29.2.16

Astrology: Quiz 103: பதில்: அக்கரையைக் காணும் வாய்ப்பு ஜாதகருக்குக் கிடைக்கவில்லை!


Astrology: Quiz 103: பதில்: அக்கரையைக் காணும் வாய்ப்பு ஜாதகருக்குக் கிடைக்கவில்லை!

கர்மவினையின்படி நமக்கு என்ன வேலை விதிக்கப்பட்டுள்ளதோ அதைத்தான் நாம் செய்ய வேண்டியதிருக்கும்.
அரசாங்க உத்தியோகம் என்றால் அதுதான் அமையும். இல்லை என்றால் என்ன கரணம் போட்டாலும் அமையாது.

சிலருக்குத் தாங்கள் செய்கின்ற வேலை பிடிக்கும். சிலருக்கு பிடித்தம் இல்லாமல் இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்குத் தொழில் செய்தால் பரவாயில்லை, நிறைய காசு பார்க்கலாமே, வேலைக்குச் செல்வதில், கைக்கும் வாய்க்குமாக இருக்கிறதே என்ற மன நிலை இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு, இதில் ஏற்ற இறக்கங்கள், ரிஸ்க் எல்லாம் உள்ளதே, வேலை என்றால் மாதாமாதம் வருமானம் இருக்குமே என்ற ஆதங்கம் இருக்கும்.

பொதுவாகப் பலரும் திருப்தியாக இல்லை. நிம்மதியாக இல்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலைமை.

பலர் மனதிலும் உள்ள கேள்விகள் இவைதான்:

1. நமக்கு ஏற்ற தொழில் எது?
2. வெளி நாட்டில் வேலை கிடைக்குமா?

அது சம்பந்தமாக வெள்ளிக்கிழமையன்று ஒரு ஜாதகத்தை அலசக் கொடுத்திருந்தேன்.
-----------------------------------------------------------------------------------
அந்த ஜாதகத்தைப் பாருங்கள்.


இது மகர லக்கின ஜாதகம். யோககாரகன் சுக்கிரன் (அதாவது ஒரு திரிகோண வீடு & ஒரு கேந்திர வீடு ஆகியவற்றிற்கு உரியவன்) இந்த ஜாதகத்திற்கு அவன் யோகாரகன் என்பதோடு 10ஆம் வீட்டிற்கும் அதிபதி.அவன் எங்கே இருக்கிறான். அடடா, 12ல் மறைந்து விட்டான். ஜாதகருக்கு எந்தத் தொழிலும் அல்லது வியாபாரமும் அமையாது. வேலக்குச் செல்ல வேண்டிய ஜாதகம். அல்லது சுய தொழிலாக இருந்தால், பணமுதல்லீடு இல்லாமல் கமிஷன் அடிப்படையில் உள்ள தொழில்களைச் செய்யலாம்.

