பாரப்பா பழநியப்பா - உன் புகழோ பெரியதப்பா!
பழனி முருகன் கோவில் முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.
கோவில் வரலாறு:
ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவரது நின்ற இடம் "பழம் நீ " (பழனி) என அழைக்கப்படுகிறது. பழனிமலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் பெரிய தராசின் முலம் பழனிமலையும் இடும்பமலையையும் தூக்கிக்கொண்டு வந்து வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
பழனி முருகன் கோவில் முருகனது அறுபடை வீடுகளில் மூன்றாவதாகும். இக்கோவில் மிகவும் புராதனமான கோவிலாகும். இது கடல்மட்டத்தை விட 1500 அடி உயர குன்றின் மீது அமைந்துள்ளது.இங்கு முருகன் தண்டாயுதபாணி சுவாமி என்ற பெயரில் கோவில் கொண்டுள்ளார்.
முருகன் சிலையின் சிறப்பு
முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
போகர் வரலாறு
போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் நவபாஷாண முருகன் சிலையை செய்ததே மிகசுவையான தகவலாகும். அகத்திய முனிவருக்கும், போகருக்கும் தொழில் ரீதியாக போட்டியிருந்து வந்தது. அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம்,வில்லை போன்று மருந்துகள் அளித்து நோயை குணப்படுத்தி வந்தார். போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளை தன்னை நாடி வருவோர்க்கு அளித்துவந்தார்.
அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தை பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்பது பழனியில் வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.
கோவில் திருவிழாக்கள்
பழனி திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற ஊராகும். இங்கு நடக்கும் குறிப்பிடத்தக்க திருவிழாக்கள்:
முருகனுக்கு உகந்த நாட்களான பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, அக்னி நட்சத்திரம் ஆகிய விழாக்கள் முக்கியமானவையாகும். வைகாசி விசாகம், திருக்கார்த்திகை மற்றும் பிற பண்டிகைகளும் இங்கு கொண்டாடப்படுகின்றன.
சிறப்பு
பஞ்சாமிர்தம் - மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பிரசாதம்.
தங்கத் தேர் வழிபாடு
காவடி சுமந்த பக்தர்கள்
குழந்தை வேலாயுதசாமி திருக்கோயில் (பழனி மலைக்கு கீழ்
அடிவாரத்தில் உள்ளது) உச்சியை அடைவதற்கு இரண்டு வழிகள்
உள்ளது 1.யாணை பாதை ஏறுவதற்கு இதை பயன்படுத்தினால்
எளிதாக இருக்கும் 2.நோ் பாதை இதை இறங்குவதற்கு பயன்படுத்தலாம்
பிழை
பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று, இதுவே திருஆவினன்குடி மூன்றாம் படைவீடு ஆகும். பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது.
இழுவை ஊர்தி
பழனி மலையின் அடிவாரத்திலிருந்து மலைஉச்சி பகுதியிலுள்ள முருகன்கோவிலுக்கு செல்ல மூன்று இழுவைத் தொடருந்து ஒரு கம்பிவட இழுவை ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளது.
போகர் சந்நிதி :
இந்த கோவிலின் தென்மேற்கு பிரகாரத்தில் போகர் சந்நிதி உள்ளது. முருகனின் நவபாஷான சிலையை சித்தர் போகர் வடித்து தினமும் பூஜை செய்து வந்தார் என்பது வரலாறு. அவர் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளார்.
போகர் ஒரு மருத்துவராக இருந்ததால், நவபாஷானங்களை கலந்து சிலை செய்ய முடிந்தது. இந்த கோவில் போகர் வழிபட்ட நவதுர்க்கா, புவனேஸ்வரி, மரகத லிங்கம் ஆகியவையும் உள்ளன. போகரின் சமாதியும் இங்கு அமைந்துள்ளது.
முருகன் ஒரு அரசரைப் போல் உயரமான கருவறையில் உள்ளார். அதனால் பக்தர்கள் அவரை மிகவும் நன்றாக காண முடியும். இங்கு பிரதான கோவில், நெல்லி மரம், நாகலிங்கப் பூ மற்றும் அருணகிரிநாதர் ஆலயம் ஆகியவை தரிசிக்க வேண்டியவை ஆகும்.
