8.3.16

மாற்றம் யாரிடமிருந்து ஏற்பட வேண்டும்?


மாற்றம் யாரிடமிருந்து ஏற்பட வேண்டும்?

மாதா அமிர்தானந்தமயி அவர்கள் சொற்பொழிவாற்றும் போது கூறிய
குட்டிக் கதை..!!

** மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும். **

ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது. அவர் தன் மனைவியிடம் கூறினார் "நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதான் அதிகமாக பேசியிருப்பாய்" எனக் கூறினார்.

ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன். நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார் அவர் மனைவி.  மகனோ எனக்கும் நான் வேலைசெய்யும் கம்பெனியில் போன் உண்டு அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான். நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன். வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள் உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். நாம் செய்யும் தவறை மற்றவர்கள் செய்தால் நமக்கு அதிர்ச்சியாகிறது. மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும்.
--------------------------------------------------
2
விலைவாசி எப்படி ஏறுகிறது தெரியுமா?

டீச்சர்: பசங்களா! நாளைக்கு க்ரூப் ஃபோட்டோ எடுக்கப் போகிறோம்... எல்லாரும் ஆளுக்கு 50 ரூபாய் கொண்டாங்க... சரியா?

டீச்சர் : (மனதுக்குள்ள) 20 ரூபா ஃபோட்டோவுக்கு 50 ரூபா வாங்கினா 60 பசங்களுக்கு 30 ரூ வீதம் 1800... இந்த மாதம் புதுப் புடவை தான்...

பையன்:(வீட்டுக்கு வந்தவுடன்) அம்மா நாளைக்கு ஸ்கூல்ல
ஃபோட்டோக்கு 100 ரூ வேணும்...

அம்மா: ஃபோட்டோக்கு 100 ரூபாயா? கொள்ளையடிக்கிறாங்க....
சரி, சரி அழாதே... அப்பா வரட்டும்... கேக்கறேன்.

அப்பா வந்ததும்: என்னங்க... நம்ம பையன் ஸ்கூல்ல க்ரூப்
ஃபோட்டோக்கு 200 ரூபாய் கொண்டு வரச் சொல்லிருக்காங்களாம்... இல்லாட்டி உள்ளயே விட மாட்டாங்களாம்...

அப்பா: க்ரூப் ஃபோட்டோக்கு 200 ரூபாயா? பகல் கொள்ளை... என்ன செய்யிறது?... சட்டைப் பையில இருக்கு எடுத்துக்க....
----------------------------------------------
விலைவாசி எப்படி ஏறுதுன்னு புரியுதா? ..
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20 comments:

  1. ஒரு நாள் நண்பர் தன் பையனை அடித்துக்கொண்டு இருந்தார்.நான் அதனைத்தடுத்து நிறுத்தினேன்.ஏன் அடிகிறீர் என்று கேடாபோது தந்தை கூறினார்:

    "நான் வேண்டிய அளவு அலுவலகத்திலிருந்து பால் பாயின்ட் பேனா, பென்ஸில், எரேசர் எலாம் எடுத்து வந்து கொடுக்கிறேன். அது போறாமல் இவன் பக்கத்துப் பையனிடம் திருடுகிறானாம். டீச்சர் குறிப்பெழுதி அனுப்பியுளார்கள்."

    இது எப்படி இருக்கு?

    ReplyDelete
  2. வணக்கம் குருஜி அவர்களே!.. மிகவும் அருமையான பதிவு.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. ரத்த கொதிப்பை தானே
    ரம்மியமாக விலை வாசி என்கிறீர்கள்...

    விலையை "வாசிக்க" மட்டுமே முடியும் என்பதால்
    விளக்கம் சரி தானே...

    ReplyDelete
  4. குருவே சரணம்!
    அழகான தலைப்பு, அருமையான பகிர்ப்பு!"தலைப்பு"கள் இடுவதிலும் அதற்குத் தகுதியான, சுவையான செய்திகள் தருவதிலும் தங்களுக்கு நிகர் தாங்களே!!
    இரண்டு தொகுப்புகளிலும் படிப்பவர் மனதினில் ஒரு நிறைவான மாற்றத்தைக் கொடுக்கவல்ல கருத்துக்கள் நகைச்சுவை கலந்து தரப்பட்டுள்ளதற்காக ஒரு "சபாஷ்" வாத்தியாருக்கு!

