நகைச்சுவை: ஒரு மதுபான தயாரிப்பாளரின் அசத்தலான பேட்டி!
ஒரு மதுபான தயாரிப்பாளரை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காகப் பேட்டி எடுக்கிறார்கள்:
'வணக்கம் நேயர்களே.. இன்றைய பாருக்கு..பார்..ச்சீ.. நேருக்கு நேர் நிகழ்ச்சியில்.. மதுபான தயாரிப்பாளரும்..டாஸ்மாக் ஆலோசகர் பதவி தனக்கு தர வேண்டும்..என பல ஆண்டுகளாக தமிழக அரசை நச்சரித்து வரும்.. திரு. அஜய் புல்லையா.. அவர்கள் வந்து இருக்கிறார்கள்..! இனி அவருடன்..
'வணக்கம் சார்..!'
'வணக்கம் தம்பி..!'
'சார் இப்ப.. ஆண்டுக்கு 21 ஆயிரம் கோடி வர்ற.. டாஸ்மாக் வருமானம்.. நீங்க அலோசகரா வந்தா இதை விட வருமானம்..அதிகரிக்குமா..?'
'என்ன தம்பி இதைப் போய் வருமானம்'னு சொல்றீங்க.. அவமானம்'னு சொல்லுங்க..!'
'சார் நீங்க சொல்றது.. புரியலையே..!'
'தம்பி..இது அள்ள..அள்ள குறையாத அட்சய பாத்திரம்..தம்பி..! 21 ஆயிரம் கோடி ரூபாய் எல்லாம்.. ஜு.ஜு.பி..! இது வருமானம் இல்ல அவமானம்..!'
'சார் நீங்க.. ஆலோசகரா வந்தா ஆண்டுக்கு எவ்வளவு.. வருமானம் கிடைக்கும்..?'
'தம்பி எழுதி வச்சுக்கோங்க.. நான் வந்தா ஒரே வருஷத்தில 50 ஆயிரம் கோடி.. வருமானம் கிடைக்கும்..!'
'50 ஆயிரம் கோடியா..? எப்படி சார்..?'
'அதுக்கு தான் தம்பி..5 அம்ச திட்டம் வச்சு இருக்கேன்..!'
'சூப்பர் சார்.. எங்கே ஒவ்வொன்னா.. சொல்லுங்க..?'
'திட்டம் 1.. ரம்.. பிராந்தி..விஸ்கி.. இதெல்லாம் சாஷே பாக்கெட்ல.. அறிமுகம்..எப்புடி..?'
'சார் ஆரம்பமே கலக்கல்..! அப்புறம்..?
'இனி டாஸ்மாக் மட்டுமில்லாம.. மளிகை கடை.. பெட்டி கடையில கூட நம்ம பாக்கெட் கிடைக்கும்..!'
'ஆஹா சூப்பர்.. அப்ப பலசரக்கு கடையில கூட 'பலசரக்கு' கிடைக்கும்..! அப்படி தானே..?'
'கரெக்ட்டு தம்பி..! இதுக்கு விளம்பர வாசகம் கூட ரெடியா.. இருக்கு தம்பி..!'
'என்ன வாசகம் சார்.. சொல்லுங்க..?'
'பாக்கெட்டை..கடிங்க.. படார்'னு குடிங்க..! எப்புடி..?'
'அருமை சார்..! அருமை..!'
'திட்டம் 2 குடிக்கிறவங்க..ஒரு SMS பண்ணா போதும்..! உடனே சரக்கு டோர் டெலிவரி..! ஆகும்..!'
'போங்க சார்.. இதுல ஒரு ரிஸ்க் இருக்கு..! சார் போதைல இருக்கிறவன்.. சரக்கு பத்தலைனா..எப்படி சார் SMS நம்பர ஞாபகம் வச்சுக்குவான்..? இந்த திட்டம் சுமார் தான்..!'
'தம்பி இவ்வளவு யோசிச்சவன்.. அத யோசிக்காம இருப்பேனா..? எந்த போதையிலும் மறக்காத நம்பர்.. குடிகாரங்களுக்கு பழகிய நம்பர்..
-சிக்ஸ்டி...நைன்டி.. அதாவது 6090க்கு SMS..! யாரு மறப்பா..?'
'சார் நான் சி.எம் ஆனா இப்பவே.. பதவி தந்துயிருப்பேன்..! சூப்பரோ சூப்பர்..!'
'திட்டம் 3 இனி டாஸ்மாக்கை தேடி மக்கள் போக வேண்டாம்..மக்களை தேடி டாஸ்மாக் வரும்..!'
'புரியலையே சார்..?'
