நயந்தாராவைத் தெரியும், நாயன்மார்களைத் தெரியுமா?
நாயன்மார் என்பவர்கள் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலராவார்கள். சுந்தரமூர்த்தி
நாயன்மார் திருத்தொண்டத் தொகையில் அறுபத்து இரண்டு நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார். அதன் பின் சேக்கிழார்
திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்து இரண்டு
பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் இணைத்து அறுபத்து
மூவரின் வரலாற்றை திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய
புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள்
கற்சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின்
உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்
படுகின்றன.
நாயன்மார்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் தனியாக இல்லாத மாணிக்கவாசகர் அவர்களும்
முதன்மையானவர்கள். இந்த நால்வரும் சைவ சமய குரவர் என்று அழைக்கப்படுகிறார்கள். சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும்
12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம்
திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். நாயன்மாரில் சிலரே சமயநூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற
பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.
(Note this point)
சிவன் கோவிலில்களில் உள்ள 63 நாயன்மார்களின் வரலாறு
சேக்கிழாரால், பெரியபுராணம் என்ற பெயரில் எழுதப்பட்டது.
நாயன்மார்களில் பெண்கள்
அறுபத்துமூன்று நாயன்மாரில் மூவர் பெண்கள். கி.பி. 3-4 ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மார்களில்
காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார்
ஆகும். மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டியமன்னன்
நின்றசீர் நெடுமாறநாயனார் என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்க்கரசியார் என்பவர் நாயன்மார்களில் மற்றொரு பெண்
ஆவார். திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின்
மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயனார் ஆவார்.
இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள்
ஒருவரும் நாயன்மாரில் ஒருவரும் ஆவார்.
நாயன்மாரின் பட்டியல்
நாயன்மார்களை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார்.
அவர் பாடிய நாயன்மார்கள் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப்
படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு விழா செய்வதும் 60 வது ஆண்டு.
ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு நாழிகைக்கு வினாடி 60. ஒரு வினாடிக்கு நொடி 60. இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது.
சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப்
பாடிய நாயன்மார்கள் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப்
பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார். அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.
அவதாரத் தலங்கள்
நாயன்மார்கள் பிறந்த தலங்களை நாயன்மார் அவதாரத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஐம்பத்தி எட்டு (58) தலங்கள் |தமிழகத்தில்
அமைந்துள்ளன. மற்றவை பாண்டிச்சேரி (காரைக்கால்), ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒன்று என்ற வீதத்திலும், கேரளா மாநிலத்தில்
இரண்டு இடங்களிலும் அமைந்துள்ளன.
முக்தி
நாயன்மார்கள் செய்த தொண்டின் காரணமாக மூன்று விதமான முறையில் முக்தி அடைந்ததாக நூல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் குருவருளால்
முக்தி பெற்றவர்கள் பதினொரு நாயன்மார்கள், சிவலிங்கத்தால் முக்தி பெற்றவர்கள் முப்பத்து ஒரு நாயன்மார்கள், அடியாரை வழிபட்டமையால் முக்தி பெற்றவர்கள் இருபத்து ஒரு நாயன்மார்கள்.
Source: wikipedia
---------------------------------------------------
விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

என்னுடைய நட்சத்திரம் ஆவணிப் பூசம். அதற்கும் ஒரு நாய்ன்மார்! செருத்துணை நாயனார்! சிவபெருமானுக்குச் சூட இருந்த மலரை முகர்ந்த ராணியின் கையைத் துண்டித்தவர்!
ReplyDeleteஓம் நமசிவாய
Deleteவணக்கம் அய்யா, அருமை அருமை நன்றாக விளக்கம் கொடுத்தீர் "60"க்கு,
ReplyDelete"63" பற்றி சொல்லியது மிகவும் அருமை.
அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
ReplyDeleteஅடேங்கப்பா!!! அபாரமான விளக்கம்.ஆனாலும் போதாது. 64 வது நாயன்மாராக ஏற்றுக்கொள்ளப் பட்ட திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பற்றியும் இன்னும் விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டும் என்பது ஆசை!.நமது காலத்திலேயே வாழ்ந்து ”வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேனே” என்று பாடியதுடன்,அணையா அடுப்பு மூட்டி பசிப்பிணிக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கும், அருட்பெருஞ் சோதியுடன் கலந்துவிட்ட வள்ளலார் சுவாமிகளைப் பற்றியும் அறியத் தந்தால் மிக்க நன்று!!!.
