6.10.15

தேரில் வந்தவன் நேரில் தந்தது என்ன?


தேரில் வந்தவன் நேரில் தந்தது என்ன?

பக்தி மலர்

6.10.2015

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்
பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும்
படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
பழநி என்னும் ஊரிலே ... பழநி என்ற பேரிலே
பவனி வந்தான் தேரிலே ... பலனும் தந்தான் நேரிலே
முருகன் ... பலனும் தந்தான் நேரிலே.

பழமுதிரும் சோலையிலே ... பால் காவடி ஆடிவர
தணிகை மலை தென்றலிலே ... பன்னீர் காவடி ஆடிவர
சாமிமலை கோயிலிலே ... சர்க்கரை காவடி ஆடிவர 
செந்தூரின் வாசலிலே ... சந்தனக் காவடி ஆடிவர 

குமரன் ...
பழநி என்னும் ஊரிலே ... பழநி என்ற பேரிலே

பரங்குன்றின் மலையோரம் ... சேவற்கொடி ஆடிவர
குன்றக்குடி என்நாளும் ... வண்ண மயிலும் ஆடிவர
மயிலத்தின் மலைமேலே ... மணி ஓசை முழங்கிவர 
விராலிமலை மேலிருந்து ... வீரவேலும் வெற்றி தர.

கந்தன் ...
பழநி என்னும் ஊரிலே ... பழநி என்ற பேரிலே
பவனி வந்தான் தேரிலே ... பலனும் தந்தான் நேரிலே
முருகன் ... பலனும் தந்தான் நேரிலே.

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4 comments:

  1. ஓம் சரவணா பவ
    ஓம் சரவணா பவ
    ஓம சரவணா பவ

    ReplyDelete
  2. ஐயா,
    ஆறுபடை வீடுகளில் ஆட்சி செய்யும் ஆறுமுகன் அன்பர்களின் மனமெனும் தேரிலமர்ந்து அருட்பலனை அள்ளி அள்ளித் தருகின்றான், ஆண்டியாம், பழனியாண்டி.
    நாமும் துதிப்போம் அவனருள் வேண்டி !

    ReplyDelete
  3. ///Blogger Chandrasekaran Suryanarayana said...
    ஓம் சரவணா பவ
    ஓம் சரவணா பவ
    ஓம சரவணா பவ/////

    உருவாய்
    அருவாய்
    உளதாய்
    இலதாய்
    வருவாய்
    அருள்வாய்
    குகனே!

    ReplyDelete
  4. //////Blogger வரதராஜன் said...
    ஐயா,
    ஆறுபடை வீடுகளில் ஆட்சி செய்யும் ஆறுமுகன் அன்பர்களின் மனமெனும் தேரிலமர்ந்து அருட்பலனை அள்ளி அள்ளித் தருகின்றான், ஆண்டியாம், பழனியாண்டி.
    நாமும் துதிப்போம் அவனருள் வேண்டி !/////

    ஆமாம். அனுதினமும் துதிப்போம்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com