சகலமும் தருவார் தணிகை முருகன்!!!
பக்தி மலர்
திருத்தணி முருகன் கோயில்
திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி மலையில் அமைந்துள்ளது
இந்தக் கோயில். ஆண்டின் 365 நாட்களையும் குறிக்கும்படியாக
365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். இக்கோயில்
அறுபடை வீடுகளில் ஒன்று. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால்
பாடல் பெற்ற தலமிது.
முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை
முருகன் கோயில் என்றும் அழைப்பார்கள்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருத்தணி. அரக்கோணத்தில்
இருந்து 18 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தூரத்திலும்
இருக்கிறது. இது தொண்டை நாடு என்ற பகுதியில் உள்ளது. தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து
தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர்புரிந்து, கோபம் தணிந்து அமர்ந்த தலம்
திருத்தணிகை. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம். அடியார்களின் துன்பம்,
கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடம்
இத்திருத்தலம்.
திருத்தணி முருகன் கோவில் மிகவும் பழமையானது. அருணகிரிநாதர் இத்தலத்தை போற்றி 63 திருப்பாடல்களை பாடினார். இத்தலம் 600
ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்று இருந்திருக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவ, சோழ மன்னர்களால் இத்தலம் போற்றப்பட்டுள்ளது
என தெரிகிறது. பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் ராமலிங்க
அடிகள், கந்தபைய தேசிகர், கச்சியப்ப முனிவ கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் அருணகிரிநாதர் முதலிய சான்றோர்கள் திருத்தணி முருகனை பெரிதும் புகழ்ந்துள்ளனர்.
சங்க காலப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் இக்கோயில் குறித்த குறிப்புகள் காணப்படுகிறது. இக்கோயில் விசய
நகர மன்னர்களாலும், உள்ளூர் நிலக்கிழார்களாலும் பேணப்பட்டு வந்தது.
ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகை மற்றும் மாசிக் கிருத்திகை முதலிய சிறப்பு நாட்களில் திருத்தணியில் பக்தகோடிகள் பூ காவடி, பால் காவடி
ஆகிய பிரார்த்தனையை செலுத்துகின்றனர். நூற்றுக்கணக்கான திருப்புகழ் சபையினர் பக்தி பாடல்களை பாடிக்கொண்டும், முருகன் திருநாமங்களை
சொல்லிக்கொண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏறும்போது, பக்தியில்லாதவனுக்குக் கூட திருத்தணி முருகன் மீது பக்தியை
உண்டாக்கி பரவசப்படுத்தும். சிவபெருமான், திருமால், ஸ்ரீராமர்,
பிரம்மதேவர், கலைமகள் ஆகியோரும் திருத்தணி முருகனை
வணங்கி வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
திருத்தணிக்கு செல்லும் பக்தர்கள் முதலில் சரவண பொய்கையில்
நீராட வேண்டும். தோய்த்து உலர்ந்த ஆடை அணிந்து, திருநீறு பூசி உத்திராட்சம் போன்ற சிவசின்னங்களை அணிந்து, பக்தியுடன் மலை ஏறவேண்டும். மலை ஏறும்போது திருப்புகழ் பாடல்களை பாடுவது
சிறப்பு. மலை உச்சியை அடைந்ததும் கிழக்கு பிரகாரத்தில் உள்ள
கொடிக்கம்ப விநாயகரையும், ஐராவத யானையையும் தரிசிக்க வேண்டும். பின்னர் தெற்கில் உள்ள இந்திர நீலச் சுனையை தரிசித்துவிட்டு
கோயிலுக்குள் சென்று ஆபத்சகாய விநாயகர், அருகில் உள்ள வீரவாகு முதலிய நவ வீரர்கள், குமாரலிங்கேஸ்வரரை வணங்க வேண்டும்.
பின்னர் மூலஸ்தானத்தில் உள்ள ஞானசக்திதரர் என்னும் முருகனையும், வள்ளி தெய்வானை அம்மையாரையும் வழிபடுதல் வேண்டும். முருகன்
சன்னதியில் திருநீறு, குங்குமப் பிரசாதங்களுடன் திருமேனிப் பூச்சு
என்னும் சந்தனமும் வழங்கப்படும். இதை உட்கொண்டால் சகல
விதமான நோய்களும் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும்.
