28.11.15

Humour: நகைச்சுவை: காக்காய் கத்துவதற்கும் அம்மா கத்துவதற்கும் என்ன வித்தியாசம்?

Humour: நகைச்சுவை: காக்காய் கத்துவதற்கும் அம்மா கத்துவதற்கும் என்ன வித்தியாசம்?

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்!
----------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------
2
---------------------------------------------------------------------------------------------------------------------
3

----------------------------------------------------------------------------------------------
4
என்ன நடக்கிறது?

ரயிலை ஓட்டி வந்த டிரைவர், லெவல் கிராஸிங்கில் ரயிலை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று, அருகே இருக்கும் கடையொன்றில் மீன் வாங்கிக் கொண்டு வந்துவிட்டு, ரயிலில் ஏறி மீண்டும் தன் பயணத்தைத் தொடர்கிறார்.

காணொளியில் உள்ளது. நீங்களே பாருங்கள்!

இது தப்பில்லையா?

நம் நாட்டில் எதுவுமே தப்பில்லை! நாம்தான் சகிப்புத்தன்மையோடு இதை எல்லாம் பார்க்க வேண்டும். மேலும் எதிர்கொள்ள வேண்டும்!

எல்லாமுமே சிரிப்பதற்கு என்றால் எப்படி? கொஞ்சம் சோகத்திற்காக ஒரு செய்தி. கீழே உள்ள பதிவைப் பாருங்கள்
----------------------------------------------------------------
Week end post: சென்னையில் மெட்ரோ ரயில் மாதிரி மெட்ரோ போட் வசதி!

சென்னை நகரத்தில் போட் வசதியா? என்ன சொல்கிறீர்கள் என்று கேட்காமல் கீழே உள்ள காணொளியைப் பாருங்கள்!

--------------------------------------------------------------------------------------------------
எது நன்றாக உள்ளது?
அன்புடன்,
வாத்தியார்
==============================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

  1. சென்ற பதிவில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு எனக்கு தெரிந்ததை சொல்ல நினைத்தேன். அடுத்த பதிவும் வந்து விட்டதால் இதில் போடுகிறேன். அதிகப் பிரசங்கித்தனமாக பதில் எழுதுகிறோமோ என்றும் ஒரு நெருடல். வாத்தியார் மன்னிப்பாராக.

    /////Blogger C.Senthil said...
    அய்யா,
    நான் தினமும் சாமி கும்பிட தவற மாட்டேன், ஆனால் எனது அப்பத்தா சென்ற வாரம் இறந்த காரணத்தினால் 30 நாள்கள் முடியும் வரை கோயிலுக்கு செல்ல கூடாது என்றும், சாமி தரிசனம் செய்ய கூடாது என்றும் கூறி விட்டார்கள். ஆனாலும் எனது சிந்தனை ஆண்டவனை நினைக்காமல் இருந்தது இல்லை. "ஆண்டவனை வணங்குவது தீட்டு என்றால் ஆண்டவனை நினைப்பதும் தீட்டு தானே".
    மனிதன் பிறந்தாலும் தீட்டு, இறந்தாலும் தீட்டு பற்றி விளக்குங்கள்.
    "சிரமத்திற்கு மன்னிக்கவும".//////

    சகோதரர் செந்தில் அவர்களுக்கு;
    தீட்டு என்பது உடலுக்கே, மனதிற்கு அல்ல. ஒரு காலத்தில் இதன் அர்த்தங்களை முழுமையாக உணர்ந்த பெரியவர்கள் இருந்தனர். இன்றைய சூழ்நிலையில் யாராலும், எந்தையும் சரிவர நினைவு கூரவோ, விளங்கிக் கொள்ளவோ முடிவதில்லை.
    உதாரணத்திற்கு பெண்கள் விலக்காவதை தீட்டு என்பர். அது 5 நாட்கள் வரையிலுமே. அந்த நாட்களில் கோயிலுக்கோ, ஏன் வீட்டு பூஜை அறைக்கோ பெண்கள் செல்வதில்லை. ஆனால் இருக்கும் அறையிலிருந்து நன்றாகவே இறைவனை மனதார கும்பிடலாம். ஆனால் அதற்கு உடல் நிலை பலருக்கும் ஏற்பதாகவும் இருப்பதில்லை. அவ்வளவே.
    இதே போல், குழந்தை பிறந்ததும் தீட்டு. அது இப்படி 30 நாளைக்கே (ஏறக்குறைய 30 நாள் வீட்டு விலக்காகும் நிலை) வரும். தாயோ, சேயோ (தாயுடன் தினமும் அதிகம் உறவாடுவதாலும், தொப்புள் கொடி காயாமல் இருக்கலாம் என்பதாலும்) உடல் வழி தீட்டு உடையவர்களாகின்றனர்.

