வாத்தியாரின் ஜோதிட நூலிற்கு மாணவரின் மதிப்புரை!
நம் வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான திரு.கே.முத்துராமகிருஷ்ணன் அவர்கள், வாத்தியாரின்
"வகுப்பறை ஜோதிடம் தொகுதி=1" ஐப் பார்த்துப் படித்துவிட்டு
தனது மேலான மதிப்புரையை நல்கியுள்ளார். உங்களின்
பார்வைக்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன்.
அத்துடன் நம் வகுப்பறையின் சார்பில் நமது நன்றியையும்
அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
KMRK அவர்களின் கடிதம்:
நம் மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களின் "வகுப்பறை ஜோதிடம் தொகுதி=1" வெளியாகிவிட்டது.
முதல் காப்பியை அடியேனுக்கு அனுப்பி வைத்து, என்றும் அவருடைய மாணவனாகிய எனக்கு சிறப்பினை அளித்துள்ளார்கள். அதற்காக
அவருக்கு என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்குள்ள நூலகத்திலிருந்து வாரம் இரண்டு அல்லது மூன்று முறை புத்தகங்கள் எடுத்து வருகிறேன்.அதனால் தமிழகத்தில் உள்ள
அனைத்து பதிப்பக்கங்களின் தரம் என்ன என்பது எனக்கு
ஆராயாமலேயே விளங்கியது. அட்டையை மட்டும் நல்ல
'வழு வழு' காகிதத்தில் போட்டுவிட்டு உள்ளே சாணித்தாளில் படிக்க
மிகவும் சிரமமாக இருக்கும் ழுத்துருக்களில்,மங்கலான மையில்
அச்சடித்து ஒப்பேற்றும் பதிப்பகங்களே அதிகம்.
ஆனால் நமது வாத்தியாரின் இப்புத்தகம் மட்டுமல்லாமல், முன்னர்
அவரது கதைத் தொகுதிகள் அனைத்துமே நல்ல விலையுயர்ந்த தாளில், கண்ணுக்கு இதமான எழுத்துருக்களில், ஒரே சீரான மையில் உருவாக்கப்பட்டுள்ளன. இலாபம் என்பதை மனதில் கொள்ளாமல்,
தரத்திற்கே முன்னுரிமை அளித்து புத்தகம் வெளியிடுவதற்காக
உமையாள் பதிப்பகத்திற்கு ஒரு சிறப்பான பாராட்டுக்கள்.
320 பக்கங்களையுடைய இப்புத்தகம்,அடிப்படை சோதிடப்பாடங்களை
கற்றுக் கொடுக்கிறது.வகுப்பறைக்கு தொடர்ந்து வருபவர்களுக்கு இப்பாடங்கள் பரிச்சயமான ஒன்றுதான் என்றாலும், சந்தேகம் வரும்
போது புத்தகத்தை எடுத்து பார்த்துக்கொள்ள மிகவும் உதவும்.
புதியவர்களுக்கு 'லக்கினத்தை எப்படி ஆய்வு செய்வது?' 'நீச பங்க
ராஜயோகம் என்றால் என்ன?''கர்பச்செல் இருப்பு என்றால் என்ன?'
போன்ற அடிப்படைப் பாடங்கள் மிகவும் பயனுள்ளவை.
மேலும் 'பிரபலங்களின் ஜாதகங்கள்' என்ற அத்தியாயத்தில்
33 பிரபலங்களின் பிறந்த தேதி, நேரம், அட்ச,தீர்க ரேகை விவரங்கள் கொடுத்துள்ளது மிக மிக பயனுள்ளதாகும்.வாத்தியாரின் இந்த
உதவியால் பயிற்சி எடுப்போருக்கு மிகவும் செளகர்யம்.
இன்னும் புத்தகத்தைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
அப்புறம் புத்தகத்தின் சிறப்பினைப் பற்றி இன்னொரு புத்தகம்
போட வேண்டியதுதான்.