NOTE THIS POINT-ல் குறிப்பிட்டுள்ளது உண்மையிலும் உண்மை!!!!!!.
அன்புடன்,
-பொன்னுசாமி.
மலரை எறிந்தவன்
ReplyDeleteமன்மதன் அவன் எரிக்கப்பட்டான்
கல்லை எறிந்தவர் சாக்கியர்
கடைதேறும் முக்தி பெற்றார்
பக்திக்கு தேவை உறுதியே அதனால் தான்
பண்பாளர்கள் விரதம் கொண்டு தந்தனர்
கம்பன் லௌகீக கவிஞன்
கதா பாத்திரங்களை "அன்" விகுதி போடுவான்
இரா"மன்", பர"தன்",சத்ருகு"ணன்"
இலக்குவன் என
சேக்கிழார் தெய்வீக கவிஞன் அதனால்
சேர்ந்த அடியார்களை "அர்" விகுதி போடுவார்
சம்பந்"தர்", அப்"பர்", சுந்த"ரர்", மாணிக்கவாச"கர்" என
இப்படி பல சொல்லிகொண்டே போகலாம்
இன்னமும் இது போல பல இருக்கு
குருவே,
ReplyDeleteசில காரியங்களை சில பேர் மட்டுமே செய்வர்அவர்களுக்கு இறைவன் கட்டளை போலும், நாயன்மார்கள் போல! அப்படி படைக்கப்கட்டவர்களில் தாங்களும் ஒருவர் போன்று சிதறிக் கிடக்கும் பற்பல
சத் விஷயங்களை வகுப்பறையில் ஒவ்வொரு நாளும் அள்ளிக் கொடுக்கிறீசர்!
பள்ளியில் படிக்குஙு்கால் 'அறுபத்துமூவர்' திருநாள் என்று ஒருநாள் 'உள்ளூர் விடுமுறை' இருக்கும், அப்போதோ அல்லது வேலையில் சேர்ந்தபிறகு வந்த அதே விடுமுறை தினத்திலோ நான் இந்த அளவு விபரமாக இதனைப்பற்றிச் சசிந்தித்ததில்லை?
ஆனால், அவர்களைப் பற்றிய தகவல்கள் படித்தபோது என்னை நான் நொந்து கொண்டேன், என் மடமையை எண்ணி!
நாயன்மார்கள் குரு, சிவலிங்கம் மற்றும் அடியார்கள் வழிபாடு ஆகிய மூன்று வழியில் முக்தி பெற்றார்கள் போன்ற பல நல்ல வரலாற்றுச் செய்திகளை நாங்களும் பயன்பெறப் பகிர்ந்தமையின் பேரில் நாங்கள் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்பது தெளிவு, ஐயா!
Respected Sir,
ReplyDeleteHappy morning... nice post on auspicious day. I expected something about lord Muruga...
Have a holy day.
With kind regards,
Ravichandran M
Avn
64வது இடத்தை கொடுக்க வேண்டியது சேக்கிழாருக்கு என்றல்லவா நினைத்திருந்தேன். அதற்காக வாரியார் சுவாமிகளை நான் குறைக்க நினைக்கவில்லை. சேக்கிழாருக்கு அடுத்ததாகவே அதன் பின்னால் வந்தவர்கள் எல்லாம்...
