15.12.15

நகைச்சுவை: சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?



நகைச்சுவை: சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பார்க்கவும்.

சென்னை வாசகர்கள், குறிப்பாக வேப்பிலை சுவாமிகள். மற்றும் நிவாரணத்தை எதிர் நோக்கி காப்பகங்களில் இருக்கும் வாசகர்கள்
எல்லாம் இந்தப் பதிவைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மற்றவர்கள் தாராளமாகப் படிக்கலாம்

கீழே உள்ளவை வாட்ஸப்பில் வந்தவையாகும். உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------
விடிய விடிய டீவி ஓடினாலும் அதால ஒரு இன்ச் நகர முடியுமா?
 _______________________________________________________________________________
சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?

சிவகாசியில காச கரியாக்குவாங்க! நெய்வேலில கரிய காசாக்குவாங்க!!
________________________________________________________________________
சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும். ஆனா,
முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.
அதுனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!
- எப்படி எப்படியோ யோசிப்போர் சங்கம் ______________________________________________________________________
Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்!
ஆனா,
பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே!!
கொஞ்சம் யோசிங்க!!!
- பிரியாணி வாங்க காசு இல்லாத வாலிபர்கள் சங்கம்
_____________________________________________________________________
ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க.
அப்ப,
பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?
______________________________________________________________________
ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும்.
ஆனா
Screw டிரைவரால Screw ஓட்ட முடியுமா?
____________________________________________________________________
வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துன்பம் வரலாம்.
ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ!
1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 11 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
தெரிஞ்சுகிட்டியா?
________________________________________________________________________
சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார்.. நான் ' மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்..
_________________________________________________________________________
நீ என்னை ஒவ்வொரு முறை கடந்து செல்லும்பொழுதும் என் இதய துடிப்பு அதிகரிக்கிறது
ஆயிரம் மடங்கு!
ஏன் தெரியுமா?
 சாதரணமா பேய் கடந்து போனா அப்படிதான் ஆகும்.
----------------------------
நெப்பொலியன் : 'முடியாது'ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.
சர்தார்ஜி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை.
அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.
___________________________________________________________________
டீக்கடைக்காரர் கபடி விளையாண்டால்,
எப்டி எப்டி விளையாடுவார்?
கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ , கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, .........
__________________________________________________________________
தில்லு இருந்தா எஸ்.எம்.எஸ் அனுப்புங்க
அன்பு இருந்தா பிக்சர் மெஸெஜ் அனுப்புங்க
காசு இருந்தா கால் பண்ணுங்க
எல்லாம் இருந்தா உங்க செல்ல கூரியர்ல அனுப்புங்க
By
எப்படி எப்படியோ யோசிப்போர் சங்கம்.
✌REALLY TRUE✌
தத்துவம் சொல்லி நாளாச்சி…
🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊
தண்ணீர் மேல
படகு போனா உல்லாசம்.
ஆனா,
படகு மேல தண்ணீர்
போனா கைலாசம்.
நெக்ஸ்டு
🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲
Back
வீலு எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
Front வீல ஓவர்டேக் பண்ண முடியாது.
அப்புறம்
🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻
டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம்
வரும்.
10 பீர் சாப்பிட்டா,,,,,,,,,
தூக்க ஆள் வரும்.
ரைட்டு…
🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵
பாயாசம் 10 நாள் கழிச்சி பாய்சன்
ஆயிடும்
ஆனா,
பாய்சன் 10 நாள் கழிச்சி பாயாசம்
ஆகுமா?
அடுத்து
💉💊💉💊💉💊💉💊💉💊💉💊
என்னதான் MBBS படிச்சி டாக்டர்
ஆனாலும் கம்ப்யுட்டர்ல
இருக்கற
வைரசுக்கு மாத்திரை குடுக்க
முடயுமா? ,,, யோசிப்பா, யோசி,
last ஆ ஒன்னு சொல்லிக்கறேன்.
REALLY   REALLY  TRUE ☝☝☝☝
📝📔📝📔📝📔📝📔📝📔📝📔📝
பரிட்சைல பெயில் ஆனா திரும்ப
படிச்சி பாஸ் பண்ணலாம்.
ஆனா,
பாஸ் ஆயிட்டா. திரும்ப
படிச்சி பெயில் ஆக முடியாது.
நல்லா தெரிஞ்சிக்கிட்டீங்களா ????
😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜
குரூப்ல கலாட்டா இருக்கும்
கலாட்டால குரூப் இருக்க
முடியாது
ஷோஃபாவில் படுத்து
யோசிப்போர் சங்கம்
================================================
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்‬ வேட்டையாடும் காவல்துறையின் கண்டிப்பு மேலும் விரிவடைய விரும்புகிறேன்.

1. பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால் சராசரியாக 110 பேர்வரை திணிக்கப்படுகின
்றனர். படிக்கட்டில் மட்டும் 18 பேர் தொங்கவிடப்படுகின்றனர். சட்டத்தை அமல் செய்தால் ஈரோட்டிற்க்கு மட்டும் புதிதாக 250
பஸ் விடவேண்டும்.

2. ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான். சட்டப்படி ரயில் செனறால் முதல் பெட்டி திருப்பூரிலும் கடைசிப்பெட்டி ஈரோட்டிலும் தான் நிற்கும்.