புத்தகம் வெளியிடுவதில் ஏற்படும் பொருள் இழப்பு அதில்
ஈடுபட்டோருக்குத் தெரியும்.நமது வாத்தியாருக்குக் கைப்பிடிப்பு
ஏற்படாமல் நாம் அனைவரும் அச்சிட்ட புத்தகம் அனைத்தையும்
வாங்கிப் பயன் படுத்துவதே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை.
அடுத்த தொகுதிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
KMRK, லால்குடி
மின்னஞ்சல் முகவரி,kmrk1949@gmail.com
வளர்க நலமுடன்!

===============================================
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
முன் வரிசையில் எப்போதும் எங்கள் லால்குடியார் அன்பின்
ReplyDeleteமுன் வரிசையிலும் மதிப்புரை வழங்குவதிலும்
நன்றிகள் கூடவே
நல் வணக்கமும்
பணிகிறேன் ஐயா
ReplyDeleteமிகவும் அனந்தமாக உள்ளேன் ஐயா!!!!!!! மிக்க நன்றி ஐயா
வணக்கம் குருஜி அவர்களே!.--வாத்தியாரின் ஜோதிட நூல்களுக்கு மாணவரின் மதிப்புரை-- இது என்னை பொறுத்த வரையில் மதிப்புரை தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.(யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணத்தில் இல்லை) ஏனெனில் வாத்தியாரின் பதிவுகளை வலைபூவில் படித்து கொண்டுதான் இருக்கிறேன்.ஒவ்வொரு பதிவிலும் அவரின் எழுத்துகள்,இனிய,எளியதான நடை,கையாளும் சொற்களின் விதம்,நெஞ்சத்தில் நிற்கும்படியான கருத்தான கதைகள், ஆன்மிகம், நடைமுறை வாழ்க்கை, விதியை பற்றி உணர்த்த என நிறைய சொல்லலாம், சொல்லிக்கொண்டே இருக்கலாம்.”ஜோதிடத்தை எந்த கொம்பனாலும் முழுமையாக தெரிந்து கொண்டு விடமுடியாது” போன்றவை. இந்த வலைப்திவுகளை உண்மையாக உணர்ந்து ரசித்து படிப்பவர்களுக்கு நான் சொல்வது மிக நன்றாக புரியும் என நினைக்கிறேன். வாத்தியார் அவர்களுக்கும், சீடர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும் பல பல பல. (உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருவதால் உங்களது அனுபவம், ஆன்மிகம், மேலான எண்ணங்களை புரிந்து கொண்டதாக தோன்றுகிறது)
ReplyDeletevaazthukkal ayya !
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteHappy morning. Hope all is well. I am eagerly waiting to get the treasure of life in the form of classroom books.
Thanks for sharing post. Have a pleasant day.
With kind regards,
Ravichandran M
குருவே வணக்கம்,
ReplyDeleteதங்களின் புத்தகம் வெளியானது எனக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகளுள் ஒன்று. எப்பொழுது எனக்கு கிடைக்கும் என்று ஆவலாக உள்ளேன்.
இப்படிக்கு
தங்கள் மாணவன்
வ.ம.சூ.அந்தோணி
மும்பை
காத்திருந்த நாள் அருகாமையில் வந்துள்ளது.ஆசிரியர், தன்னுடைய பொன்னான நேரத்தை பொது நோக்கில் எட்டு வருடமாக செலவளித்து இன்று அது புத்தக வடிவமாகி உள்ளதை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்று திரு.சஞ்சய் ராத் அவர்களின் சீடனாக நான் ஆகியிருந்தாலும், 2008 முதல் என் முதல் மானசீக குரு நீங்கள் தான். ஜோதிட ஆர்வத்தை ஏற்படுத்தி, தரமான மனவள கட்டுரைகள் பல அளித்து என் போன்ற பலருக்கு வழிகாட்டியாக இருக்கிறீர்கள்.தொடரட்டும் உங்கள் பணி.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Very happy to see the first volume came out successfully.