ReplyDelete
ReplyDeleteநாயன்மார்களின் திருநட்சத்ர பூஜை - 2016
எண் பெயர் திருநட்சத்ர பூஜை நாள் நாள் கிழமை
1 அதிபத்தர் ஆவணி ஆயில்யம் 27/09/2016 செவ்வாய்
2 அப்பூதியடிகள் தை சதயம் 10/02/2016 புதன்
3 அமர்நீதி நாயனார் ஆனி பூரம் 09/07/2016 சனி
4 அரிவட்டாயர் தை திருவாதிரை 22/01/2016 வெள்ளி
5 ஆனாய நாயனார் கார்த்திகை ஹஸ்தம் 25/11/2016 வெள்ளி
6 இசை ஞானியர் சித்திரை சித்திரை 22/04/2016 வெள்ளி
7 இடங்கழி நாயனார் ஐப்பசி கார்த்திகை 19/10/2016 புதன்
8 இயற்பகை நாயனார் மார்கழி உத்திரம் 01/01/2016 வெள்ளி
9 இளையான் குடிமாறார் ஆவணி மகம் 01/09/2016 வியாழன்
10 உருத்திர பசுபதி நாயனார் புரட்டாசி அஸ்வினி 17/10/2016 திங்கள்
11 எரிபத்த நாயனார் மாசி ஹஸ்தம் 26/02/2016 வெள்ளி
12 ஏயர்கோன் கலிகாமர் ஆவணி ரேவதி 22/08/2016 திங்கள்
13 ஏனாதி நாதர் புரட்டாசி உத்திராடம் 10/10/2016 திங்கள்
14 ஐயடிகள்காடவர் கோன் ஆனி ரேவதி 27/07/2016 செவ்வாய்
15 கணநாதர் பங்குனி திருவாதிரை 17/03/2016 வியாழன்
16 கணம்புல்லர் தை மிருகசீரிஷம் 21/01/2016 வியாழன்
17 கண்ணப்பர் தை மிருகசீரிஷம் 21/01/2016 வியாழன்
18 கலியநாயனார் ஆடி கேட்டை 13/08/2016 சனி
19 களறிற்றறிவார் ஆடி சுவாதி 10/08/2016 புதன்
20 கழற்சிங்கர் வைகாசி பரணி 03/06/2016 வெள்ளி
21 காரிநாயனார் மாசி பூராடம் 05/03/2016 சனி
22 காரைக்கால் அம்மையார் பங்குனி சுவாதி 26/03/2016 சனி
23 குங்கிலிய கலையனார் ஆவணி மூலம் 12/09/2016 திங்கள்
24 குலச்சிறையார் ஆவணி அனுஷம் 09/09/2016 வெள்ளி
25 கூற்றுவநாயனார் ஆடி திருவாதிரை 01/08/2016 திங்கள்
26 கலிக்கம்பநாயனார் தை ரேவதி 16/01/2016 சனி
27 கோச்செங்கட்சோழன் மாசி சதயம் 08/03/2016 செவ்வாய்
28 கோட்புலிநாயமார் ஆடி கேட்டை 17/07/2016 ஞாயிறு
29 சடையப்ப நாயனார் மார்கழி திருவாதிரை 26/12/2015 சனி
30 சண்டேஸ்வர நாயனார் தை உத்திரம் 28/01/2016 வியாழன்
31 சக்தி நாயனார் ஐப்பசி பூரம் 23/11/2016 புதன்
32 சாக்கிய நாயனார் மார்கழி பூராடம் 10/01/2016 ஞாயிறு
33 சிறப்புலி நாயனார் கார்த்திகை பூராடம் 03/12/2016 சனி
34 சிறுதொண்ட நாயனார் சித்திரை பரணி 07/05/2016 சனி
35 சுந்தரமூர்த்தி நாயனார் சித்திரை பரணி 10/08/2016 புதன்
36 செருத்துணை நாயனார் ஆவணி பூசம் 30/08/2016 செவ்வாய்
37 சோமசிமாறர் வைகாசி ஆயில்யம் 10/06/2016 வெள்ளி
38 தண்டியடிகள் பங்குனி சதயம் 05/04/2016 செவ்வாய்
39 திருக்குறிப்புத்தொண்டர் சித்திரை சுவாதி 20/05/2016 செவ்வாய்
40 திருஞானசம்மந்தமூர்த்தி வைகாசி மூலம் 24/05/2016 செவ்வாய்
41 திருநாவுக்கரசர் சித்திரை சதயம் 02/05/2016 திங்கள்
42 திருநாளைப்போவார் புரட்டாசி ரோஹினி 22/09/2016 வியாழன்