பூஜைகள் :
முருகனுக்கு தினமும் ஆறுகால பூஜை நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு முருகன் விஸ்வரூப தரிசனம் அளிக்கிறார். காலை 7.15 மணிக்கு விழாபூஜை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6 மணிக்கு சாயரட்சையும், இரவு 8 மணிக்கு ராக்கால பூஜையும் நடைபெறுகிறது.
தங்கரதம் :
ஒவ்வொரு கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களிலும் இரவு 7 மணிக்கு கோவில் பிரகாரத்தைச் சுற்றி தங்கரதம், நாதஸ்வரம், திருப்புகழ் இசை மற்றும் கோவில் பரிவாரங்களுடன் வலம் வருகிறது. பக்தர்களும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தங்கரதம் இழுக்கிறார்கள்.
தங்கரதம் இழுக்க கிருத்திகை தினங்களில் ரூ. 2000மும் மற்ற சாதாரண நாட்களில் ரூ.1500மும் கட்டணம் செலுத்த வேண்டும். தைப்பூசம், பங்குனி உத்திரம், தசரா பண்டிகையின் பத்து நாட்கள், சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம் ஆகிய நாட்களில் தங்கரதம் வலம் இல்லை. மயில் வாகனத்தில் முருகன் பவனி வர கட்டணம் ரூ. 300 ஆகும்.
அன்னதானம்:
கோவிலில் தினமும் மதியம் 12:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ. 25000 செலுத்தினால் அந்தப் பணத்தை முதலிடு செய்து அதன் மூலம் கிடைக்கும் வட்டிப் பணத்தில் பக்தர்கள் விரும்பும் தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் அவர் பெயரில் அன்னதானம் வழங்கப்படும்.
வின்ச் சேவை :
தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வின்ச் சேவை நடைபெறுகிறது. தற்சமயம் 3 பாதைகளில் வின்ச்கள் இயக்கப்படுகின்றன. கிருத்திகை மற்றும் பிற விழா நாட்களில் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வின்ச் சேவை நடைபெறுகிறது.
இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 10 மற்றும் 3 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் ரூ. 5 ஆகும். ரோப் கார் : தற்போது மலைக்கு செல்ல ரோப் கார் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சில விநாடிகளில் மலை உச்சிக்கு சென்று விட முடியும்.
போக்குவரத்து வசதி :
சென்னையில் இருந்து பழனிக்கு பேருந்து வசதி உள்ளது.ரெயில் வசதியும் உள்ளது. எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் சென்று பின் அங்கிருந்து பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம்.
மேலும் விவரங்களுக்கு:
இணை ஆணையர்
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி
தேவஸ்தானம்
அலுவலகம் அடிவாரம்,
பழனி - 624 601.
தொலைபேசி: +91-4545-241417 / 242236
--------------------------------------------------------
பாரப்பா பழநியப்பா - உன் புகழோ பெரியதப்பா!
உண்மைதானே இது!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
Ayya Vanakkam,,,,,,,,,,,,,,,,,
ReplyDeleteNandri,,,, Nalla seythigal,....
Regards,
Kumanan
உள்ளேன் ஐயா
ReplyDeleteAnbudan vathiyaar ayya vanakkam
ReplyDeletePazhani muruganukku arokara..
ஐயா வணக்கம்
ReplyDelete///பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது.////
அதில் நானும் ஒருவன் தான் ஐயா.
திருத்திக் கொண்டேன்.
நன்றி
கண்ணன்
Useful article. Thank you Sir.
ReplyDeleteஅன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
ReplyDeleteபழனி மலையின் தல சிறப்புற எடுத்துரைத்தமைக்கு நன்றிகள்!!!!.
அன்புடன்,
-பொன்னுசாமி.
பழனியப்பா சரணம்
ReplyDeleteமுருகா....
ReplyDeleteமுருகா...
சில கூடுதல் தகவல்கள்.. இங்கே சொன்னால்
சிறப்பாக இருக்கும் என்பதால் .....
01.
இப்போது அண்ண தானம் காலை 8 மணிமுதல்
இரவு 8 மணி வரை தொடர்ந்து நடக்கிறது
02.
