6.12.15

மெய்சிலிர்க்கவைத்த சென்னை!

மெய்சிலிர்க்கவைத்த சென்னை!

அமெரிக்காவில் வாழும் மக்களின்  உணர்வுகளை  மேலே உள்ள
படத்தில்  பாருங்கள்.
சந்திரசேகரன் சூரியநாராயண். 
-------------------------------------------------------------------------------------------------
2
எங்கும் தண்ணீர் என சென்னையில்
ஏங்கி தவிக்கும் மக்கள் மத்தியில்
 
ஏனோ தண்ணீர் என்றதும் உங்கள்
எண்ணம் எதையோ சொல்கிறதே....
 
உப்பு தண்ணீருக்கும் குடி தண்ணீருக்கும்
உட்கார்ந்து இருந்த நிலை மாறி... வீட்டிற்கு வெளியே
 
உட்காரும் நிலை வந்தது - இப்போது மழையால்
உண்மையில் அந்த பாதிப்பு உங்களுக்கு
 
இல்லை என்றாலும் அடுத்தவர் படும்
இன்னலை நோக்கும் போது மனமிறங்க கூடாதா?
 
உங்களிடம் நலம் விசாரிக்கும் நல்ல நண்பருக்கு
உதட்டளவிலாவது நன்றி சொல்ல கூடாதா?
 
மாறுபட்ட மனநிலையினால்
மக்களுக்கு பாடம் சொல்ல வந்த மழை
 
சொல்லும் பாடம் இன்னமுமா கற்கவில்லை
சொல்வது யாராக இருந்தாலும்
 
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கிய பொருள் கைப்பட வேண்டும் தானே
 
இயற்கை மட்டும் தான்
இங்கே எங்களுக்காக அழுகிறது
 
அதன் கண்ணீரில் நாங்கள்
அப்படியே மிதக்கிறோம் என்று
 
எண்ணியிருந்தோம்
எங்கிருந்து எல்லாமோ நண்பர்கள்
 
நலம் விசரிகின்றனர் சென்னை மழை பற்றி
நிஜமாகவே மெய்சிலிர்கிறது

மனிதநேயம் நிறைந்த நல்ல உள்ளங்களுக்கு
மனதார நன்றி சொல்கிறேன்
 
நாய் குரங்கு போன்ற விலங்குகள் மழை
நாளில் சாப்பாட்டிற்கு ஏங்குகிறதே
 
இறக்கமுள்ளவர்களே கொஞ்சம்
இவர்களுக்காகவும் செவி சாயுங்கள்
 
பிரச்சினைகள் உங்களைப் போட்டு
புரட்டி அழுத்தும்போதுதான்,
 
உங்களின் திறமை அதிகரிக்கும்.
உண்மையில் இது தான் உண்மை
 
இருட்டு என்று ஒரு பிரச்சினை
இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் நாம்
பயன்படுத்தும் வாகனம் உருவானது.
 
பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால்
பிறருக்கு நம் மூளையின் திறனை எவ்வாறு காட்டுவது?
 
எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச்
எப்போதும் சுவையாக அமைத்துத் தரமுடியும்.
 
நலமுடன் வாழ்க..
நன்மையே பெறுக

விசு அய்யர் 
========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12 comments:

  1. நன்றி.
    This picture from New York - Time square building.
    Cnn tv channel shows Chennai floods.
    Saidapet bridge over flowing, floods on airport etc..
    Tears came from my eyes after saw this.
    Checked all my friends and found they are save.
    thanks to GOD.
    Chandrasekaran Suryanarayanan

    ReplyDelete
  2. Respected Sir,

    Good and meaningful lines...especially last ten lines...

    Have a great sunday...

    With best regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. இழந்தவைகள் ஏராளம்
    இழந்தவர்கள் ஏராளம்

    மக்கள் இழந்தது எல்லாம்
    மறு பிறவி போல்

    இனி தொடக்கத்தில்
    இருந்து தொடங்க வேண்டும்..

