25.9.15

Quiz: புதிர்: செம்பருத்திப் பூவைப் போல செவந்திருந்தவளுக்கு என்ன ஆயிற்று?


Quiz: புதிர்: செம்பருத்திப் பூவைப் போல செவந்திருந்தவளுக்கு என்ன ஆயிற்று?

Quiz.95

18.9.2015

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள். அது ஒரு பெண்மணியின் ஜாதகம். ஜாதகியின் திருமண வாழ்வைப் பற்றி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.


பதிலை வழவழவென்று எழுதாமல் ஒரு சில வரிகளில் காரணத்துடன் எழுதுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=============================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

31 comments:

  1. Native has kalasarpa dosha/yoga. ketu in 7th is not auspicious sign. lagna lord association with rahu, saturn in 5th house, venus in 6th house sun and ketu in 7th house , 2 nd and 5th lord debilitation will complicate married life. However jupiter aspecting 7th and 9th house.
    she might have got married but due to strong malefic influences it might not have lasted for long.

    thanks
    sree

    ReplyDelete
  2. Married, not lead regular married life. Should have gone spiritual world or secluded.

    1. 7 th house receiving - Guru, lord of second, Sun yoga karaka and kendrathipathi along with 4th house lord and lagnathipathi make marriage happen.
    2. Raghu kethu-kala sarpa dosam- kethu leading and joined with Sun denotes spiritual preaching as her
    3. Mars conjucted his enemy Raghu but rule and ucha makes extremely good combination for native and getting direct aspect of Royals, Sun (natural malefic though yoga karaka) makes this person more strong personality with highest knowledge.

    4. kethu on 7th with Saturn aspect(from a good house), with neecha guru (5th aspect) and keen intelligency of kethu with Sun makes me think, marriage life not on normal terms and may not had childrens but might did extremely did well on spiritual side. Guru may kept the marriage life, but either her husband left her or taken through spiritual path.



    ReplyDelete
  3. வணக்கம் வாத்தியாரே!

    Quiz 96க்கான பதில்.


    ஜாதகி பிறந்த நேரம் : 02 Jun 1937 19:00 மணி

    அமைதியற்ற திருமண வாழ்வு அமைந்தது. குழந்தை இல்லை.

    விருச்சிக லக்கினம், கும்ப ராசி. தீவிர காலசர்ப்ப தோஷ ஜாதகம். லக்கினதிபதி செவ்வாய் லக்கினத்திலேயே வக்கிரம் மேலும் ராகுவுடன் கூட்டு. ஜாதகியின் வாழ்க்கை முன்னேற்றத்தை முடக்கி விட்டார்கள். ஏழில் சூரியன் கேதுவுடன் சேர்ந்து கெட்டு விட்டார். அதன் மீது 5ல் இருக்கும் சனியின் 3ம் பார்வை. ஏழாம் இடத்திற்கு வக்கிர குரு பார்வை உள்ளதால் அதீத தாமததிற்க்கு பின் திருமணம். அப்படி ஒரு திருமணம் நடக்காமலே இருக்கலாம்(ஒன்றும் பிரயோஜனம் இல்லை).


    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  4. Aiya,vanakkam,Ethu kalasarpa thosa jathagam 33 aandu (or) astavarga paralkalin ennikkaigu thakka aandukal varai thosam athan piragu than thirumana vazhgai amaiyum

    ReplyDelete
  5. Answer to Quiz.95

    திருமண வாழ்வு பிறிவில் முடித்து இருக்கும்(விவாகரது அல்லது கணவன் இழப்பு)

    1. 7 ல் இருக்கும் கேது
    2. குரு நீச்சம்
    3. 7ஆம் அதிபதி ஆகிய சுக்கிரன் ஏழுற்கு 12ல்.
    4. குழந்தை இருப்பதற்கு வாய்ப்பும் கடுமை.
    5. 5 ஆம் இடத்திற்கு 24 பரல். 5 ஆம் இடத்து அதிபதி இருக்கும் இடத்திற்கு 2 பரல். 5 ஆம் இடத்து அதிபதி நீச்சம்.

    இப்படிக்கு,
    மு.சாந்தி

    ReplyDelete
  6. lagna-7th place(raghu-kethu),7th lord is in 6th house with 8th lord and morever sani and sevvai aspecting 7th place where sevvai also 6th lord.these are not good for prosperous marraige life.so marraige may not happen or if its happpen she should be widow

    ReplyDelete
  7. Respected Sir,

    Late marriage is possible for this native.