சிலை வடிவமைத்த போகர்
சிறப்பு பூஜை செய்து விட்டு
கோவை வழியாக பழனி வருகிறார்
கூடும் இரவு நேரத்தில் வழி தெரியவில்லையாம்
ஓதி மலை ஆண்டவர் தன்
ஒரு திருமுகத்துடன் குமாரபாளையம் வரை
வந்து வழி கட்டினாராம்
வழி காட்டி சென்ற முருகனுக்கு
இப்போதும் ஓதி மலையில்
இன்றும் 5 திருமுகங்களுடன் காட்சி தருகிறார்
அடியார்களை பெயர் சொல்லி
அழைக்கும் அற்புதம் இன்றும் காணலாம்.
உதடு அசைத்து "ஓம்" என
உச்சரிக்கும் அற்புதம் இங்கு காணலாம்
ஓதி மலை - பிரம்மா
"ஓம்" என்ற ப்ரனவதிற்கு விளக்கம்
சொல்லா தாதால் சிறையில் அடைத்த இடம்
இரும்பறை என்ற பெயரில் இன்றும் உள்ளது
அரசியல் வாதிகளால்
அப்படி எந்த பெயர் மாற்றமும் செய்யப்படவில்லை
சத்திய மங்கலத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு
சமயம் கிடைத்தால் அன்பர்கள் சென்று வர வேண்டும்.
திருக்கோயில் எல்லா நாட்களிலும் (கிருத்திகை பௌர்ணமி தவிர)
திறப்பதில்லை முன் தகவல் தெரிவித்து செல்லலாம்
03.
பல்வேறு அலங்காரத்தில் காட்சி தரும் பழனி முருகன்
பலரும் அறிந்தது ராஜாங்க அலங்காரம் தான்
காலையில் வெள்ளை துணியுடன் சன்யாச கோலத்தில்
கண்டு தரிசிப்பவர் வேண்டுதல் உடனே நிறைவேறும்
04.
அடியார்கள் அழைத்தால் உதவ தயார் என்பது போல
அவரது ஒரு பாதம் முன் (நடை) நோக்கி இருக்கும்
05.
தென் தமிழ் நாட்டில் அதிக வருவாய் பெரும்
திருக்கோயில் என பெயர் பெற்றது
முருகா...
முருகா...
Respected Sir,
ReplyDeleteHappy afternoon, I came to know that which is exactly mundram padai veedu through this article.
Have a pleasant day.
With kind regards,
Ravi -avn
நிறைவான தகவல்கள் ஐயா.
ReplyDeleteகூடுதல் தகவல்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன.
அய்யா வணக்கம் .
ReplyDeleteவேலுண்டு வினையில்லை ! மயிலுண்டு பயமில்லை!! கந்தனுன்டு கவலையில்லை!!! சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை!!!! சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை!!!!
"ஓம் சரவண பவ" என்ற சக்தி வாய்ந்த மந்திரத்தை சொல்லுங்கள். முருகன் முன்னேற்றத்தை தருவான்...
சோமசுந்தரம் பழனியப்பன்
மஸ்கட்
குருவே வணக்கம்.
ReplyDeleteபழநியின் பாரம்பரியம் முதல் அனைத்து விவரங்களும் ஆச்சரியம் கலந்த உண்மைகள். போகரைப் பற்றியும் போதிய தகவல்கள்!!
குறிப்பாக, திருஆவினன்குடி பற்றிய தகவல்
வியப்புக்குரியது!!
செந்திலாண்டவனுக்கு அடுத்து பழநியாண்டவன் தரிசனமும் மனதினுள் கொண்டோம்.
கந்தனருள் தங்களுக்கும், எங்களுக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன், குருவே!
///////Blogger Kumanan Samidurai said...
ReplyDeleteAyya Vanakkam,,,,,,,,,,,,,,,,,
Nandri,,,, Nalla seythigal,....
Regards,
Kumanan/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி குமணன்!
///Blogger siva kumar said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா///
வருகைப் பதிவிற்கு நன்றி சிவகுமார்!
////Blogger hamaragana said...
ReplyDeleteAnbudan vathiyaar ayya vanakkam
Pazhani muruganukku arokara../////
பழநி ஆண்டவருக்கு அரோஹரா!
/////Blogger lrk said...
ReplyDeleteஐயா வணக்கம்
///பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது.////
அதில் நானும் ஒருவன் தான் ஐயா.
திருத்திக் கொண்டேன்.