    ReplyDelete
  5. உண்மை...
    தனி ஒவ்வொரு மனிதனும் திருந்திவிட்டால்
    தங்கம் கூட ஒரு ரூபாய்க்கும் விற்கலாம்...

    கலப்படம் காணாமல் போகலாம்... (பழத்தை கல் வைத்து பழுக்க வைப்பது போல)

    சுகாதாரக் கேடற்ற தூய்மையான புத்தம் புதிய பூமி உருவாகலாம்....

    ReplyDelete
  6. First story summa nachhinnu irunthathu. When one do the wrong thing its acceptable but the same wrong thing is not acceptable when some one else does it. Thats Kali Yug.

    ReplyDelete
  7. Vanakkam ayya ethu kathai alla padam vazhga valamudan

    ReplyDelete
  8. /////Blogger siva kumar said...
    உள்ளேன் ஐயா//////

    வருகைப் பதிவிற்கு நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  9. /////Blogger kmr.krishnan said...
    ஒரு நாள் நண்பர் தன் பையனை அடித்துக்கொண்டு இருந்தார்.நான் அதனைத்தடுத்து நிறுத்தினேன்.ஏன் அடிகிறீர் என்று கேடாபோது தந்தை கூறினார்:
    "நான் வேண்டிய அளவு அலுவலகத்திலிருந்து பால் பாயின்ட் பேனா, பென்ஸில், எரேசர் எல்லாம் எடுத்து வந்து கொடுக்கிறேன். அது போறாமல் இவன் பக்கத்துப் பையனிடம் திருடுகிறானாம். டீச்சர் குறிப்பெழுதி அனுப்பியுளார்கள்."
    இது எப்படி இருக்கு?///////

    நிறைய தந்தைகளிடம் அந்தக் குறைகள் உள்ளன. அது தவறு என்று அவர்கள் உணராதவரை, அதைத்தான் தொடர்ந்து அவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. //////Blogger C.P. Venkat said...
    வணக்கம் குருஜி அவர்களே!.. மிகவும் அருமையான பதிவு.. பாராட்டுக்கள்..//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ///////Blogger வேப்பிலை said...
    ரத்த கொதிப்பை தானே
    ரம்மியமாக விலை வாசி என்கிறீர்கள்...
    விலையை "வாசிக்க" மட்டுமே முடியும் என்பதால்
    விளக்கம் சரி தானே...//////

    நீங்கள் சொன்னால் சரிதான் வேப்பிலையாரே!

    ReplyDelete
  12. /////Blogger வரதராஜன் said...
    குருவே சரணம்!
    அழகான தலைப்பு, அருமையான பகிர்ப்பு!"தலைப்பு"கள் இடுவதிலும் அதற்குத் தகுதியான, சுவையான செய்திகள் தருவதிலும் தங்களுக்கு நிகர் தாங்களே!!
    இரண்டு தொகுப்புகளிலும் படிப்பவர் மனதினில் ஒரு நிறைவான மாற்றத்தைக் கொடுக்கவல்ல கருத்துக்கள் நகைச்சுவை கலந்து தரப்பட்டுள்ளதற்காக ஒரு "சபாஷ்" வாத்தியாருக்கு!///////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  13. //////Blogger A. Anitha said...
    உண்மை...
    தனி ஒவ்வொரு மனிதனும் திருந்திவிட்டால்
    தங்கம் கூட ஒரு ரூபாய்க்கும் விற்கலாம்...
    கலப்படம் காணாமல் போகலாம்... (பழத்தை கல் வைத்து பழுக்க வைப்பது போல)
    சுகாதாரக் கேடற்ற தூய்மையான புத்தம் புதிய பூமி உருவாகலாம்....//////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. //////Blogger Rsankar Gm said...
    First story summa nachhinnu irunthathu. When one do the wrong thing its acceptable but the same wrong thing is not acceptable when some one else does it. Thats Kali Yug./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. //////Blogger Gajapathi Sha said...
    Vanakkam ayya ethu kathai alla padam vazhga valamudan/////

    ஆமாம். நன்றி கஜபதியாரே!

    ReplyDelete
  16. Sir,for every action there is an equal and opposite reaction.science+moral.thank you.

    ReplyDelete
  17. ////Blogger Subathra Suba said...
    Vilaivasi story super////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  18. /////Blogger adithan said...
    Sir,for every action there is an equal and opposite reaction.science+moral.thank you.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com