4.9.15

அவர்களுக்கு மட்டும்தான் முன்னோட்டம் போடத் தெரியுமா?


அவர்களுக்கு மட்டும்தான் முன்னோட்டம் போடத் தெரியுமா?

அதாவது திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள்தான் வரவிருக்கும் தங்கள் படத்திற்கான முன்னோட்டத்தை (trailer) வெளியிடுவார்கள்

ஏன் நமக்கும் அதுபோல செய்யத் தெரியாதா?

தெரியும்.

அடுத்த புத்தகத்திற்கான முன்னோட்டம் இது. வகுப்பறை ஜோதிடம் பகுதி 2ற்கான முன்னோட்டம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அதில் கிரகங்கள், வீடுகள், மற்றும் முக்கிய குறிப்புக்கள் (Key points) போன்றவை வரவிருக்கின்றன. தொகுக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. தொகுக்கும் வேலை முடிந்து, புத்தகம் அச்சிடப் பெற்றவுடன் முறையான அறிவிப்பு பதிவில் வெளியாகும். அனேகமாக நவம்பர் 15’ 2015 ற்குள் முடிந்து வெளியாகும் வாய்ப்பு உள்ளது. இறையருள் இருந்தால், அத்தேதியில் புத்தகம் நிச்சயம் வெளியாகும்.

Key pointsகள் எல்லாம் மேலநிலை வகுப்பு மற்றும் Galaxy 2007 வகுப்பில் வெளியானவைகள் ஆகும். எல்லாம் அசத்தலாக இருக்கும்.

மாதிரிக்கு ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
எட்டாம் வீட்டிற்கான முக்கிய விதிகள் (Rules)
Some important rules for 8th House
(17.2.2013 அன்று Special Classல் வெளியான கட்டுரை இது)

//////17.2.2013
வகுப்பறை 2013
பாடம் எண்.6
முக்கிய விதிகள்
e class 2013
Lesson no.6
Key Points
Post 98
L.98 எட்டாம் வீட்டிற்கான முக்கிய விதிகள் (Rules)
L.98 Some important rules for 8th House//////
-----------------------------------------------
தலைப்பு: எட்டேகால் லட்சணமும் எமன் ஏறும் வாகனமும்!

ஒவ்வொன்றாக வருவோம். முதலில் எட்டேகால் லட்சணத்தை எடுத்துக்கொள்வோம். எட்டேகால் லட்சணம் என்றால் என்னவென்று தெரியுமா?
தமிழின் எண் வடிவத்தைக் கீழே கொடுத்துள்ளேன். தமிழில்  ‘அ’ என்று எண்ணால் குறிபிட்டால் எட்டு என்று பொருள். ‘வ’ என்ற எழுத்திற்கு கால் (1/4) என்று பொருள் எட்டேகால் என்பதை ‘அவ’ என்று குறிப்பிடுவார்கள். எட்டேகால் லட்சணம் என்றால் அவலட்சணம் என்று பொருள்படும்

ஒரு பையனோ அல்லது பெண்ணோ அழகில்லாமல் இருந்தால், அவலட்சணமாக இருக்கிறான் அல்லது இருக்கிறாள் என்று சொல்லாமல் எட்டேகால் லட்சணம் என்பார்கள்.

எங்கள் பகுதியில் (காரைக்குடியில்) சற்றுக் கெளரவமாகச் சொல்வார்கள். உள்ளதுபோல இருக்கிறான் அல்லது இருக்கிறாள் என்று சொல்வார்கள். நாம அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எமன் ஏறும் வாகனம் என்பது எருமை மாட்டைக் குறிக்கும். படு சுட்டியாக இருக்கும் பையனைக் கிராமப் புறங்களில் ‘எமப் பயலாக’ இருக்கிறான் என்பார்கள். எமன் கொண்டு போவதைப் போல அசந்தால் பையனும் கொண்டு போய்விடுவான் என்று பொருள். சற்று மந்தமாக இருக்கும் பையனை எமன் ஏறும் வாகனம்போல பையன் இருக்கிறான் என்பார்கள்.

வாரியார் சுவாமிகள் சொல்வார்கள்  “இன்று எல்லோரும் எருமைப் பாலத்தான் குடிக்கிறார்கள். அதனால் தெருவில் பொறுப்பில்லாமல் எருமைகள் போலதான் நடந்து போகிறார்கள். வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்குவதில்லை”

மாடுகளிலும் பலவகை உள்ளன. உழுகின்ற மாடு.வண்டி மாடு. கோயில் மாடு என்று அவற்றையும் வகைப்படுத்தலாம். அவற்றைப் பற்றி சுவாரசியமாக எழுதலாம். அதைப் பின் ஒரு நாளில் எழுதுகிறேன். இப்போது பாடத்தைப் பார்ப்போம்

சனீஷ்வரன் சில வீடுகளில் இருக்கும்போது அழகான தோற்றத்துடன் இருப்பார். உதாரணம் துலாம் வீடு. அது அவருக்கு உச்ச வீடு. அங்கே இருக்கும்போது ஃபுல் மேக்கப்புடன் அழகாகக் காட்சியளிப்பார். மேஷத்தில் இருக்கும்போது சுய ரூபத்துடன் இருப்பார். எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வரும் பெண்ணைப்போல சுய ரூபத்துடன் இருப்பார். அது அவருக்கு நீச வீடு.

