10.9.15

வெங்காயமும் வேப்பிலை சுவாமியும்!


வெங்காயமும் வேப்பிலை சுவாமியும்!

என் நிலத்துல விளையுற வெங்காயத்தோட விலை
என்னைக் கேக்காம, எனக்கே தெரியாம
எப்படிங்க கூடிச்சு?

ஓ..அதுவா அதுக்கு காரணம் Inflation...

இன்பிலேஷன்னா?

பணவீக்கம்ங்க...உங்களுக்கு ம்ம்ம்
புரியுற மாதிரி சொல்லனும்னா ஒரு மஞ்சப் பை நிறைய
பணத்தை எடுத்துட்டுப் போயி ஒரு உளுந்தவடை வாங்கறது

ப்பூ .... இதுக்கு காரணம் என்னங்க ?

பல காரணங்கள், முக்கியமா ஷேர் மார்க்கெட் சரிவு
முக்கிய காரணம்.

இப்ப பாத்தீங்கன்னா சீனால பொருளாதாரம் சரியில்லை,
இப்போ அதனால நம்ம பங்கு சந்தைகள் அடிவாங்குது,
இதே மாதிரி 2008 ல அமெரிக்கால வந்தப்பவும்,நம்ம..

இதநிப்பாட்டுங்க..எங்கயோ இருக்குற சீனா-அமெரிக்கால
நடக்குற விசயங்களால இந்திய ஷேர் மார்க்கெட்
நாம ஏங்க பாதிக்கனும்?

ஏன்னா,பல நாட்டோட ஷேர் மார்க்கெட்கள்ல முதலீடு
எல்லாம் செய்வதே,தங்களோட தொழிலாக வச்சுருக்குற
பல வெளிநாட்டு கம்பெனிகள் நம்ம நாட்டு
பலஷேர்களில் (மார்க்கெட்லயும்) முதலீடுகள்
பண்ணியிருக்காங்க.அதனால வெளிநாட்ல எதாச்சும்
பக்குன்னு ஆச்சுன்னா,இவனுங்க
இங்க முதலீடுகளை வெளியே எடுத்துருவாங்க.அதான்
இப்படி.

இது எப்படிங்க நம்ம ஊர்ல விளையுற,
அந்த வெங்காயத்தோட விலையை பாதிக்குது?

அதுக்கு கமாடிட்டி மார்க்கெட்,ஆன்லைன் டிரேடிங் ன்னு
காரணங்கள்.

அம்பது வருசத்துக்கு முன்னாடி இப்படி இல்லையேங்க?

அம்பது வருசத்துக்கு முன்னாடி ஷேர் மார்க்கெட்ஸ் இல்லை

ஆயிரம் வருசமா வெங்காயம் இருக்கு,அதை
அம்பது வருசத்துக்கு முன்னாடி வந்த ஷேர் மார்க்கெட்
எப்படிங்க கட்டுப்படுத்தலாம்?
என்ன காரணம்? - அதுக்கு காரணம்

Globalisation,FDI பாரீன் டைரக்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ்...

குளோபுலைஷேசன் அப்படின்னா?

அப்படின்னா உலகத்துல இருக்குற எந்த நாடும்
அப்படி எந்த நாட்டோடையும் வியாபாரம் செய்யலாம்,
முதலீடு செய்யலாம்.

முதல்ல இதை யாரு கண்டுபிடிச்சான்?

வெள்ளைக்காரன்

வெளிச்சம் போட்டு சொல்லுங்க ஏன் கண்டுபிடிச்சான்?

இப்போ நம்ம நாட்டு பிரதமர்
இவங்களை வாங்க வாங்கன்னுகூப்பிடுறாரு

ஏன்னா அவன் நாட்டுல அவன் உயிர் வாழத் தேவையான
எதுவுமே கிடைக்காது.பெட்ரோல்-டீசல் முதல்கொண்டு...

அதனால உலகத்துல எந்த நாடுகள்ல
அவனுக்கு தேவையானது கிடைக்குமோ,
அந்த நாடுகளை காலனியாதிக்கம் ங்கற பேர்ல
அடிமையாக்குனான்,இப்ப அது முடியாது.
அதான் வேற மாதிரி இப்ப வர்றான்
அப்படி குளோபுலைஷேசன் ங்கற பேர்ல.

இதால எனக்கு என்ன உபயோகம்?

இல்லாமலா குளோபுலைஷேசன் வந்ததால தான் உனக்கு
ஐபோன் கிடைக்குது.கம்ப்யூட்டர் கிடைக்குது.
பல வெளிநாட்டு கம்பனிகள் இங்க வந்தது,
ஏகப்பட்ட வேலைவாய்ப்புகள் கிடைச்சது...