'தம்பி மொபைல் கோர்ட்.. மொபைல் ஹோட்டல்..மாதிரி மொபைல் பார்..! எப்புடி..?'
'சார் நீங்க கட்சி ஆரம்பிச்சா.. சாகுற வரைக்கும் நீங்க தான் முதல்வர்..! சூப்பர் திட்டம் சார்..!'
'இதுக்கு கூட விளம்பர வாசகம் இருக்கு..தம்பி..!'
'என்ன சார் அது..? சொல்லுங்க..?'
'நாங்க நடமாடுகிறோம்.. நீங்க நடனமாடுங்க..! நல்லா இருக்கா தம்பி..?'
'ஆஹா.. சார் பூரா பயலுகளையும் ஆட விட்டு காசை அள்ளுறிங்க போங்க..! அருமை..!'
'திட்டம் 4 சரக்கு வெண்டிங் மிஷின்..!'
'அப்படி'னா என்ன சார்..?'
'தம்பி பெரிய.. பெரிய மால்..! தியேட்டர்.. இங்கெல்லாம் போனா.. பெப்ஸி.. கோக்.. காசு போட்டா வரும் பார்த்து இருக்கியலா..?'
'ஆமா சார்..!'
'அதே மாதிரி காசு போட்டா சரியான மிக்சிங்'ல..பெப்ஸியோட சரக்கு வரும்..! அந்த கம்பெனியோட ஒப்பந்தம் போட்டுக்கிட்டா.. மெஷின் செலவு அவனது..!' எப்புடி..??
'சார் நீங்க எங்கேயோ போய்டிங்க..! அருமையான திட்டம் சார்..!'
'இதுக்கு கூட விளம்பர வாசகம் இருக்கு தம்பி..!'
'என்ன சார் அது..?
'துட்டை போடுங்க.. மட்டை ஆகுங்க..
'பொருத்தமான வாசகம் சார்..!'
'திட்டம் 5 ஏழை எளியவர்களுக்கு.. ரேஷன் கடைல.. மாதம் இரு முறை மானிய விலையில் குவாட்டர் வழங்கும் திட்டம்..! எப்புடி தம்பி..?'
'சூப்பரோ சூப்பர்..! கண்டிப்பா நீங்க வந்தா ஓரே ஆண்டுல 50 ஆயிரம் கோடிய அள்ளி விடுவிங்க..!! ரொம்ப நன்றி சார்..! வணக்கம்..!
------------------------
நகைச்சுவை எப்படி இருந்தது? நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டுமே பார்க்க வேண்டும்!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
Anbudan vanakkam vathiyar ayya...
ReplyDeleteMay be in future the lending machine will come for liquor Supppppppppprrrrrrr.......
சோகச் சிரிப்பு சிரித்துக் கொள்கிறேன்
ReplyDeleteஅபாரமான திட்டம்... கற்பனைக்கு மட்டும்... போதும், நம்ம நாட்டுக்கு இது ஆகாது. இங்கே சுய கட்டுப்பாடு கற்றுதரப்படவில்லை.
ReplyDeleteவெளிநாடுகளில் சூப்பர் மார்கெட்டிலேயே சரக்கு உண்டு. அப்படிப்பட்ட ஊர்களில் கடுமையான சாலை விதிகளும், மக்களின் மனதில் சுய கட்டப்பாடும் கற்றுத்தரப்படுகிறது.
நான் கண்ட மொரிசியஸ் நாட்டில் காரில் வருபவர் எவ்வளவு வேகத்தில் வந்தாலும் ரோட்டை கடக்க முயலும் பாத சாரிக்கே முன்னுரிமை. பல நேரம் ஏதோ சிந்தனையில் நான் ரோட்டை கடந்தபோது பக்கவாட்டில் ஒரு கார்காரர் ப்ரேக் அடித்து சிரித்தபடி, முதலில் என்னை செல்ல முன்னுரிமை தருவார். பலநேரம் நான் அந்த ஊரை பார்த்து பெருமிதம் கொண்டதுண்டு.
இங்கே சிறிய ரோட்டில் காரை ஓட்டி வந்து அதில் ஓரமாக நடந்து வருபவர்களை ஏசுபவர்கள் உண்டு.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
வருங்கால திட்டங்களை வாத்தியார் முன்பே "கனித்து" எழுதி உள்ளார்.
ReplyDelete<< super ideas to promote tasmac sales>>
ReplyDelete.
<<<<<< officers follow this method >>>>>>>>>>>>>
thanks
s.dayanidhi , aviyanur
அண்டாவை தட்டி விற்கும் பிரியாணி போல
ReplyDeleteஅங்கே தண்ணீர் தொட்டி கட்டி விடுவாங்களா
பள்ளி மாணவர்களும் சாராய போதையில்........
