்றாக வாழ்ந்து நன்கு புரிந்து கொண்டுவிட்டார்கள்./////

    அப்படியா? நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சிவகுமார்!

    ReplyDelete
    Replies
    1. சிவகுமார் என்றழைத்து விட்டீர்கள். எனது பெயர் செல்வகுமார்.

      Delete
  14. /////Blogger Rajah M E said...
    Nice Jokes!
    Howz ur Health ?
    When starts the analyze of Personal Charts?
    Health is First, Take Care!/////

    இப்போது பரவாயில்லை. அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து துவங்க இருக்கிறேன். அன்புடன் பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  15. /////Blogger selva kumar said...
    சிவகுமார் என்றழைத்து விட்டீர்கள். எனது பெயர் செல்வகுமார்.//////

    நல்லது. கவனப் பிழை. இனி கவனித்து செல்வகுமார் என்றே அழைக்கிறேன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com