4.5.16

மண்ணும் மனிதனும்

மண்ணும் மனிதனும்

"தத்துவமசி" என்பது இயற்கை இயங்கும் விதம், அனைத்தின் உயிர் இறைவன் என்பதன் அறிவு விளக்கம்......

ஆன்மிக்தில் விஞ்ஞானமும், மெய் ஞானமும்…...காண்பதே மனிதனும் இயற்கையும் இனைந்து, சுகமாக வாழும் கலையாகும்

இறைவனும்… ஓர் அற்புத ஆன்மிக பட்டறிவு(அனுபவ அறிவே இறைவன்......அறிவு கோட்பாடு (the theory of intelligence)
"எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"- தமிழ் மறை
பிரம்ம ஞானம்..! ) na tural philosophy

குரு: உன் பெயர் என்ன?

சீடன்: என் பெயர் செந்தில்.

குரு: செந்தில் எனும் பெயர் எதற்கு வைத்திருக்கிறது?

சீடன்: அப்பெயர் இவ்வுடலுக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

குரு: உடல் என்ற பெயர் நிலையானதா?

செந்தில் எனும் பெயர் நிலையானதா?

சீடன்: .இந்தத் தேகத்துக்கு வேறு பெயரும் வைக்கலாமாகையால் செந்தில் எனும் பெயர் நிலையற்றது. உடல் எனும் பெயர் நிலையானது.

குரு; சரி ! கை வேறு, கால் வேறு, தலை வேறு, முண்டம் வேறு ஆகப் பிரித்து விட்டால் உடலென்ற பெயரேது? உடல் எனும் பெயரும் நிலை இல்லையே?

சீடன்; ஆம்! குருவே! அப்போது உறுப்புகாளான கை, கால் எனும் பெயர் தான் மிஞ்சி நிற்கிறது.

குரு: உறுப்புகளான கை, கால் தலை, முண்டம் என்கிற பெயராவது நிலையானதா? உறுப்புக்களைக் கண்ட துண்டமாகச் சிதைத்து தூள் தூளாக்கிவிட்டால் குவித்தால் என்ன பெரிட்டழைப்போம்? மாமிசப் பிண்டம் என்று தானே கூறுவோம்?

சீடன்: ஆம் ஐயனே! என்ன ஆச்சரியம்! எல்லாம் மாமிசப் பிண்டம்!

குரு: சரி இந்த மாமிசப் பிண்டத்தை மண்ணில் புதைத்து விட்டு, ஒரிரு ஆண்டுகள் சென்ற பின் பார்க்க அங்கே என்ன இருக்கும்?

சீடன்; சிவகுருவே! அங்கு மண் தான் இருக்கும். செந்தில் எனும் நான், உடலாகிப் பின் உறுப்பாகி, மாமிசப் பிண்டமாகி முடிவில் மண்ணாகி விட்டேனே. எல்லாம் மண்! மண்! மண்ணே,..!

குரு: உடலாகிய மண் எங்கே இருக்கிறது?

சீடர்: பூமியாகிய மண்ணின் மேல் மாமிசப் பிண்டமான மண் இருக்கிறது.

குரு; இந்த மாமிசப் பிண்டமான மண், எங்கிருந்து வந்தது? இந்த மண் புதய மண்ணா? பழைய மண்ணா?

குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனதுற்ற தெல்லாம் வனைவன்
குசவன் போல் எங்கள் கோன்(இறைவெளி) நந்தி(மனம்) வேண்டில்
ஆசையில் உலகம் அது விது வாமே-திருமூலன்

சீடன்: பழைய மண் என்று தான் சொல்ல வேண்டும், புது மண் என்றால் அது எவ்விடத்திருந்து வந்தது? எனும் வினா எழும், அவ்விடத்தைச் சொல்ல வேண்டும்? முடியுமா?

குரு; பழைய மண் என்பது சரியே! இந்த மண் எப்படித் தோன்றிக் கொண்டிருந்தது? எவனித்துப் பதில் சொல்- படி

சீடர்; இந்த மண்தான் மாமிசப் பிண்டமான என் உடலாக இருந்தது, மாமிசம் முதலானவைகளைத் தவிர, உடம்பென்பது கிடையாது, அப்படியே தான்.. மண்ணைத்தவிர, மாமிசம் மிண்டம் முதலானவை கிடையாது, செந்தில்- உடம்பு- உறுப்புகள்- மாமிசப் பிண்டம் ஆகிய எல்லாம் வெறும் தோற்றம் மாத்திரமே தான். இருப்பது மண்ணே! ஆ!! இவ்வித ஆராய்ச்சியால் மண்ணே ஆகிவிட்டேன், .இவ்வுடல் மண்ணிலிருந்து உண்டாகி முடிவில் மண்ணே ஆகி விடுகிறது. என்னே மாயம்!