3. சந்துபொந்தெல்லாம் நின்று ஹெல்மெட் வேட்டையாடிய காவல்துறை தனது கவனத்தை டாஸ்மாக் மீது திருப்பினால் என்னாகும்.
அரசாங்கம் தள்ளாடிப்போகும்.

4. ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும் பத்து போலீஸ் நின்றால் லஞ்சம் கேட்க முடியுமா?

5. ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரிபஸ் ஒருநாள் கூட ஓடாது.

6. Share Auto வில் 22 பேரை ஏத்தறாங்க. தடுக்கலாமே?

7. அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்வி கேட்டா படம் தெரியுமா மக்களுக்கு. தடுக்கலாமே?

8. Point to point Lss Express அடடா. கட்டணக்கொள்ளையை இரண்டே நாளில் அரசு தடுக்கலாமே?

9. ஸ்டாம்ப் பேப்பர் 20% அதிகவிலை.ஒரு நாள் போதுமே.தடுத்து விடலாம். பாவம் அப்பாவி பொதுமக்கள். பஸ்ஸுல 2ரூபாய் சில்லறை வாங்காம
இறங்கக்கூடாதுன்னு தூங்காமயே வர்றான் பொது ஜனம். 30 ரூபாய் டிக்கெட் 90ரூபாய். online book செஞ்சா மேலும் ரூபாய் 20. Cyber Crime ல கேஸ் போடலாமா தியேட்டர்காரன் மேல? வாங்க போலீஸ்... பிடிக்கலாம்.
--------------------------
எப்படிப்பட்ட கேப்மாரித்தனம் / மொள்ளமாரித்தனம் !?! ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் ...
ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின் சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...

பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர் பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம் கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...
தவறான மருத்துவத்தால் பல பேர் பலியாகியும் மருத்துவம் கொடுத்த மருத்துவர்களின் சான்றிதழ்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...

ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் ...

மலைகளே காணாமல் போகும் அளவிற்கு கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்யமாட்டார்கள் ..
.
"மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும் ஹெல்மெட்டுக்காக உங்கள் இருசக்கர வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல்
செய்யப்படுமாம்" ... என்ன சுவாமி நியாயம்?
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9 comments:

  1. "படகு தண்ணீர்ல் மிதக்கலாம்;பட‌குக்குள் தண்ணீர் வரக்கூடாது."
    இது ஜோக் அல்ல. ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழி.

    ReplyDelete
  2. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    அனைத்துமே அருமை!சிரிக்கவும், சிந்திக்கவும்!!!
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  3. குரு வந்தனம்.
    நகைச்சுவை அனைத்துமே சிரிப்பு மழை நிறைந்துள்யது. வாய்விட்டு சிரிக்க சில,மனதிற்குள் சிரிக்க சில என்றுள்ளது.
    "ஹெல்மெட் கட்டாயபம்" பற்றிய உயர்நீ
    திமன்ற உத்திரவையொட்டி 'காவல்துறை
    எப்படியெல்லாம் கண்டிப்பாக இருக்கலாம்' என்ற சித்தரிப்பு படுஜோர்
    ஆக, இன்றைய பதிவுகட்கு எங்களது
    விமரிசனம் *படுஜோர்*!

    ReplyDelete
  4. ராகு, கேது பெயர்ச்சி பலன்கள் பற்றி விளக்கம் தரவும்.
    coming january 8th is rahu, kethu peyarchi. caould you please explain remedies on each rasi for your students. this is my humble request.

    ReplyDelete
  5. ////////Blogger kmr.krishnan said...
    "படகு தண்ணீர்ல் மிதக்கலாம்;பட‌குக்குள் தண்ணீர் வரக்கூடாது."
    இது ஜோக் அல்ல. ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழி./////

    அப்படியா? அறியத்தந்தமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. ////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    அனைத்துமே அருமை!சிரிக்கவும், சிந்திக்கவும்!!!
    அன்புடன்,
    -பொன்னுசாமி./////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  7. /////Blogger வரதராஜன் said...
    குரு வந்தனம்.
    நகைச்சுவை அனைத்துமே சிரிப்பு மழை நிறைந்துள்யது. வாய்விட்டு சிரிக்க சில,மனதிற்குள் சிரிக்க சில என்றுள்ளது.
    "ஹெல்மெட் கட்டாயபம்" பற்றிய உயர்நீ
    திமன்ற உத்திரவையொட்டி 'காவல்துறை
    எப்படியெல்லாம் கண்டிப்பாக இருக்கலாம்' என்ற சித்தரிப்பு படுஜோர்
    ஆக, இன்றைய பதிவுகட்கு எங்களது
    விமரிசனம் *படுஜோர்*!//////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  8. /////Blogger C.Senthil said...
    ராகு, கேது பெயர்ச்சி பலன்கள் பற்றி விளக்கம் தரவும்.
    coming january 8th is rahu, kethu peyarchi. caould you please explain remedies on each rasi for your students. this is my humble request.//////

    பெயர்ச்சிகளைக் கண்டு அயர்ச்சி கொள்ளாதீர்கள். மகாதிசைகளையும் புத்திகளையும் மாட்டுமே பார்த்துக்கொண்டு வாருங்கள். அது போதும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com