    1. Lagnathypathy in Lagnam aspects seventh house with Powerful Ragu.
    2. 2nd and 5th house owners parivarthanai helps to enter family life.
    3. Due to Ragu kethu, there is some troubles in her family life.

    Thanks,
    Sathishkumar GS

    ReplyDelete
  8. திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம்.
    1) களத்திர ஸ்தானாதிபதி மற்றும் காரகனான சுக்கிரன் ஸ்தானத்திற்குப் பன்னிரண்டில் மறைவு
    2) அவனே சயனபோக ஸ்தானாதிபதியும் ஆகி, எட்டாம் அதிபனான புதனுடன் ஆறில் மறைவு
    3) ஏழில் பாபிகள் மற்றும் ஏழாம் இடத்தை லக்கினத்திலிருந்து பார்க்கும் பாபிகள் மற்றும் சனியின் மூன்றாம் பார்வை.
    4) நீச்ச (மற்றும் வக்கிர) குரு செல்லாக் காசானதால் ஏழில் விழும் பார்வையால் உதவி இல்லை.
    (திருமணம், சயனபோகம் மற்றும் புத்திரம் ஆகியவற்றுக்கான ப்ராப்தி இல்லை. ஐந்தில் சனி மற்றும் புத்திர காரகன் மூன்றில் நீச்சம் என்னும் அமைப்பு குழந்தை பாக்கியம் கிடையாது என்று பறை சாற்றுகின்றன)

    ReplyDelete
  9. Karagan and 7th place bhavagaathipathi Sukkiran is in Bapakarthari yokam with 4 bindus and in 6th place to Laknam and 12th place to 7th place bhavagam. 7th Bhavagam with 21 bindus and Kedhu. Further Vakkira Sevvai, Vakkira Guru Parvai and Sani Parvai to 7th place.
    Hence she did not got married.

    ReplyDelete
  10. த‌சா இருப்பு கொடுக்கப்படவில்லை. எனவே சரியான நட்சத்திரம், தசா காலங்களைக் கணிக்க முடியவில்லை.

    ஏழாம் இடம் கேது சூரியனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது;ராகு, செவ்வாய், சனியால் பார்க்கப்பட்டூள்ளது.ஏழாம் இடத்துக்காரனான சுக்கிரன் ஆறாம் இட‌த்திலும், எட்டாம் இடத்துக்காரனான புதனும் ஆறாம் இடத்திலும் இருக்கிறார்கள்.ஏழாம் இடத்துக்கரனையும் எட்டாமிடத்தூக்காரனையும் சனி கேது சூரியன் சூழ்ந்துள்ளனர்.கால சர்ப தோஷத்தில் அனைத்து கிரகங்களும்.

    குருபார்வை ஏழாம் இட‌த்திற்கு என்பதால் மிகத்தாமதத் திருமணமாகி கைம்பெண் ஆகியிருப்பார் அல்லது விவாக ரத்து ஆகியிருக்கும்.குரு பார்வையால்,திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம் என்று சொல்ல முடியவில்லை.

    தங்கள் பழைய பாணிப் புதிருக்கு மீண்டும் திரும்பிவிட்டீர்கள் என்று தோன்றுகிறது.எனவே இம் முறை பதில் அளிப்போர் எண்ணிக்கை குறையும்.

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா,
    7ம் இடம் கடுமையாக பாதிக்க பட்டுள்ளது. 7ல் கேது + சூரியன், சனிஸ்வரரின் விசேச பார்வை, செவ்வாயின் பார்வை. 7க்கு உடையவரும் காரகருமான சுக்கிரன் 6ல் உடன் 8க்குரிய புதன். குடும்ப ஸ்தானம், புத்திரஸ்தானதிபதி மற்றும் காரகன் குரு நீசம். குடும்ப ஸ்தானமீது சனிஸ்வரரின் விசேச பார்வை. 5ல் சனி. திருமணம் நடக்க வாய்பில்லை. காரணம் 2, 7, 5ம் வீடுகள் கெட்டுள்ளன. பாக்யதிபதி 4ல் இருந்து தனது 9 வது வீட்டை பார்பதால் அவர் திருமணத்தை நடத்தி தர வாய்புள்ளது.