சுக்கிரனுக்கு, 9ஆம் அதிபதி மற்றும் 7ஆம் அதிபதியுடன் தொடர்பு இல்லை. ஆகவே வெளிநாடு சென்று வேலை செய்யும் அமைப்பு ஜாதகத்தில் இல்லை. ஆசாமி இங்கேயே வேலை செய்ய வேண்டியதுதான். அதைத்தான் அவரும் செய்தார்.
----------------------------------------------------
24 பேர்கள் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 5 பேர்கள் மட்டும் சரியான விடையை எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு எனது மனம் உவந்த பாராட்டுக்கள். அவர்கள் பெயருடன், அவர்கள் எழுதிய பதில்கள் உங்கள பார்வைக்காகக் கிழே கொடுத்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
==========================================
1
**********///////Blogger Srinivasa Rajulu.M said...
தொழில் காரகன் (லக்னாதிபதி) நாலில் நீச்சம்! தொழில் ஸ்தானாதிபதி பன்னிரண்டில் மறைவு! ஒன்பது மற்றும் பன்னிரண்டு ஆகிய ராசிகள் ஜல ராசிகளோ வாயு ராசிகளோ அல்ல! குருவுக்கும் ஒன்பதாம் இடத்துடன் சம்பந்தமில்லை! வேலை செய்யும் வயதில் வந்த சுக்கிர, சூரிய, மற்றும் (நீச்ச) சந்திர தசைகள் வலுவாக இல்லை!
ஆக, வெளிநாடு செல்லும் யோகமோ, சுயதொழில் யோகமோ இல்லாத ஜாதகர்.////////
------------------------------------------------------------------------
2
*********/////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
புதிர் எண் 103..
1.,மகர லக்னம் லக்னாதிபதி கேந்த்ரத்தில் ஆனால் நீசம்
2.,சுபர் பார்வை இல்லை..
3..மகர லக்னத்திற்கு யோகாதிபதி சுக்ரன் 12ல் விரயம் ..மேலும் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டி கொண்டான் .
4. வெளிநாடு வாய்ப்பு 9 மிடம் நன்றாக..மேலும் சூரியன் .நல்ல இடத்தில. இங்கு அப்படி இல்லை.
சூரியன் பகை வீட்டில் 8 ம்வீட்டுக்கரன் 2ல் தனத்தில் அமர்ந்து கெடுத்தான் .
5.,10ம் அதிபதி சுக்ரன் 12ல் .
7.,வெளிநாடு சென்று சம்பாத்தியம் செய்வதற்கு 7'&9 வீடதிபதிகள் தொடர்பு இருத்தல் வேண்டும் ஜாதகரிடம் 7 வீட்டதிபதி சந்தரன் 9ம் வீட்டதிபதி புதனுடன் எந்த விதமான பார்வை தொடர்பு இல்லை ..???
8., ஆரம்பகால திசைகள் அவ்வளவு விசேடமாக இல்லை.
9.முக்கியமாக தனதிபதியும் லாப ஷ்தாநிபதியும் 6/8 நிலைமை ..[செவ்வாய் 11ல் சனி 4ல் அமர்ந்து அந்த இடம் செவ்வாய்க்கு 8மிடமாக அமைந்தது..!!!
10..***,இந்த ஜாதகர் வெளி நாடு சென்று சம்பாத்தியம் செய்வதற்கு வாய்ப்பே இல்லை. !!!!**,
முன்பு இந்த ஜாதகத்தை பார்த்த ஞாபகம் ..சரிவர பிடி படவில்லை..
Friday, February 26, 2016 1:46:00 PM ////////
---------------------------------------------------
3
////////Blogger adithan said...
ஐயா வணக்கம். லக்னாதிபதி சனி நீச்சம்.ஒனபதாம் அதிபதி புதன் லக்னத்தில் உடன் ராகு மேலும் கேதுவின் பார்வை.இரண்டில் எட்டாம் அதிபதி சூரியன்,சனி பார்வையுடன்.பணம் சம்பாதிக்க வாய்ப்பில்லை.நவாம்சத்திலும் புதன் பகை ஸ்தானத்தில்,சனி பார்வையுடன்.வெளிநாடு போக வாய்ப்பல்லை.ஆரம்ப முயற்ச்சி. தவறிருந்தால் சுட்டவும். நன்றி.
Friday, February 26, 2016 7:48:00 PM //////
-----------------------------------------
4
*********///////Blogger Chandrasekaran Suryanarayana said...
ஆசிரியருக்கு வணக்கம். தாங்கள் நலமாக இருக்கிறீர்களா ?
ஜாதகருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கவில்லை.
20.02.1971 ஆம் தேதி காலை 4.26.19 மணிக்கு அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகருக்கு மகர லக்கினம்(6 பரல்). (இடம் : சென்னை) .