குரு; அப்படியானால் முன்னும் மண்ணே ! பின்னும் மண்ணே! இடைக் காலத்தில் கொஞ்ச காலம் உடலாகத தானே இருந்தது?

சீடர்; ஆம்! சிவகுருநாதா! என்னே என் அறியாமை!

குரு; மண் என்பது, இந்த ஓர் உடல் தானா? அல்லாது? எல்லா உடல்களும் தானா? மக்கள், விலங்கு, தாவரம் ஆகிய எல்லாச் சீவர்களும் தானா?

சீடர்; எழுவகைத் தோற்றங்களான மக்கள்-மிருகம், பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் யாவும் அவ்வண்ணமே மண்தான், இதுவுமின்றி தங்கம், இரும்பு முதலான கனிம பொருள்களும், நவமணிகளும் மற்றவைகளும் மண்ணாகவே ஆகிவிடுகிறது. மண்ணைத் தவிரவேறில்லை, இடையிலே பலவகைத் தோற்றங்களாக உண்டாகி யிருக்கிறதே! இந்தப்படியாக எல்லாமே தோற்றம் மாத்திரமாக இருக்க இவைகளைப் பொருள்கள் என மதித்து மயங்கி, மண்ணான உடல் முதலானவைகளை ‘நான்” என்றும்- எனது என்றும் மதித்து ஆணவத்தால்(அறியாமை) மதி மயங்கினேனே! எல்லாம் மண்ணே!

“மண்ணாசைப் பட்டேனை மண்ணுண்டு போட்டதேடா”-பட்டினத்தார்”

குரு: மாணவா! இதோடு நின்று விடாதே! இன்னும் கேள், இந்த பூமியாகிய மண்: ஆகாய வெளியில் மிதந்து கொண்டிருக்கும் மண். கடினமானதா? பிரிக்கக் கூடாதத? பிரிக்கக் கூடிய உதிரி மண்ணாக உள்ளதா?

சீடர்: இந்தப் பூமி உதிரியானது தான், மேலும் அணு அணுவான சேர்க்கையாகவும் இந்தப் பூமி உதிரி மண்ணாக உள்ளதா?

குரு: சரிதான். இந்த பூமியாகிய மண்ணை அணுவாக்கி, மேலும் நுண்ணிய அணுவாக்கி நசுக்க முயன்றால் அது நீர் அணுக்காளாகும். அந்த நீர் அணுக்களையும். நுண்ணிய அணுவாக்கி நசித்தால் நெருப்பு அணுக்களாகும். அந்த நெருப்பணுக்களையும் நுண்ணிய அணுக்களாக நசிக்குங்கால் வாயு அணுக்களாகும். அந்த வாயு அணுக்களையும் நுண்ணிய அணுக்களாகி நசித்தால் அது ஆகாயம் ஆகும். இந்த ஆகாய வெளியையும், சூக்கும அறிவினால் நசிப்பிக்கச் செய்யுங்கால் சூன்யாகாசம் ஆகி, அதுவும் நுண்ணணுவுக்கு அப்பால் நசிப்பிக்கும் போது “பரவெளி ஆகும். ஆகாய வெளி –சூன்யவெளி- பரவெளி –ஆகிய முப்பாழும் கடந்த அப்பாலான, எல்லையற்ற (அகண்ட) பெருவெளியே –வெட்டவெளி – சித்தர்கள், ஞானிகள் சொன்ன ஏக சிவமே உலகம்..! உணர்தால், நோய்கள், முதுமை, மரணமில்லா பேரின்பம் தான்…

சிந்திக்க இதுதான் நேரம்…

அண்டம் என்பது நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் குறிக்கின்ற ... இந்த கோட்பாட்டுக்கு big bang theory (பேரிடித் தோற்றக் கோட்பாடு) என்று.... தொகுப்பாக உள்ளது; பல அணுக்கள் சேர்ந்து நட்சத்திரங்களாகவும் பல...

வெளி மற்றும் காலம் சார்ந்த நீள அளவீடுகள் போதுமான அளவு ...

அண்டம் என்பது நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் குறிக்கின்ற ஒரு சொல்லாகும்.

இந்த நிலவுருண்டை (பூமி), நிலவு, வானம், சூரியன், சூரியனைச் சுற்றி வரும் கோள்கள், விண் மீன்கள், விண் மீன்களுக்கு இடையுள்ள விண் துகள்கள் (cosmic dust), அவற்றின் இயக்கம், இவற்றை எல்லாம் சூழ்ந்துள்ள வெட்ட வெளி (empty space), கண்ணுக்குத் தெரியாத தொலைவில் உள்ள விண்மீன்களுக்கும் அப்பால் உள்ள விண்மீன் குழுக்கள் (galaxy ) ஆக்கியன அனைத்தும் அண்டம் என்ற சொல்லில் அடங்கும்.

