13.5.16

அளவிட முடியாத பெருமை வாய்ந்தது ஏது?

அளவிட முடியாத பெருமை வாய்ந்தது ஏது?

ஆன்மிகம்

தில்லை [சிதம்பரம்]

1 தில்லை எனும் தாவரம் நிறைந்து காணப்பட்டதால் இத்தலம் திலலைவனம் எனப்படுகிறது சிதமபரம் என்பது வடமொழிச்சொல்
சிற்றம்பலம் என்பது தமிழ்ச்சொல்

2 ஆன்மாக்களின் எல்லாபற்றுகளையும் போக்குமிடம் 'பெறும்பற்றப்புலியூர்'

3 புலிக்கால் முனிவர் வழிபட்டதால் புலியூர என மற்றொரு பெயரும் உண்டு

4 இத்தலத்தில் உள்ள நடராஜர் சன்னதிக்குப் பின்புறம் உள்ள ஆலயம் திருமூலத்தானம் எனப்படுகிறது

இங்கு எழுந்து அருளியுள்ள இறைவர்; திருமூலநாதர் இறைவி: உமைஅம்மை

கனகசபை : நடராஜப்பெருமான் = சிவகாமி அம்மை

தலத்தின் அருமையும் பெருமையும்

1 சம்பந்தர் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்றது

2 பன்னிரண்டு தமிழ் வேதங்களிலும் போற்றப்பட்டுள்ள அரிய தலம்

3 இங்குள்ள நடராஜப்பெருமானார் அசைந்தால்தான் உலக உயிர்கள் அசையும் இவர் தமது ஆட்டத்தை நிறுத்தும்போது உலக இயக்கமே

நின்றுவிடும்

4. ஐம்பூதங்களில் ஆகாயத்தலமாக விளங்குவது. மண் நீர் நெருப்பு காற்று ஆகிய நான்கு பூதஙகளும் ஆகாயத்திற்குள் அடங்குவதுபோல அனைத்து
சிவாலங்களிலுள்ள சிவகலைகள் யாவும் இரவு வழிபாட்டிற்கு பிறகு [அர்த்தயாம பூஜைக்குப்பிறகு] தில்லையில் வந்து ஒடுங்கும்

5. இவ்வாலயத்தில்தான் மாணிக்கவாசகர் ஊமைப்பெண்ணை பேசவைத்தார் புத்தர்களை வாதில் வென்றார்

6 சேக்கிழார் பெரியபுராணாம் பாடுவதற்கு உலகெலாம் என அடியெடுத்துககொடுத்த இடம் தில்லையே ஆகும்

7 பன்னிரண்டாது வேதமாக திகழும் பெிரியபுராணம் அரங்கேற்றப்பட்டதும் தில்லை ஆயிரங்கால் மண்டபத்திலேயே ஆகும்

8 தில்லைப்பெருமானின் தேர் ஒடாமல் சகதியில் சிக்கியபோது சேந்தனார் திருப்பல்லாண்டு பாட தேர் தானே ஓடிய நிலையில் நின்றது

9 உபமன்யு முனிவர் சிறுகுழந்தையாய் இருந்தபோது அழுதார் அக்குழந்தைக்கு தில்லை திருமூலநாதப்பெருமானார் பாற்கடலையே வரவழைத்தார்

10 பதஞ்சலி முனிவர் வழிபட்டு பேறுபெற்ற தலம்

11 முருகப்பெருமான், திருமூலநாயனார், திருநீலகண்ட நாயனார், திருநாளைப்போவார், இராஜராஜசோழன், சேந்தனார், உமாபதிசிவனார் போன்ற

கணக்கற்ற அருளாளர்கள் இத்தலததை வழிபட்டு பேறு பெற்றுள்ளார்கள்

12 வியாசமுனிவர் சுகமுனிவர் சுதமுனிவர் சைமினிமுனிவர் குருநமசிவாயர் முதலாமவரகுணபாண்டியன் ஆகியேயார் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்

13 இத்தலம உலகத்தின் இருதயமாகும்

14 தென்கயிலை என போற்றப்படுகின்றது

தில்லையின் பெருமை எல்லை இல்லாதது எழுத்தினால் எழுதிவிடமுடியாது

திருசிற்றம்பலம்

நன்றி-தமிழ்வேதம் இதழ்-மே மாதம் 2016
--------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13 comments:

  1. Respected sir,

    Thank you for your message on THILLAI. Unknown information is available in this message. Once again thank you for this informative message on THILLAI.

