17.9.15

வாழை மரமும் சவுக்கு மரமும்!

இன்று விநாயகருக்கு சதுர்த்திவிழா. அனைவரும் தவறாமல்
விநாயகரை வழிபடுங்கள். நமது துன்பங்களைக் குறைப்பவர்
அவர். நமக்கு காரிய சித்தியை நல்குபவர் அவர்.
--------------------------------------------------------------
2

வாழை மரமும் சவுக்கு மரமும்!

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க
அருமையான வார்த்தைகள்...‬

- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ் அவர்கள் சொன்னது:

வானொலிக்காரர்கள் கேட்ட கேள்வி:: நியாயமாக உங்களுக்கு
வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது
உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம்
கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு
வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது
ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம்
மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும்.
குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே
போய்ச் சேரும்.

மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை.
அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும்
சிரித்துக;் கொண்டேயிருக்கும்.!!!

நான் வாழை அல்ல...! சவுக்கு மரம்....
==============================================
என்னவொரு அசத்தலான பதில் பார்த்தீர்களா?

இப்போது சொல்லுங்கள் - நீங்கள் வாழை மரமா? அல்லது சவுக்கு மரமா?

அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12 comments:

  1. Anbudan vathiyaar ayya vukku vanakkam

    Great great. " foundation never build out side

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning. Happy Ganapathi Sathurthi...

    Its wonderful post.

    Have a pleasant day.

    With kind regards,
    Ravichandran M

    ReplyDelete
  3. குறைப்பவர் தானே
    குரைப்பவர் என பதிவாகி உள்ளதே..

    மனிதனை நீங்களும்
    மரம் என்கிறீர்களா

    ReplyDelete
  4. வாத்தியார் ஐயாவுக்கு இவ்வண்ட சராசரம் அனைத்துமுள்ள உயிர்களைக் காக்கும் எம்பெருமான் வினாயகனின் சதுர்த்தி தின வாழ்த்துக்கள் நான் சவுக்கு மரமாயிருந்து என்றைக்கும் சிரித்து வாழ விரும்புகிறேன், வாத்தியாரையா!

    ReplyDelete
  5. ////Blogger hamaragana said...
    Anbudan vathiyaar ayya vukku vanakkam
    Great great. " foundation never build out side //////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  6. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning. Happy Ganapathi Sathurthi...
    Its wonderful post.
    Have a pleasant day.
    With kind regards,
    Ravichandran M/////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  7. /////Blogger வேப்பிலை said...
    குறைப்பவர் தானே
    குரைப்பவர் என பதிவாகி உள்ளதே..
    மனிதனை நீங்களும்
    மரம் என்கிறீர்களா/////

    தட்டச்சுப்பிழை சுவாமி. சரி செய்துவிட்டேன். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி!

    ReplyDelete
  8. //////Blogger வரதராஜன் said...
    வாத்தியார் ஐயாவுக்கு இவ்வண்ட சராசரம் அனைத்துமுள்ள உயிர்களைக் காக்கும் எம்பெருமான் வினாயகனின் சதுர்த்தி தின வாழ்த்துக்கள் நான் சவுக்கு மரமாயிருந்து என்றைக்கும் சிரித்து வாழ விரும்புகிறேன், வாத்தியாரையா!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  9. /////Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா////

    வணக்கம் சாமிகளா!

    ReplyDelete
  10. Your writing acts as a catalyst which enhances my reading habits. You are a great writer indeed.

    Sriram

    ReplyDelete
  11. ////Blogger sriram1114 said...
    Your writing acts as a catalyst which enhances my reading habits. You are a great writer indeed.
    Sriram/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com