ஏன் வேலைவாய்ப்பு ஒரு பக்கம் இருக்கட்டும்,
அவன் எதுக்கு இங்க வந்து கம்பனி ஆரம்பிச்சான்?
அவன் பொருளை இங்க தயாரிச்சு,அதை இங்க விற்க தானே?
வித்து அந்த காசை அவன் நாட்டுக்கு கொண்டு போகத் தானே?
விவரமா சொல்லாப்பா...

ஒரு வகைல ஆமா...

அப்ப,அப்ப வெள்ளைக்காரன் இங்க கம்பெனி ஆரம்பிச்சு,
அத வச்சு பணம் சம்பாதிச்சதால தான்,
அத வச்சு,அவனால வெங்காயம் வாங்க முடியுது?
அரிசி கிடைக்குது ன்னும் சொல்லலாம்ல?

ஆமா சொல்லலாம்.

என் ஊருக்கு வந்து,கூல் டிரிங்ஸ் கம்பனியைப் போட்டு,
என் நிலத்து தண்ணீரை எடுத்து,அதை எனக்கே வித்து,
அந்த காசை வச்சு நான் விளைவிக்குற காய்கறிகளை
அவன் வாங்குறது-இதுக்கு பேரு தானே குளோபுலைஷேசன்?

அடடா..ஆமாங்க...

யோசியுங்கள்... இன்னொரு
சுதந்திர போராட்டம் நமக்குவேணுமா?

-ஆக்கம் – வேப்பிலை சுவாமிகள்
===========================================
2
 தாய்நாட்டைக் குறைத்து பேச வேண்டாம்!!

18 முறை கஜினி முகமது நம் இந்திய திரு நாட்டி மீது படையெடுத்துவந்தான் (கொள்ளை அடிக்க) அதை இன்றளவும் விடாமுயற்சி என்று பாராட்டி

படிக்கிறோம். ஆனால் அவனை 17 முறை வெற்றி பெறாமல் துரத்தி அடித்த நம் முன்னோர்கள் வீரத்தை நம் தலைமுறைக்கு சொல்லவில்லை.

அலெக்சாண்டரை மாவீரன் என்று போற்றுவோம். ஆனால் அவனை கலங்கடித்த மன்னன் புருஷோத்தமரைப்பற்றி எந்த பாட புத்தகத்திலும்

சொல்லமாட்டோம்.

சேகுவேரா போன்ற வெளி நாட்டு போராளியை தலையில் தூக்கிவைத்து ஆடுவோம். ஆனால்செக்கிழுத்த வ.உ.சி, கொடிகாத்த குமரன்

போன்றவரைப்பற்றி பேச மாட்டோம்.

72 வயதில் திருமணம் செய்த பெரியாரை சிலை வைத்து வழி படுவோம். ஆனால் பிரம்மசாரியாக வாழ்ந்து தன் சொத்துகளை அனைத்தையும்

மக்களுக்கு கொடுத்த பசும்பொன்னாரை மறந்து விடுவோம்.

பிரான்ஸில் உள்ள இரும்பிலான ஈபிள் டவரை ஆஹா என புகழ்வோம். நெஞ்சை அள்ளும் தஞ்சை பொிய கோவிலின் கலைநயத்தை கண்டு கொள்ள

மாட்டோம்.

மொத்தத்தில் வெளிநாட்டோடு ஒப்பிட்டு தாய்நாட்டை குறைத்து பேசும் செயலை மாற்றுவோம்.

அதற்கான முதற்படி எடுத்து வைப்போம்.

தேசத்தை நேசிப்போம்.

"ஜெய்ஹிந்த்"
-------------------------------
படித்ததில் பிடித்தவைகளை இன்று வலை ஏற்றியுள்ளேன்.

அன்புடன்,
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

  1. Sir Detailed version easily understandable . Thanks .

    ReplyDelete
  2. Ayya,

    Please watch the video which i have attached below:

    https://www.youtube.com/watch?v=_B3g8FKfWsc

    is this true???

    i am submitting this link to our classroom members.

    ReplyDelete
  3. I paid full payment for a book. The publisher already sent a book through courier. That is one among first ten. Today's earlier once again received the book by post.

    ReplyDelete
  4. ஐயா வணக்கம்
    இந்த பதிவில் வரும் உலகமயமாதல் பற்றிய விளக்கமும் , இன்று சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு கூடும் நோக்கம் பற்றியும் அறியும் படி செய்து உள்ளீர்கள் .
    நன்றி
    கண்ணன்.

