மாதத் தவணையை அடுத்த மாசமும் கட்டலைன்னா என்ன செய்வீங்க?
---------------------------------------------------------------
ஹலோ! ஐசிசி பேங்கா?
● ஆமாங்க!
■ நான் சின்ராசு பேசறேங்க!
● சொல்லுங்க!
■ நான் வண்டிக்கு இந்த மாசம் டியூ கட்டலைங்க!
● பரவால்லைங்க! மழை வெள்ளம் வந்ததால பைன் எல்லாம் போட மாட்டோம்.
அடுத்த மாசம் சேத்து கட்டலாம்னு SMS வந்திருக்குமே!
■ வந்ததாலதான் கூப்பிட்டேன். அடுத்த மாசமும் கட்டலைன்னா என்ன செய்வீங்க?
● வண்டியை வந்து நாங்களே எடுத்துக்குவோம்!
■ அதை இப்போவே வந்து செய்ய முடியுமுங்களா....? ஏன்னா வண்டி பத்தடி தண்ணிக்குள்ள நிக்குது...!
============================================================
2
நான் ரொம்ப குழப்பத்தில் இருக்கிறேன்... எனக்கு படிக்கவே பிடிக்கல பா....
உயிரியல் டீச்சர் செல் என்றால் உடலின் அடிப்படை மூலக்கூறு னு சொல்றாங்க....
இயற்பியல் டீச்சர் செல் என்றால் பேட்டரி னு சொல் றாங்க....
பொருளாதாரவியல் டீச்சர் செல் என்றால் பொருள்களை விற்பது னு சொல்றாங்க.....
வரலாறு டீச்சர் செல் என்றால் சிறை னு சொல்றாங்க....
தமிழ் டீச்சர் செல் என்றால் போன்னு சொல்றாங்க...
அதையே நீங்க அலை பேசி னு சொல்றீங்க...
அட போங்கப்பா....
எது சரி னு குழப்பமா இருக்கு பா....எங்க நீங்க சொல்லுங்க பாப்போம்.....😇😇
-------------------------------------------------------------
3
குட்டி கதை
செருப்புகடைக்கு ஒருவர் சென்றார்.
பணியாளர் அவரை வரவேற்ரு அழைத்து, செருப்பை எடுத்துக்காட்டினார்..
அவரை அமர வைத்து அவர் காலடியில் அமர்ந்து ஒவ்வொரு செருப்பாக அணிவித்து காட்டினார்..
அவருக்கு சங்கடமாக இருந்தது.. நானே போட்டு பார்க்கிறேன் என்றார்.. பணியாளர் விடவில்லை..
அவரே அவருக்கு உதவினார்..
அவர் பெருந்தன்மையாக சொன்னார் " அய்யா.. நானும் மனிதன்..நீங்களும் மனிதன்.. என் கால்களை நீங்கள் தொடுவது எனக்கு ஒரு மாதிரி
இருக்கிறது "
பணியாளர் சிரித்தபடி சொன்னார் " இந்த கடைக்கு வெளியே போய் விட்டால், ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் உங்கள் கால்களை
தொடமாட்டேன்.. அது என் சுய மரியாதை,,,, கடைக்குள் நீங்கள் ஒரு கோடி கொடுத்தாலும், உங்களுக்கு உதவுவதை நிறுத்த மாட்டேன்.. இது
என் தொழில் மரியாதை💪
செய்யும் தொழிலே தெய்வம்.
===============================================================
4
(ஐந்து)-ன் அம்சங்கள்
1.பஞ்ச கண்ணியர்
அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.
2.பஞ்சவாசம்
இலவங்கம், ஏலம், கற்பூரம்,சாதிக்காய், தக்கோலம்.
3.பஞ்சாமிர்தம்
சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.
4.பஞ்சபாண்டவர்
தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.
5.பஞ்சசீலம்
கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.
6.பஞ்சதிராவிடர்
தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர்.
7.பஞ்சபட்சி
வல்லூறு, ஆந்தை, காகம்,கோழி, மயில்.
8.பஞ்சபுராணம்
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.
9.பஞ்சரத்தினம்
வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.
10.பஞ்சவர்ணம்
வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.
11.பஞ்சாங்கம்
கரணம், திதி, நட்சத்திரம், யோகம்,வாரம்.