    ReplyDelete
  12. 1) 7,12ம்(களத்திர,சயன-போகம்) வீட்டதிபதி 6ல் மறைவு அது அந்த வீட்டிற்கு 12ல்
    2) களத்திர அதிபதியும் களத்திரகாரகனுமான சுக்கரன் 8ம் அதிபதியுடன் கூட்டு
    3) லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்றாலும் அவனே ஆறாம் அதிதிபதியாகி, ராகுவுடன் சேர்க்கை பெற்று 7ம் வீட்டை பார்க்கிரான், 7ல் கேது
    4) 7ம் வீட்டிலும் 2ம் வீட்டிலும் சனியின் பார்வை.மணவாழ்க்கை சுகப்படாது
    5) காலசர்ப தோஷம் முடிந்தாலும் கேது கொடிபிடிக்கும் ஜாதகம்!!!.
    6) 2ம் வீட்டதிபதி குரு 7ம் வீட்டை பார்க்கும் அமைப்பால் திருமணம் நடந்தாலும் மற்ற அமைப்பால் பிரிவில் முடிந்திருக்கும்

    ReplyDelete
  13. 1. 2nd house Lord Guru is in the second house from the 2nd house.
    2. 5th house Load Guru is parivarthanai and looks the 7th place.
    3. The Lord for 12th house Sukkiran (kalathira kaaragan)is with 8th house Lord Pudan in 6th place and gets Vipareetha raja yogam. So the individual will get happy married life.

    S.MOHAN
    KARAIKAL

    ReplyDelete
  14. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    புதிருக்கான விளக்கம்.
    “செம்பருத்திப் பூவைப் போல செவந்திருந்தவளுக்கு என்ன ஆயிற்று?” - வாடிப்போயிருக்கும்.
    இது ஒரு துரதிருஷ்டமான ஜாதகியாயிருந்திருப்பார்.
    கேது கொடி பிடிக்கும் கால சர்ப்ப தோஷ ஜாதகம்.
    விருச்சிக லக்னம், லக்னாதிபதி செவ்வாய் லக்கினத்தில் ஆட்சி பெற்றிருந்தாலும், உச்சம் பெற்ற ராகுவுடன் இணைவு.லக்கினாதிபதி செவ்வாயே 6க்கும் அதிபதியாகி லக்கினத்தை கெடுத்ததுடன், 7ம் இடத்தையும் நேர்ப் பார்வையால் பார்த்துகெடுத்துவிட்டார். 7ம் வீட்டில் அமர்ந்த கர்மாதிபதி சூரியனோ கேதுவால் பாதிக்கப் பட்டு 7ம் பாவத்தை சிதைத்துவிட்டார்.
    7ம் அதிபதி சுக்கிரன் தன் வீட்டிற்க்கு 12ல், 6மிடத்தில் அமர்ந்து 8ம் அதிபதி புதனுடன் கூட்டு. களத்திர காரகன் சுக்கிரன் பாப கர்த்தாரி யோகத்தில். குடும்பாதி குரு மறைவிடமான 3ல் அமர்ந்து நீச்சம் பெற்று, ஜாதகியை சந்தோஷமில்லாத ஒரு வாழ்க்கையில் தள்ளி விட்டார்.
    கேது கொடி பிடித்தால் என்ன ஆகும் என்பதை குரு (வாத்தியார் அவர்கள்) விளக்கமாக சொல்லியுள்ளார்.
    குரு கெட்டா என்னவாகும்? வாழ்வு பாழாகும்.
    7ம் பதி ஆறில் 8ம் பதியுடன் - வாழ்க்கைத் துணையை இழந்திருப்பார். நோய் பாதிப்பால்.
    குரு சனி பரிவர்த்தனை.சனியின் கொடூர பார்வை 7ம் வீட்டின் மீது.
    ஒட்டு மொத்த தோஷ ஜாதகம்.
    ஆனாலும் சனி தசா முடிவில் 32 வயதில் திருமணம் நடந்து புதன் தசை ஆரம்பித்திலேயே கணவரை இழந்திருப்பார்.
    8,12 அதிபதிகள் புதன் சுக்கிரன் 6ல் இணைந்ததால் விபரீத ராஜயோகம் ஏற்ப்பட்டு பின்னர் கெடுத்திருக்கும்.
    சுக்கிரன் புதன் இணைவு 6ல் இருப்பதால், ஜாதகியே நோய்வாய்ப் பட்டிருப்பார்.
    எதுக்குமே குருவின் அருள் வேண்டுமே!!!!!!!.
    அன்புடன்,
    - பொன்னுசாமி.

    ReplyDelete
  15. Guruji,
    Is this Q-95 suppose to be a second revision???.........
    12 th lord Venus keeping the house in direct sight. jaadhaki should have been benefited by mean of other portfolios.
    Best regards,
    - Ponnusamy.