ReplyDeleteOne suggestion, please make the book on side bar and details to order in it? I know you have posted in couple of your posts, but if it's accessible easily, new people would find it easy.
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .,
ReplyDeleteகீழ் கண்ட வாறு எனது முக நூலில் பதிவிட காத்திருக்கிறேன் ..தங்கள் அனுமதி வேண்டி.
அன்புடன் அன்பர்களே வணக்கம்
வகுப்பறை 2007.blogspot.com என்ற வலை தளத்தில் ஜோதிட ரத்தினம் .திரு sp vr.சுப்பையா அவர்கள் ஜோதிடம் பற்றி எளிமையாக இலவசமாக் கற்று கொடுத்து வருகிறார். உண்மையில் .அவர் ஜோதிடம் யாருக்கும் பார்ப்பதில்லை ..ஜோதிடத்தை விளையாட்டாக படித்தவர் 2007 முதல் வலை தளத்தில் .எழுதி வருகிறார் .
அன்னார அதன் தொகுப்பை புத்தகமாக வெளி இட்டுள்ளார் ...உமையாள் பதிப்பகம் கோவை வெளி இட்டுள்ளது ...
மிகவும் எளிமையான நடை எளிதில் புரிகிற மாதிரியான வார்த்தைகள் ...பேச்சு பழக்கத்தில் உள்ளது போன்றே வார்த்தைகள் ...
{அட இது நன்றாக இருக்கிறதே ]
வீடு வரை உறவு ,
வீதி வரை மனைவி .
காடு வரை பிள்ளை ..
கடைசி வரை பழனி அப்பன் ..
இது எங்களது வாத்தியாரின் பாணி
புத்தகம் வேண்டுவோர் உமையால் பதிப்பகத்தை அணுகி பெறலாம் ..
உமையாள் பதிப்பகம் ,
37,S N .D .லே அவுட் -4வது வீதி .,
டாடபாத்.,கோயாம்புத்தூர் ..641012.
9444750665..
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteமுன் வரிசையில் எப்போதும் எங்கள் லால்குடியார் அன்பின்
முன் வரிசையிலும் மதிப்புரை வழங்குவதிலும்
நன்றிகள் கூடவே
நல் வணக்கமும் ////
நல்லது.வேப்பிலையாரே!
//////Blogger siva kumar said...
ReplyDeleteபணிகிறேன் ஐயா
மிகவும் அனந்தமாக உள்ளேன் ஐயா!!!!!!! மிக்க நன்றி ஐயா/////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger C.P. Venkat said...
ReplyDeleteவணக்கம் குருஜி அவர்களே!.--வாத்தியாரின் ஜோதிட நூல்களுக்கு மாணவரின் மதிப்புரை-- இது என்னை பொறுத்த வரையில் மதிப்புரை தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.(யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணத்தில் இல்லை) ஏனெனில் வாத்தியாரின் பதிவுகளை வலைப்பூவில் படித்து கொண்டுதான் இருக்கிறேன்.ஒவ்வொரு பதிவிலும் அவரின் எழுத்துகள்,இனிய,எளியதான நடை,கையாளும் சொற்களின் விதம்,நெஞ்சத்தில் நிற்கும்படியான கருத்தான கதைகள், ஆன்மிகம், நடைமுறை வாழ்க்கை, விதியை பற்றி உணர்த்த என நிறைய சொல்லலாம், சொல்லிக்கொண்டே இருக்கலாம்.”ஜோதிடத்தை எந்த கொம்பனாலும் முழுமையாக தெரிந்து கொண்டு விடமுடியாது” போன்றவை. இந்த வலைப்திவுகளை உண்மையாக உணர்ந்து ரசித்து படிப்பவர்களுக்கு நான் சொல்வது மிக நன்றாக புரியும் என நினைக்கிறேன். வாத்தியார் அவர்களுக்கும், சீடர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும் பல பல பல. (உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருவதால் உங்களது அனுபவம், ஆன்மிகம், மேலான எண்ணங்களை புரிந்து கொண்டதாக தோன்றுகிறது)/////
உங்களின் அனுபவப் பகிர்விர்க்கு நன்றி மிஸ்டர் வெங்கட்!