    இந்த சென்னையின் சீரழிவுகளை
    இப்போ சரி செய்ய “சென்னை”

    என்ற இதன் பெயரை மறுபடியும் மெட்ராஸ்
    என்றே பெயர் மாற்றம் செய்ய வேண்டும்..

    ReplyDelete
  4. நமது அன்பு வகுப்பறைத் தோழர்கள் இருவரும் வெவ்வேறு கோண‌ங்களில் இருந்து வெள்ள நிலமை பற்றி எழுதியது மிகவும் சிறப்பு.

    தஞ்சையில் இருந்து சுமார் 9 லாரிகள் நிவாரணப் பொருட்கள் சென்றன.அதில் ஒரு லாரி எமது அருள் ஒளி அன்னதான அறக்கட்டளையின் சார்பில் அனுப்பப்பட்டது.5000 சப்பாத்திகளும் ,தக்காளித் தொக்கும், தண்ணீர் பாக்கெட்டுக்களும் எமது அறக்கட்டளையின் சார்பில் அளிக்கப்பட்டன.மேலும் பல அனபர்கள் அளித்த போர்வைகள்,பாய்கள், சேனடரி நாப்கின் போன்ற் அத்தியாவசியப் பொருட்களும் சிவனடியார்கள் 20 பேரும் லாரியில் சென்றனர்.
    கோட்டுர்புரத்தில் வினியோகம் நடந்ததாகத் தகவல் வந்தது.

    ஒரு சிறிய பகுதியை தத்து எடுத்து எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்ய‌ ஆவல். இறையருள் கூட்டி வைக்க வேண்டும்.

    கே.முத்துராமகிருஷ்ணன், ஆங்கரை, லால்குடி தாலுகா திருச்சி மாவட்டம்.
    kmrk1949@gmail.com

    ReplyDelete
  5. குரு வணக்கம்.
    சென்னை மழை இயற்கையின் ஒருவகைச் சீற்றம் என்றாலும் சுனாமியின் வன்மம் காணவில்லையேயொழிய சென்னை மக்களைப் புரட்டியெடுத்து விட்டது என்பதைக் கண்டு வெளிக் கண்களிலும், அகக் கண்களிலும் நோகாதவரிலர்!
    அதைத் தங்களின் பகிர்ப்பின் கீழ்க்கண்ட வரிகள் எங்கள் நெஞ்சைத் தொட்டன!!
    "எங்கிருந்து எல்லாமோ நண்பர்கள்
    நலம் விசாரிகின்றனர் சென்னை மழை பற்றி.நிஜமாகவே மெய்சிலிர்கிறது
    மனிதநேயம் நிறைந்த நல்ல உள்ளங்களுக்கு
    மனதார நன்றி சொல்கிறேன்"
    மக்களின் பல்வேறு விதமான இன்னல்களை விவரிக்க வார்த்தைகளில்லை!? ஏனெனில்
    ஒருவரை விட மற்றவர் கஷ்டம் வெகுவாக
    நம் நெஞ்சை நெருடுகிறது.
    ஆகவே, இறைவனால் மட்டுமே இவ்வின்னல்களைத் தக்க முறையில் நிவர்த்தி் செய்ய இயலும!?

    ReplyDelete
  6. வணக்கம் குரு,

    உதவும் நல் உள்ளங்களுக்கு நன்றி. செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பால் வீட்டினுள் நீர் புகுந்து அவதி பட்டதில் நானும் ஒருவன்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  7. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    நன்றி.
    This picture from New York - Time square building.
    Cnn tv channel shows Chennai floods.
    Saidapet bridge over flowing, floods on airport etc..
    Tears came from my eyes after saw this.
    Checked all my friends and found they are save.
    thanks to GOD.
    Chandrasekaran Suryanarayanan////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Good and meaningful lines...especially last ten lines...
    Have a great sunday...
    With best regards,
    Ravi-avn//////

    நல்லது. நன்றி அவனாசி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  9. /////Blogger வேப்பிலை said...
    இழந்தவைகள் ஏராளம்
    இழந்தவர்கள் ஏராளம்
    மக்கள் இழந்தது எல்லாம்
    மறு பிறவி போல்
    இனி தொடக்கத்தில்
    இருந்து தொடங்க வேண்டும்.
    இந்த சென்னையின் சீரழிவுகளை
    இப்போ சரி செய்ய “சென்னை”
    என்ற இதன் பெயரை மறுபடியும் மெட்ராஸ்
    என்றே பெயர் மாற்றம் செய்ய வேண்டும்../////

    உண்மைதான் எண் கணிதப்படி சென்னை என்ற பெயர் சரியில்லை! ஆட்சியாளர்களுக்கு யார் புரியவைப்பது? அதுதான் பிரச்சினை!