சிறப்பான வசதிகள்
தமிழகத்தின் வடக்கு எல்லையாக விளங்கும் ஊர் திருத்தணி. முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடு என்ற பெருமை இத்தலத்துக்கு உண்டு. முருகப் பெருமானின் சக்தி வாய்ந்த திருத்தலங்களில் ஒன்று. இந்த கோயிலில் அமைந்திருக்கும் தங்க விமானம், கோயிலின் சிறப்பை
மேலும் மெருகேற்றியுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த
ஆண்டைவிட இந்த ஆண்டில் ஆடி கிருத்திகை தெப்ப திருவிழாவுக்கு அதிகளவில் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இங்கு அமைந்துள்ள
இலவச தங்கும் விடுதி, நவீன வசதிகளுடன் கூடிய கோயில் காட்டேஜ் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக இருப்பதால் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து திருத்தணி முருகனின் அருள்
பெற்று செல்கின்றனர்.
சகலமும் தரும் முருகன்
ஆடிக்கிருத்திகை நன்னாளில் திருத்தணி முருகனை வழிபடுதல் சாலச்சிறந்தது. திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று அர்ச்சித்து
இருநெய் விளக்கை முருக பெருமானுக்கு ஏற்றி வழிபாடு செய்வதன்
மூலம் சகல நன்மைகளையும் பெறலாம். முருகப் பெருமானுக்கு உகந்த
இந்த ஆடிக்கிருத்திகை நாளில் மனமுருக வேண்டினால் நல்ல வேலை கிடைக்கும், விவசாயம் மேன்மையடையும், உயர் அதிகாரத்தில்
உள்ளவர்கள் மேலும் சிறப்படைவார்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கும்,
உடல் ஆரோக்கியம் பெருகும், நல்ல வாழ்க்கைத்துணை அமையும்,
மக்கள் செல்வம், பொருட்செல்வம், அருட்செல்வம் என அனைத்தும் கிடைக்கும்.
திருவிழாக்கள்
டிசம்பர் 31 - படித்திருவிழா
ஆடிக்கிருத்திகை
கந்தசஷ்டி
பங்குனி உத்திரம்
தைப்பூசம்
ஆடித் தெப்பத் திருவிழா
இதுவரை திருத்தணிக் கோயிலுக்கு சென்றிருக்காதவர்கள் ஒருமுறை சென்றுவாருங்கள். தணிகை நாதரின் அருளைப் பெற்றுவாருங்கள்!
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Good article Sir. Thank you Sir.
ReplyDeleteஐயா
ReplyDeleteதங்களின் இறை (முருக) பக்தி மிக நன்று.
இறை நம்பிக்கையுள்ளவரை இறைவன் ஒருபோதும் கைவிடுவதில்லை.
(நம்பினார் கெடுவதில்லை).
தரிசிக்க வேண்டிய கோயில்கள் பட்டியல் சொல்லில் அடங்கா.
முதலில் குடும்ப கடமைகள் முடியட்டும். முறையாக விரும்பிய கோயில்கள்
அனைத்தையும் தரிசிக்க அந்த ஆண்டவன் வழி சமைப்பான் என்ற நம்பிக்கையுடன்...
அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
ReplyDeleteநன்றியுடன்,
-பொன்னுசாமி.
இந்த செய்தி கூடுதலாக இருக்கட்டுமே...
ReplyDeleteஇங்கு சுவாமிக்கு யானை வாகனம்
ஏற்றி செல்கிறேன் வாருங்கள்
என்று சொல்வது போல் யானை
எதிர் திசையில் இருக்கும்
ஏதாவது பிரார்த்தனை இருந்தால்
அதிகாலை தரிசனம்
அதை நிறைவேற்றி வைக்கும்.
இரவு பள்ளியறை பூஜை முடிந்ததும்
இவர் வள்ளியிடமிருந்து வந்தால்
அந்த பிரார்த்தனை வெற்றியுடன் நிறைவேறும்
அப்படி ஒரு நம்பிக்கை இன்னமும் இருக்கிறது
இதில் உண்மையும் இருக்கிறது என
இப்படி உணர்ந்தவர் சொல்வார்கள்.
படிக்கட்டு பாதையும் உண்டு...
பஸ் வழி பாதையும் உண்டு..
தங்க கவசத்தில் முருகன் இருப்பது
தகவலின் படி அரசு கோவிலில் இங்குமட்டுமே
இப்போது 9 நிலை கோபுரம்
இந்த திருப்பணி நடை பெற்றுவருகிறது.