பார்த்து அழும்படி மாணவிகளுக்கும் இதில் சமபங்கு
வாத்தியார்களும் குடித்துவிட்டு தான்
வகுப்பறைக்கு வருகிறார்கள்
அன்றே சொன்னது தான்
அது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என்று
பெண்களும் சிகரெட் பிடிக்கிறார்கள்
“பெண்கள் மட்டும் தான்” ஆபாசமாக ஆடை அணிகிறார்கள்
சாராயகடையை மூடுவதே
சரியான யோசனை என்பவரா நீங்கள்
மன்னிக்க நான் கொஞ்சம் வழக்கம்போல்
மாறுபடுகின்றேனே செவி கொடுங்கள் சொல்கிறேன்
தமிழ்நாட்டில் சாராய கடை டாஸ்மாக் வந்ததே
தமிழக மக்கள் உயிர்மீது உள்ள பாசத்தால் தான்
என்ன அப்படி பார்க்கிறீர்கள்
எதார்த்தமாக உள்ளதை தான் சொல்கிறேன்
சாராய கடையை மூடிவிட்டால்
சாதாரண மக்கள் கள்ளசாராயம் குடிப்பார்கள்
கள்ளசாராயம் குடித்து உயிர் இழந்தவர்களைவிட
கடையில் சாராயம் குடித்து இறந்தவர்கள் குறைவு
கள்ளசாராயத்தை தடுக்க சென்ற போலிசும்
கள்ளத்தனமாக குடிக்கிறது என்றசெய்தியா வேண்டும்?
அண்டை மாநிலத்தில் சென்று
அங்கு கூட்டம் கூட்டமாக குடிப்பார்கள்
வசதி நிறைந்தவர்கள் வெளிநாட்டில்இருந்து
வரவழைத்து குடிப்பார்கள்
அரசே சாராய கடையை திறந்து வைத்திருக்கிறது
அப்படியானால் இவர்கள் ஏன் வாயை திறக்கிறார்கள்
தினற்பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன் தாருவார் இல்.
என்று குறள் சொல்வது போல்
எங்கே குடிப்பவர் இருக்கிறார்களோ
அங்கே கடை விரிப்பர்களும்
அப்படியே இருப்பார்கள்.
தமிழக அரசை குற்றம் சொல்லுவது சரியில்லை
மத்திய அரசு இறக்குமதியை அனுமதிக்கிறது
இந்தசாராய உற்பத்தி யை தடை செய்தால்
இங்கு வேலைசெய்யும் தொண்ணுறு ஆயிரம்
பேர்களுக்கு அரசும் வேலை கொடுக்காது
வேறுவேலையும் அவர்களுக்கு கிடைக்காது
வணக்கம் ஐயா...
ReplyDeleteபெங்களூரில் சரக்கு சாஷே பாக்கெட்டில் விற்பனையில் உள்ளது ஒருவேளை மல்லையா sir idea குடுதிருபாரோ... ??? :)
/////Blogger hamaragana said...
ReplyDeleteAnbudan vanakkam vathiyar ayya...
May be in future the lending machine will come for liquor Supppppppppprrrrrrr......./////
வரட்டுமே! மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சரிதான்!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteசோகச் சிரிப்பு சிரித்துக் கொள்கிறேன்////
நீங்கள் எப்படிச் சிரித்தாலும், நாட்டின் நிலைமை சோகமாகத்தான் இருக்கிறது சுவாமி!
//////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
ReplyDeleteஅபாரமான திட்டம்... கற்பனைக்கு மட்டும்... போதும், நம்ம நாட்டுக்கு இது ஆகாது. இங்கே சுய கட்டுப்பாடு கற்றுதரப்படவில்லை.
வெளிநாடுகளில் சூப்பர் மார்கெட்டிலேயே சரக்கு உண்டு. அப்படிப்பட்ட ஊர்களில் கடுமையான சாலை விதிகளும், மக்களின் மனதில் சுய கட்டப்பாடும் கற்றுத்தரப்படுகிறது.
நான் கண்ட மொரிசியஸ் நாட்டில் காரில் வருபவர் எவ்வளவு வேகத்தில் வந்தாலும் ரோட்டை கடக்க முயலும் பாத சாரிக்கே முன்னுரிமை. பல நேரம் ஏதோ சிந்தனையில் நான் ரோட்டை கடந்தபோது பக்கவாட்டில் ஒரு கார்காரர் ப்ரேக் அடித்து சிரித்தபடி, முதலில் என்னை செல்ல முன்னுரிமை தருவார். பலநேரம் நான் அந்த ஊரை பார்த்து பெருமிதம் கொண்டதுண்டு.
