மனதை டச்சிங் டச்சிங் பண்ணிய வரிகள்
மனதைத் தொட்ட வரிகள்
Lines that touched our heart
1.ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.!
2.தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.!
3. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.!
4.அதிர்ஷ்டத்திற்காக காத்திருப்பதும் சாவுக்காக காத்திருப்பதும்ஒன்றே!.
5. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.!
6.ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.!
7.மனிதன் தான் செய்த தவறுக்கு வக்கீலாகவும் ,பிறர் செய்த தவறுக்கு நீதிபதியாகவும் செயல்படுகின்றான்.!
8.வெள்ளை என்பது அழகல்ல..நிறம் ! ஆங்கிலம் என்பது அறிவல்ல .. மொழி> !
9.வாழும்போது சரியான சமூக அந்தஸ்து வழங்காத உலகம்......வாழ்ந்து முடித்த பின் சிலை வைக்கிறது !
10.நம்பிக்கை நிறைந்தஒருவர், யாரிடமும் மண்டியிடுவதுமில்லை...கையேந்துவதுமில்லை.
11.நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால் நினைவின் மொழியும் பிரிவின் வலியும் ௨ணராமலே போய்விடும்...!!!
12.சிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்
13.வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நான்கு வகையான சட்னி கிடைக்குது. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது...!!
14.கொஞ்சம் படித்தால் கிராமத்தை விட்டு வெளியேறுகிறோம்.
நிறையப்படித்தால் சொந்த நாட்டை விட்டே வெளியேறுகிறோம் !
15.நாய் நம்மளை இழுத்துக்கிட்டுப்போனா அது வாக்கிங், தொரத்திக்கிட்டுவந்தா அது ஜாக்கிங் !
16.பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமென்றால் செலவு செய்யுங்க . உங்களின் மதிப்பு தெரியவேண்டுமானால் கடன் கேளுங்க !
17.ஆட்டோகாரனுக்கு பக்கம் கூட தூரம்தான்; ரியல் எஸ்டேட் காரனுக்கு தூரம் கூட பக்கம்தான் !
எல்லாம் சரிதானா? எது மிகவும் நன்றாக உள்ளது?
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
வணக்கம் ஐயா
ReplyDeleteஅனைத்தும் பிடித்துள்ளது
அய்யா வணக்கம் . மனதை தொட்ட வரிகள் எல்லாமே சூப்பர் என்றாலும் 1, 3,6,12 & 16 சிறப்பு .
ReplyDeleteபணம் என்பது ஆக்சிசன் . இது இல்லாமல் இருக்க முடியாது .இதை நேர்மையான முறையில் சம்பாதிக்க என்ன பாடுகள் எல்லாம் பட வேண்டியுள்ளது ???
சோமசுந்தரம் பழனியப்பன், மஸ்கட்
sinthikka thundum 7
ReplyDeleteஅனைத்துமே நன்று ஐயா!சிந்திக்கவும் வைத்தது.
ReplyDeleteவணக்கம் ஐயா,அனைத்துமே நெஞ்சை தொட்ட வரிகள்தான்.சிந்திக்கவும்,சிரிக்கவும் வைத்தன.நன்றி.
ReplyDeleteSeventh one is best and very much true.
ReplyDeleteஅனைத்துமே உண்மை. இருப்பினும்
ReplyDelete17 மிக மிக நிதர்சனமான உண்மை .
அன்புடன் அரசு .
வணக்கம் ஐயா,
ReplyDeleteஅனைத்தும் அருமை.எல்லாம் சரிதான். உண்மையும்கூட.
மிகவும் நன்றானவைகள்:
5. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.!
11.நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால் நினைவின் மொழியும் பிரிவின் வலியும் ௨ணராமலே போய்விடும்...!!!
Liked this one
ReplyDeleteபணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.!
Sir, what happened to stars2015? Came back after two month vacation and didn't saw much post over there.
/////Blogger siva kumar said...
ReplyDeleteவணக்கம் ஐயா
அனைத்தும் பிடித்துள்ளது/////
நல்லது. நன்றி சிவகுமார்!
/////Blogger Spalaniappan Palaniappan said...
ReplyDeleteஅய்யா வணக்கம் . மனதை தொட்ட வரிகள் எல்லாமே சூப்பர் என்றாலும் 1, 3,6,12 & 16 சிறப்பு .
பணம் என்பது ஆக்சிசன் . இது இல்லாமல் இருக்க முடியாது .இதை நேர்மையான முறையில் சம்பாதிக்க என்ன பாடுகள் எல்லாம் பட வேண்டியுள்ளது ???
சோமசுந்தரம் பழனியப்பன், மஸ்கட் ////
உண்மைதான். ஆனால் நேர்மையாக இருப்பதில் ஒரு மன நிறைவு உண்டு. அதை மனதில் வையுங்கள்!
/////Blogger KARTHIKEYAN V K said...
ReplyDeletesinthikka thundum 7/////
நல்லது. நன்றி கார்த்திகேயன்!
Blogger Yoga.S. said...
ReplyDeleteஅனைத்துமே நன்று ஐயா!சிந்திக்கவும் வைத்தது.
நல்லது. நன்றி யோகானந்தம்! (இதுதானே உங்களின் முழுப்பெயர்?)
////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,அனைத்துமே நெஞ்சை தொட்ட வரிகள்தான்.சிந்திக்கவும்,சிரிக்கவும் வைத்தன.நன்றி.///
நல்லது. நன்றி ஆதித்தன்!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteSeventh one is best and very much true./////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!
////Blogger ARASU said...
ReplyDeleteஅனைத்துமே உண்மை. இருப்பினும்
17 மிக மிக நிதர்சனமான உண்மை .
அன்புடன் அரசு .////
நல்லது. உங்களின் தெரிவிற்கு நன்றி அரசு!
//////Blogger selva kumar said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
அனைத்தும் அருமை.எல்லாம் சரிதான். உண்மையும்கூட.
மிகவும் நன்றானவைகள்:
5. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.!
11.நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால் நினைவின் மொழியும் பிரிவின் வலியும் ௨ணராமலே போய்விடும்...!!!/////
நல்லது. நன்றி செல்வகுமார்!
/////Blogger selvaspk said...
ReplyDeleteLiked this one
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.!
Sir, what happened to stars2015? Came back after two month vacation and didn't saw much post over there./////
மன்னிக்கவும். உடல்நிலை காரணமாக சிந்தித்து அங்கே பதிவுகளை எழுத முடியவில்லை. பொறுத்திருங்கள். திங்கட்கிழமை 23-5-2016 முதல் அங்கே பதிவுகள் தொடங்கும். அத்த்துடன் விட்டதை எல்லாம் பிடித்துவிடுவோம்.
குருநாதா வந்தனம்!
ReplyDelete13ம், 15ம் நகைச்சுவையுடன் கூடிய சிந்தனை!17வது சிந்தனை மனதில் வலி தருகிறது!மற்ற அனைத்துமே தங்களைப் போல் என் மனதையும் தொட்ட வரிகள் தான், ஐயா!
மனதை நனைக்கும் அமிர்த துளிகள்...
ReplyDelete