/////Blogger murali krishna g said...
ReplyDeletevaazthukkal ayya !/////
நன்றி முரளி கிருஷ்ணா!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning. Hope all is well. I am eagerly waiting to get the treasure of life in the form of classroom books.
Thanks for sharing post. Have a pleasant day.
With kind regards,
Ravichandran M//////
பதிப்பகத்தாருக்கு உங்கள் முகவரியைத் தெரிவித்து உள்ளீர்களா?
///Blogger VM. Soosai Antony said...
ReplyDeleteகுருவே வணக்கம்,
தங்களின் புத்தகம் வெளியானது எனக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகளுள் ஒன்று. எப்பொழுது எனக்கு கிடைக்கும் என்று ஆவலாக உள்ளேன்.
இப்படிக்கு
தங்கள் மாணவன்
வ.ம.சூ.அந்தோணி
மும்பை/////
வரிசைப்படி அனுப்பிக் கொண்டுள்ளார்கள். உங்களுக்கு இன்னும் ஒடு வாரத்திற்குள் கிடைக்கும் பொறுத்திருங்கள்!
//////Blogger Arul said...
ReplyDeleteகாத்திருந்த நாள் அருகாமையில் வந்துள்ளது.ஆசிரியர், தன்னுடைய பொன்னான நேரத்தை பொது நோக்கில் எட்டு வருடமாக செலவளித்து இன்று அது புத்தக வடிவமாகி உள்ளதை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்று திரு.சஞ்சய் ராத் அவர்களின் சீடனாக நான் ஆகியிருந்தாலும், 2008 முதல் என் முதல் மானசீக குரு நீங்கள் தான். ஜோதிட ஆர்வத்தை ஏற்படுத்தி, தரமான மனவள கட்டுரைகள் பல அளித்து என் போன்ற பலருக்கு வழிகாட்டியாக இருக்கிறீர்கள்.தொடரட்டும் உங்கள் பணி.
மிக்க நன்றி ஐயா./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி அருள்!
/////Blogger selvaspk said...
ReplyDeleteVery happy to see the first volume came out successfully.
One suggestion, please make the book on side bar and details to order in it? I know you have posted in couple of your posts, but if it's accessible easily, new people would find it easy./////
இப்போதே செய்துவிடுகிறேன்! யோசனைக்கு நன்றி!
///////Blogger hamaragana said...
ReplyDeleteஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .,
கீழ் கண்டவாறு எனது முக நூலில் பதிவிட காத்திருக்கிறேன் ..தங்கள் அனுமதி வேண்டி.
அன்புடன் அன்பர்களே வணக்கம்
classroom2007.blogspot.in என்ற வலைத்தளத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக ஜோதிடப் பாடங்களை எழுதிவரும் வாத்தியார்.திரு SP.VR.சுப்பையா அவர்கள் ஜோதிடம் பற்றி எளிமையாக இலவசமாக் கற்று கொடுத்து வருகிறார். உண்மையில் .அவர் யாருக்கும் ஜாதகம் பார்ப்பதில்லை ஜோதிடத்தை விளையாட்டாகப் படித்தவர் 2007 முதல் வலைத் தளத்தில் எழுதி வருகிறார் .
பாடங்களின் தொகுப்பை புத்தகமாக வெளியிட உள்ளார். தொகுப்பின் முதல் பகுதி தற்சமயம வெளியாகி உள்ளது. கோவை உமையாள் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள். மிகவும் எளிமையான நடை எளிதில் புரிகிற மாதிரியான வார்த்தைகள் ...பேச்சு பழக்கத்தில் உள்ளது போன்றே வார்த்தைகள் ...{அட இது நன்றாக இருக்கிறதே ]
வீடு வரை உறவு ,
வீதி வரை மனைவி .