    ReplyDelete
  16. ஜாதகியின் திருமண வாழ்வில் நிம்மதி குறைவு. காரணம், 2 ம் வீட்டு அதிபதி குரு நீச்சமாகி உள்ளார், மேலும், 7ம் வீடதிபதி 7ம் வீட்டுக்கு 12ல் மறைவு. ரிஷபத்தில் உள்ள கேது அவ்வப்போது நன்மை செய்திருப்பார், இருப்பினும் மன நிறைவு & நிம்மதி குறைவே.

    -ரா. கௌதமன்.

    ReplyDelete
  17. Native marriage life is a troubled one
    1,seventh lord in 6th house & sun,ketu in 7th house - very bad placement in horoscope this combination leads to divorce or
    2, 2nd and 5th lord guru also debliated,leads to disturbed family life

    ReplyDelete
  18. கேது கொடி பிடித்து முன் செல்லும் கால சர்ப தோஷ ஜாதகம்...7 ம் வீட்டு அதிபன் அந்த
    வீட்டுக்கு 12ல்....மேலும் 7ம் வீட்டை மூன்றாம் பார்வையாக சனி....2ம் வீட்டுக்காரன்
    நீசமாக 3 ம் வீட்டில்... மற்றும் சனியின் 9 ம் பார்வை லக்னத்தின் மேல்...
    திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம்...அப்படியே திருமணம் நடந்தாலும் விவாக ரத்தாகி இருக்கும்...சூரியனுடன் இணைந்த கேது தடையை உண்டாக்குவான்,,
    7 ம் வீடுக்குரியவன் 8 ம் அதிபதியோடு இணைந்த மோசமான நிலை...என்ன சொல்ல...!!!
    வாத்தியார் பாணியில் சொன்னால் எல்லாம் வாங்கி வந்த வரம்...

    அன்புடன்
    R.Saravanan

    ReplyDelete
  19. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    இந்த ஜாதகம் 23.08.2011.ல் கால சர்ப்ப யோகம் பற்றிய பாடத்திற்காக உதாரண ஜாதகமாக் கொடுக்க பட்டது..
    விலோமா யோகம் அதாவது கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம் **அவ யோகம் **
    கேது கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் உள்ளடங்கி...!!!.
    திருமணமாகி கணவர் இறந்து போனார் .ஜாதகி சமூக சேவையில் நாட்கடதினார்.

    ReplyDelete
  20. வணக்கம்
    01/06/1937 ஆம் ஆண்டு செவ்வாய் கிழமை மாலை 6.43.03 மணிக்கு சதய நட்சத்திரத்தில், விருச்சிக லக்கினத்தில் ஜாதகி பிறந்தார். (இடம் - சென்னை).யோககார்கள் : குரு , சந்திரன் யோகமில்லாதவர்கள் : புதன் , சுக்கிரன்

    திருமணவாழ்வு சில காலம் மட்டுமே . திருமணமான சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார்.

    1. கால சர்ப்ப தோஷம் - கேது கொடிபிடித்துக் கொண்டு , மற்ற கிரகங்கள் அனைத்தும் அதன் பின்புறம் உள்ளன.

    2. 7ம் வீட்டிற்கு உரிய சுக்கிரன் (4 பரல்) 6ம் வீட்டில். 7ம் வீட்டிற்க்கு பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்தார். (7ம் வீடு - 21 பரல்), சனியின் 3ம் பார்வை 7ம் வீட்டின் மீது. ஜாதகியின் 30 வயதில் சனி தசை ஆரம்பம்.

    3. 8ம் வீட்டு அதிபதி புதன் 6ம் வீட்டில் சுக்கிரனுடன் கூட்டு சேர்ந்த புதன் கணவர் இல்லாமல் செய்து விட்டார்.

    4. 2ஆம் அதிபதி குரு நீசமானதால் குடும்ப வாழ்க்கையைக் கொடுக்க வில்லை. 14 வயது முதல் 30 வயது வரை குரு தசை.நவாம்சத்தில் குரு உச்சம். ராசியில் குருவின் 5ம் பார்வை 7ம் வீட்டில் இருப்பதால் சூரிய புக்தியில் திருமணம் நடைபெற்றது.

    5. 9ம் வீடு பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு எட்டில் அமர்ந்து ஜாதகியின் பாக்கியங்களைக் கெடுத்தார்.

    6. 4ம் வீட்டில் அமர்ந்துள்ள சந்திரனின் 7ம் பார்வை 10ம் வீட்டில் உள்ளதால் ஜாதகி சமூக சேவை செய்தார்.