முருகா என்று இரண்டு முறை கூப்பிட்டால்போதும்
மூன்றாவது முறை கூப்பிட்டால் வந்து விடுவான்
என்று வாரியார் சுவாமிகள்
எப்போதும் சொல்வார்கள்
முருகன் அருள்
முன் நிற்கும்
Respected Sir,
ReplyDeleteHoly friday... Muruga...Muruga..Muruga....
With best regards,
Ravi-avn
ஐயா வணக்கம்
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி ஐயா
பதிவை படித்த பிறகு தணிகை நாதரின் அருளை பெற கண்டிப்பாக சென்று வருகிறோம் .
கண்ணன்.
குரு வணக்கம்.
ReplyDeleteதிருத்தணி வாழ் வள்ளி, தேவயானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமியை பக்தி மலரில் தந்து, எங்கள் மனக்கண் முன்னே அக்குமரனை நிறுத்திய தங்களின் கருணைக்கு வகுப்பறை மாணலக் கண்மணிகள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி, கோடிக்கணக்கில்! ஏற்கவும், குருவே!!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteGood article Sir. Thank you Sir./////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger Mrs Anpalagan N said...
ReplyDeleteஐயா
தங்களின் இறை (முருக) பக்தி மிக நன்று.
இறை நம்பிக்கையுள்ளவரை இறைவன் ஒருபோதும் கைவிடுவதில்லை.
(நம்பினார் கெடுவதில்லை).
தரிசிக்க வேண்டிய கோயில்கள் பட்டியல் சொல்லில் அடங்கா.
முதலில் குடும்ப கடமைகள் முடியட்டும். முறையாக விரும்பிய கோயில்கள்
அனைத்தையும் தரிசிக்க அந்த ஆண்டவன் வழி சமைப்பான் என்ற நம்பிக்கையுடன்.../////
என்றைக்கு அலை ஓய்வது? என்றைக்குக் கடலில் குளிப்பது?
குடும்பக் கடமைகளுக்கு நடுவே போய் வரவேண்டியதுதான் சகோதரி!
/////Blogger GOWDA PONNUSAMY said...
ReplyDeleteஅன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
நன்றியுடன்,
-பொன்னுசாமி./////
நல்லது நன்றி பொன்னுசாமி அண்ணா!
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteமுருகா.. முருகா..////
கந்தா, கடம்பா, கதிர்வேலா, கார்த்திகேயா.....
வருவாய்...அருள்வாய்!
Blogger வேப்பிலை said...
ReplyDeleteஇந்த செய்தி கூடுதலாக இருக்கட்டுமே...
இங்கு சுவாமிக்கு யானை வாகனம்
ஏற்றி செல்கிறேன் வாருங்கள்
என்று சொல்வது போல் யானை
எதிர் திசையில் இருக்கும்
ஏதாவது பிரார்த்தனை இருந்தால்
அதிகாலை தரிசனம்
அதை நிறைவேற்றி வைக்கும்.
இரவு பள்ளியறை பூஜை முடிந்ததும்
இவர் வள்ளியிடமிருந்து வந்தால்
அந்த பிரார்த்தனை வெற்றியுடன் நிறைவேறும்
அப்படி ஒரு நம்பிக்கை இன்னமும் இருக்கிறது
இதில் உண்மையும் இருக்கிறது என
இப்படி உணர்ந்தவர் சொல்வார்கள்.
படிக்கட்டு பாதையும் உண்டு...
பஸ் வழி பாதையும் உண்டு..
தங்க கவசத்தில் முருகன் இருப்பது
தகவலின் படி அரசு கோவிலில் இங்குமட்டுமே
இப்போது 9 நிலை கோபுரம்
இந்த திருப்பணி நடை பெற்றுவருகிறது.
முருகா என்று இரண்டு முறை கூப்பிட்டால்போதும்
மூன்றாவது முறை கூப்பிட்டால் வந்து விடுவான்
என்று வாரியார் சுவாமிகள்
எப்போதும் சொல்வார்கள்
முருகன் அருள்
முன் நிற்கும் ////
நல்லது. மேலதிகத் தகவல்களுக்கு நன்றி வேப்பிலையாரே!
///Blogger lrk said...
ReplyDeleteஐயா வணக்கம்
தகவல்களுக்கு நன்றி ஐயா
பதிவை படித்த பிறகு தணிகை நாதரின் அருளை பெற கண்டிப்பாக சென்று வருகிறோம் .
கண்ணன்.////
நல்லது. சென்று வாருங்கள் அருளைப் பெற்று வாருங்கள்!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Holy friday... Muruga...Muruga..Muruga....