    ReplyDelete
  5. ஐயா,
    Inflation, FDI, Share market மற்றும் Globalization போன்ற கடுமையான சொற்களின் உஷ்ணத்தை, சர்வ சாதாரணமாக வெங்காயத்தை வைத்து வகுப்பறை மாணவர்கட்கு சிறிய உதாரணங்கள் மூலம் விளக்க முயற்சித்துள்ளார், வேப்பிலை சுவாமிகள். பாராட்டுக்கள்.
    2ம் தொகுப்பிலுள்ள அனைத்தும் படிக்கப் படிக்க இரத்தம் சூடேறுகிறது.நம் நாட்டு சரித்திரத்தைக்கூட அக்கால ஆங்கிலேயர்களே எழுதிச் சென்றார்களா, என்ன? நாம் சரித்திர பாடங்களை மாற்றஇ எழுதி மாணவர்களைப் படிக்க வைக்க முடியாதா ?! விளக்கம் தேவை, வாத்தியாரையா ! இயலாத ஒன்றா, ஐயா !
    சிந்திக்க வைத்த இரண்டு தொகுப்புகளுக்காக தங்களுக்கு நன்றி !

    ReplyDelete
  6. In war and love everything is right.

    We are just talking about tip of an ice Berg. When u see the tip, we think we are finding something, but it exists and grow for a long time to show its tip.

    Like that, these issues were incepted and grown last week 30 years starting early 70's. Many seniors here know what green or white revolution means. The plants are in perfect shape in form of medical (diabetics, cancer to start with), agri (fertilizers, gm seeds), banks, Pharmacy, now into games.
    Reason: silence of good and strength of evil minds.

    One more note, Gazini did 17 times war and not lost wars. He wanted to loot the money in Siva temple and on 18th time he made decision to complete his looting and just want to finish off the temple so other kings not able to loot that place. That Siva temple had Siva linga suspended in air and after destroying he took bulk of architects and builders along with treasures. This was mentioned in 'Vanthargal Vendrargal' by Madhan.

    While we live in a world of lies and projecting perceptions, 'knowledge and wisdom' is the only ultimate authority for survivors on this ongoing world war3.

    ReplyDelete
  7. ////Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா/////

    உங்களின் வருகைப் பதிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  8. //////Blogger Sundararajan Rajaraghavan said...
    Sir Detailed version easily understandable . Thanks ./////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  9. /////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    இந்த பதிவில் வரும் உலகமயமாதல் பற்றிய விளக்கமும் , இன்று சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு கூடும் நோக்கம் பற்றியும் அறியும்படி செய்து உள்ளீர்கள் .
    நன்றி
    கண்ணன்./////

    தற்செயலாக பதிவிட்டதாகும்!

    ReplyDelete
  10. //////Blogger வரதராஜன் said...
    ஐயா,
    Inflation, FDI, Share market மற்றும் Globalization போன்ற கடுமையான சொற்களின் உஷ்ணத்தை, சர்வ சாதாரணமாக வெங்காயத்தை வைத்து வகுப்பறை மாணவர்கட்கு சிறிய உதாரணங்கள் மூலம் விளக்க முயற்சித்துள்ளார், வேப்பிலை சுவாமிகள். பாராட்டுக்கள்.
    2ம் தொகுப்பிலுள்ள அனைத்தும் படிக்கப் படிக்க இரத்தம் சூடேறுகிறது.நம் நாட்டு சரித்திரத்தைக்கூட அக்கால ஆங்கிலேயர்களே எழுதிச் சென்றார்களா, என்ன? நாம் சரித்திர பாடங்களை மாற்றஇ எழுதி மாணவர்களைப் படிக்க வைக்க முடியாதா ?! விளக்கம் தேவை, வாத்தியாரையா ! இயலாத ஒன்றா, ஐயா !
    சிந்திக்க வைத்த இரண்டு தொகுப்புகளுக்காக தங்களுக்கு நன்றி !//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  11. //////Blogger selvaspk said...
    In war and love everything is right.
    We are just talking about tip of an ice Berg. When u see the tip, we think we are finding something, but it exists and grow for a long time to show its tip.
    Like that, these issues were incepted and grown last week 30 years starting early 70's. Many seniors here know what green or white revolution means. The plants are in perfect shape in form of medical (diabetics, cancer to start with), agri (fertilizers, gm seeds), banks, Pharmacy, now into games.
    Reason: silence of good and strength of evil minds.
    One more note, Gazini did 17 times war and not lost wars. He wanted to loot the money in Siva temple and on 18th time he made decision to complete his looting and just want to finish off the temple so other kings not able to loot that place. That Siva temple had Siva linga suspended in air and after destroying he took bulk of architects and builders along with treasures. This was mentioned in 'Vanthargal Vendrargal' by Madhan.
    While we live in a world of lies and projecting perceptions, 'knowledge and wisdom' is the only ultimate authority for survivors on this ongoing world war3.//////