    ReplyDelete
  21. Dear sir,

    The given horoscope is under kala sarpa dosham. Kethu is leading with sun. 6th lord is aspecting 7th. Also sani aspects 7th. Sukran is in 6th place. Hence she may not get family life.
    Even then, there is one plus point. 5th lord Guru neecham and aspects the 7th place. Guru will do his duty even though he is neecham. Also guru and sani exchanged their own places.

    Hence due to Guru aspects, she got child and may get divorced or lost her husband after getting the child.

    Thanking you,
    C. Jeevanantham

    ReplyDelete
  22. ஜாதகி ஒரு விதவை... இரண்டாம் திருமணம் புரிந்தவர்.

    1.லக்கினத்திற்கு 7 ல் நீச கேது உடன் சூரியன் மற்றும் ராகு ,செவ்வாய் சனி பார்வை.
    2.குடும்பஸ்தானதிபதி குரு’ நீசம்.7,11 ல் நீச பார்வை.
    3.7 ம் அதிபனும் களத்திரகாரகனுமான சுக்கிரன் மற்றும்8 ம் அதிபதி புதன் 6 ல் மறைவு.
    பொதுவாக பெண்களீன் ஜாதகத்தில் செவ்வாய்,சூரியன் ,கேது சம்பந்தம் ஏற்படுவது விதவை,மற்றும் பிரிவைக்குறீக்கும். இந்த ஜாதகிக்கு 7 ல் இம் மூன்று கிரகங்களும் இணைந்து சனியின் பார்வையும் உள்ளதால் இந்த ஜாதகி விதவை இருந்திருப்பார்.

    மேலும் 7ம் அதிபதியும் களத்திரகாரகனுமான சுக்கிரன் 11 ம் அதிபதியான புதனுடன் இணைவு, 11 ம் இடத்திற்கு சனி’யின் பார்வை மற்றும் நீச குருவின் பார்வை உள்ளதால் ஜாதகிக்கு இரண்டாம் திருமணம் நடந்திருக்கும்.

    G.SivaRajan, Pondicherry

    ReplyDelete
  23. அய்யா,
    கேது கொடி படித்து செல்லும் காலசர்ப தோசம் உள்ள ஜாதகம். பழைய பாடம்..... சோகமான திருமண வாழ்க்கைக்கு இந்த தோசம் மட்டுமே காரணமாக இருக்க முடியுமா....
    குரு, சனி பரிவர்த்தனை, சுக், புதன் விபரீத ராஜ யோகம்...
    DOB: 01.06.1937
    பரல்கலும் நன்றாக உள்ளது.
    செவ்வாய் ஆட்சி பெற்று 7ஆம் வீட்டை பார்க்கிறது. செவ்+சூரி( 1&10)

    ReplyDelete
  24. காலஸர்பதோஷம் உள்ளது, ஏழில் கேது,சூரியனை லக்னத்திருந்து ராகு பார்வை, சனி ஏழாம் வீட்டை 3ஆம் பார்வை, களத்ரஸ்தானாதிபதி & களத்ரகாரகன் 6ல் 8ஆம் வீட்டு புதனுடன் 7ற்கு 12ஆம் வீட்டில் மறைவு ,குரு மற்றும் லக்னாதிபதி பார்வையால் திருமணம் நடந்தது ஆனால் குடும்ப வாழ்கை மகிழ்ச்சிகரமாய் இல்லை

    ReplyDelete
  25. தாமத திருமணம் ..திருமணத்தில் நிம்மதியின்மை ...மொத்தத்தில் திருமணத்தால் சுகமில்லை...

    ReplyDelete
  26. Vanakkam Iyya,

    Viruchiga lagna jathagi. Pirantha neram 2 - 6 -1937 5.30 PM chennai endru veithu konden.

    Thirumana vazhkai + kudumba vazhkai : 2am idam paarka padavendum + 7aam idamum paarka pada vendum.

    Intha jathagathil - 2aam+5aam athipathi guru neecham adainthu ullar + sanium guruvum parivarthani pertrullanar. thangaladhu paadathil "parivarthanai perum grahangal valimai perum" endru koori ullirgal. melum guruvum saniyum intha jathagathirku theeya idangaluku (6/8/12) idangaluku athipathigal kidayathu.Athanal guru neecham petrum, parivarthanai valimayodu ullar. Melum avarin 5aam paarvai 7aam idathiruku irukirathu.

