23.2.16

மகிழ்ச்சி என்பது எங்கே இருக்கிறது?


மகிழ்ச்சி என்பது எங்கே இருக்கிறது?

செல்வந்தர் ஒருவர் வசதிகள் பல இருந்தும் மன அமைதி இன்றி தவித்து வந்தார்.

அப்போது அந்த ஊருக்கு ஒரு துறவி வந்திருப்பதை கேள்விப்பட்டு அவரை சந்தித்து தன் மனக் குறையைச் சொன்னார். அந்த துறவி, “ நாளை
காலை பத்து லட்ச ரூபாய் பணத்துடன் என்னை வந்து பார். உன் பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறேன்.” என்று கூறுகிறார்.

மறு நாள் பத்து லட்ச ரூபாயுடன் அந்த துறவியை பணக்காரர் சந்தித்தார். பணத்தை முனிவரிடம் கொடுத்துவிட்டு அவர் முன் அமர்ந்தார்.

பணக்கார்ரை அந்த முனிவர் கண்மூடி அமருமாறு கூறிவிட்டு
பணப்பையுடன் அங்கிருந்து ஓடுகிறார். பணக்காரர் போலிச்
சாமியாரிடம் பணத்தை  கொடுத்து ஏமாந்து விட்டோம் என்று எண்ணி
மனம் துடித்துப் போனார். அந்த பணக்காரர் அந்த முனிவரைத்
துரத்தினார். முனிவரை பிடிக்க  முடியவில்லை.

இரண்டு, மூன்று தெருக்களில் ஓடி அலைந்து விட்டு வேறு வழி
தெரியாமல் வெறுங்கையுடன் திரும்பினார். நொந்து போன மனதுடன்
அந்த முனிவர் முதலில் உட்கார்ந்திருந்த இடத்திற்கே திரும்பி வந்தார்.

அங்கு அவருக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. அவரை ஏமாற்றி விட்டு
ஓடிய அந்த முனிவர், அவருக்கு முன்னால் அங்கே திரும்பி வந்து
உட்கார்ந்திருந்தார். பணக்காரர் அங்கே போனதும் அவரது பணப்பையை அவரிடம் திரும்ப ஒப்படைத்தார். இப்போது பணக்காரருக்கு மிகுந்த
மகிழ்ச்சி ஏற்பட்ட்து. நிம்மதிப் பெருமூச்சு அவரிடம் இருந்து வந்தது.

இப்போது முனிவர் பணக்காரரிடம் கேள்வி கேட்கிறார்; “இந்தப் பணத்தை
நீ என்னிடம் தருவதற்கு முன்னால் அது உன்னிடம் தான் இருந்தது.
இப்போதும் அந்தப் பணம் உன்னிடம் தான் இருக்கிறது. இதே பணம்
முதலில் உன்னிடம் இருக்கும்போது நீ மன நிம்மதி இல்லாமல் இருந்தாய்.

இப்போதும் அதே பணம் தான் உன்னிடம் இருக்கிறது. ஆனால் நீ மன மகிழ்ச்சியோடு இருக்கிறாய். உன்னுடைய இந்த மன மகிழ்ச்சிக்கு
இந்தப் பணம் தான் காரணமென்றால், இந்தப் பணம் முதலில் உன்னிடம் இருக்கும்போதே இந்த மகிழ்ச்சியும் இருந்திருக்க வேண்டும். ஆனால்
அப்படி இருந்திருக்கவில்லை. இந்த மன மகிழ்ச்சி ஏற்கனவே உனக்குள்
தான் எங்கேயோ இருந்திருக்க வேண்டும். உனக்குள்ளே இருந்த மன
மகிழ்ச்சி ஏன்  இவ்வளவு நேரமும் தெரியாமல் இருந்தது” என்று கேட்டார்.

அப்போது தான் மகிழ்ச்சி என்பது பொருளில் இல்லை. நம் அகத்தில் இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொண்டார்

(நேற்று மகாமகம். முடிந்தவர்கள் கும்பகோணம் சென்று வந்திருப்பீர்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நேற்று மகாமகத்தை முன்னிட்டு
வகுப்பறைக்கு விடுமுறை. அதை அறிவிக்க முடியாமல் பிராட்பாண்ட் அலைவரிசை படுத்தி விட்டது. அதற்காக வருந்துகிறேன்)

அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
 வளர்க நலமுடன்!

16 comments:

  1. உண்மைதான் மகிழ்வு நம்மிடம் தான் உள்ளது

    ReplyDelete
  2. அருமையான பதிவு.மன அமைதிக்கு நல்ல விளக்கம்.

    நான் இந்த மகாமகத்திற்குச் சென்று வந்தேன். தீர்ததவாரி சமயத்தில் வாத்தியாருக்காகவும் வகுப்ப்றை சக மாணவர்களுக்காவும் வேண்டிக் கொண்டேன். இது எனக்கு ஆறாவது மஹாமகம் ஆகும்.நான் நான்கு மாகமகம்
    சென்று வந்துள்ளேன்.

    ReplyDelete
  3. Anbudan vaathiyar ayya vanakkam

    Happiness i...!!!
    It's inside ..don't search out side ..very good.theame ,

    Maha makam ...I have no opportunity ..!!

    Thank you ayya..take care of your health !!