அவர் அவலட்சணமாகக் காட்சியளிக்கும் வீடு ஒன்றும் உள்ளது. அது என்ன வீடூ?

எட்டாம் வீடு அது!

அதுதான் ஜாதகத்தில் உள்ள எட்டாம் வீடு

1
எட்டாம் வீட்டிற்குக் காரகன் சனீஷ்வரன். காரகன் பாவ நாசம் என்பதை மனதில் கொள்க! எட்டாம் வீட்டில் சனி அம்ர்ந்திருந்தால், அதில் ஒரே ஒரு நன்மை உண்டு.
எட்டாம் வீட்டிற்குப் பல செயல் பாடுகள் உண்டு. ஆயுளின் நீட்சியைத் தவிர அந்த வீட்டின் செயல்பாடுகள் அனைத்துமே துக்ககரமானவை. ஜாதகன் வாழ்க்கையில் அனுபவிக்க உள்ள கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் எல்லாம் அந்த வீட்டின் அமைப்பை வைத்துத்தான். அவமானங்கள், வேலை/தொழிலின் வீழ்ச்சிகள், இறக்கங்கள், தடைகள் ஏமாற்றங்கள், துரோகங்கள், விபத்துக்கள், மன அழுத்தங்கள், ரகசிய உறவுகள், அவற்றால் உண்டாகும் தொல்லைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

2
எட்டாம் வீட்டுக்காரனும், பத்தாம் வீட்டு அதிபதியும் ஒன்று சேர்ந்திருந்தால், ஜாதகன் அவனுடைய தொழிற் கூட்டாளிகளால் ஏமாற்றப் படுவான். அல்லது வேலையில் இருந்தால், பலவிதக் கஷ்டங்களைச் சந்திக்க நேரிடும். அந்த அமைப்பில் ஜாதகன் தொழிலை நடத்துவதற்கு, சட்டத்திற்குப் புறம்பான செயல்களையும் செய்யத் தயங்க மாட்டான். பின்னால் மாட்டிக்கொண்டு, விழி பிதுங்கும்படியான துன்பங்களைச் சந்திக்கவும் நேரிடும்

3
அதேபோல எட்டாம் வீட்டுச் சனியுடன் பதினொன்றாம் வீட்டுக்காரனும் ஒன்று சேர்ந்து இருந்தால், ஜாதகனுடைய அதிர்ஷ்டமும், வெற்றிகளும் கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாகும். எல்லாம் ஊற்றிக் கொண்டு விடும். ஊற்றிக் கொண்டு விடும் என்றால் என்னவென்று தெரியுமல்லவா?

4
சனி மட்டுமல்ல, ஜாதகத்தில் எட்டாம் வீடும் அவலட்சணமான வீடுதான். 6, 8 & 12 ஆகிய மூன்று வீடுகளும் ஜாதகத்தில் சாதகமில்லாத வீடுகள். அவற்றை அவலட்சணமான வீடுகள் அல்லது மறைவிடங்கள் என்று சொல்லலாம்.

5
அவற்றுள் எட்டாம் வீடுதான், அதிக கஷ்டங்களைக் கொடுக்கக்கூடியது. ஒருவனைத் தலகீழாகப் புரட்டிப்போடுவதும் அந்த வீட்டுக்காரன்தான்.

6
பெண்களின் ஜாதகத்தில் அந்த வீடு முக்கியமானது. அது மாங்கல்ய ஸ்தானம். அந்த வீடு நன்றாக இருந்தால்தான் பெண்ணின் மாங்கல்யம் நிலைக்கும்

7
எட்டில் செவ்வாய் குடியிருப்பதை மாங்கல்ய தோஷம் என்பார்கள். பெண்ணின் ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் எவனும் குடியில்லாமல் இருப்பது மேன்மையானது.

8
பெண்ணின் ஜாதகத்தில் எட்டில் சூரியன் இருந்தால், ஜாதகி விதவையாகி விடும் அபாயம் உண்டு. அல்லது அவளுடைய கணவனை அடித்துப் படுக்க வைத்துவிடும் அபாயம் உண்டு. ஜாதகி துக்கத்தில் மூழ்க நேரிடும்.