12.பஞ்சமூலம்
செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.
13.பஞ்சபாதகம்
பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.
14.பஞ்சபாணம்
முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.
15.பஞ்சாயுதம்
சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.
16.பஞ்சபரமோட்டி
அருகர்,சித்தர்,உபாத்தியாயர்,ஆசிரியர்,சாதுக்கள்.
17.பஞ்சசிகை
தலை, உச்சி, கண், புருவம்,முழங்கை.
18.பஞ்சதேவர்
பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.
19.பஞ்சஸ்தலம்
காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.
20. பஞ்ச பூதங்கள்
நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம
==================================================
5
🎉இது சாப்பாட்டு தத்துவம்🎉
🎊"தோல்வி என்பது பெருங்காயம் போல... தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும !🎊
🎊 ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!🎊
🎊 லட்சியமும் முட்டையும் ஒன்று .... தவற விட்டால் உடைந்து விடும்!!!🎊
🎊சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல.... கிள்ளி எறிந்து விட வேண்டும்!!!🎊
🎊வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்!🎊
🎊பொய், நூடுல்ஸ் போல் தற்காலிகமானது: உண்மை இட்லி போல நிரந்தரமானது!!🎊
🎊 கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள் அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!!!🎊
🎊தலைக்கனம் என்பது வெந்நீர் போன்றது...அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள் நம் மீதே சிந்திவிடும்.🎊
🎊தாமதமான வெற்றி என்பது, பல் இழந்த பிறகு கிடைக்கும் நல்லி எலும்பு போல...... அனுபவிக்க
முடியாது!!🎊
🎊தன்னம்பிக்கைச் சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல ...சமைப்பது உங்கள் கையில்தான்!🎊
🎊வெற்றி என்பது இட்லியை போல வேகுவது தெரியாது... வெந்தபின் தான் தெரியும்...🎊
🎊 வெற்றி என்ற இட்லியை தனியே உண்ண முடியாது...நட்பு என்ற சட்னி வேண்டும்.. 🎊
🎉படித்ததில் ருசித்தது🎉
==================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
'cell' joke is very nice.Thank you for sharing.
ReplyDeleteசெய்யும் தொழிலே தெய்வம் குட்டி கதை சூப்பர்
ReplyDeleteபழனியப்பன் , மஸ்கட்
அய்யா, பஞ்ச உலோகம் விடுபட்டு விட்டதே ??!!!
ReplyDeleteபழனியப்பன் , மஸ்கட்
பிரமாதம், இதில் தத்துவங்களையும் திணித்துவிட்டீர்களே பலே ஜோர்
ReplyDeleteஅன்புடன்
ராஜம் ஆனந்த்
/////Blogger kmr.krishnan said...
ReplyDelete'cell' joke is very nice.Thank you for sharing.////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger Spalaniappan Palaniappan said...
ReplyDeleteசெய்யும் தொழிலே தெய்வம் குட்டி கதை சூப்பர்
பழனியப்பன் , மஸ்கட்/////
நல்லது. நன்றி பழனியப்பன்!
/////Blogger Spalaniappan Palaniappan said...
ReplyDeleteஅய்யா, பஞ்ச உலோகம் விடுபட்டு விட்டதே ??!!!
பழனியப்பன் , மஸ்கட்/////
செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம்
ஆகிய ஐந்து உலோகங்களும் கலந்தது பஞ்சலோகமாகும்.
கலந்த பிறகுதான் அந்தப் பெயர். ஆகவே வரவில்லை!
/////Blogger Rajam Anand said...
ReplyDeleteபிரமாதம், இதில் தத்துவங்களையும் திணித்துவிட்டீர்களே பலே ஜோர்
அன்புடன்
ராஜம் ஆனந்த்//////
நல்லது. நன்றி!
அய்யா இனிய காலை வணக்கம் !!! 29/01/2016 .
ReplyDeleteஐந்து ( 5 ) அம்சங்களின் தொடர்ச்சி ...
எண் 5 க்குரிய கிரகம் - புதன் ( MERCURY ) பெயர் மாற்றம் செய்ய விரும்பும் பெரும்பாலோர் கூட்டு தொகை 5 எண் வரும் எண்ணில் அமைத்து கொள்கிறார்கள். ஏனனில் எண் 5 NEUTRAL NUMBER.
