8.9.15

எத்தனை திருநாட்கள் அவனுக்கு!


எத்தனை திருநாட்கள் அவனுக்கு!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------
முருகனுக் கொருநாள் திருநாள்
அந்த முதல்வனின் வைபவப் பெருநாள்
(முருகனுக் கொருநாள் ... )

கடம்பனுக் கொருநாள் திருநாள்
நல்லக் கார்த்திகைப் பெருநாள் ஓருநாள் 
(முருகனுக் கொருநாள் ... )

வைகாசி விசாகத் திருநாள்
அந்த வண்ணக் கதிர்வேலன் பெருநாள் 
வடிவேல் குமரனின் திருநாள் 
சோமவாரத்தின் திங்கள் பெருநாள்

வடிவேல் குமரனின் திருநாள்
சோமவாரத்தின் திங்கள் பெருநாள்

கந்த சஷ்டிக்கொருத் திருநாள் 
கந்தன் கருணைப் பொழிகின்றப் பெருநாள்

கந்த சஷ்டிக்கொருத் திருநாள்
கந்தன் கருணைப் பொழிகின்றப் பெருநாள்
(முருகனுக் கொருநாள் ... )

சரவணன் பிறந்தத் திருநாள்
அருள் சந்தணம் வழங்கிடும் பெருநாள் 

செந்தூர் வாசலில் ஒருநாள் 
கந்தன் காவடி ஆடிடும் பெருநாள்

வள்ளிக் குமரனின் மண நாள் 
நம் வாழ்வின் சுடர் ஒளிப் பெருநாள்

முருகனுக் கொருநாள் திருநாள்
அந்த முதல்வனின் வைபவப் பெருநாள்
கடம்பனுக் கொருநாள் திருநாள்
நல்லக் கார்த்திகைப் பெருநாள் ஓருநாள்

நல்லக் கார்த்திகைப் பெருநாள் ஓருநாள் 

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
=======================================================
2


நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம் தான்

வெளி நாடுகளில் வசிக்கும் நமது மாணவக் கண்மணிகள் பலரிடம் இருந்து, வாத்தியாரின் புத்தகம்’ எங்களுக்கில்லையா? என்று கேட்டு மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஏன் இல்லை? அவர்களுக்கும் உண்டு.

என்ன வித்தியாசம். அஞ்சல் செலவுதான் அதிகமாக உள்ளது. இந்தியாவிற்குள் எந்த ஊரில் இருந்தாலும் கூரியர் அல்லது தபாலில் (Post) 50 ரூபாய் செலவில் புத்தகத்தை யாருக்கும் கிடைக்கும்படி செய்து விடலாம்.

ஆனால் வெளிநாடுகளுக்கு அவ்வாறு குறைந்த செலவில் அனுப்ப முடியாது. அந்தந்த நாடுகளின் பொருளாதார சூழ்நிலை அப்படி!

புத்தகத்தின் எடை 360 கிராம்கள் (பக்கங்கள் 320)

இந்தியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ளவர்களுக்கு  வகுப்பறை ஜோதிடம் - முதல் தொகுதியை அனுப்ப ரூ.800:00 முதல் ரூ.900:00 வரை தபால் செலவு ஆகும். அதுபோல சிங்கப்பூர் அல்லது கோலாலம்பூர் போன்ற ஊர்களில் வசிப்பவர்களுக்கு அனுப்ப
ரூ.600:00 அல்லது ரூ.700:00 ஆகும். அத்துடன் புத்தகத்தின் விலையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அதற்கு சம்மதம் உள்ளவர்கள் எழுதுங்கள். உங்களுக்கு புத்தகம் உடனடியாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்!

பதிப்பகத்தாரின் மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com

அன்புடன்,
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12 comments:

  1. காலை வணக்கம் ஐயா
    உள்ளேன் ஐயா

    ReplyDelete
  2. அரசாங்கத்திற்காக சம்பாதித்தே
    ஆயுள் முழுதும் போகுது

    அஞ்சல் கட்டணமும்
    அப்படியே அள்ளி கொண்டு போகுது

    இந்தியாவை விற்று விடலாமான்னு
    இங்கு பலர் யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள்

    ReplyDelete
  3. இன்னொரு ஆலோசனை
    இப்போ வாத்தியார்க்கு .....