    WITH KIND REGARDS,

    Visvanathan N

    ReplyDelete
  2. புலிக்கால் முனிவர் என்பவர் வ்யாக்ரபாதர் என்று அழைக்கப்படுபவர்.
    அவருடைய ஜீவ சமாதி திருப்பட்டூர் என்ற ஸ்தலத்திர்குப் பின்புறம் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் அமைந்துள்ளது.திருச்சியில் இருந்து திருபட்டூருக்கு பேருந்து வசதி உண்டு.திருப்பட்டூர், ப்ரம்மா கோவில் கொண்ட ஸ்தலம். தியான மண்டபம் நன்கு பராமரிக்கபடுகிறது.

    திருமூல நாதர் என்ற பெயரில் லால்குடிக்கு அருகில் பூவாளூர் என்ற கிராமத்தில் ஈசன் அருள் பாலிக்கிறார். அழகான கோவில்.திருச்சி அரியலூர் மார்க்கத்தில் லால்குடிக்கு அடுத்து 3 கி மீ அருகாமையில் பூவாளூர் உள்ளது.லால்குடி,திருமங்கலம், நகர், திருமாந்துறை, பூவாளூர் ஆகிய சிவன் கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று தரிசனம் செய்வது பஞ்சலிங்க தரிசனம் என்று மிகப்புண்ணியமாகும்.

    ReplyDelete
  3. வந்தனம் குருநாதா!
    அரிய பேறு பெற்றோம்! ஆஹா, என்ன ஆனந்தம்! இத்துனை புகழ் பெற்ற தலமா!!பல அருமையான தகவல்களை அவ்வப்போது எங்கிருந்தெல்லாமோ இருந்து திரட்டி நமக்கு விருந்தாக்கும்
    வாத்தியாரின் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. அன்னம் பாலிக்கும்
    தில்லைச் சிற்றம்பலம்

    பொன்னம் பாலிக்கும்
    மேலும் இப்பூமிசை

    என்னம் பாலிக்குமாறு
    கண்டு இன்புற

    இன்னம் பாலிக்குமோ
    இப் பிறவியே.

    -அப்பர்.

    தில்லையைப் பற்றிய
    நல்ல தொகுப்பு தந்தமைக்கு
    நன்றி ஐயா.

    ReplyDelete
  5. வணக்கம் ஆசிரியர்,
    நல்ல தொகுப்பு. நான் எங்கே படித்ததுவையும் சில இங்கே குறிப்பிடுகிறேன்..
    பல ஆண்டுக்குகளுக்கு முன்பு, சிற்றம்பலம் (சிதம்பரம்) ‍ இந்த கோயிலுடைய பெயர். தில்லை மரம் நிரம்பிய ஊர் ஆகையால் இந்த ஊர்க்கு தில்லையூர் என்ற பெயர். நாள்டைவில் இந்த திரு கோயிலில் பெயரே, இந்த ஊர்க்கு சிதம்பரம் என்றாகியது.
    பஞ்சபூதத் சிவ தலங்களில் ஆகாயம் (Space) தலமாக‌ இந்த கோயில் திகழ்கிறது.
    மன்னை மையமாக கொண்ட சிவன் கோயில் ‍ காஞ்சிபுரம் (ஒரே மாமரம்)ஏகாம்பரேஸ்வரர் (ஏகாம்பரநாதர்).
    காற்றை மையமாக கொண்டது திருகாளகத்தி, ஆந்திர மாநிலம்.
    நெருப்பு மையமாக கொண்டவர் அண்ணாமலையார் திருவண்ணாமலை.
    நீரை மையமாக திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில், திருச்சி.

    மற்றொரு சிறப்பு சிற்றம்பலத்தில்(சிதம்பரத்தில்) ‍ மூலவரே பிரத‌ச்சனை செய்வார். பல கோயில்களில் புரோகிதர் ஆர்த்தி முடிக்கு போது இருதியாக் சொல்லுகின்ற வார்த்தை ‍ திருசிற்றம்பலம்!!!
    ஓம் நமசிவாய!
    நன்றி!
    பன்னீர்செல்வம்.இரா

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா, வியப்பூட்டும் நல்ல பல செய்திகள்.நன்றி.