1. பஞ்ச கோசங்கள் : அன்னமய கோசம்,பிராணமய கோசம்,யநோமய கோசம், விஞ்ஞானமய கோசம், அன்னமய கோசம்.
2. வாயுக்கள் : நாகன், கூர்மன், கிரகரன், தேவதத்தன், தனஞ்செயன்.
3.பஞ்சவடீ : அரசு,வில்வம்,ஆல், நெல்லி, அசோகம்.
4.பஞ்ச அபிநயம் : கண், மணம், புருவம், கை, பாதம் அங்கங்களால் செய்யப்படும் அபிநயம் .
5. தமிழ் காப்பியங்கள் : சிலப்பதிகாரம்,மணிமேகலை, சீவக சிந்தாமணி,வளையாபதி, குண்டலகேசி.
6. மண் வகைகள் : குறுஞ்சி, முல்லை, மருதல், நெய்தல், பாலை.
7.இஸ்லாமியர் தொழுகை : பஜர், துகர், அசர், மக்ரீப், இஷா.
8.மன்மதன் அம்புகள் : தாமரை, அசோகம், மா, நவமல்லிகா,நீலோ த்பவம்.
9. பஞ்ச உற்சவம் : நித்ய, வார, பட்ச, மாத, வருஷ.
10. பஞ்ச வில்வம்: வில்வம், நொச்சி, விளா, மாவிலங்கை, கிளுவை ,
11. பஞ்ச மார்க்கம்: தாச மார்க்கம், சத்புத்ர மார்க்கம், சக மார்க்கம், சன் மார்க்கம், சண்ட மார்க்கம்,
12. பஞ்ச கங்கை : ரத்னா கங்கை, தேவ கங்கை, கைலாய கங்கை,உத்ர கங்கை, பிரம்ம கங்கை,
13.பஞ்சலிங்கம் :ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோ ஜாதம்.
14. பஞ்ச மூர்த்திகள் : விநாயகர், முருகன், சிவன் , உமையம்மை, சண்டேஸ்வரர்.
15. பஞ்ச சபை : ரத்தினசபை - திருவாலங்காடு, கனகசபை - சிதம்பரம், ரதஜ சபை - மதுரை, தாமிர சபை - திருநெல்வேலி, சித்ரா சபை - திருக்குற்றாலம்.
16.பஞ்ச கிருத்தியம் (தொழில்) : படைத்தல், காத்தல், அருளல்,அழித்தல்,மறைத்தல்.
17. பஞ்ச புலன்கள் :(ஞானேந்திரியங்கள்) மெய், வாய், கண், மூக்கு, செவி.
18. பஞ்சாட்சரம் : சிவயநம ( சிவயநம, யநமசிவ, மசிவயந, வயநமசி, நமசிவய .
19. பஞ்ச கவ்யம் : பால், தயிர்,நெய், நீர், கோமியம்.
20. சித்த மருந்து பரிபாஷைகள் : பஞ்ச சாதம், பஞ்ச திரவியம், பஞ்ச லவனம், பஞ்ச மூலம், பஞ்ச வாசம், பஞ்ச கவ்யம், பஞ்ச ரசம், பஞ்ச லோகம், ஐங்காயம் .
21.கர்மேந்திரியங்கள் : வாய், கை, கால், மலவாய்,கருவாய்.
22. தன் மாத்திரைகள் : சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம்.
23. அவஸ்தை : நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர் அடக்கம்,
24. ஐவுடம்புகள்: பருஉடல்,வளிவுடல், அறிவுடல், மனஉடல், இன்ப உடல்.
25. ஐந்தெழுத்தால் ஆனவை : அன்புடைமை, அறிவுடைமை, அறிவுடைமை, நெறியுடைமை,பண்புடைமை,நடுநிலைமை, திறனுடைமை, பொறையுடைமை, புகழுடைமை, பொதுவுடைமை , பழகுமுறை ....
26. சித்ரான்னம்: சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை,சம்பா மிளகு சாதம், தயிர் சாதம்.
அன்புடன்,
சோமசுந்தரம் பழனியப்பன்
மஸ்கட்