காடு வரை பிள்ளை ..
கடைசி வரை பழனி அப்பன் ..
இது எங்களது வாத்தியாரின் பாணி
புத்தகம் வேண்டுவோர் உமையாள் பதிப்பகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
உமையாள் பதிப்பகம் ,
37,S N .D .லே அவுட்,4வது வீதி .,
டாடபாத்.,கோயாம்புத்தூர் ..641012.
அலைபேசி எண்: 9444750665..///////
திருத்தங்களைச் செய்துள்ளேன். இதில் உள்ளபடி நீங்கள் உங்கள் முகநூலில் வெளியிட்டுக் கொள்ளலாம்.
நன்றி, வணக்கத்துடன்
வாத்தியார்
----------------------------
Ayya, naanum mun panam katti ullen Mar 27 andrey, en peyarai neegal kuripidavey illaiey??
ReplyDeleteParavaillai, Umailayuku mail anupy ullen... Mikkuntha santhosam ayya, bhuthaghathirkagha kaathirukiren. Nandri.
//வாத்தியாரின் ஜோதிட நூல்களுக்கு மாணவரின் மதிப்புரை-- இது என்னை பொறுத்த வரையில் மதிப்புரை தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.//
ReplyDeleteஅடியேன் 2010 முதல் வகுப்பறையில் எழுதிவருகிறேன். பின்னூட்டங்கள் மட்டுமல்லாது, 103 கட்டுரைகளும், தன் வரலாறும் எழுதியுள்ளேன்.எல்லாவற்றையும் ஐயா அவர்கள் பெரும்பாலும் 'எடிட்'செய்யாமல் அப்படியே வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்கள்.ஒரு கட்டுரைக்கும் நான் தலைப்புக் கொடுத்தது கிடையாது.எல்லாத் தலைப்புக்களும் ஐயா அவர்களே கொடுத்ததுதான்.
இம்முறையும் நான் பின்னூட்டமாக எழுதியதை ஐயா அவ்ர்கள் 'மாணவரின் மதிப்புரை' என்று தானே தலைப்புக் கொடுத்து வெளியிட்டு விட்டார்கள்.
ஐயா அவர்களுக்கோ, ஐயா அவர்களின் புத்தகத்திற்கோ மதிப்புரை எழுத அடியேனுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதை நன்கு உணர்ந்தவன் தான் நான். எனவே நான் மகுடமிடாத 'மதிப்புரை' என்ற சொல் யாரையாவது முகம் சுளிக்க வைத்து இருந்தால் அதற்காக மனம் வருந்துகிறேன்.
/////Blogger priya vardini said...
ReplyDeleteAyya, naanum mun panam katti ullen Mar 27 andrey, en peyarai neegal kuripidavey illaiey??
Paravaillai, Umailayuku mail anupy ullen... Mikkuntha santhosam ayya, bhuthaghathirkagha kaathirukiren. Nandri.////
உங்களுக்கு ஒரு பிரதி நேற்று அனுப்பி வைக்கப்பெற்றுள்ளது சகோதரி! கிடைத்தவுடன் பதில் எழுதுங்கள்
//////Blogger kmr.krishnan said...
ReplyDelete//வாத்தியாரின் ஜோதிட நூல்களுக்கு மாணவரின் மதிப்புரை-- இது என்னை பொறுத்த வரையில் மதிப்புரை தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.//
அடியேன் 2010 முதல் வகுப்பறையில் எழுதிவருகிறேன். பின்னூட்டங்கள் மட்டுமல்லாது, 103 கட்டுரைகளும், தன் வரலாறும் எழுதியுள்ளேன்.எல்லாவற்றையும் ஐயா அவர்கள் பெரும்பாலும் 'எடிட்'செய்யாமல் அப்படியே வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்கள்.ஒரு கட்டுரைக்கும் நான் தலைப்புக் கொடுத்தது கிடையாது.எல்லாத் தலைப்புக்களும் ஐயா அவர்களே கொடுத்ததுதான்.