நன்றி
கண்ணன்/////
நல்லது. நன்றி நண்பரே!
///Blogger kmr.krishnan said...
ReplyDeleteUseful article. Thank you Sir.////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger GOWDA PONNUSAMY said...
ReplyDeleteஅன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
பழனி மலையின் தல சிறப்புற எடுத்துரைத்தமைக்கு நன்றிகள்!!!!.
அன்புடன்,
-பொன்னுசாமி.////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!
////Blogger SELVARAJ said...
ReplyDeleteபழனியப்பா சரணம்/////
கந்தா போற்றி!
கடம்பா போற்றி!
கதிவேலா போற்றி!
Blogger வேப்பிலை said...
ReplyDeleteமுருகா....
முருகா...
சில கூடுதல் தகவல்கள்.. இங்கே சொன்னால்
சிறப்பாக இருக்கும் என்பதால் .....
01.
இப்போது அன்னதானம் காலை 8 மணிமுதல்
இரவு 8 மணி வரை தொடர்ந்து நடக்கிறது
02.
சிலை வடிவமைத்த போகர்
சிறப்பு பூஜை செய்து விட்டு
கோவை வழியாக பழனி வருகிறார்
கூடும் இரவு நேரத்தில் வழி தெரியவில்லையாம்
ஓதி மலை ஆண்டவர் தன்
ஒரு திருமுகத்துடன் குமாரபாளையம் வரை
வந்து வழி கட்டினாராம்
வழி காட்டி சென்ற முருகனுக்கு
இப்போதும் ஓதி மலையில்
இன்றும் 5 திருமுகங்களுடன் காட்சி தருகிறார்
அடியார்களை பெயர் சொல்லி
அழைக்கும் அற்புதம் இன்றும் காணலாம்.
உதடு அசைத்து "ஓம்" என
உச்சரிக்கும் அற்புதம் இங்கு காணலாம்
ஓதி மலை - பிரம்மா
"ஓம்" என்ற ப்ரனவதிற்கு விளக்கம்
சொல்லா தாதால் சிறையில் அடைத்த இடம்
இரும்பறை என்ற பெயரில் இன்றும் உள்ளது
அரசியல் வாதிகளால்
அப்படி எந்த பெயர் மாற்றமும் செய்யப்படவில்லை
சத்திய மங்கலத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு
சமயம் கிடைத்தால் அன்பர்கள் சென்று வர வேண்டும்.
திருக்கோயில் எல்லா நாட்களிலும் (கிருத்திகை பௌர்ணமி தவிர)
திறப்பதில்லை முன் தகவல் தெரிவித்து செல்லலாம்
03.
பல்வேறு அலங்காரத்தில் காட்சி தரும் பழனி முருகன்
பலரும் அறிந்தது ராஜாங்க அலங்காரம் தான்
காலையில் வெள்ளை துணியுடன் சன்யாச கோலத்தில்
கண்டு தரிசிப்பவர் வேண்டுதல் உடனே நிறைவேறும்
04.
அடியார்கள் அழைத்தால் உதவ தயார் என்பது போல
அவரது ஒரு பாதம் முன் (நடை) நோக்கி இருக்கும்
05.
தென் தமிழ் நாட்டில் அதிக வருவாய் பெரும்
திருக்கோயில் என பெயர் பெற்றது
முருகா...
முருகா.../////
மேலதிகத் தகவல்களுக்கு நன்றி வேப்பிலையாரே!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy afternoon, I came to know that which is exactly mundram padai veedu through this article.
Have a pleasant day.
With kind regards,
Ravi -avn/////
நல்லது. நன்றி அவனாசி ரவிச்சந்திரன்!
/////Blogger Mrs Anpalagan N said...
ReplyDeleteநிறைவான தகவல்கள் ஐயா.
கூடுதல் தகவல்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன./////
உண்மைதான். படிக்கும்போது மெய் சிலிர்க்கும். நன்றி சகோதரி!
////Blogger Spalaniappan Palaniappan said...
ReplyDeleteஅய்யா வணக்கம் .
வேலுண்டு வினையில்லை ! மயிலுண்டு பயமில்லை!! கந்தனுன்டு கவலையில்லை!!! சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை!!!! சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை!!!!