43 திருநீலகண்டர் தை விசாகம் 02/02/2016 செவ்வாய்
44 திருநீலகண்டயாழ்பாணர் வைகாசி மூலம் 24/05/2016 செவ்வாய்
45 திருநீலநக்க நாயனார் வைகாசி மூலம் 24/05/2016 செவ்வாய்
46 திருமூலர் ஐப்பசி அஸ்வினி 13/11/2016 ஞாயிறு
47 நமிநந்தியடிகள் வைகாசி பூசம் 09/06/2016 வியாழன்
48 நரசிங்க முனையர் புரட்டாசி சதயம் 13/10/2016 வியாழன்
49 நின்றசீர் நெடுமாறர் ஐப்பசி பரணி 14/11/2016 திங்கள்
50 நேச நாயனார் பங்குனி ரோஹினி 11/04/2016 திங்கள்
51 புகழ் சோழன் ஆடி கார்த்திகை 29/07/2016 வெள்ளி
52 புகழ்துணை நாயனார் ஆனி ஆயில்யம் 07/07/2016 வியாழன்
53 பூசலார் ஐப்பசி அனுஷம் 02/11/2016 புதன்
54 பெருமிழலைக்குறும்பர் ஆடி சித்திரை 09/08/2016 செவ்வாய்
55 மங்கயற்கரசியார் சித்திரை ரோஹினி 08/05/2016 ஞாயிறு
56 மானகஞ்சாற நாயனார் மார்கழி சுவாதி 05/01/2016 செவ்வாய்
57 முருக நாயனார் வைகாசி மூலம் 24/05/2016 செவ்வாய்
58 முனையடுவார் நாயனார் பங்குனி பூசம் 19/03/2016 சனி
59 மூர்க்க நாயனார் கார்த்திகை மூலம் 01/12/2016 வியாழன்
60 மூர்த்தி நாயனார் ஆடி கார்த்திகை 29/07/2016 வெள்ளி
61 மெய்ப்பொருள் நாயனார் கார்த்திகை உத்திரம் 24/11/2016 வியாழன்
62 வாயிலார் நாயனார் மார்கழி ரேவதி 20/12/2015 ஞாயிறு
63 விறன்மிண்ட நாயனார் சித்திரை திருவாதிரை 10/05/2016 செவ்வாய்
அன்புடன்
சோமசுந்தரம் பழனியப்பன்
மஸ்கட்
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
ReplyDelete63 நாயன்மார்கள் பற்றிய கருத்து ...
சைவ சமய மக்களுக்கு குலதெய்வமாக விளங்க கூடியவர்கள்!!!
குரு .லிங்க .சங்கம., வழிபாட்டின் மூலம் முக்தி பெற்றவர்கள் ..
இந்த 63 நாயன்மார்களுக்கு பின்னரும் இதே போன்ற பல அருளாளர்கள் தோன்றி முக்தி பெற்றுள்ளனர் ..
அவர்கள் ..நம்பியாண்டார் நம்பிகளின் காலத்திற்கு முன்னே ...பின்னே.,..தோன்றிய அருளாளர்கள் அடியார்கள் பட்டியலில் சேர்க்கவில்லை .
ஆனால் அடியார்கள் 63.தான் ..!! பட்டியல் என்று குறிப்பிட்டிருக்கும் ஒப்பிட்டு நோக்கிய 60 என்பதற்கு எங்காவது சான்றுகள் உள்ளனவா??
நன்றி அய்யா .
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஎன்னுடைய நட்சத்திரம் ஆவணிப் பூசம். அதற்கும் ஒரு நாயன்மார்! செருத்துணை நாயனார்! சிவபெருமானுக்குச் சூட இருந்த மலரை முகர்ந்த ராணியின் கையைத் துண்டித்தவர்!//////
அடடே, ராணியின் கையையே துண்டித்தாரா? தகவல் புதியது. நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger Kumanan Samidurai said...
ReplyDeleteவணக்கம் அய்யா, அருமை அருமை நன்றாக விளக்கம் கொடுத்தீர் "60"க்கு,
"63" பற்றி சொல்லியது மிகவும் அருமை.////
நல்லது. நன்றி குமணன்!
//////Blogger GOWDA PONNUSAMY said...