இம்முறையும் நான் பின்னூட்டமாக எழுதியதை ஐயா அவ்ர்கள் 'மாணவரின் மதிப்புரை' என்று தானே தலைப்புக் கொடுத்து வெளியிட்டு விட்டார்கள்.
ஐயா அவர்களுக்கோ, ஐயா அவர்களின் புத்தகத்திற்கோ மதிப்புரை எழுத அடியேனுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதை நன்கு உணர்ந்தவன் தான் நான். எனவே நான் மகுடமிடாத 'மதிப்புரை' என்ற சொல் யாரையாவது முகம் சுளிக்க வைத்து இருந்தால் அதற்காக மனம் வருந்துகிறேன்.//////
யாருக்காகவும். நீங்கள் ஒன்றும் மனம் வருந்த வேண்டியதில்லை. மதிப்புரை அல்லது விமர்சனம் எழுதுவதற்கு வாசகன் என்ற ஒரு தகுதி போதும். அது உங்களுக்கு இருக்கிறது. வகுப்பறைக்கு வரும் மற்றவர்களுக்கும் இருக்கிறது
Nandri ayya :-)
ReplyDeleteSilent Reader, Vardini.
KMR KRISHNAN அவர்களுக்கு, அடியேன் தங்களது மதிப்புரையை பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறேன். வாத்தியாரின் புத்தகத்திற்கு விமர்சனம் தேவைப்படாது என்றுதான் கருத்து தெரிவித்தேன். தங்களுடைய மதிப்புரை பற்றி ஏதும் சொல்லவில்லை. ///வாத்தியாரின் ஜோதிட நூல்களுக்கு மாணவரின் மதிப்புரை-- இது என்னை பொறுத்த வரையில் மதிப்புரை தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.(யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணத்தில் இல்லை)///
ReplyDeleteகுருஜி அவர்களுக்கும் & KMR KRISHNAN அவர்களுக்கும் : உங்கள் மனதை பாதித்திருந்தால்,தயவுசெய்து அடியேனது தவற்றை மன்னித்தருளும்படி வேண்டிக்கொள்கிறேன்.யாரையும் குறை சொல்லவோ (அ)யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் நான் இங்கு வரவில்லை. குருஜி அவர்களை பாரட்ட வேண்டும் என்பதை தவிர வேறு எண்ணங்கள் இல்லை.(என்க்கு தர்மசங்கடமாக உள்ளது). தொடர்புகொள்ள எனது அலைபேசி எண்:+919843880392
வணக்கம் குருஜி அவர்களே!.--வாத்தியாரின் ஜோதிட நூல்களுக்கு மாணவரின் மதிப்புரை-- இது என்னை பொறுத்த வரையில் மதிப்புரை தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.(யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணத்தில் இல்லை) ஏனெனில் வாத்தியாரின் பதிவுகளை வலைப்பூவில் படித்து கொண்டுதான் இருக்கிறேன்.ஒவ்வொரு பதிவிலும் அவரின் எழுத்துகள்,இனிய,எளியதான நடை,கையாளும் சொற்களின் விதம்,நெஞ்சத்தில் நிற்கும்படியான கருத்தான கதைகள், ஆன்மிகம், நடைமுறை வாழ்க்கை, விதியை பற்றி உணர்த்த என நிறைய சொல்லலாம், சொல்லிக்கொண்டே இருக்கலாம்.”ஜோதிடத்தை எந்த கொம்பனாலும் முழுமையாக தெரிந்து கொண்டு விடமுடியாது” போன்றவை. இந்த வலைப்திவுகளை உண்மையாக உணர்ந்து ரசித்து படிப்பவர்களுக்கு நான் சொல்வது மிக நன்றாக புரியும் என நினைக்கிறேன். வாத்தியார் அவர்களுக்கும், சீடர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும் பல பல பல. (உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருவதால் உங்களது அனுபவம், ஆன்மிகம், மேலான எண்ணங்களை புரிந்து கொண்டதாக தோன்றுகிறது)/////
/////Blogger priya vardini said...