    ReplyDelete
  10. //////Blogger kmr.krishnan said...
    நமது அன்பு வகுப்பறைத் தோழர்கள் இருவரும் வெவ்வேறு கோண‌ங்களில் இருந்து வெள்ள நிலமை பற்றி எழுதியது மிகவும் சிறப்பு.
    தஞ்சையில் இருந்து சுமார் 9 லாரிகள் நிவாரணப் பொருட்கள் சென்றன.அதில் ஒரு லாரி எமது அருள் ஒளி அன்னதான அறக்கட்டளையின் சார்பில் அனுப்பப்பட்டது.5000 சப்பாத்திகளும் ,தக்காளித் தொக்கும், தண்ணீர் பாக்கெட்டுக்களும் எமது அறக்கட்டளையின் சார்பில் அளிக்கப்பட்டன.மேலும் பல அனபர்கள் அளித்த போர்வைகள்,பாய்கள், சேனடரி நாப்கின் போன்ற் அத்தியாவசியப் பொருட்களும் சிவனடியார்கள் 20 பேரும் லாரியில் சென்றனர். கோட்டுர்புரத்தில் வினியோகம் நடந்ததாகத் தகவல் வந்தது.
    ஒரு சிறிய பகுதியை தத்து எடுத்து எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்ய‌ ஆவல். இறையருள் கூட்டி வைக்க வேண்டும்.
    கே.முத்துராமகிருஷ்ணன், ஆங்கரை, லால்குடி தாலுகா திருச்சி மாவட்டம்.
    kmrk1949@gmail.com//////

    உங்களின் சமூக சேவைகளுக்கு எனது மனம் உவந்த பாராட்டுக்கள் கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  11. /////Blogger வரதராஜன் said...
    குரு வணக்கம்.
    சென்னை மழை இயற்கையின் ஒருவகைச் சீற்றம் என்றாலும் சுனாமியின் வன்மம் காணவில்லையேயொழிய சென்னை மக்களைப் புரட்டியெடுத்து விட்டது என்பதைக் கண்டு வெளிக் கண்களிலும், அகக் கண்களிலும் நோகாதவரிலர்!
    அதைத் தங்களின் பகிர்ப்பின் கீழ்க்கண்ட வரிகள் எங்கள் நெஞ்சைத் தொட்டன!!
    "எங்கிருந்து எல்லாமோ நண்பர்கள் நலம் விசாரிகின்றனர் சென்னை மழை பற்றி.நிஜமாகவே மெய்சிலிர்கிறது
    மனிதநேயம் நிறைந்த நல்ல உள்ளங்களுக்கு மனதார நன்றி சொல்கிறேன்"
    மக்களின் பல்வேறு விதமான இன்னல்களை விவரிக்க வார்த்தைகளில்லை!? ஏனெனில்
    ஒருவரை விட மற்றவர் கஷ்டம் வெகுவாக நம் நெஞ்சை நெருடுகிறது.
    ஆகவே, இறைவனால் மட்டுமே இவ்வின்னல்களைத் தக்க முறையில் நிவர்த்தி் செய்ய இயலும!//////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  12. /////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு,
    உதவும் நல் உள்ளங்களுக்கு நன்றி. செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பால் வீட்டினுள் நீர் புகுந்து அவதி பட்டதில் நானும் ஒருவன்.
    நன்றி
    செல்வம்/////

    சென்னையின் எந்தப் பகுதி? இப்போது நீர் வடிந்துவிட்டதா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com