இத்துடன் காலம் என்ற கருத்தும் அது தொடர்பான முறைமைகளும் (laws ) இதில் அடங்கும்.

big bang theory (பேரிடித் தோற்றக் கோட்பாடு
“வெங்காய தத்துவம்” life means onion..! The inner meaning is spirituality..!

"உண்மையை உணர்ந்து கொள்"

"எல்லாம் சிவமயம்"
---------------------------------
படித்ததில் பிடித்தது

அன்புடன்
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. வணக்கம் குருவே!
    மாயை எனும் திரையை விலக்க இயலாமல் அம்மாயையில் சிக்குண்டு, அகப்பட்டவர்கள் தானே நாம் அனைவரும்.வேத விற்பன்னர்களாலும
    சித்தர்களாலும்,முக்காலமும் அறிந்த ஞானிகளாலும் பல்வேறு விதமாகச் சொல்லப்பட்டது தான் இம்மானிட உடலும், உலக வாழ்வும் நிலையற்றது என்பது! ஆனால், எல்லோரும் புரிந்து, திருந்த முடியுமா, என்ன?!ஊஹும், அவ்வளவு எளிதன்று! படிக்கும்போது பரிந்தது போல இருக்கும், ஆனால் சில நொடிகளுக்குப் பின் அவை மறக்கடிக்கப்படும். அதுதான் மாயை, நம்மைத் திருந்த விடாது!?
    வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும், அதுதான் நடப்பு...உண்மையும் கூட!!

    ReplyDelete
  2. Respected Sir,

    Late post. But required this moment.

    Please post an article related to Soul and its contents.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. வணக்கம் குருஜி!. அடடே!. என்னே ஆச்சரிய்ம்!. விஞ்ஞானமும், மெய் ஞானமும், big bang theory (பேரிடித் தோற்றக் கோட்பாடு) எல்லாம் ... ஆராய்ச்சி அருமை.. பாராட்டுகள்!
    எல்லாமே மண் தான் என்ற விளக்கம் அருமை.. வாழ்த்துகள்.

    கேலக்‌ஷி வகுப்பிற்கு இரண்டொரு முறை மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். பதில் ஒன்றும் இல்லை. ஒரு வாய்ப்பு கொடுங்கள் என் வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  4. அருமை வாத்தியாரே

    ReplyDelete
  5. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    மாயை எனும் திரையை விலக்க இயலாமல் அம்மாயையில் சிக்குண்டு, அகப்பட்டவர்கள் தானே நாம் அனைவரும்.வேத விற்பன்னர்களாலும
    சித்தர்களாலும்,முக்காலமும் அறிந்த ஞானிகளாலும் பல்வேறு விதமாகச் சொல்லப்பட்டது தான் இம்மானிட உடலும், உலக வாழ்வும் நிலையற்றது என்பது! ஆனால், எல்லோரும் புரிந்து, திருந்த முடியுமா, என்ன?!ஊஹும், அவ்வளவு எளிதன்று! படிக்கும்போது பரிந்தது போல இருக்கும், ஆனால் சில நொடிகளுக்குப் பின் அவை மறக்கடிக்கப்படும். அதுதான் மாயை, நம்மைத் திருந்த விடாது!?
    வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும், அதுதான் நடப்பு...உண்மையும் கூட!!/////

    உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  6. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Late post. But required this moment.
    Please post an article related to Soul and its contents.
    With kind regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  7. Wednesday, May 04, 2016 10:40:00 PM Delete
    ////Blogger kmr.krishnan said...
    Very nice philosophy./////

    உண்மைதான். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. /////Blogger C.P. Venkat said...
    வணக்கம் குருஜி!. அடடே!. என்னே ஆச்சரிய்ம்!. விஞ்ஞானமும், மெய் ஞானமும், big bang theory (பேரிடித் தோற்றக் கோட்பாடு) எல்லாம் ... ஆராய்ச்சி அருமை.. பாராட்டுகள்!
    எல்லாமே மண் தான் என்ற விளக்கம் அருமை.. வாழ்த்துகள்.
    கேலக்‌ஷி வகுப்பிற்கு இரண்டொரு முறை மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். பதில் ஒன்றும் இல்லை. ஒரு வாய்ப்பு கொடுங்கள் என் வேண்டிக்கொள்கிறேன்./////

    நல்லது. நன்றி. கேலக்‌ஷி வகுப்பெல்லாம் முடிந்து வெகுநாளாயிற்று!

    ReplyDelete
  9. ////Blogger வேப்பிலை said...
    மௌனம் காக்கிறேன்.////

    நல்லது.

    ReplyDelete
  10. ////Blogger SELVARAJ said...
    அருமை வாத்தியாரே/////

    நல்லது. நன்றி செல்வராஜூ

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com