ReplyDeleteஅன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
அடேங்கப்பா!!! அபாரமான விளக்கம்.ஆனாலும் போதாது. 64 வது நாயன்மாராக ஏற்றுக்கொள்ளப் பட்ட திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பற்றியும் இன்னும் விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டும் என்பது ஆசை!.நமது காலத்திலேயே வாழ்ந்து ”வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேனே” என்று பாடியதுடன்,அணையா அடுப்பு மூட்டி பசிப்பிணிக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கும், அருட்பெருஞ் சோதியுடன் கலந்துவிட்ட வள்ளலார் சுவாமிகளைப் பற்றியும் அறியத் தந்தால் மிக்க நன்று!!!.
NOTE THIS POINT-ல் குறிப்பிட்டுள்ளது உண்மையிலும் உண்மை!!!!!!.
அன்புடன்,
-பொன்னுசாமி.//////
வாரியார் சுவாமிகளைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேனே அண்ணா! பழைய பதிவுகளில் உள்ளது. அதனாலென்ன மீண்டும் ஒருமுறை உங்களுக்காக எழுதுகிறேன். பொறுத்திருங்கள்!
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteமலரை எறிந்தவன்
மன்மதன் அவன் எரிக்கப்பட்டான்
கல்லை எறிந்தவர் சாக்கியர்
கடைதேறும் முக்தி பெற்றார்
பக்திக்கு தேவை உறுதியே அதனால் தான்
பண்பாளர்கள் விரதம் கொண்டு தந்தனர்
கம்பன் லௌகீக கவிஞன்
கதா பாத்திரங்களை "அன்" விகுதி போடுவான்
இரா"மன்", பர"தன்",சத்ருகு"ணன்"
இலக்குவன் என
சேக்கிழார் தெய்வீக கவிஞன் அதனால்
சேர்ந்த அடியார்களை "அர்" விகுதி போடுவார்
சம்பந்"தர்", அப்"பர்", சுந்த"ரர்", மாணிக்கவாச"கர்" என
இப்படி பல சொல்லிகொண்டே போகலாம்
இன்னமும் இது போல பல இருக்கு ////
இன்னமும் பல இருக்கா? அறியத் தாருங்கள் வேப்பிலை சுவாமீஜி!
////Blogger வரதராஜன் said...
ReplyDeleteகுருவே,
சில காரியங்களை சில பேர் மட்டுமே செய்வர்அவர்களுக்கு இறைவன் கட்டளை போலும், நாயன்மார்கள் போல! அப்படி படைக்கப்கட்டவர்களில் தாங்களும் ஒருவர் போன்று சிதறிக் கிடக்கும் பற்பல சத் விஷயங்களை வகுப்பறையில் ஒவ்வொரு நாளும் அள்ளிக் கொடுக்கிறீர்!
பள்ளியில் படிக்குஙு்கால் 'அறுபத்துமூவர்' திருநாள் என்று ஒருநாள் 'உள்ளூர் விடுமுறை' இருக்கும், அப்போதோ அல்லது வேலையில் சேர்ந்தபிறகு வந்த அதே விடுமுறை தினத்திலோ நான் இந்த அளவு விபரமாக இதனைப்பற்றிச் சசிந்தித்ததில்லை?
ஆனால், அவர்களைப் பற்றிய தகவல்கள் படித்தபோது என்னை நான் நொந்து கொண்டேன், என் மடமையை எண்ணி!
நாயன்மார்கள் குரு, சிவலிங்கம் மற்றும் அடியார்கள் வழிபாடு ஆகிய மூன்று வழியில் முக்தி பெற்றார்கள் போன்ற பல நல்ல வரலாற்றுச் செய்திகளை நாங்களும் பயன்பெறப் பகிர்ந்தமையின் பேரில் நாங்கள் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்பது தெளிவு, ஐயா!/////
என்னால் முடிந்த இறைப்பணி அவ்வளவுதான். நன்றி வரதராஜன்!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... nice post on auspicious day. I expected something about lord Muruga...
Have a holy day.
With kind regards,
Ravichandran M
Avanashi//////
எழுதுகிறேன் ராசா. பொறுத்திருங்கள்!
////Blogger Anpalagan N said...
ReplyDelete64வது இடத்தை கொடுக்க வேண்டியது சேக்கிழாருக்கு என்றல்லவா நினைத்திருந்தேன். அதற்காக வாரியார் சுவாமிகளை நான் குறைக்க நினைக்கவில்லை. சேக்கிழாருக்கு அடுத்ததாகவே அதன் பின்னால் வந்தவர்கள் எல்லாம்...////
உண்மைதான். நன்றி நண்பரே!