    அதே போல் தான் இறந்த வீட்டு தீட்டும்; இறந்தவரின் வீட்டிலுள்ளவர்களுக்கும், ஆண்வழி சொந்தங்களுக்கும் (இறந்தவரின் உடலுக்கு ஆண் சொந்தங்களே கருமங்களை செய்வதால்), இந்த தீட்டு 30 நாள் வரும். காரணம் இறந்த உடலானது எதிர்ப்பு சக்தியை இழப்பதாலும், இறந்தவர் நோய் வாய்ப்பட்டு இறந்திருந்தாலும், இறந்த உடலில் இலகுவில் நோய் கிருமிகள் தொற்று ஏற்பட்டு விடுவதாலும், அவருடன் நெருங்கிய சொந்தங்களுக்கு இந்த தீட்டு 30 நாள் இருப்பதாக சொல்லி கட்டுப்பாடு ஏற்படுத்தப் பட்டது. 30 நாட்களின் பின் இந்த கிருமிகள் வீரியம் குறைந்து விடும் என்ற நம்பிக்கை, அல்லது அவற்றினால் பாதிப்பில்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டு விடும்.

    இந்த முறையிலேயே தீட்டு என்பது ஏற்படுத்தப் பட்டு, தீட்டு உள்ளவர்கள் பொது மக்கள் அதிகம் புழங்கும் தூய்மையான இடங்களாக கருதப்படும் இடங்களுக்குள் அனுமதிக்கப்படுவது தடுக்கப்பட்டது.

    தீட்டு என்பது உடலுக்கே தவிர உள்ளத்திற்கல்ல. இறைவனை 24/7 நினைப்பதற்கோ, துதிப்பதற்கோ தடை ஏதுமில்லை. அவர் தான் தூணிலும், துரும்பிலும் இருக்கிறாரே. இந்த நாட்களில் மட்டும் அவற்றில் அவரை கண்டு துதிப்பதே நமக்கும் நல்லது, நம்மை சார்ந்தவர்க்கும் நல்லது.

    ReplyDelete
  2. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    1).வாய் விட்டுச் சிரிக்க ஒரு ஜோக்.அம்மா எப்ப கத்துவாங்க?.... அப்பா வீட்டுலேருந்து வந்த காக்கான்னா மட்டுமே கத்துவாங்க!!!!!.-அம்மா வீட்டுலேருந்து வந்த காக்கான்னா?..அப்பாதான் ஊளையிடுவார்!!!!!!!!!!.
    2). இது நம்மூரு ரயிலா இருந்தா ஆச்சரியம் தான்! பீகாரிலே, மக்கள் ரயில்வே ஸ்டேஷனெல்லாம் போகவேண்டியதில்லை! இருப்புப்பாதை ஓரமாக எந்த இடத்தில் நின்று கொண்டு கையை காட்டினாலும் ரயிலை நிறுத்தி ஏறிக்கொண்டு பயணம் செய்யலாம்.இதுவும் இலவசந்தான்!,இல்லேன்னா டிரைவர் அதோகதிதான்!!!!.
    3). சோகத்திலும் ஒரு சந்தோஷம் இருக்குங்க!!!. இங்கே போட் சவாரிக்கு பணம் கட்ட வேண்டியதில்லை. இலவசம்!இலவசம்!!இலவசம்!!!. இது சந்தோஷந்தானே???...
    4) It seems a good thing happening that BY the Mind set of Government is not tend to cause any disaster but training the littles for NEAR future, in order of DISCIPLINE, ONE WHO MUST LEARN NOW!!!!!!..........
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  3. அம்மா என்றதும்
    "அம்மா"வோ என்று நினைத்தேன்

    கேஸ்(case) கொடுத்தா தானே
    காசு (cash) கிடைக்கும்

    traffic jam ஆகாத பயணம்
    கொஞ்சம் terrific ஆனதும் கூட

    லைசென்சே இல்லாம ஓட்டும் ஓடக்காரர்
    லைட்டாக எடுத்துக்க சகிப்புதன்மை வேண்டும்.