    7aam idathirku athipathi sukran(+ kalathira kaaragaanum kooda) avan laganthirku 6il(+8aam athipathi serkaiyum kooda), 7aam veetiruku 12il.

    Jaathagiku kaala sarba dhosam petra jaathagam athanal kaalaam kadantha thirumanam thaan.

    30 vayathiruku mel thirumanam nadaipetru irukum aanaal athu nilaithu illamal vivagarathuku aagirukum (7aam idathu athipathi lagnathiruku 6il amarnthathal). Thirumana vazhai vivagarathu aagi, migavum sogama irukum.

    Sendra vaaram veliyur sendrathal puthir potiyil pangu pera vilai.

    nandri,
    Bala

    ReplyDelete
  27. குடும்ப ஸ்தானாதிபதி குரு 3ல் நீசமடைந்து வக்கிர கதியிலுள்ளார். களத்திர பாவமான 7ல் சூரியன்+ கேது(21 பரல்). களத்திராதிபதியும் களத்திரகாரகனுமான சுக்கிரன் 6ல் மறைந்துவிட்டார். லக்கினாதிபதி செவ்வாய் லக்கினத்திலேயே இருந்தாலும். ராகுவுடன் சேர்ந்து வலுவிழந்து வக்கிரகதியிலுள்ளார். களத்திர பாவத்திற்கு குருவின் பார்வையுள்ளது.மேற்கண்ட காரணங்களால் ஜாதகி திருமணமாகி சில மாதங்களில் கணவனை இழந்த கைம்பெண்ணாகியிருப்பார்.

    ReplyDelete
  28. அய்யா வணக்கம், 7ல் சூரியன் பகை வீடு, கேது நீசம், ஆகையால் திருமணம் என்பது ? தான், ஆனால் செவ்வாய் சொந்த வீட்டில் உள்ளது, ராகுவும் நல்ல நிலை, குருவும் சனியும் பரிவர்த்தனை, 2ஆம் வீட்டு அதிபதி பரிவர்த்தனையால் நிச்சயம் நல்லது செய்யவேண்டும், புதனும் சுக்ரனும் 6இல் மறைவு, ஆகையால் குரு வின் 5 ஆம் பார்வையால் திருமணம் இல்லையென்றால் ???. அய்யா பதில் பார்த்து என்னை சரிசெய்வேன் . நன்றி. சா. குமணன்

    ReplyDelete
  29. ஏழாம் அதிபதி சுக்கிரன் பாபகர்தாரியில், ஏழாம் வீடு ராகு மற்றும் கேது சம்பந்தத்தில், ஏழாம் வீட்டின் மேல் சனி மற்றும் இதர பாப கிரகங்களின் பார்வை, ஏழாம் அதிபதி அதனுடைய பன்னிரெண்டாம் வீட்டில் போன்ற காரணத்தினால் திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம். அல்லது விவாகரத்து ஏற்பட வாய்ப்பு. ஏழாம் வீட்டின் மேல் குரு பார்வை இருந்தாலும் பிரச்சினையை குறைப்பது கடினம்.

    ReplyDelete
  30. வணக்கம் குரு,

    இந்த ஜாதகி கணவனை இழந்தோ அல்லது பிரிந்தோ வாழும் நிலை அல்லது திருமண வாழ்க்கை அவதி நிறைந்ததாக இருக்கும் அல்லது கணவன் நோயாளிய இருப்பார். காரணங்கள்,
    காலத்திற ஸ்தானாதிபதி சுக்கிரனும், மாங்கல்ய ஸ்தானாதிபதி புதனும் களத்திர ஸ்தானத்திற்கு 12லும், லக்னத்திற்கு 6லும், அவருக்களுக்கு இரு புறமும் பாவ கிரகங்கள் சூழ்ந்தும் மறைந்துள்ளர்கள். களத்திர ஸ்தானத்தை சனி, ராகு பார்க்கிறார்கள் மற்றும் களத்திர ஸ்தானத்தில் சூரியனும் கேதுவும் அமர்ந்துள்ளார்கள். ஆனால் குருவும் 7மிடத்தை பார்கிறார். அதனால்தான் திருமணம் நடந்திருக்கும் என எடுத்துக்கொண்டேன்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  31. 1. கணவருக்கு இரண்டாவது தாரம்.
    2. கணவர் இந்த திருமணத்திற்குப் பின் விசக்கடி அல்லது விஷக்காய்ச்சலால் மரணம்
    டாக்டர். முரளிஸ்ரீனிவாசன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com