Blogger Spalaniappan Palaniappan said...
ReplyDeleteநாயன்மார்களின் திருநட்சத்ர பூஜை - 2016
எண் பெயர் திருநட்சத்ர பூஜை நாள் நாள் கிழமை
1 அதிபத்தர் ஆவணி ஆயில்யம் 27/09/2016 செவ்வாய்
2 அப்பூதியடிகள் தை சதயம் 10/02/2016 புதன்
3 அமர்நீதி நாயனார் ஆனி பூரம் 09/07/2016 சனி
4 அரிவட்டாயர் தை திருவாதிரை 22/01/2016 வெள்ளி
5 ஆனாய நாயனார் கார்த்திகை ஹஸ்தம் 25/11/2016 வெள்ளி
6 இசை ஞானியர் சித்திரை சித்திரை 22/04/2016 வெள்ளி
7 இடங்கழி நாயனார் ஐப்பசி கார்த்திகை 19/10/2016 புதன்
8 இயற்பகை நாயனார் மார்கழி உத்திரம் 01/01/2016 வெள்ளி
9 இளையான் குடிமாறார் ஆவணி மகம் 01/09/2016 வியாழன்
10 உருத்திர பசுபதி நாயனார் புரட்டாசி அஸ்வினி 17/10/2016 திங்கள்
11 எரிபத்த நாயனார் மாசி ஹஸ்தம் 26/02/2016 வெள்ளி
12 ஏயர்கோன் கலிகாமர் ஆவணி ரேவதி 22/08/2016 திங்கள்
13 ஏனாதி நாதர் புரட்டாசி உத்திராடம் 10/10/2016 திங்கள்
14 ஐயடிகள்காடவர் கோன் ஆனி ரேவதி 27/07/2016 செவ்வாய்
15 கணநாதர் பங்குனி திருவாதிரை 17/03/2016 வியாழன்
16 கணம்புல்லர் தை மிருகசீரிஷம் 21/01/2016 வியாழன்
17 கண்ணப்பர் தை மிருகசீரிஷம் 21/01/2016 வியாழன்
18 கலியநாயனார் ஆடி கேட்டை 13/08/2016 சனி
19 களறிற்றறிவார் ஆடி சுவாதி 10/08/2016 புதன்
20 கழற்சிங்கர் வைகாசி பரணி 03/06/2016 வெள்ளி
21 காரிநாயனார் மாசி பூராடம் 05/03/2016 சனி
22 காரைக்கால் அம்மையார் பங்குனி சுவாதி 26/03/2016 சனி
23 குங்கிலிய கலையனார் ஆவணி மூலம் 12/09/2016 திங்கள்
24 குலச்சிறையார் ஆவணி அனுஷம் 09/09/2016 வெள்ளி
25 கூற்றுவநாயனார் ஆடி திருவாதிரை 01/08/2016 திங்கள்
26 கலிக்கம்பநாயனார் தை ரேவதி 16/01/2016 சனி
27 கோச்செங்கட்சோழன் மாசி சதயம் 08/03/2016 செவ்வாய்
28 கோட்புலிநாயமார் ஆடி கேட்டை 17/07/2016 ஞாயிறு
29 சடையப்ப நாயனார் மார்கழி திருவாதிரை 26/12/2015 சனி
30 சண்டேஸ்வர நாயனார் தை உத்திரம் 28/01/2016 வியாழன்
31 சக்தி நாயனார் ஐப்பசி பூரம் 23/11/2016 புதன்
32 சாக்கிய நாயனார் மார்கழி பூராடம் 10/01/2016 ஞாயிறு
33 சிறப்புலி நாயனார் கார்த்திகை பூராடம் 03/12/2016 சனி
34 சிறுதொண்ட நாயனார் சித்திரை பரணி 07/05/2016 சனி
35 சுந்தரமூர்த்தி நாயனார் சித்திரை பரணி 10/08/2016 புதன்
36 செருத்துணை நாயனார் ஆவணி பூசம் 30/08/2016 செவ்வாய்
37 சோமசிமாறர் வைகாசி ஆயில்யம் 10/06/2016 வெள்ளி
38 தண்டியடிகள் பங்குனி சதயம் 05/04/2016 செவ்வாய்