9
சந்திரன் எட்டில் இருந்தால், ஜாதகி கடுகடுப்பானவளாகி விடுவாள். அவளும் சந்தோஷமாக இருக்க மாட்டாள். அவளுடன் இருப்பவர்களையும் சந்தோஷமாக இருக்க விட மாட்டாள். உடல் உறவில் கணவனுடன் கலந்து துய்க்க வேண்டிய இன்பங்கள் அவளுக்குக் கிடைக்காமல் போய்விடலாம். அதை ஆங்கிலத்தில் conjugal happiness என்பார்கள். அது இல்லாமல் போகலாம். அதுவும் நல்ல உடல் ஆரோக்கியம் இருக்கும் பெண்ணிற்கு அந்த உறவுச் சுகம் இல்லாமல் போவது எத்தனை கொடுமை! சற்று நினைத்துப் பாருங்கள்.

10
எட்டில் செவ்வாய் வேறு ஒரு தீய கிரகத்துடன் இருந்தால், ஜாதகி விதவையாகி விடுவாள். அல்லது கணவனை விட்டுப் பிரிய நேரிடும்

11
ஆண்களின் ஜாதகத்தில் எட்டில் இருக்கும் செவ்வாய், ஜாதகனுடைய சாவிற்கு அதுவே வழி வகுக்கும். பெண்களின் ஜாதகத்தில் எட்டில் இருக்கும் செவ்வாய், அவளுடைய கணவனின் சாவிற்கு வழி வகுக்கும். அல்லது அவளை விட்டு அவன் பிரிந்து செல்லப் பாதை அமைக்கும்.

12
எட்டில் இருக்கும் புதன் ஜாதகன் அல்லது ஜாதகியை தவறான வழியில் செல்ல வைக்கும். பாவச் செயல்களைச் செய்ய வைக்கும்

13
எட்டில் இருக்கும் குரு பலவீனமாக இருந்தால் ஜாதகன் குழந்தைகளைப் பறி கொடுக்க நேரிடும். அல்லது தன் குழந்தைகளால் துன்பங்களை அனுபவிக்க நேரிடும். சில பெண்களுக்குக் கர்ப்பச் சிதைவுகள் (abortions) ஏற்படும். குருவுடன் செவ்வாயும் சேர்ந்து எட்டில் இருந்தால், ஜாதகிக்குக் கர்ப்பக் கோளாறுகள் ஏற்படும்.

14
எட்டாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால், ஜாதகனுக்கு கடுகடுப்பான உணர்வுகள் இருக்கும். ஆனால் ஜாதகன் வல்லவனாக இருப்பான். அதே சுக்கிரன் எட்டில் பலவீனமாக இருந்தால், ஜாதகன தனிமைப் பட்டுப்போய்விடுவான். பெண்ணாக இருந்தாலும் அதே பலன்தான். அதே இடத்தில் சுக்கிரனுடன், செவ்வாயும் இருந்தால் ஜாதகன் அல்லது ஜாதகியின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாமல் இருக்கும்.

15
எட்டாம் வீட்டில் சனியும் செவ்வாயும் சேர்ந்திருந்தால், அல்லது அங்கேயிருக்கும் சனி செவ்வாயின் பார்வையைப் பெற்றிருந்தாலும் ஜாதகனின் வாழ்க்கை அல்லது ஜாதகியின் மண வாழ்க்கை மகிழ்ச்சியின்றியும், கவர்ச்சியின்றியும் இருக்கும். ஜாதகன் பாவச் செய்ல்களைச் செய்பவனாகவும், நேர்மையின்றியும் இருப்பான். அவர்களுடைய கணவன் அல்லது மனைவி நோய் வாய்ப்பட்டும் இருப்பான்.

16
எட்டில் ராகு இருந்தால், ஜாதகன்  குடும்பப் பாராம்பரியங்களையும், வழக்கங்களையும் மீறி நடப்பவனாக இருப்பான். பெண்ணாக இருந்தால் இதே அமைப்பில் விதவை தோஷமும் உண்டு.

17
அதே வீட்டில் ராகுவுடன், தேய்பிறைச் சந்திரனும் இருந்தால், ஜாதகி விதவையாகி விடும் அபாயம் உண்டு. அல்லது திருமண பந்தம் பிரிவில் முடிந்து விடலாம். அதே அமைப்பு செவ்வாயின் பார்வையைப் பெற்றால், ஜாதகி இளம் வயதிலேயே விதவையாகிவிடலாம்.

18
எட்டில் கேது இருந்தால், ஜாதகியைத் தன்னுடைய தசாபுத்தியில் விதவையாக்கிவிடும். ஜாதகனாக இருந்தால், அவன் தன் மனைவியை இழந்து, தனியாளாக இருக்கும்படி செய்துவிடும். இது பொதுப்பலன்!