    ReplyDelete
  7. /////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Thank you for your message on THILLAI. Unknown information is available in this message. Once again thank you for this informative message on THILLAI.
    WITH KIND REGARDS,
    Visvanathan N//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. /////kmr.krishnan said...
    புலிக்கால் முனிவர் என்பவர் வ்யாக்ரபாதர் என்று அழைக்கப்படுபவர்.
    அவருடைய ஜீவ சமாதி திருப்பட்டூர் என்ற ஸ்தலத்திர்குப் பின்புறம் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் அமைந்துள்ளது.திருச்சியில் இருந்து திருபட்டூருக்கு பேருந்து வசதி உண்டு.திருப்பட்டூர், ப்ரம்மா கோவில் கொண்ட ஸ்தலம். தியான மண்டபம் நன்கு பராமரிக்கபடுகிறது.
    திருமூல நாதர் என்ற பெயரில் லால்குடிக்கு அருகில் பூவாளூர் என்ற கிராமத்தில் ஈசன் அருள் பாலிக்கிறார். அழகான கோவில்.திருச்சி அரியலூர் மார்க்கத்தில் லால்குடிக்கு அடுத்து 3 கி மீ அருகாமையில் பூவாளூர் உள்ளது.லால்குடி,திருமங்கலம், நகர், திருமாந்துறை, பூவாளூர் ஆகிய சிவன் கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று தரிசனம் செய்வது பஞ்சலிங்க தரிசனம் என்று மிகப்புண்ணியமாகும்./////

    அடுத்தமுறை திருச்சிக்கு வரும்போது நீங்கள் கூறியுள்ள ஸ்தலங்களுக்கெல்லாம் சென்று வரவேண்டும். தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. /////Blogger வரதராஜன் said...
    வந்தனம் குருநாதா!
    அரிய பேறு பெற்றோம்! ஆஹா, என்ன ஆனந்தம்! இத்துனை புகழ் பெற்ற தலமா!!பல அருமையான தகவல்களை அவ்வப்போது எங்கிருந்தெல்லாமோ இருந்து திரட்டி நமக்கு விருந்தாக்கும்
    வாத்தியாரின் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  10. /////Blogger mohan said...
    அன்னம் பாலிக்கும்
    தில்லைச் சிற்றம்பலம்
    பொன்னம் பாலிக்கும்
    மேலும் இப்பூமிசை
    என்னம் பாலிக்குமாறு
    கண்டு இன்புற
    இன்னம் பாலிக்குமோ
    இப் பிறவியே.
    -அப்பர்.
    தில்லையைப் பற்றிய
    நல்ல தொகுப்பு தந்தமைக்கு
    நன்றி ஐயா.//////

    நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger Selvam R said...
    வணக்கம் ஆசிரியர்,
    நல்ல தொகுப்பு. நான் எங்கே படித்ததுவையும் சில இங்கே குறிப்பிடுகிறேன்..
    பல ஆண்டுக்குகளுக்கு முன்பு, சிற்றம்பலம் (சிதம்பரம்) ‍ இந்த கோயிலுடைய பெயர். தில்லை மரம் நிரம்பிய ஊர் ஆகையால் இந்த ஊர்க்கு தில்லையூர் என்ற பெயர். நாள்டைவில் இந்த திரு கோயிலில் பெயரே, இந்த ஊர்க்கு சிதம்பரம் என்றாகியது.
    பஞ்சபூதத் சிவ தலங்களில் ஆகாயம் (Space) தலமாக‌ இந்த கோயில் திகழ்கிறது.
    மன்னை மையமாக கொண்ட சிவன் கோயில் ‍ காஞ்சிபுரம் (ஒரே மாமரம்)ஏகாம்பரேஸ்வரர் (ஏகாம்பரநாதர்).
    காற்றை மையமாக கொண்டது திருகாளகத்தி, ஆந்திர மாநிலம்.
    நெருப்பு மையமாக கொண்டவர் அண்ணாமலையார் திருவண்ணாமலை.
    நீரை மையமாக திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில், திருச்சி.
    மற்றொரு சிறப்பு சிற்றம்பலத்தில்(சிதம்பரத்தில்) ‍ மூலவரே பிரத‌ச்சனை செய்வார். பல கோயில்களில் புரோகிதர் ஆர்த்தி முடிக்கு போது இருதியாக் சொல்லுகின்ற வார்த்தை ‍ திருசிற்றம்பலம்!!!
    ஓம் நமசிவாய!
    நன்றி!
    பன்னீர்செல்வம்.இரா/////

    நல்லது. உங்களின் தகவல்களுக்கு நன்றி பன்னீர்செல்வம்!

    ReplyDelete
  12. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா, வியப்பூட்டும் நல்ல பல //////

    நல்லது. நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  13. அற்புதமான பரப்புரை. அருமை அய்யா

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com