லக்கினாதிபதி சனி நீசம். நவாம்சத்தில் லக்கினாதிபதி சனி துலா ராசியில் உச்சம். இருந்தும் லக்கினாதிபதி வலுவாக இல்லை. சுபக் கிரகங்களின் பார்வையும் இல்லை.
சுக்கிரனுக்கு 9ஆம் அதிபதி புதனுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் போனது வெளிநாட்டு வாய்ப்புகளுக்குக் கேடானது. பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் செவ்வாய். மறுபக்கம் ராகு.
பணம் ஈட்டலுக்கு 2ஆம் வீட்டுக்காரனும், 11ஆம் வீட்டுக்காரனும் ஒருவருக்கொருவர் நன்றாக இருக்க வேண்டும். இந்த ஜாதகத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அஷ்ட்டமம் / சஷ்ட்டமம் நிலையில் உள்ளார்கள். அதாவது சனியும், செவ்வாயும் 6/8, 8/6 நிலையில் உள்ளார்கள்.
லக்கினத்தில் 6ஆம் வீட்டுக்காரன் புதன் வில்லன். லக்கினத்தில் அமர்ந்தது கேடு உண்டாகும். ராகுவும் கூட்டணியாக சேர்ந்தது சரியில்ல. 7ம் வீட்டுக்காரன் சந்திரனும் நீசம்.
யோககாரகன் சுக்கிரன். 5ஆம், 11ஆம் இடங்களுக்கு உரியவன். அவன் வந்து 12ல் (விரையத்தில்) அமர்ந்தது கேடானது.
பத்தாம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரன் 12ல் மறைந்து விட்டார். சுக்கிரனுடன் மாந்தியும் கூட்டு. முயற்சிகள் அனைத்தும் செல்லாமல் போனது.
தசைகளும் சாதகமாக இல்லை. சனி - 6 ஆண்டுகள் , புதன் மகா திசை - 17 ஆண்டுகள் ,கேது மகா திசை - 7 ஆண்டுகள், சுக்கிர மகா திசை - 20 ஆண்டுகள் (12ஆம் வீட்டுக்காரனின் திசை).
லக்கினத்தில் புதனும், ராகுவும் சேர்ந்து இருந்தால், ஜாதகன் சுறுசுறுப்பானவன் . கெட்டிக்காரன். வெட்டிக் கொண்டு வா என்றால் வெட்டி எடுத்து கூரு போட்டு கட்டிக் கொண்டு வந்து விடுவான். விட்டால் வெட்டியதைக் காச்சாக்கிக்கொண்டும் வந்துவிடுவான். புதுப்புது விஷயங்களில், செயல்களில் ஆர்வம் உடையவனாக இருப்பான்.
ஆக மொத்தம் சரியில்லை வெளிநாடு செல்வதற்கு.
இருந்தாலும், (பூவா, தலையா போட்டு பார்த்ததில் தலை தான் விழுந்தது). அதனால் தான் வெளிநாட்டில் வேலை கிடைக்கவில்லை.
சந்திரசேகரன் சூரியநாராயணன்.
Saturday, February 27, 2016 12:13:00 AM ////////
----------------------------------------------
5
*********///////Blogger slmsanuma said...
ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட ஜாதகம்.
மகர லக்கின ஜாதகம்.
யோககாரகன் & 10ஆம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் 12ல் மறைந்து விட்டான்.
லக்கினாதிபதியும், தொழில்காரகனுமாகிய சனீஷ்வரன் நீசம்.
ஏழாம் அதிபதி சந்திரனும் நீசம்.
9ஆம் அதிபதி ராகுவோடு கூட்டு.
சுக்கிரனுக்கு, 9ஆம் அதிபதி மற்றும் 7ஆம் அதிபதியுடன் தொடர்பு இல்லை.
வெளிநாடு சென்று வேலை செய்யும் அமைப்பு ஜாதகத்தில் இல்லை.
ஜாதகருக்கு வெளிநாடு சென்று வேலை செய்து நிறைய பொருள் ஈட்ட வேண்டுமென்று ஆசை நிறைவேறாது.
SANTHANAM, SALEM
Saturday, February 27, 2016 11:48:00 AM ////////
>>>>>>>>>>>>>>>>>>>>>
ஏற்கனவே 4 ஆண்டுகளுக்கு முன்பு தனி வகுப்பில் ஆய்வு செய்யப்பட்ட ஜாதகம்தான். பொதுவகுப்பில் அனைவருக்கும் ஒரு வாய்ப்புக் கொடுப்பதற்காக வலையில் ஏற்றினேன்!
===============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

2 comments:

  1. அருமையான விளக்கம் வாத்தியார் அவர்களே....

    ReplyDelete
  2. நானும் மகர லக்னம் தான், 12-இல் சுக்கிரன் மற்றும் குரு, 10-இல் சனி. ஆனால் நான் வெளிநாடு சென்று வேலை பார்த்தேன்... அது எப்படி??

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com