அதனால் திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கும்போது இந்த விதிகளின் படியும் பொருத்தம் பார்ப்பது நல்லது

19
எட்டில் சனி அமர்ந்து, தன்னுடைய மூன்றாம் பார்வையாக பத்தாம் வீட்டைப் பார்ப்பது நல்ல அமைப்பல்ல! அப்படி அமையப் பெற்ற ஜாதகன் பலவிதமான சோதனை களையும், தடைகளையும் தன்னுடைய வேலையில் அல்லது தொழிலில் சந்திக்க நேரிடும்.

20
அத்துடன் வேலை ஸ்திரமில்லாமல் இருக்கும். ஸ்திரமில்லாமல் என்றால் என்னவென்று தெரியுமா? Instability என்று பொருள்.

21
எந்தத் துறையென்றாலும், ஜாதகனுக்கு அது பிடித்தமில்லாமல் போகும். கவலை அளிப்பதாக இருக்கும்.

22
எத்தனை திறமை இருந்தாலும், எத்தனை திறமையை வேலையில் காட்டினாலும், அந்த வேலையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து, அதன் மேல் வெறுப்பும் கூடவே இருக்கும். வேலைக்குத் தகுந்த ஊதியம் இல்லாவிட்டால், எப்படிப் பிடிப்பு வரும்? வெறுப்புத்தானே வரும்!

23
பத்தாம் வீட்டில் அதிகமான பரல்கள் இருந்தாலும், அல்லது பத்தாம் வீட்டுக்காரனின் பார்வையிலும் அந்த வீடு இருந்தாலும், அல்லது சுபக்கிரகங்களின் பார்வையில் அந்த வீடு இருந்தாலும், மேற்சொன்ன பலன்கள் இல்லாமல் நல்ல பலன்கள் நடைபெறும். அதையும் மனதில் கொள்க!

ஒரு சுவாரசியத்திற்காக இப்பாடம் ஒரு இடைச் சொருகல்.
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

34 comments:

  1. ஐயா

    கரும்பு தின்ன கசக்குமோ!
    360 பக்கங்கள் தானே !
    எட்டு திக்கும் அல்ல 360 பாகையிலும் உங்கள் புகழ் (உழைப்பு) பரவட்டும்.
    வாழ்த்துக்களுடன்

    எம்.திருமால்
    பவளத்தானூர்

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா
    ஐயா இப்பொழுது தான் லட்டு சப்பிட்டேன் சப்பிட்டுகொன்ட் இருக்கும் போது ஜிலேபிய கொடுத்தால் வேணாம்னா சொல்வேன். நீங்கள் தொலைவில் இருந்தாலும் எங்களின் மன என்னங்களை புரிந்து கொள்கின்றிர்கள் ஐயா. ஆவலுடன் எதிர்பாற்குறேன் நவம்பர் 15தை. அதற்கு முன்பாக புத்தகத்தின் வேளைகள் முடியா அந்த பழனிமுருகர்,வகுப்பு மாணவர்களாகிய நாங்கள் அனைவறும் துணை நிப்போம் ஐயா.
    வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா
    ஐயா இப்பொழுது தான் லட்டு சப்பிட்டேன் சப்பிட்டுகொன்ட் இருக்கும் போது ஜிலேபிய கொடுத்தால் வேணாம்னா சொல்வேன். நீங்கள் தொலைவில் இருந்தாலும் எங்களின் மன என்னங்களை புரிந்து கொள்கின்றிர்கள் ஐயா. ஆவலுடன் எதிர்பாற்குறேன் நவம்பர் 15தை. அதற்கு முன்பாக புத்தகத்தின் வேளைகள் முடியா அந்த பழனிமுருகர்,வகுப்பு மாணவர்களாகிய நாங்கள் அனைவறும் துணை நிப்போம் ஐயா.
    வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  4. ய ஜாதகத்தை ஒப்பீட்டுப்பார்த்து எத்தனை பேர் நடுங்கப் போகிறார்களோ?

    ReplyDelete
  5. அருமையான முன்னோட்டம் வாத்தியாரே!!!.

    தங்களின் வகுப்பறை ஜோதிடம் தொகுதி 1, அதிவிரைவாக கிடைக்க பெற்றேன்...
    உங்கள் Dispatch டீமுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்...

    மேலும் வரும் புத்தகங்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்...

    திருமண நாள், பெயர் சூட்டும் விழா, காதணி விழா, வளைகாப்பு, வீடு நிலைக்கால் நடுதல், குழந்தை பேறு, நல்ல தொழில்/உத்தியோகம் ஆகியவை நடக்குமா? எப்போது நடக்கும்? போன்றவற்றிற்கு குறுக்கு வழி உள்ளதா...

    டாக்டர், போலிஸ், ரவுடி இவர்களின் ஜாதகத்தை கண்டுபிடிக்க கற்று தாருங்கள். மிக கடினம் என தாங்கள் பல முறை கூறியுள்ளீர்கள். இருந்தாலும் ஒரு எடுத்துகாட்டு பாடம் தாருங்கள்.