ReplyDeleteNandri ayya :-)
Silent Reader, Vardini.//////
நன்றிக்கு ஒரு நன்றி! புத்தகம் எப்படி உள்ளது? அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே நீங்கள்?
/////Blogger C.P. Venkat said...
ReplyDeleteKMR KRISHNAN அவர்களுக்கு, அடியேன் தங்களது மதிப்புரையை பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறேன். வாத்தியாரின் புத்தகத்திற்கு விமர்சனம் தேவைப்படாது என்றுதான் கருத்து தெரிவித்தேன். தங்களுடைய மதிப்புரை பற்றி ஏதும் சொல்லவில்லை. ///வாத்தியாரின் ஜோதிட நூல்களுக்கு மாணவரின் மதிப்புரை-- இது என்னை பொறுத்த வரையில் மதிப்புரை தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.(யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணத்தில் இல்லை)///
குருஜி அவர்களுக்கும் & KMR KRISHNAN அவர்களுக்கும் : உங்கள் மனதை பாதித்திருந்தால்,தயவுசெய்து அடியேனது தவற்றை மன்னித்தருளும்படி வேண்டிக்கொள்கிறேன்.யாரையும் குறை சொல்லவோ (அ)யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் நான் இங்கு வரவில்லை. குருஜி அவர்களை பாரட்ட வேண்டும் என்பதை தவிர வேறு எண்ணங்கள் இல்லை.(என்க்கு தர்மசங்கடமாக உள்ளது). தொடர்புகொள்ள எனது அலைபேசி எண்:+919843880392
வணக்கம் குருஜி அவர்களே!.--வாத்தியாரின் ஜோதிட நூல்களுக்கு மாணவரின் மதிப்புரை-- இது என்னை பொறுத்த வரையில் மதிப்புரை தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.(யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணத்தில் இல்லை) ஏனெனில் வாத்தியாரின் பதிவுகளை வலைப்பூவில் படித்து கொண்டுதான் இருக்கிறேன்.ஒவ்வொரு பதிவிலும் அவரின் எழுத்துகள்,இனிய,எளியதான நடை,கையாளும் சொற்களின் விதம்,நெஞ்சத்தில் நிற்கும்படியான கருத்தான கதைகள், ஆன்மிகம், நடைமுறை வாழ்க்கை, விதியை பற்றி உணர்த்த என நிறைய சொல்லலாம், சொல்லிக்கொண்டே இருக்கலாம்.”ஜோதிடத்தை எந்த கொம்பனாலும் முழுமையாக தெரிந்து கொண்டு விடமுடியாது” போன்றவை. இந்த வலைப்திவுகளை உண்மையாக உணர்ந்து ரசித்து படிப்பவர்களுக்கு நான் சொல்வது மிக நன்றாக புரியும் என நினைக்கிறேன். வாத்தியார் அவர்களுக்கும், சீடர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும் பல பல பல. (உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருவதால் உங்களது அனுபவம், ஆன்மிகம், மேலான எண்ணங்களை புரிந்து கொண்டதாக தோன்றுகிறது)/////
தர்ம சங்கடம் எதற்கு? உங்கள் கருத்தை நீங்கள் வெளிப்படுத்தினீர்கள். உடனே அது மட்டுறுத்தாமல் நானும் பின்னூட்டமாக வேளியிட்டேன். அப்போதே தெரிந்து கொள்ளுங்கள் - அதனால் யார் மனமும் சங்கடம் கொள்ளாது என்பதை!
Life is short, So always take it easy