    வெளிநாட்டுக்கு ஒரு
    வெள்ளோட்ட பயணம் செல்லலாமே

    பிரதமர் மட்டும் தான் செல்ல வேண்டுமா? நம்ம
    பிரதர் செல்ல கூடாதா?

    ReplyDelete
  4. கார்த்திகைக் குமரன், கடம்பன், கந்தன், சேவற்கொடியோன் முருகனின் நாமத்தை பக்திமலராக்கி அவன் பொற்பாத கமலங்களில்
    சமர்ப்பித்து எந்நாளும் வணங்குலோம்.

    ReplyDelete
  5. /////Blogger siva kumar said...
    காலை வணக்கம் ஐயா
    உள்ளேன் ஐயா////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  6. ////Blogger Nagendra Bharathi said...
    அருமை////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. /////Blogger வேப்பிலை said...
    முருகா
    முருகா/////

    வருவாய்
    அருள்வாய்!

    ReplyDelete
  8. /////Blogger வேப்பிலை said...
    அரசாங்கத்திற்காக சம்பாதித்தே
    ஆயுள் முழுதும் போகுது
    அஞ்சல் கட்டணமும்
    அப்படியே அள்ளி கொண்டு போகுது
    இந்தியாவை விற்று விடலாமான்னு
    இங்கு பலர் யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள்/////

    அவர்களையும் சேர்த்தா? அல்லது சேர்க்காமலா?

    ReplyDelete
  9. /////Blogger வேப்பிலை said...
    இன்னொரு ஆலோசனை
    இப்போ வாத்தியார்க்கு .....
    வெளிநாட்டுக்கு ஒரு
    வெள்ளோட்ட பயணம் செல்லலாமே
    பிரதமர் மட்டும் தான் செல்ல வேண்டுமா? நம்ம
    பிரதர் செல்ல கூடாதா?/////

    பிரதமர் - பிரதர் = ஒரு எழுத்துத்தான் வித்தியாசம்.
    ஆனால் பதவி, செல்வாக்கு, புகழ் என்று பார்த்தால் இமயமலை அளவு வித்தியாசம் இருக்கிறதே சுவாமி!
    நமக்கு உள்ளூரே போதும். வெளிநாடுகளில் எல்லாம் தயிர் சாதமும் மாங்காய் ஊறுகாயும் கிடைக்காதே சுவாமி!

    ReplyDelete
  10. /////Blogger வரதராஜன் said...
    கார்த்திகைக் குமரன், கடம்பன், கந்தன், சேவற்கொடியோன் முருகனின் நாமத்தை பக்திமலராக்கி அவன் பொற்பாத கமலங்களில்
    சமர்ப்பித்து எந்நாளும் வணங்குவோம்./////

    ஆமாம். ஆமாம். ஆமாம். வணங்குவோம். அவன் திருவடிகளில் சரணடைவோம்!

    ReplyDelete
  11. ///Subbiah Veerappan said...
    பிரதமர் - பிரதர் = ஒரு எழுத்துத்தான் வித்தியாசம்.
    நமக்கு உள்ளூரே போதும். வெளிநாடுகளில் எல்லாம் தயிர் சாதமும் மாங்காய் ஊறுகாயும் கிடைக்காதே சுவாமி!///

    ஒரு எழுத்தை கணக்கிட்டீர்
    ஒரு சொல்லை கண்டீரோ

    தயிர் சாதமும்
    தரமான மாங்காய் ஊறுகாயும்

    எல்ல ஊரிலும் கிடைக்கும்
    எல்லாம் உலகமயமாக்கல் தந்த பரிசு

    நம்ம சொத்தை எடுத்து
    நமக்கே விற்கும் பல வெளி நாட்டு கம்பனிகள்

    அவர்கள் நாட்டு குப்பையை
    அப்படியே நம்ம நாட்டில் கொட்டி

    அதையும் காசாக்கும் புத்திசாலிகள்
    அடி முட்டாளாகும் இந்தியர்கள்

    கண்களை விற்று விற்று
    கண்கவர் ஓவியங்களை வாங்குகிறார்கள்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com