இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மன வாசல் எது?
பக்தி மலர்
இன்றைய பக்திமலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிப் பரவசப் படுத்திய முருகப் பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
==============================================
ஆறுமுகன் வாசம் செய்யும்
ஆறுமுகன் வாசம் செய்யும் ஆலயத் திருவாசல்
அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
(ஆறுமுகன் ... )
அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏரு மயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்
(ஆறுமுகன் ... )
ஏழைமுகம் பார்த்திறங்கும் ஈராறு விழி வாசல்
இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மன வாசல்
வாழையடி வாழை என வாழ வரம் தரும் வாசல்
வானவரும் வந்திறங்கி வணங்கி நலம் பெரும் வாசல்
(ஆறுமுகன் ... )
பொங்கும் சரவணப்பொய்கை போகின்ற தனி வாசல்
புலவோர்கள் நா துதிக்கும் புகழ் திருப் புகழ் வாசல்
சங்கும் முரசும் முழங்கும் சங்கீதம் தவழ் வாசல்
சக்தி வடிவேல் முருகன் சன்னிதியைத் தொழும் வாசல்
இளைத்தாரும் களைப்பாற இளம் தென்றல் வரும் வாசல்
நீலவர்க்கும் ஞானியர்க்கும் இன்பம் தரும் ஒரு வாசல்
மலைத்தேனும் தினைமாவும் மணம் வீசும் மலர் வாசல்
மால் மருகன் திருச்செந்தூர் மகராசன் எழும் வாசல்
(ஆறுமுகன் ... )
அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்
(ஆறுமுகன் ... ).
பாடிப்பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
ஓம் ஷண்முகாய நம:
ReplyDeleteஓம் ஷண்முகாய நம:
ஓம் ஷண்முகாய நம:
முருகா
ReplyDeleteமுருகா
இது போன்ற அருமையான பாடல்களே இறைவனின் சன்னதிதிக்கு நுழை வாசல்!
ReplyDeleteநல்ல பாடல் ஐயா...
ReplyDelete/////Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteஓம் ஷண்முகாய நம:
ஓம் ஷண்முகாய நம:
ஓம் ஷண்முகாய நம:////
ஓம் சண்முகா போற்றி
ஓம் சரவணா போற்றி
ஓம் கந்தா போற்றி
ஓம் கார்த்திகேயா போற்றி!
////Blogger Visu Iyer said...
ReplyDeleteமுருகா
முருகா////
உருவாய்....
அருவாய்....
வருவாய்....
அருள்வாய்....
குகனே!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஇது போன்ற அருமையான பாடல்களே இறைவனின் சன்னதிதிக்கு நுழை வாசல்!/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
////Blogger பரிவை சே.குமார் said...
ReplyDeleteநல்ல பாடல் ஐயா...//////
நல்லது. நன்றி நண்பரே!