    உங்களின் கருத்துப் பகிவிற்கு நன்றி

    ReplyDelete
  12. வணக்கம் குருஜி அவர்களே. மிகவும் எளிமையான விளக்கம். நன்றாக இருக்கின்றது. நமது வெள்ளைகார (அதாவது சொந்தக்காரர்கள்) வராலாற்றை கொஞ்சம் மாற்றி விட்டார்கள் போல.ஆனால் நம் நாட்டு தலைவர்களும், அரசியல் வாதிகளும் நாட்டிற்காக, நாட்டு மக்களுக்காக, விவாசய நாடு என்றெல்லாம் நினைத்து ஆட்சியை நன்றாக செய்து இருந்தால் என்றோ நல்ல நிலைமைக்கு வந்திருக்கும்.ஆனால் இங்கு நிலைமை வேறு, ஒவ்வொரு ஆட்சியிலும் நம் ஆட்கள் (இப்போதெல்லாம் எல்லா இடத்திலும்) நடத்தும் ஊழல்கள் அப்பப்பா...செய்தித்தாள்களுக்கு தான் நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன்.



    தங்களுடைய புத்தகம் எனக்கு கிடைத்தது.நன்றாக இருக்கின்றது, அதுமட்டுமா உங்களிடம் பேச ஒரு வாய்ப்பு கிடைத்தது. அருமை பாராட்டுகள் பல... பல..

    ReplyDelete
  13. உலக அளவில் வியாபாரம் என்பது இன்று நேற்றல்ல; இரணடாயிரம் ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    'சில்க் ரூட்' 'ஸ்பைஸ் ரூட்' என்பது நமது நாட்டில் இருந்து பட்டும், வாசனைப் பொருட்களையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய‌ எடுத்துச் சென்றதைக் காட்டுகிற்து.

    அரபு நாட்டில் இருந்து காலம் காலமாக குதிரைகள் இங்கு வந்து கொடுத்து விட்டு,இங்கிருந்து முத்தும், யானைத் தந்தமும், பட்டும்,மிளகும், லவங்கமும் வாங்கிச் சென்றனர். ஒரு அரபு வணிகர் கூட்டத்தோடு சேரமான் பெருமாள் (நாயனார்?), அவர்கள் நாட்டிற்கே கப்பலேறிச் சென்று அங்கேயே சமாதியாகி இன்றும் ஒரு தர்காவில் உள்ளாராம்.

    பர்மா, சிங்கப்பூர் ,மலேசியா,பினாங்கு,விய‌ட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளுக்கு நமது நகரத்தார் வங்கி நடத்தச் சென்ற‌னர்.ஒரு சமயத்தில் ரங்கூன்
    நகரமே நகரத்தார் பிடியில் இருந்ததாம்.

    ஏன் இதையெலாம் சொல்கிறேன் என்றால் உலகமயமாக்கலையும், நாடு பிடிக்கும் ஆசைப்பட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.அன்று வியாபரம் செய்ய வந்த ஆங்கிலேயனுக்கு மற்றவரைக் காட்டிலும் ராணுவ பலம், பீரங்கி துப்பாக்கி ஆகிய கண்டுபிடிப்புக்கள் அனுகூலமாக இருந்தன.அவன் உலகத்தையே பிடிக்க முடிந்தது. இன்று எல்லா நாடுகளுக்குமே ஆயுத வியபாரத்தைச் செய்து
    எல்லோரையுமே வலிமையாக்கி வைத்துவிட்டதால் எந்த நாடுமே போருக்குத் தயங்கும் நிலை தோன்றியுள்ளது.

    இன்று உலகத்தில் 65 சதவீதம் பேர் இந்தியத் துணிகளையே நம்பியுள்ளனர்.
    உலகமயம் வேண்டாம் என்றால் நமது துணியை எந்த நாட்டிற்கும் விற்கக் கூடாது.அரபு நாடுகளில் இருந்து குரூட் ஆயில் வாங்கக்கூடாது. சரியா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com