    வேலை செய்பவர், தொழில் புரிபவர் அதுவும் உள்ளூரிலா வெளிநாட்டிலா, ஏற்றுமதி தொழிலா, இறக்குமதி தொழிலா, கோவையை போல அதிக அளவு பணபுழக்கம் உள்ள தூத்துக்குடியில் எனக்கு இந்த கணிப்பு தேவைபடுகிறது. ஒரு எடுத்துகாட்டு பாடம் தாருங்கள்.



    நான் தொழில் முறை மென்பொருள் தயாரிப்பாளராக உள்ளேன். நண்பர்கள் நான் ஜோதிடம் கற்பதை மோப்பம் பிடித்து, தற்போது பலன் கேட்கிறார்கள். என்னால் முடிந்த அளவு சில பேருக்கு மட்டும் பலன் கூறி வருகிறேன். நம் வகுப்பறை மாணவ கண்மணிகள் சிலபேர் என் இமெயிலில் தொடர்பு கொண்டு கேள்வி கேட்கிறார்கள். இந்த வகுப்பறை எனக்கு நிறைய அறிவையும், தேடல்களையும் தந்துள்ளது.



    வரும் புத்தகத்தில் வாத்தியார் தருவார் என வேண்டுகிறேன்.



    தங்கள் அன்புள்ள மாணவன்,
    பா. லக்க்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  6. ஒரு முக்கியமான சந்தேகம்....

    தாங்கள் கூறிய இந்த வாரம் புதிர் எப்போது வரும், வாத்தியாரின் வேலைப்பளு நாங்கள் அறிந்ததே...

    -------------------------------------
    ஜோதிடப் புத்தகத்தை, அனைவருக்கும் கிடைக்கச் செய்வதில் முனைப்பாக இருப்பதால், புதிருக்குப் புதிதாக எதையும் எழுதிப் பதியமுடியவில்லை.
    பொறுத்துக்கொள்ளுங்கள். செப்டம்பர் 4ம் தேதியில் இருந்து புதிர் பாடங்கள் மீண்டும் வெளியாகும்
    -------------------------------------

    தவறு இருப்பின் மன்னிக்கவும்... எல்லாம் ஒரு ஆர்வம்தான்....


    தங்கள் அன்புள்ள மாணவன்,
    பா. லக்க்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  7. Vanakkam Iyya,

    migavum nalla seidhi puthaga thogudhi 2 varuvadhu :) :) Aaavaludan ethir paarkirom.

    Iyya enaku oru santhegam - Pala naatakalaga kekavendum endru irundhen..

    Niraya idathil padithirukiren ragu kethu kalai patri..

    8aam idathil ragu kethu irunthal enna palan endru kuduthullergal... Ithe ragu/kethu raai yil 8il irunthu, navasamthil rishabthil chandran odu irunthu (neecha bangam petraal) ithe palangal thaana illai theemai kurainthu nanmai alipaargala ???

    nandri,
    Bala

    ReplyDelete
  8. இன்று பிறந்த நாள் காணும்
    இனிய வகுப்பறை தோழர்களுக்கு

    நல் வாழ்த்துக்கள்
    நலமோடு பலம் பெற்று வாழ

    முருகன் அருள்
    முன் நிற்கும்

    ReplyDelete
  9. இது பகுதி 2 என
    இப்படி சொல்ல கூடாது

    tap your skill என
    தனி புத்தகமாக வர வேண்டும்

    பகுதி 2இல் வரவேண்டிய
    பாடம் இன்னும் பல உள்ளது

    தோஷமும் யோகமும்
    தசையும் புத்தியும் என

    ஒரு அலங்காரம் செய்து கொண்டு
    ஒவ்வொரு தொகுதியாக வெளியிட்டால்

    பதினாறு தொகுதியும் ஒரு
    பெட்டகமாக பொக்கிஷமாக இருக்கும்

    வாத்தியார் இதை கருத்தில் கொண்டு
    வகைப்படுத்துவாரா தம் பதிப்புகளை

    முருகனிடம் வேண்டுதல் வைப்போம்
    முருகன் அருள் முன் நிற்கும்

    ReplyDelete
  10. Dear sir.
    very happy to know the second book will be released soon. eagerly waiting to receive the knowledge bank. sure lord MURUGA will shower the blessings to acquire same.with regards p.k.swamy

    ReplyDelete
  11. ஐயா வணக்கம்

    தங்களின் அடுத்த புத்தகம்,
    மேல்நிலை வகுப்பில் சேராத என்னை போன்றவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
    மிக்க ஆவலுடன் எதிர்நோக்கும்

    கண்ணன்.