    ReplyDelete
  4. மெட்ரோ போட் வசதி!

    வார்த்தை புணைவதில் வாத்தியாரை மிஞ்ச முடியாது...

    அருமை...

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. குருவே வணக்கம்.
    நகைச்சுவை 1,2 OK. 4 வது உண்மையில் அநியாயம். 5வது திரகிக்க முடியவில்லை!?
    சங்கடம்.

    ReplyDelete
  6. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
    எல்லாமே அருமை ..இப்போ விக்கிற விலை வாசியில் விருந்தினர் வந்தவுடனே அம்மா கத்தினா தேவலை என தோன்றும் ??

    ReplyDelete
  7. /////Blogger Mrs Anpalagan N said...
    சென்ற பதிவில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு எனக்கு தெரிந்ததை சொல்ல நினைத்தேன். அடுத்த பதிவும் வந்து விட்டதால் இதில் போடுகிறேன். அதிகப் பிரசங்கித்தனமாக பதில் எழுதுகிறோமோ என்றும் ஒரு நெருடல். வாத்தியார் மன்னிப்பாராக.
    /////Blogger C.Senthil said...
    அய்யா,
    நான் தினமும் சாமி கும்பிட தவற மாட்டேன், ஆனால் எனது அப்பத்தா சென்ற வாரம் இறந்த காரணத்தினால் 30 நாள்கள் முடியும் வரை கோயிலுக்கு செல்ல கூடாது என்றும், சாமி தரிசனம் செய்ய கூடாது என்றும் கூறி விட்டார்கள். ஆனாலும் எனது சிந்தனை ஆண்டவனை நினைக்காமல் இருந்தது இல்லை. "ஆண்டவனை வணங்குவது தீட்டு என்றால் ஆண்டவனை நினைப்பதும் தீட்டு தானே".
    மனிதன் பிறந்தாலும் தீட்டு, இறந்தாலும் தீட்டு பற்றி விளக்குங்கள்.
    "சிரமத்திற்கு மன்னிக்கவும".//////
    சகோதரர் செந்தில் அவர்களுக்கு;
    தீட்டு என்பது உடலுக்கே, மனதிற்கு அல்ல. ஒரு காலத்தில் இதன் அர்த்தங்களை முழுமையாக உணர்ந்த பெரியவர்கள் இருந்தனர். இன்றைய சூழ்நிலையில் யாராலும், எந்தையும் சரிவர நினைவு கூரவோ, விளங்கிக் கொள்ளவோ முடிவதில்லை.
    உதாரணத்திற்கு பெண்கள் விலக்காவதை தீட்டு என்பர். அது 5 நாட்கள் வரையிலுமே. அந்த நாட்களில் கோயிலுக்கோ, ஏன் வீட்டு பூஜை அறைக்கோ பெண்கள் செல்வதில்லை. ஆனால் இருக்கும் அறையிலிருந்து நன்றாகவே இறைவனை மனதார கும்பிடலாம். ஆனால் அதற்கு உடல் நிலை பலருக்கும் ஏற்பதாகவும் இருப்பதில்லை. அவ்வளவே.
    இதே போல், குழந்தை பிறந்ததும் தீட்டு. அது இப்படி 30 நாளைக்கே (ஏறக்குறைய 30 நாள் வீட்டு விலக்காகும் நிலை) வரும். தாயோ, சேயோ (தாயுடன் தினமும் அதிகம் உறவாடுவதாலும், தொப்புள் கொடி காயாமல் இருக்கலாம் என்பதாலும்) உடல் வழி தீட்டு உடையவர்களாகின்றனர்.
    அதே போல் தான் இறந்த வீட்டு தீட்டும்; இறந்தவரின் வீட்டிலுள்ளவர்களுக்கும், ஆண்வழி சொந்தங்களுக்கும் (இறந்தவரின் உடலுக்கு ஆண் சொந்தங்களே கருமங்களை செய்வதால்), இந்த தீட்டு 30 நாள் வரும். காரணம் இறந்த உடலானது எதிர்ப்பு சக்தியை இழப்பதாலும், இறந்தவர் நோய் வாய்ப்பட்டு இறந்திருந்தாலும், இறந்த உடலில் இலகுவில் நோய் கிருமிகள் தொற்று ஏற்பட்டு விடுவதாலும், அவருடன் நெருங்கிய சொந்தங்களுக்கு இந்த தீட்டு 30 நாள் இருப்பதாக சொல்லி கட்டுப்பாடு ஏற்படுத்தப் பட்டது. 30 நாட்களின் பின் இந்த கிருமிகள் வீரியம் குறைந்து விடும் என்ற நம்பிக்கை, அல்லது அவற்றினால் பாதிப்பில்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டு விடும்.
    இந்த முறையிலேயே தீட்டு என்பது ஏற்படுத்தப் பட்டு, தீட்டு உள்ளவர்கள் பொது மக்கள் அதிகம் புழங்கும் தூய்மையான இடங்களாக கருதப்படும் இடங்களுக்குள் அனுமதிக்கப்படுவது தடுக்கப்பட்டது.
    தீட்டு என்பது உடலுக்கே தவிர உள்ளத்திற்கல்ல. இறைவனை 24/7 நினைப்பதற்கோ, துதிப்பதற்கோ தடை ஏதுமில்லை. அவர் தான் தூணிலும், துரும்பிலும் இருக்கிறாரே. இந்த நாட்களில் மட்டும் அவற்றில் அவரை கண்டு துதிப்பதே நமக்கும் நல்லது, நம்மை சார்ந்தவர்க்கும் நல்லது./////

    உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  8. ////Blogger kmr.krishnan said...
    Thank you Sir./////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. ////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    1).வாய் விட்டுச் சிரிக்க ஒரு ஜோக்.அம்மா எப்ப கத்துவாங்க?.... அப்பா வீட்டுலேருந்து வந்த காக்கான்னா மட்டுமே கத்துவாங்க!!!!!.-அம்மா வீட்டுலேருந்து வந்த காக்கான்னா?..அப்பாதான் ஊளையிடுவார்!!!!!!!!!!.
    2). இது நம்மூரு ரயிலா இருந்தா ஆச்சரியம் தான்! பீகாரிலே, மக்கள் ரயில்வே ஸ்டேஷனெல்லாம் போகவேண்டியதில்லை! இருப்புப்பாதை ஓரமாக எந்த இடத்தில் நின்று கொண்டு கையை காட்டினாலும் ரயிலை நிறுத்தி ஏறிக்கொண்டு பயணம் செய்யலாம்.இதுவும் இலவசந்தான்!,இல்லேன்னா டிரைவர் அதோகதிதான்!!!!.
    3). சோகத்திலும் ஒரு சந்தோஷம் இருக்குங்க!!!. இங்கே போட் சவாரிக்கு பணம் கட்ட வேண்டியதில்லை. இலவசம்!இலவசம்!!இலவசம்!!!. இது சந்தோஷந்தானே???...
    4) It seems a good thing happening that BY the Mind set of Government is not tend to cause any disaster but training the littles for NEAR future, in order of DISCIPLINE, ONE WHO MUST LEARN NOW!!!!!!..........
    அன்புடன்,
    -பொன்னுசாமி.////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  10. /////Blogger வேப்பிலை said...
    அம்மா என்றதும்
    "அம்மா"வோ என்று நினைத்தேன்
    கேஸ்(case) கொடுத்தா தானே
    காசு (cash) கிடைக்கும்
    traffic jam ஆகாத பயணம்
    கொஞ்சம் terrific ஆனதும் கூட
    லைசென்சே இல்லாம ஓட்டும் ஓடக்காரர்
    லைட்டாக எடுத்துக்க சகிப்புதன்மை வேண்டும்./////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  11. ////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    மெட்ரோ போட் வசதி!
    வார்த்தை புணைவதில் வாத்தியாரை மிஞ்ச முடியாது...
    அருமை...
    பகிர்வுக்கு நன்றி.////

    நல்லது. நன்றி தூத்துக்குடிக்காரரே!

    ReplyDelete
  12. ////Blogger வரதராஜன் said...
    குருவே வணக்கம்.
    நகைச்சுவை 1,2 OK. 4 வது உண்மையில் அநியாயம். 5வது திரகிக்க முடியவில்லை!?
    சங்கடம்./////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  13. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
    எல்லாமே அருமை ..இப்போ விக்கிற விலை வாசியில் விருந்தினர் வந்தவுடனே அம்மா கத்தினா தேவலை என தோன்றும் ??/////

    என்னதான் விலைவாசி என்றாலும் விருந்தினரை இரண்டு நாளாவது வைத்து உபசரிக்க வேண்டாமா? அதுதானே முறை கணபதியாரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com