With best regards,
Ravi-avn/////
நல்லது. நன்றி அவனாசி ரவிச்சந்திரன்!
///Blogger வரதராஜன் said...
ReplyDeleteகுரு வணக்கம்.
திருத்தணி வாழ் வள்ளி, தேவயானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமியை பக்தி மலரில் தந்து, எங்கள் மனக்கண் முன்னே அக்குமரனை நிறுத்திய தங்களின் கருணைக்கு வகுப்பறை மாணலக் கண்மணிகள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி, கோடிக்கணக்கில்! ஏற்கவும், குருவே!!/////
உங்களின் மேலான அன்பிற்குத் தலை வணங்குகிறேன். நன்றி வரதராஜன்!
ஸ்ரீ.முத்துசுவாமி தீட்சதர் அவர்கள் பாடிய முதல் கீர்த்தனை திருத்தணி முருகர் மீது " ஸ்ரீ நாதாதி குரு குஹோ " என்ற பாடல் மாயாமாளவ கொள ராகத்தில்.
ReplyDeleteமேலும் நிறைய கீர்த்தனைகள் திருத்தணி முருகர் மீது பாடி உள்ளார் .
அருணகிரிநாதர் திருத்தணி முருகர் மீது பாடிய திருப்புகழ் பாடலில் உள்ள ஒரு பகுதி இதோ ..
பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
படிமீது துதித்துடன் வாழ ...... அருள்வேளே
பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு
பவரோக வயித்திய நாத ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
பலகாலும் உனைத்தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி ...
பன்முறையும் உன்னை வணங்குபவர்கள், மறக்காமல் உன் திருப்புகழைப் பாடி
படிமீது துதித்து உடன் வாழ அருள்வேளே ...
இவ்வுலகிலே உன்னைத் துதிசெய்து உன்னுடனேயே எப்போதும் இருந்து
வாழும்படியாக அருளும் செவ்வேளே,
சிவலோக மெனப்பரி வேறு ...
இதுவே பூலோகத்தில் உள்ள சிவலோகம் என்ற அன்பை உண்டாக்கத்தக்க
பதியான திருத்தணி மேவு ...
திருத்தலமாகிய திருத்தணிகையில் வாழ்கின்ற,
பவரோக வயித்திய நாத பெருமாளே. ...
பிறவிப் பெரு நோயைத் தீர்க்கவல்ல, வைத்தியநாதப் பெருமாளே.
திருப்புகழ்: நன்றி: கொளமரம் ..
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteஸ்ரீ.முத்துசுவாமி தீட்சதர் அவர்கள் பாடிய முதல் கீர்த்தனை திருத்தணி முருகர் மீது " ஸ்ரீ நாதாதி குரு குஹோ " என்ற பாடல் மாயாமாளவ கொள ராகத்தில்.
மேலும் நிறைய கீர்த்தனைகள் திருத்தணி முருகர் மீது பாடி உள்ளார் .
அருணகிரிநாதர் திருத்தணி முருகர் மீது பாடிய திருப்புகழ் பாடலில் உள்ள ஒரு பகுதி இதோ ..
பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
படிமீது துதித்துடன் வாழ ...... அருள்வேளே
பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு
பவரோக வயித்திய நாத ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
பலகாலும் உனைத்தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி ...
பன்முறையும் உன்னை வணங்குபவர்கள், மறக்காமல் உன் திருப்புகழைப் பாடி
படிமீது துதித்து உடன் வாழ அருள்வேளே ...
இவ்வுலகிலே உன்னைத் துதிசெய்து உன்னுடனேயே எப்போதும் இருந்து
வாழும்படியாக அருளும் செவ்வேளே,
சிவலோக மெனப்பரி வேறு ...
இதுவே பூலோகத்தில் உள்ள சிவலோகம் என்ற அன்பை உண்டாக்கத்தக்க
பதியான திருத்தணி மேவு ...
திருத்தலமாகிய திருத்தணிகையில் வாழ்கின்ற,
பவரோக வயித்திய நாத பெருமாளே. ...
பிறவிப் பெரு நோயைத் தீர்க்கவல்ல, வைத்தியநாதப் பெருமாளே.
திருப்புகழ்: நன்றி: கொளமரம் ..//////
திருத்தணி முருகன் மீது அருணகிரியார் பாடிய திருப்புகழ் பாடல் ஒன்றைக் கொடுத்து கட்டுரைக்கு வலு சேர்த்த மேன்மைக்கு நன்றி நண்பரே!