"ஓம் சரவண பவ" என்ற சக்தி வாய்ந்த மந்திரத்தை சொல்லுங்கள். முருகன் முன்னேற்றத்தை தருவான்...
சோமசுந்தரம் பழனியப்பன்
மஸ்கட் /////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பழநியப்பன்!
How can I join in your class room and study your current lessons?
Delete/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteகுருவே வணக்கம்.
பழநியின் பாரம்பரியம் முதல் அனைத்து விவரங்களும் ஆச்சரியம் கலந்த உண்மைகள். போகரைப் பற்றியும் போதிய தகவல்கள்!!
குறிப்பாக, திருஆவினன்குடி பற்றிய தகவல் வியப்புக்குரியது!!
செந்திலாண்டவனுக்கு அடுத்து பழநியாண்டவன் தரிசனமும் மனதினுள் கொண்டோம்.
கந்தனருள் தங்களுக்கும், எங்களுக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன், குருவே!////
உங்களின் பிரார்த்தனை பலிக்கட்டும். நன்றி வரதராஜன்!
//////Blogger madhu shanmugam said...
ReplyDeleteHow can I join in your class room and study your current lessons?////
Please write to the following mail.
spvrsubbiah@gmail.com
Ayya vanakkam Murugan irukkum edam kundru avarin pugazhai parappum edam vathiyar Cheithi malai vazhga pallandu
ReplyDeleteதமிழ் கடவுளாகிய முருகனின் சமாதிநிலை பற்றி சத்குரு கூறுவது:-
ReplyDeleteஉங்களில் பலர் கேள்விப்பட்டிருப்பது போல பார்வதிக்கு ஆறு குழந்தைகள். ஆறு வேறு தன்மையில் இருந்தன. இந்த ஆறு வேறு தன்மைகளும் ஒரே உடலில் இருந்தால் நன்றாக இருக்க முடியும் என்று பார்வதி கருதினார். செயலின் அடிப்படையில் அது உலகத்திற்கு ஒரு பெரிய மாற்றத்தைத் தரும் என்று அவர் நினைத்தார். அவர் ஒரு சிறந்த யோகினியாக இருந்ததால், இந்த ஆறு உயிர்களையும் ஒரே உடலுக்குள் கொண்டு வந்தார்.
தென்னிந்தியாவில், கர்நாடகா மாநிலத்தில், சுப்ரமண்யா என்று ஒரு இடம் உண்டு. அந்த பகுதிகளில் அவர் குமரர் என்று அழைக்கப்படுவார். அவர் மஹாசமாதி அடைந்தவர். குமரர் ஒரு பெரிய யுத்தத்தில் போரிட்டு ஒழுங்குமுறையைக் கொண்டுவந்தார். பிறகு மேற்கு மலைத் தொடர்ச்சியின் சிகரத்திற்கு சென்றார். அதற்கு இப்போதும் குமார பர்வதம் என்று பெயர். அதன் உச்சியில் நின்றார். 47 நாட்கள் நின்றுவிட்டு, 48வது நாளில் உடலை உதறினார். பொதுவாக ஒரு யோகி விழிப்புநிலையில், விழிப்புணர்வோடு உடலை உதற நினைக்கிறபோது அமர்ந்த நிலையிலோ, சில நேரம் படுத்த நிலையிலோ இருப்பார். ஆனால் குமரர் நின்ற நிலையிலேயே தன் உடலை விட்டார்.
நான் ஏறக்குறைய ஒரு நாள் முழுக்க ஏறி அந்த மலைச்சிகரம் அருகே சென்றேன். அந்த அடிவாரத்தில் ஒரு முகாம் அமைத்திருந்தோம். என்னால் அந்த முகாமில் இரவு முழுக்க அமர முடியவில்லை. நான் அமருகிறபோதெல்லாம் அந்த சக்திநிலை என்னை நிற்கும் நிலைக்குத் தள்ளியது. என் உயரத்தை விட மூன்றடி அதிகமான ஒரு முகாமுக்குள் நான் உறங்குவதற்காக திட்டமிருந்தது. ஆனால் என் உடல் அந்த முகாமை குலைத்துக் கொண்டு எழுந்து எழுந்து நின்றது. இந்த மலையுச்சிக்கு நீங்கள் போனால் சின்ன சின்ன கூழாங்கற்கள் இருக்கும். மிகச் சரியாக அளவெடுத்து வெட்டியதுபோல் அனைத்துக் கற்களும் ஆறுமுகம் கொண்டவையாக இருக்கும். அவை சண்முக லிங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை சக்தி அதிர்வு மிக்க கற்கள். அவை ஏன் அத்தகைய கற்கள் ஆகின என்றால், அங்கே உடலை உதறிய யோகி அத்தகைய சக்திநிலை கொண்டவராக இருந்தார்.