    ReplyDelete
  12. Sir , Munnottam padithen . Super. Eagerly expecting the release of book . R.Sundararajan

    ReplyDelete
  13. Producer & Director Shri Vadhyar,
    Vanakkam. While we like to acclaim the style & beautiful coverage of the basic lessons of astrology in your first volume we get the release of trailer of volume two.
    It narrates the significance of specific lessons carrying great value at different houses of Navanayagas. Definitely, that will further spur elite
    standard in the minds of Vakupparai students.
    This trailer made us to wait desperate for your Jyothida Book Volume-2.
    Cheers to you, Vadhyar.
    K.Varadarajan

    ReplyDelete
  14. திரைப்படங்கள் பகுதி-2 என்று வரும்பொழுது
    புத்தகம் பகுதி-2 என்று வரகூடாதா ?

    வரவேற்கவேண்டும் குறிகிய காலத்தில்
    புத்தகம் பகுதி- 2 ஐ

    புதிய புத்தகம் வாங்கி வைத்துவிட்டோம்
    அதை படிப்பது யார்?

    யாராவது ஜோதிடத்தில் கேள்வி கேட்டால் தான்
    புத்தகத்தை திறப்பது என்ற கொள்கையை மாற்றவேண்டும்
    அதற்கு என்ன வழி?.

    ReplyDelete
  15. //////Blogger Thirumal Muthusamy said...
    ஐயா
    கரும்பு தின்ன கசக்குமோ!
    360 பக்கங்கள் தானே !
    எட்டு திக்கும் அல்ல 360 பாகையிலும் உங்கள் புகழ் (உழைப்பு) பரவட்டும்.
    வாழ்த்துக்களுடன்
    எம்.திருமால்
    பவளத்தானூர்///////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  16. /////Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா
    ஐயா இப்பொழுது தான் லட்டு சாப்பிட்டேன். சாப்பிட்டுகொண்டே இருக்கும் போது ஜிலேபியைக் கொடுத்தால் வேணாம்னா சொல்வேன். நீங்கள் தொலைவில் இருந்தாலும் எங்களின் மன எண்ணங்களைப் புரிந்து கொள்கின்றீர்கள் ஐயா. ஆவலுடன் எதிர்பாற்கிறேன் நவம்பர் 15ஐ. அதற்கு முன்பாக புத்தகத்தின் வேலகள் முடிய அந்த பழனிமுருகர்,வகுப்பு மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் துணை நிற்போம் ஐயா.
    வாழ்த்துக்கள் ஐயா//////

    நல்லது. உங்களின் ஆதரவிற்கு நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  17. /////Blogger kmr.krishnan said...
    ஜாதகத்தை ஒப்பீட்டுப்பார்த்து எத்தனை பேர் நடுங்கப் போகிறார்களோ?/////

    நாம் அவ்வப்போது 337 மருந்தைக் கொண்டிருக்கிறோம் அல்லவா? ஆகவே நடுங்கும் வாய்ப்பு இருக்காது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  18. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    அருமையான முன்னோட்டம் வாத்தியாரே!!!.
    தங்களின் வகுப்பறை ஜோதிடம் தொகுதி 1, அதிவிரைவாக கிடைக்க பெற்றேன்...
    உங்கள் Dispatch டீமுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்...
    மேலும் வரும் புத்தகங்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்...

    திருமண நாள், பெயர் சூட்டும் விழா, காதணி விழா, வளைகாப்பு, வீடு நிலைக்கால் நடுதல், குழந்தை பேறு, நல்ல தொழில்/உத்தியோகம் ஆகியவை நடக்குமா? எப்போது நடக்கும்? போன்றவற்றிற்கு குறுக்கு வழி உள்ளதா...//////
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    இவை அனைத்திற்குமே சுப காரியங்கள் என்று பெயர். ஜாதகப்படி இல்லத்தில் சுப காரியங்கள் நடக்கவேண்டிய காலத்தில் அவைகள் நடக்கும் ஒவ்வொன்றாக நடக்கும்
    -----------------------------------------------
    டாக்டர், போலிஸ், ரவுடி இவர்களின் ஜாதகத்தை கண்டுபிடிக்க கற்று தாருங்கள். மிக கடினம் என தாங்கள் பல முறை கூறியுள்ளீர்கள். இருந்தாலும் ஒரு எடுத்துகாட்டு பாடம் தாருங்கள்.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    பொறுத்திருங்கள். பின்னால் பார்க்கலாம்
    -------------------------------------------------
    வேலை செய்பவர், தொழில் புரிபவர் அதுவும் உள்ளூரிலா வெளிநாட்டிலா, ஏற்றுமதி தொழிலா, இறக்குமதி தொழிலா, கோவையைப் போல அதிக அளவு பணபுழக்கம் உள்ள தூத்துக்குடியில் எனக்கு இந்த கணிப்பு தேவைபடுகிறது. ஒரு எடுத்துகாட்டு பாடம் தாருங்கள்.
    நான் தொழில் முறை மென்பொருள் தயாரிப்பாளராக உள்ளேன். நண்பர்கள் நான் ஜோதிடம் கற்பதை மோப்பம் பிடித்து, தற்போது பலன் கேட்கிறார்கள். என்னால் முடிந்த அளவு சில பேருக்கு மட்டும் பலன் கூறி வருகிறேன். நம் வகுப்பறை மாணவ கண்மணிகள் சிலபேர் என் இமெயிலில் தொடர்பு கொண்டு கேள்வி கேட்கிறார்கள். இந்த வகுப்பறை எனக்கு நிறைய அறிவையும், தேடல்களையும் தந்துள்ளது.
    வரும் புத்தகத்தில் வாத்தியார் தருவார் என வேண்டுகிறேன்.
    தங்கள் அன்புள்ள மாணவன்,
    பா. லக்க்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.////////

    பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  19. //////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    ஒரு முக்கியமான சந்தேகம்....
    தாங்கள் கூறிய இந்த வாரம் புதிர் எப்போது வரும், வாத்தியாரின் வேலைப்பளு நாங்கள் அறிந்ததே...
    -------------------------------------
    ஜோதிடப் புத்தகத்தை, அனைவருக்கும் கிடைக்கச் செய்வதில் முனைப்பாக இருப்பதால், புதிருக்குப் புதிதாக எதையும் எழுதிப் பதியமுடியவில்லை.
    பொறுத்துக்கொள்ளுங்கள். செப்டம்பர் 4ம் தேதியில் இருந்து புதிர் பாடங்கள் மீண்டும் வெளியாகும்
    -------------------------------------
    தவறு இருப்பின் மன்னிக்கவும்... எல்லாம் ஒரு ஆர்வம்தான்....
    தங்கள் அன்புள்ள மாணவன்,
    பா. லக்க்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.///////

    வேலைப் பளுக்கள் குறைந்தவுடன், வரும் சாமி!

    ReplyDelete
  20. /////Blogger bala said...
    Vanakkam Iyya,
    migavum nalla seidhi puthaga thogudhi 2 varuvadhu :) :) Aaavaludan ethir paarkirom.
    Iyya enaku oru santhegam - Pala naatakalaga kekavendum endru irundhen..
    Niraya idathil padithirukiren ragu kethu kalai patri..
    8aam idathil ragu kethu irunthal enna palan endru kuduthullergal... Ithe ragu/kethu raai yil 8il irunthu, navasamthil rishabthil chandran odu irunthu (neecha bangam petraal) ithe palangal thaana illai theemai kurainthu nanmai alipaargala ???
    nandri,
    Bala///////

    பழைய பாடங்களில் உள்ளது சாமி. தேடிப் பிடித்துப் படியுங்கள்!

    ReplyDelete
  21. /////Blogger வேப்பிலை said...
    இன்று பிறந்த நாள் காணும்
    இனிய வகுப்பறை தோழர்களுக்கு
    நல் வாழ்த்துக்கள்
    நலமோடு பலம் பெற்று வாழ
    முருகன் அருள்
    முன் நிற்கும்/////

    என்ன திடீரென்று? என்ன ஆயிற்று வேப்பிலையாரே?

    ReplyDelete
  22. //////Blogger வேப்பிலை said...
    இது பகுதி 2 என
    இப்படி சொல்ல கூடாது
    tap your skill என
    தனி புத்தகமாக வர வேண்டும்
    பகுதி 2இல் வரவேண்டிய
    பாடம் இன்னும் பல உள்ளது
    தோஷமும் யோகமும்
    தசையும் புத்தியும் என
    ஒரு அலங்காரம் செய்து கொண்டு
    ஒவ்வொரு தொகுதியாக வெளியிட்டால்
    பதினாறு தொகுதியும் ஒரு
    பெட்டகமாக பொக்கிஷமாக இருக்கும்
    வாத்தியார் இதை கருத்தில் கொண்டு
    வகைப்படுத்துவாரா தம் பதிப்புகளை
    முருகனிடம் வேண்டுதல் வைப்போம்
    முருகன் அருள் முன் நிற்கும் ///////

    நல்லது. உங்கள் எதிர்பார்ப்புக்கள் வீண் போகாது. முருகனருளால் எல்லாம் நல்லபடியாக அமையும்!

    ReplyDelete
  23. //////Blogger kittuswamy palaniappan said...
    Dear sir.
    very happy to know the second book will be released soon. eagerly waiting to receive the knowledge bank. sure lord MURUGA will shower the blessings to acquire same.with regards p.k.swamy//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. //////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    தங்களின் அடுத்த புத்தகம்,
    மேல்நிலை வகுப்பில் சேராத என்னை போன்றவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
    மிக்க ஆவலுடன் எதிர்நோக்கும்
    கண்ணன்.//////

    ஆமாம். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  25. /////Blogger Mani said...
    Sir , Munnottam padithen . Super. Eagerly expecting the release of book . R.Sundararajan///////

    நல்லது. நன்றி நண்பரே!!