இங்கே சிறிய ரோட்டில் காரை ஓட்டி வந்து அதில் ஓரமாக நடந்து வருபவர்களை ஏசுபவர்கள் உண்டு.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.//////
உங்களின் அனுபவப் பகிர்விர்க்கு நன்றி!
/////Blogger SELVARAJ said...
ReplyDeleteவருங்கால திட்டங்களை வாத்தியார் முன்பே "கணித்து" எழுதி உள்ளார்.//////
இதைவிட அதிகமாக நடக்கலாம்!
/////Blogger SELVARAJ said...
ReplyDeleteவருங்கால திட்டங்களை வாத்தியார் முன்பே "கணித்து" எழுதி உள்ளார்.//////
இதைவிட அதிகமாக நடக்கலாம்!
//////Blogger daya nidhi said...
ReplyDelete<< super ideas to promote tasmac sales>>.
<<<<<< officers follow this method >>>>>>>>>>>>>
thanks
s.dayanidhi , aviyanur//////
நல்லது. நன்றி!
///////Blogger Visu Iyer said...
ReplyDeleteஅண்டாவை தட்டி விற்கும் பிரியாணி போல
அங்கே தண்ணீர் தொட்டி கட்டி விடுவாங்களா
பள்ளி மாணவர்களும் சாராய போதையில்........
பார்த்து அழும்படி மாணவிகளுக்கும் இதில் சமபங்கு
வாத்தியார்களும் குடித்துவிட்டு தான்
வகுப்பறைக்கு வருகிறார்கள்
அன்றே சொன்னது தான்
அது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என்று
பெண்களும் சிகரெட் பிடிக்கிறார்கள்
“பெண்கள் மட்டும் தான்” ஆபாசமாக ஆடை அணிகிறார்கள்
சாராயகடையை மூடுவதே
சரியான யோசனை என்பவரா நீங்கள்
மன்னிக்க நான் கொஞ்சம் வழக்கம்போல்
மாறுபடுகின்றேனே செவி கொடுங்கள் சொல்கிறேன்
தமிழ்நாட்டில் சாராய கடை டாஸ்மாக் வந்ததே
தமிழக மக்கள் உயிர்மீது உள்ள பாசத்தால் தான்
என்ன அப்படி பார்க்கிறீர்கள்
எதார்த்தமாக உள்ளதை தான் சொல்கிறேன்
சாராய கடையை மூடிவிட்டால்
சாதாரண மக்கள் கள்ளசாராயம் குடிப்பார்கள்
கள்ளசாராயம் குடித்து உயிர் இழந்தவர்களைவிட
கடையில் சாராயம் குடித்து இறந்தவர்கள் குறைவு
கள்ளசாராயத்தை தடுக்க சென்ற போலிசும்
கள்ளத்தனமாக குடிக்கிறது என்றசெய்தியா வேண்டும்?
அண்டை மாநிலத்தில் சென்று
அங்கு கூட்டம் கூட்டமாக குடிப்பார்கள்
வசதி நிறைந்தவர்கள் வெளிநாட்டில்இருந்து
வரவழைத்து குடிப்பார்கள்
அரசே சாராய கடையை திறந்து வைத்திருக்கிறது
அப்படியானால் இவர்கள் ஏன் வாயை திறக்கிறார்கள்
தினற்பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன் தாருவார் இல்.
என்று குறள் சொல்வது போல்
எங்கே குடிப்பவர் இருக்கிறார்களோ
அங்கே கடை விரிப்பர்களும்
அப்படியே இருப்பார்கள்.
தமிழக அரசை குற்றம் சொல்லுவது சரியில்லை
மத்திய அரசு இறக்குமதியை அனுமதிக்கிறது
இந்தசாராய உற்பத்தி யை தடை செய்தால்
இங்கு வேலைசெய்யும் தொண்ணுறு ஆயிரம்
பேர்களுக்கு அரசும் வேலை கொடுக்காது
வேறுவேலையும் அவர்களுக்கு கிடைக்காது////////
என்ன சொல்ல வருகிறீர்கள் சுவாமி? எங்களுக்குப் புரியும்படி ஒரே வரியில் சொல்லியிருக்கலாமே!
/////Blogger Kamban said...
ReplyDeleteவணக்கம் ஐயா...
பெங்களூரில் சரக்கு சாஷே பாக்கெட்டில் விற்பனையில் உள்ளது ஒருவேளை மல்லையா sir idea குடுதிருபாரோ... ??? :)///////
தெரியலையே சாமி! யார் கொடுத்தால் என்ன? ஐடியாக்கள் நன்றாக உள்ளனவா? அதை மட்டும் சொல்லுங்கள்!