39 திருக்குறிப்புத்தொண்டர் சித்திரை சுவாதி 20/05/2016 செவ்வாய்
40 திருஞானசம்மந்தமூர்த்தி வைகாசி மூலம் 24/05/2016 செவ்வாய்
41 திருநாவுக்கரசர் சித்திரை சதயம் 02/05/2016 திங்கள்
42 திருநாளைப்போவார் புரட்டாசி ரோஹினி 22/09/2016 வியாழன்
43 திருநீலகண்டர் தை விசாகம் 02/02/2016 செவ்வாய்
44 திருநீலகண்டயாழ்பாணர் வைகாசி மூலம் 24/05/2016 செவ்வாய்
45 திருநீலநக்க நாயனார் வைகாசி மூலம் 24/05/2016 செவ்வாய்
46 திருமூலர் ஐப்பசி அஸ்வினி 13/11/2016 ஞாயிறு
47 நமிநந்தியடிகள் வைகாசி பூசம் 09/06/2016 வியாழன்
48 நரசிங்க முனையர் புரட்டாசி சதயம் 13/10/2016 வியாழன்
49 நின்றசீர் நெடுமாறர் ஐப்பசி பரணி 14/11/2016 திங்கள்
50 நேச நாயனார் பங்குனி ரோஹினி 11/04/2016 திங்கள்
51 புகழ் சோழன் ஆடி கார்த்திகை 29/07/2016 வெள்ளி
52 புகழ்துணை நாயனார் ஆனி ஆயில்யம் 07/07/2016 வியாழன்
53 பூசலார் ஐப்பசி அனுஷம் 02/11/2016 புதன்
54 பெருமிழலைக்குறும்பர் ஆடி சித்திரை 09/08/2016 செவ்வாய்
55 மங்கயற்கரசியார் சித்திரை ரோஹினி 08/05/2016 ஞாயிறு
56 மானகஞ்சாற நாயனார் மார்கழி சுவாதி 05/01/2016 செவ்வாய்
57 முருக நாயனார் வைகாசி மூலம் 24/05/2016 செவ்வாய்
58 முனையடுவார் நாயனார் பங்குனி பூசம் 19/03/2016 சனி
59 மூர்க்க நாயனார் கார்த்திகை மூலம் 01/12/2016 வியாழன்
60 மூர்த்தி நாயனார் ஆடி கார்த்திகை 29/07/2016 வெள்ளி
61 மெய்ப்பொருள் நாயனார் கார்த்திகை உத்திரம் 24/11/2016 வியாழன்
62 வாயிலார் நாயனார் மார்கழி ரேவதி 20/12/2015 ஞாயிறு
63 விறன்மிண்ட நாயனார் சித்திரை திருவாதிரை 10/05/2016 செவ்வாய்
அன்புடன்
சோமசுந்தரம் பழனியப்பன்
மஸ்கட் /////
நீண்ட பட்டியலுக்கு நன்றி நண்பரே!
//////Blogger hamaragana said...
ReplyDeleteஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
63 நாயன்மார்கள் பற்றிய கருத்து ...
சைவ சமய மக்களுக்கு குலதெய்வமாக விளங்க கூடியவர்கள்!!!
குரு .லிங்க .சங்கம., வழிபாட்டின் மூலம் முக்தி பெற்றவர்கள் ..
இந்த 63 நாயன்மார்களுக்கு பின்னரும் இதே போன்ற பல அருளாளர்கள் தோன்றி முக்தி பெற்றுள்ளனர் ..
அவர்கள் ..நம்பியாண்டார் நம்பிகளின் காலத்திற்கு முன்னே ...பின்னே.,..தோன்றிய அருளாளர்கள் அடியார்கள் பட்டியலில் சேர்க்கவில்லை .
ஆனால் அடியார்கள் 63.தான் ..!! பட்டியல் என்று குறிப்பிட்டிருக்கும் ஒப்பிட்டு நோக்கிய 60 என்பதற்கு எங்காவது சான்றுகள் உள்ளனவா??
நன்றி அய்யா .//////
தெரியலையே கணபதியாரே! சான்று இருந்தால் பிடித்துக் கொடுங்கள்!