    ReplyDelete
  4. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    கடந்த 5 நாட்களாக வகுப்பறை பதிவுகள் இல்லாததால் வருத்தம் உண்டானது. இன்றைய பதிவு படித்ததும் மகிழ்ச்சி உண்டாயிற்று!
    அன்பான வணக்கங்களுடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  5. ஐயா,
    உங்கள் நலம் வேண்டி பிரார்த்திக்கிறேன். ஒரு நெருடல் மனதில். காரணத்துடன் தான்.
    ராகு, கேது, வியாழன் இருப்பிடம் சரியில்லை. வியாழ மற்றம் வரை அந்த ஆண்டவன் துணை இருக்கட்டும்.
    வாழ்க வழமுடன் - உங்கள் வரி தான்.

    ReplyDelete
  6. ஏழைக்கு எள்ளுருண்டை கிடைத்தால் கூட மகிழ்ச்சி தான்...

    பணக்காரனுக்கோ

    பணத்தை பாதுகாக்கும் வழியைத் தேடி தேடி

    மகிழ்ச்சி நிம்மதி உடல்நலம் என்று ஒன்வொன்றாய் தொலைக்கிறான்...

    ReplyDelete
  7. ////Blogger Geetha M said...
    உண்மைதான் மகிழ்வு நம்மிடம் தான் உள்ளது/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  8. /////Blogger kmr.krishnan said...
    அருமையான பதிவு.மன அமைதிக்கு நல்ல விளக்கம்.
    நான் இந்த மகாமகத்திற்குச் சென்று வந்தேன். தீர்ததவாரி சமயத்தில் வாத்தியாருக்காகவும் வகுப்ப்றை சக மாணவர்களுக்காவும் வேண்டிக் கொண்டேன். இது எனக்கு ஆறாவது மஹாமகம் ஆகும்.நான் நான்கு மாகமகம்
    சென்று வந்துள்ளேன்./////

    நான்கு மகாமகம் சென்று வந்துள்ளது உங்களுக்கு உள்ள இறையருளைக் காட்டுகிறது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. //////Blogger hamaragana said...
    Anbudan vaathiyar ayya vanakkam
    Happiness i...!!!
    It's inside ..don't search out side ..very good.theame ,
    Maha makam ...I have no opportunity ..!!
    Thank you ayya..take care of your health !!///////

    நல்லது. உங்களின் மேலான அன்பிற்கு நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  10. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    கடந்த 5 நாட்களாக வகுப்பறை பதிவுகள் இல்லாததால் வருத்தம் உண்டானது. இன்றைய பதிவு படித்ததும் மகிழ்ச்சி உண்டாயிற்று!
    அன்பான வணக்கங்களுடன்,
    -பொன்னுசாமி./////

    திங்கட்கிழமை ஒருநாள் மட்டும்தான் பதிவை வெளியிடவில்லை. பொன்னுசாமி அண்ணா! நன்றி!

    ReplyDelete
  11. ////Blogger siva kumar said...
    உள்ளேன் ஐயா//////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  12. //////Blogger Mrs Anpalagan N said...
    ஐயா,
    உங்கள் நலம் வேண்டி பிரார்த்திக்கிறேன். ஒரு நெருடல் மனதில். காரணத்துடன் தான்.
    ராகு, கேது, வியாழன் இருப்பிடம் சரியில்லை. வியாழ மாற்றம் வரை அந்த ஆண்டவன் துணை இருக்கட்டும்.
    வாழ்க வழமுடன் - உங்கள் வரி தான்.//////

    நல்லது. உங்களின் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. /////Blogger A. Anitha said...
    ஏழைக்கு எள்ளுருண்டை கிடைத்தால் கூட மகிழ்ச்சி தான்...
    பணக்காரனுக்கோ
    பணத்தை பாதுகாக்கும் வழியைத் தேடி தேடி
    மகிழ்ச்சி நிம்மதி உடல்நலம் என்று ஒன்வொன்றாய் தொலைக்கிறான்.../////

    உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. குரு வந்தனம்.
    இவ்வுலகத்திலுள்ள அத்தனை ஜீவராசிகளும் தேடிக் கொண்டிருக்கும் ஒன்று தானே,மகிழ்ச்சி, என்பது! அது தேடக்கூடிய பொருள் அல்ல. ஒவ்வொருவர் மனதைப் பொருத்தது என்பதை சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முயல்கிறார், முனிவர்.
    இந்நிலையில் உலகினர் உணரத் தொடங்கிவிட்டால், நாட்டில் எந்தக் கலவரமும் இருக்காது என்பது மட்டுமல்ல
    மாந்தர் அனைவரும் முனிவர்கள் ஆகிடுவார்!
    வரவேற்கத்தக்க உலகம்!!!

    ReplyDelete
  15. /////Blogger வரதராஜன் said...
    குரு வந்தனம்.
    இவ்வுலகத்திலுள்ள அத்தனை ஜீவராசிகளும் தேடிக் கொண்டிருக்கும் ஒன்று தானே,மகிழ்ச்சி, என்பது! அது தேடக்கூடிய பொருள் அல்ல. ஒவ்வொருவர் மனதைப் பொருத்தது என்பதை சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முயல்கிறார், முனிவர்.
    இந்நிலையில் உலகினர் உணரத் தொடங்கிவிட்டால், நாட்டில் எந்தக் கலவரமும் இருக்காது என்பது மட்டுமல்ல
    மாந்தர் அனைவரும் முனிவர்கள் ஆகிடுவார்!
    வரவேற்கத்தக்க உலகம்!!!//////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com