-சத்குரு
/////Blogger Gajapathi Sha said...
ReplyDeleteAyya vanakkam Murugan irukkum edam kundru avarin pugazhai parappum edam vathiyar Cheithi malai vazhga pallandu/////
அவருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளார்கள். அவருடைய புகழ் தன்னால் பரவும்!!!
/////Blogger V.Karthi keyan said...
ReplyDeleteதமிழ் கடவுளாகிய முருகனின் சமாதிநிலை பற்றி சத்குரு கூறுவது:-
உங்களில் பலர் கேள்விப்பட்டிருப்பது போல பார்வதிக்கு ஆறு குழந்தைகள். ஆறு வேறு தன்மையில் இருந்தன. இந்த ஆறு வேறு தன்மைகளும் ஒரே உடலில் இருந்தால் நன்றாக இருக்க முடியும் என்று பார்வதி கருதினார். செயலின் அடிப்படையில் அது உலகத்திற்கு ஒரு பெரிய மாற்றத்தைத் தரும் என்று அவர் நினைத்தார். அவர் ஒரு சிறந்த யோகினியாக இருந்ததால், இந்த ஆறு உயிர்களையும் ஒரே உடலுக்குள் கொண்டு வந்தார்.
தென்னிந்தியாவில், கர்நாடகா மாநிலத்தில், சுப்ரமண்யா என்று ஒரு இடம் உண்டு. அந்த பகுதிகளில் அவர் குமரர் என்று அழைக்கப்படுவார். அவர் மஹாசமாதி அடைந்தவர். குமரர் ஒரு பெரிய யுத்தத்தில் போரிட்டு ஒழுங்குமுறையைக் கொண்டுவந்தார். பிறகு மேற்கு மலைத் தொடர்ச்சியின் சிகரத்திற்கு சென்றார். அதற்கு இப்போதும் குமார பர்வதம் என்று பெயர். அதன் உச்சியில் நின்றார். 47 நாட்கள் நின்றுவிட்டு, 48வது நாளில் உடலை உதறினார். பொதுவாக ஒரு யோகி விழிப்புநிலையில், விழிப்புணர்வோடு உடலை உதற நினைக்கிறபோது அமர்ந்த நிலையிலோ, சில நேரம் படுத்த நிலையிலோ இருப்பார். ஆனால் குமரர் நின்ற நிலையிலேயே தன் உடலை விட்டார்.
நான் ஏறக்குறைய ஒரு நாள் முழுக்க ஏறி அந்த மலைச்சிகரம் அருகே சென்றேன். அந்த அடிவாரத்தில் ஒரு முகாம் அமைத்திருந்தோம். என்னால் அந்த முகாமில் இரவு முழுக்க அமர முடியவில்லை. நான் அமருகிறபோதெல்லாம் அந்த சக்திநிலை என்னை நிற்கும் நிலைக்குத் தள்ளியது. என் உயரத்தை விட மூன்றடி அதிகமான ஒரு முகாமுக்குள் நான் உறங்குவதற்காக திட்டமிருந்தது. ஆனால் என் உடல் அந்த முகாமை குலைத்துக் கொண்டு எழுந்து எழுந்து நின்றது. இந்த மலையுச்சிக்கு நீங்கள் போனால் சின்ன சின்ன கூழாங்கற்கள் இருக்கும். மிகச் சரியாக அளவெடுத்து வெட்டியதுபோல் அனைத்துக் கற்களும் ஆறுமுகம் கொண்டவையாக இருக்கும். அவை சண்முக லிங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை சக்தி அதிர்வு மிக்க கற்கள். அவை ஏன் அத்தகைய கற்கள் ஆகின என்றால், அங்கே உடலை உதறிய யோகி அத்தகைய சக்திநிலை கொண்டவராக இருந்தார்.
-சத்குரு/////
உங்களின் தகவல்களுக்கு நன்றி கார்த்திகேயன்!