    ReplyDelete
  26. ///////Blogger bhagwan said...
    Producer & Director Shri Vadhyar,
    Vanakkam. While we like to acclaim the style & beautiful coverage of the basic lessons of astrology in your first volume we get the release of trailer of volume two.
    It narrates the significance of specific lessons carrying great value at different houses of Navanayagas. Definitely, that will further spur elite
    standard in the minds of Vakupparai students.
    This trailer made us to wait desperate for your Jyothida Book Volume-2.
    Cheers to you, Vadhyar.
    K.Varadarajan//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    திரைப்படங்கள் பகுதி-2 என்று வரும்பொழுது
    புத்தகம் பகுதி-2 என்று வரகூடாதா ?
    வரவேற்கவேண்டும் குறுகிய காலத்தில்
    புத்தகம் பகுதி- 2 ஐ
    புதிய புத்தகம் வாங்கி வைத்துவிட்டோம்
    அதை படிப்பது யார்?
    யாராவது ஜோதிடத்தில் கேள்வி கேட்டால் தான்
    புத்தகத்தை திறப்பது என்ற கொள்கையை மாற்றவேண்டும்
    அதற்கு என்ன வழி?.////////

    எல்லாவற்றிற்கும் மனம்தான் காரணம். மனதைக் கட்டுப்படுத்தி அததற்கு நேரம் ஒதுக்கினால் எல்லாம் வசப்படும்! நன்றி சந்திரசேகரன்!

    ReplyDelete
  28. அன்புள்ள ஐயா,
    எட்டேகால் லட்சணம் என்றால் என்ன என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  29. எட்டேகால் லெட்டணத்தை அறியத் தந்தீர்கள்... அருமை.

    ReplyDelete
  30. Sir, not everyone has the compassion to take time and energy and teach everyone this wonderful but not easily understandable 'ASTROLOGY'. I thank you from the bottom of my heart. I have two questions sir.
    1) I was very happy when i saw that we both were Simha Lagna. In the first lesson you posted in 2007, you said that the 'Swami' who worked in your company said that Budhan is strong in your chart, so it is possible for you to learn astrology. But in my chart, Budhan is neecham in 'EIGHTH' house along with Suryan and Sukran. In the Navamsa, i am Kadaga Lagnam and again Budhan is in 'EIGHTH' house of Kumbam along with Sukran. Does that indicate that i might not be able to learn astrology well ?
    2) I am just curious to know why the 'Swami' asked you to just learn astrology as a hobby? You have been loyal to his word with true respect. But i just cant stop wondering why you cant be a professional astrologer.?
    Please forgive me if i said something wrong..
    Thank you again sir...

    ReplyDelete
  31. ////Blogger bhagwan said...
    அன்புள்ள ஐயா,
    எட்டேகால் லட்சணம் என்றால் என்ன என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். நன்றி./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

  32. /////Blogger பரிவை சே.குமார் said...
    எட்டேகால் லெட்டணத்தை அறியத் தந்தீர்கள்... அருமை./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  33. //////Blogger Satheesh said...
    Sir, not everyone has the compassion to take time and energy and teach everyone this wonderful but not easily understandable 'ASTROLOGY'. I thank you from the bottom of my heart. I have two questions sir.

    1) I was very happy when i saw that we both were Simha Lagna. In the first lesson you posted in 2007, you said that the 'Swami' who worked in your company said that Budhan is strong in your chart, so it is possible for you to learn astrology. But in my chart, Budhan is neecham in 'EIGHTH' house along with Suryan and Sukran. In the Navamsa, i am Kadaga Lagnam and again Budhan is in 'EIGHTH' house of Kumbam along with Sukran. Does that indicate that i might not be able to learn astrology well ?////

    புதனும் சுக்கிரனும் சேர்ந்தால் நிபுனா யோகத்தைத் தருவார்கள். ஆகவே உங்களுக்கு நஷ்ட ஈடு இந்த வகையில் கிடைத்துள்ளது. ஆர்வமும் முயற்சியும் இருந்தால் எதுவும் வரும் அதையும் உணருங்கள்!
    ----------------------------------------------------------------
    2) I am just curious to know why the 'Swami' asked you to just learn astrology as a hobby? You have been loyal to his word with true respect. But i just cant stop wondering why you cant be a professional astrologer.?
    Please forgive me if i said something wrong..Thank you again sir...//////

    தொழில்முறை ஜோதிடராக என்றும் விரும்பியதில்லை. அதற்குப் பல காரணங்கள் உள்ளது ஒருநாள் அதை விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள்.
    .........................................................

    ReplyDelete
  34. Sir, thank you so much for your reply ! If there is anything that i can do for you, what would it be sir? What can i do as 'Guru Datchanai' to express my gratitude? :)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com